
(Picture by cc licence, thanks Manish Bansal)
ஒன்று
மழை பிடிக்குமா?
குழந்தைகள்?
பட்டம் ஏன் பறக்குது தெரியுமா?
மருதாணிக்கு இங்கிலீஸ்ல என்ன?
சிகரெட் பிடிப்பீங்களா?
கவிதை எழுதும் போதுமா?
என்றவள்,
பேசாமல் உங்களையே
லவ் பண்ணியிருக்கலாம்.
என்றாள்.
இரண்டு
வெள்ளியோடு வெள்ளி எட்டு
சனி ஒம்போது நாளாச்சு,
கோபமாய் நீ பேசாமல் இருந்து.
என்று பேசும்போது புலம்புகிறாய்.
இடையில் கிடந்த,
சனி,ஞாயிறு,திங்கள்,
செவ்வாய்,புதன்,வியாழன்,
வெள்ளி,சனியை..
எப்படி இப்படி தாண்டிப் போகிறாய்?
மூன்று
குழந்தைக்கு சோறூட்டிக் கொண்டே
நிலவை பார்த்தாள்.
நினைத்துக் கொண்டார் போல
பாலா என்றாள்.
குழந்தை திரும்பியது.
உன்னை இல்லைடாவென
கண் நிறைந்தாள்.


