Thursday, June 3, 2010

தோழி


(Picture by cc licence, Thanks Akash_Kurdekar)

ஹென்றி வாத்தியார்தான்
துப்பாக்கி சுட சொல்லித்தந்தார்.

முதல் என்பதால்
பெட்டை கொக்கு சுடுவது
வேட்டைக்காரன் சாஸ்த்திரம் என்றார்.

காடு, வயல்
வயல்க் காடென
பெட்டை கொக்கு தேடி
சுற்றி அழைத்தார்.

கொக்கை கண்டதும்
பெட்டைதான் சுடு என்றார்.

சுட்டதும் பறந்த
கொக்கை பார்த்ததும்
மல்லிகா நினைவு வந்தாள்.

தீபாவளி துப்பாக்கிக்கே
செத்து செத்து விழும் மல்லிகா.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

Wednesday, May 26, 2010

தட்டித் திறந்த கதவுகள்


(Picture by cc licence, Thanks prakhar )

ஒன்று

ஜோஸ்யர் வீட்டில் இருந்து
மூணாவது வீடு
கணேசன் வீடு என்றார்கள்.

கண்டு பிடித்த பிறகு
கணேசன் வீட்டில் இருந்து
மூணாவது வீடாக இருந்தது
ஜோஸ்யர் வீடு.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


(Picture by cc licence, Thanks Romana)

இரண்டு

பார்க்காத வைத்தியமில்லை என
பேசிக் கொண்டிருந்தது டி.வி.

அழுவது போல் வேறு
பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாலில் இவளும்.

அடிச்சாண்டா லக்கி ப்ரைஸ் என
குப்பியை கீழும் மேலும் தட்டி திறந்தேன்
அடுப்பறையில்.


(Picture by cc licence, Thanks Robert Nyman)

மூன்று

மரங்கள் எல்லாம் வீடாச்சு.
மறக்காமல்,
குருவி சத்தம்
பெல் ஆச்சு.

நான்கு

ஒரு போதும்
முள் குத்தியதில்லை
கள்ளிப் பழம்.
கோன் ஐஸ் அப்படி இல்லை.