Friday, June 12, 2009

வலி

ம்மாவை நேற்று
வீதியில் பார்த்தேன்...
கறுத்து சிறுத்து விட்டாள்
ஏன் இப்படி போனாள்
என்று கேட்க விருப்பம் எனக்கு.
ஏன் இப்படி போனாள்
என்று தெரியும் எனக்கு.
எனக்கு தெரியும் என்று
அம்மாவிற்கும் தெரியும்!

பிறகெதெற்கு தூசிப்புயல்?

ரேசன்கடை வரிசையில்,
கோயில் மடப்பள்ளியில்,
தெருவில்,
அம்மாவை இப்படி
காண்கையில் ஆடுதசை ஆடுகிறது...

பேசாமல்,
பெண் குழந்தையாய் பிறந்திருக்கலாம்
நானும்...

வளின் சொல்லைவிட
அவரின் சொல்
கௌரவமாய் இருந்திருக்கும்
அம்மாவிற்கும்
எனக்கும்.

(கணையாழில் பிரசுரமான எனது படைப்பு)

5 comments:

அண்ணாதுரை சிவசாமி said...

சத்தியமான உண்மை.

Anonymous said...

//அவளின் சொல்லைவிட
அவரின் சொல்
கௌரவமாய் இருந்திருக்கும்
அம்மாவிற்கும்
எனக்கும்//
இந்த வரிகள் ’அந்த வலி’யை அனுபவிச்சவுங்களுக்கு மருந்து

பா.ராஜாராம் said...

ஆமாம்தானே அமிர்தம்!..
தொடர்ந்து பின்னூட்டம் இடுகிறீர்கள்
அன்பும் நன்றியும்..

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ஏதேதோ உணர்வுகள்...

-ப்ரியமுடன்
சேரல்

பா.ராஜாராம் said...

நன்றியும் அன்பும் சேரல்.