Thursday, July 30, 2009

வேறு வேறு கண்கள்


(Picture by CC Licence, Thanks said&done)

மூன்றில் ஒரு பங்காக
சுருக்கி வரைகிறது
வாழ்ந்து கெட்ட கதையை
உயிரியல் பூங்கா
மயில்களின் கண்கள்.

பார்கிறானா இல்லையா என்பதை
மறைந்திருந்து பார்க்க
கருங்கண்ணாடிகளின்
பின்னாடி இருக்கிறதெப்போதும்
பெருத்த மார்புடைய
பெண்களின் கண்கள்.

" ல்லாருக்கீங்களா"
என்று மட்டும் கேட்கிறது
இறந்த காலங்களில்
எவ்வளோவோ
பேசிக்களைத்த அவளின்
கண்கள்.

புகைவண்டி நாதம்
தேய்ந்து மறைகிற தருணம்
விடை தந்த மனிதர்களின்
கண்களை ஊதினால்
உதிரும்
உண்மையும் அன்பும்!

"நல்லதெல்லாம் திங்க தெரியாது"
என்று முயங்கி
குழம்பில் நீந்தும் மீனின்
கண்ணெடுத்து ஊட்டுகிறாள்
குழந்தைகளற்ற
ஒரு மதியத்தில்
லதா.

ண்கள் வேறு வேறுதான்
மொழியும் தீராததுதான்

32 comments:

கவிக்கிழவன் said...

பார்கிறானா இல்லையா என்பதை
மறைந்திருந்து பார்க சந்தோஷமாக வாசிக்கிறேன்
இலங்கையில் இருந்து யாதவன்

ஆர்வா said...

நல்லா இருக்கு வித்தியாசமான கோணத்துல உங்க கண்கள் பயணிச்சு இருக்கு... அட்வான்ஸ் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

கவிதாசிவகுமார் said...

"புகைவண்டி நாதம்
தேய்ந்து மறைகிற தருணம்
விடை தந்த மனிதர்களின்
கண்களை ஊதினால்
உதிரும்
உண்மையும் அன்பும்"

ஒவ்வொரு விடுமுறை முடிந்து ஊர் கிளம்பும்போது வழியனுப்ப வரும் பெத்தவங்க பிறந்தவங்க கண்களும் கலங்கி, அதை பார்த்து 'கிளம்புறோம்'ன்னு கையசைத்துக் கொண்டிருந்தாலும் தொண்டை அடைத்துக்கொண்டு கண்களில் அருவியாய் கொட்டிக் கொண்டிருக்கும் அந்த தருணங்களை கண்கள்தான் சொல்லும்.அப்பொழுது விடை தந்தவர்கள் கண்களில் மட்டுமல்ல பயணம் செய்வோரின் கண்களிலும் உதிரும் உண்மையும் அன்பும்.

கலக்கிட்டீங்க.

கலையரசன் said...

நா வேற தனியா சொல்லனுமா பாஸ்!
அட்டகாசம்!!

நேசமித்ரன் said...

குடுதானிக்குள் அலை எழுப்பியபடி ஓரக் கண்ணால் பார்க்கும்
கண்ணம்மா என்றழைக்கப்பட்ட காராம் பசுவின் கண்கள்
நோய் பட்டிருந்த போது திப்பு என்று செல்லமாய் அழைக்கப்பட்ட நாயின்
ஈரம் கசிந்த கண்கள்
கிளைகளில் உறங்கும் சிறுத்தையின் கண்கள்
கரை ஒதுங்கிய சுறாவின் தீக் கண்கள்
கண்கள் வழிப் பிரிந்த உயிருக்குரிய கண்கள்
எல்லோர் கண்களையும் வரட்டியால் மூடும்
பேச்சி முத்து வெட்டியானின் கஞ்சாக் கண்கள்
என்று நிறையக் கண்களை நினைவூட்டும் பா.ரா. வின் இந்த கண்கள்

யாத்ரா said...

அண்ணே எவ்வளவு கண்களை நினைவு படுத்திட்டீங்க, இந்தக் கவிதையின் மூலமாக, போட்டோ கண்கள்,,,,, அருமை.

பா.ராஜாராம் said...

கவிக்கிழவன்
=============
நல்ல இருக்கீங்களா நண்பரே...ரொம்ப நாளாச்சு..வேலை பளுவா?"இலங்கையில் இருந்து யாதவன்"என்கிற உங்கள் தொணி இப்போ கம்பீரமாய் இருப்பது போல் இருக்கு யாழவன்...இப்படியெல்லாம் நினைச்சு கொள்ள ரொம்ப பிடிச்சுருக்கு..உங்கள் உற்சாகம் என்னை மாதிரி ஆள்களுக்கு இயக்கம்!அன்பும் நிறைய!

கவிதை காதலன்
================
வரணும் காதலா...உங்களையும் கவிக்கிழவனையும் சேர்ந்தே பார்க்க வாய்க்கிறது...கிட்ட தட்ட எல்லா தளங்களிலும்...double act? ...எப்படியோ நன்றியும் தீராத அன்பும் காதலரே..

ஹேமா said...

அழகாய் ஒரு கண் ஓட்டம்.கண் வைக்கிறாங்க ராஜா மேல எல்லாரும்.கண் கவிதை கருத்து.

சதங்கா (Sathanga) said...

படத்தைப் பார்த்த பின் பிறந்த கவிதையா. கவிதைக்குப் பின் படமா ? நல்லா இருக்கு.

Nathanjagk said...

//கருங்கண்ணாடிகளின்
பின்னாடியிருக்கிற// கண்களைக் கூட ரசிக்க ​​வைத்துவிட்டீர்களே?? //விடை தந்த மனிதர்களின்
கண்களை ஊதினால்// ஆமாம்.. என்னால் இப்போதும் எப்போதும் இயலவே இயலாத காரியம் யாருக்கும் வண்டி வரை வந்து வழியனுப்புவதுதான். கண்தானம் ​செய்யப்பட்ட கணகள் மிதக்கும் குடுவை ஏனோ நினைவிலாடுகிறது பாரா.

Anonymous said...

அருமை; படமும் கவிதைகளும்.

இரசிகை said...

ovvoru kannkalin kathaiyum azhagu.......:)

நர்சிம் said...

என்ன வார்த்தைகளைக் கொண்டு என்ன பின்னூட்டமிட? அருமை என்பதைத் தவிர.

பா.ராஜாராம் said...

தமிழ்
======
விடை பெரும் போது கணக்கிற மனசை இறக்கி வைக்க முடிந்தது இல்லையா?...போதும் தான்.நன்றியும் அன்பும்டா கவிதும்மா..

கலையரசன்
============
நல்வரவாகட்டும் கலை..."கேர்ள் பிரண்ட் புள்ளை...போன் பண்ணா தொல்லை.."பார்த்து,சிரித்ததில் மனசு சுளுக்கிகொண்டது.அட்டகாசம் கலை..அதே சிலாங்கை நம்ம வீடு வரை கொண்டு வந்ததில் அவ்வளவு சந்தோசம்தான் எனக்கு...நான் மட்டும் வேறென்ன சொல்ல போகிறேன்.அன்பும் நன்றியும் கலை..

ஷங்கி said...

கண்களும் கவிபாடுதே! எப்படீங்க இப்படீல்லாம்?! வசந்தகாலத்தில் திடீர்னு அடிச்ச காத்தில பொல பொலன்னு உதிரும் பெயர் தெரியாப் பூக்களின் பூவிதழ் மழைமாதிரி அப்படியே கவிமாரி பொழியுது! வழக்கம்போல அன்பர் நேசமித்திரனின் தொடர்ச்சியும் பின்னிப் பெடலெடுக்குது.

பா.ராஜாராம் said...

நேசமித்ரன்
============
நேசா...நல்லா இருக்கியா மக்கா...நைஜீரியாவின் நிகழ்வுகள் குறித்து செய்திகளில் காணகிடைத்தது.உங்கள் நினைவுகள்தான்..தளம் வரவேணும்.கவிதையின் தொடர் கவிதைகள்...என்ன சொல்லட்டும்..இதுதான் நீ...நிறைந்த அன்பும் நன்றியும் மக்கா...

யாத்ரா
=======
கண்கள் கலங்கியது யாத்ரா...அண்ணே என்று விளிக்க ஒரு அடர் மனசு வேணும்.அடி மனசில் பத்திர படுத்தியிருக்கிறேன்.நன்றி யாத்ரா-உன் அண்ணன்.

ஹேமா
======
வரணும் ஹேமா...நலம்தானே.உங்களின் தொடர் உற்சாகம்...நன்றியால் நிறைந்திருக்கிறது மனசு.வீட்டிற்கும் வரவேணும் மக்கா,வருவேன்.அன்பும் நன்றியும்.

சதங்கா
========
நல்வரவு சதங்கா.உங்கள் முதல் வரவு அவ்வளவு சந்தோசம் தருகிறது.கவிதைக்குத்தான் படம்.பிறகு கவிதையை விஞ்சி நிற்கிற படம் பார்த்து,சந்தோஷமும் நிறைவும் எனக்கு.நிறைய அன்பும் நன்றியும் சதங்கா.

S.A. நவாஸுதீன் said...

புகைவண்டி நாதம்
தேய்ந்து மறைகிற தருணம்
விடை தந்த மனிதர்களின்
கண்களை ஊதினால்
உதிரும்
உண்மையும் அன்பும்!

விடுமுறை முடிந்து விடியலைத் தொலைத்து விடியலைத் தேடி விரல் விடுவிக்கும் நேரம் கண்ணீர் மறைக்கும் கலங்கிய கண்கள். மனதை என்னவோ செய்கிறது நண்பா.

பா.ராஜாராம் said...

ஜெகநாதன்
===========
ஒரு திருவிழாவின் உற்சாகம் இந்த ஜெகன்...இருக்கிற இடத்தில் எல்லாம் வெளிச்சம் பீய்ச்சுகிற மனுசர் ஐயா நீர்!..கண்தானம் செய்யப்பட குடுவை மிதக்கும் கண்..கிடு கிடுக்குது ஜெகன்.அன்பும் நன்றியும் ஜெகா..

வடகரை வேலன்
=================
வாங்க வேலன்.ரொம்ப சந்தோசம்.நிறைய நன்றி தோழா!

ரசிகை
======
ஆகட்டும் ரசிகை.எப்பவும் போலான நன்றிகள் மக்கா.

பிரவின்ஸ்கா said...

அசத்திட்டீங்க .
கவிதை அருமை .
தற்போது வேலை அதிகமாக இருப்பதால்
மற்ற கவிதைகளை வாசிக்க முடியவில்லை.


- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

பா.ராஜாராம் said...

நர்சிம்
======
ரொம்ப சந்தோசம் நர்சிம்.அன்பும் நன்றியும்...

சங்கா
======
இன்னுமொரு கவிதையை இங்கு நீங்கள் தருகிறீர்கள் சங்கா.நேசா தந்தது போல்...நிறைய அன்பும் நன்றியும் நண்பரே...

S.A.நவாஷுதீன்
===============
ஒரே ஒரு புகை வண்டி...எவ்வளவு நினைவுகள்...கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுக்கும்...இல்லையா நவாஸ்,என் இனிய நண்பா!(நன்றி நவாஸ்...ஒரே ஒரு வார்த்தை..மனிதர்களை எவ்வளவு நெருக்கமாய் நகர்த்துகிறது..)

பா.ராஜாராம் said...

மிகுந்த நன்றியும் அன்பும் பிரவின்ஷ்கா...ஆகட்டும் மக்கா...நேரம் கிடைக்கிற போது வாருங்கள்.நல்லா எழதுகிற மனிதர்கள் வந்து போவது அவ்வளவு சந்தோசம் எனக்கு...

ஆ.ஞானசேகரன் said...

//கண்கள் வேறு வேறுதான்
மொழியும் தீராததுதான்//

நன்றாக இருக்கு நண்பரே

நிலாரசிகன் said...

//"நல்லதெல்லாம் திங்க தெரியாது"
என்று முயங்கி
குழம்பில் நீந்தும் மீனின்
கண்ணெடுத்து ஊட்டுகிறாள்
குழந்தைகளற்ற
ஓர் மதியத்தில்
லதா.
//

நல்லதொரு கவிதை நண்பரே.

"ஒரு மதியத்தில்" என்பதே சரி என்றெண்ணுகிறேன்.
வாழ்த்துகள் :)

அண்ணாதுரை சிவசாமி said...

கண்களை படித்துக்கொண்டு வரும் போதே கடைசிக் கண்ணில் கலங்க வைத்து
விட்டாயேடா,ராஜா.நிலாரசிகன் சொல்வதுதான் சரி.உயிரெழுத்துக்கு முன்
'ஓர்' வருவதும் மெய் எழுத்துக்கு முன் 'ஒரு' வருவதும்தான் சரி....."ஓர் ஆயிரம்
பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் ..."நான் அடிக்கடி பாடும் பாடல்
ஞாபகத்திற்கு வருகிறதா ராஜா.....மாற்றி விடுங்கள் ரமேஷ்."ஒவ்வொரு பூக்களுமே
சொல்கிறதே...."எல்லோர் நெஞ்சையும் நெகிழ்வித்த பாட்டு.இலக்கணப்படி அபத்தம்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//பார்கிறானா இல்லையா என்பதை
மறைந்திருந்து பார்க்க
கருங்கண்ணாடிகளின்
பின்னாடி இருக்கிறதெப்போதும்
பெருத்த மார்புடைய
பெண்களின் கண்கள்.//

என்ன சொல்ல? வார்த்தையிழந்து நிற்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

பா.ராஜாராம் said...

நிலா ரசிகன்
============
வரணும் நிலா...முதல் வருகையும் நுண்ணிய பார்வைக்கும் நன்றியும் அன்பும் நிறைய.நீங்கள் குறிப்பிட்டிருந்த ஓர்வை ஒரு என மாற்றியாச்சு நிலா ரசிகன்.உங்களின் அவளது கவிதைகள் நல்லா வந்துருக்கு மக்கா.மறுபடியும் நன்றி.

அண்ணாதுரை சிவசாமி.
=======================
ஆகட்டும் சித்தப்பா.மாற்றியாச்சு.உங்களின் தனித்த அடையாளம் அந்த ஓர் ஆயிரம் பார்வையிலே...அதையும் சேர்த்தே உங்களை நினைவு படுத்திக்கொள்ள இயலும்.இப்போ புதிதாக வேறொரு பாட்டு சொல்கிறீர்கள்.சின்னம்மா சித்தப்பாவை அடிகோடிட்டு கவனிக்கவும்...எப்பவும் போலான நன்றியும் அன்பும் சித்தப்பா.

பா.ராஜாராம் said...

மன்னிக்கணும் நிலா ரசிகன்"அவளது கடவுளர்கள்"என்பதே சரி.

பா.ராஜாராம் said...

வணக்கம் சேரல்...நல்லா இருக்கீங்களா...மனசு நிறைக்கிற எவ்வளோவோ எழுத்துக்களில் உங்களுடையதும் ஒன்று.முதல் வருகை..மிகுந்த சந்தோசம் எனக்கு.அன்பும் நன்றியும்!

அண்ணாதுரை சிவசாமி said...

திமிர் படம் பார்த்திருக்கிறாயா ராஜா?வடிவேல் சிங்கமுத்து காமடி.வடிவேல் குடித்து வைத்த
கலரை சிங்கமுத்து குடித்ததாக நினைத்து அசிங்கமான வார்த்தையால் திட்டுவார்.பின் உண்மை
தெரிந்த போது "கலர் குடிக்கும் போதெல்லாம்.............த்தை ஞாபகம் வரவைத்து விட்டாயேடா"
என்று சிங்கமுத்து திட்டி உதைப்பார்.(அந்த வார்த்தையை பிரயோகித்திருப்பேன்.ரமேசுக்கு கோபம் வந்து
விடும்.எதுக்கு வம்பு?)
ஆம்.பிராய்லர் கறி சாப்பிடும் போதெல்லாம் உனது 'பிராய்லர் இல்லத்தில்'(ஜூலை மாதம்)
"யாரை எங்கென்று எப்படித்தேட?" ....என்ற வரி ஞாபகம் வந்து வந்து பிராய்லர் சாப்பிடுவதை
நிறுத்தி விட்டேன்.இப்பொழுது மீன் சாப்பிடும் போதெல்லாம் "முயங்கி குழம்பில் நீந்தும்
கண்ணெடுத்து"...வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறது.ஜெயித்து கொண்டு வருகிறாய் என்று
நினைக்கிறேன்.
தயைசெய்து ஆட்டைப் பற்றி எதுவும் கவிதை எழுதி விடாதே.

பா.ராஜாராம் said...

நன்றி சித்தப்பா.எப்பவும் ஒன்றை தொட்டு ஒன்றாக உங்கள் நினைவு நீள்வது மற்றுமொரு கவிதை அல்லது அழகு.உங்களின் முகம் பார்த்து பேசி வெகு நாளாகிவிட்டது என்கிற என் தேவைக்கு பதிலாகிறது முகம் பார்த்து பேசுவதுபோலான உங்கள் பின்னூட்டங்கள்.நேற்றிரவு நண்பன் நேச மித்திரன் வெகு நேரம் அலை பேசிக்கொண்டிருந்தார்.பிறப்பில் இருந்தே நம்முடன் வளர்ந்த மனிதரை போன்றான வாஞ்சையும் அன்பும் குரலில் தளும்பியது.நீங்கள்,நான்,நாம் எல்லோருமே ஒருமுறையாவது அவர் முகம் பார்த்து கொள்ளவேணும்.என்று நினைத்து கொண்டேன்.நினைப்பு சந்தோசம் தந்தது,தருகிறதும்...

துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை.

தீராத மொழிகள் தொடரட்டும்.

வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

ஆகட்டும் ராஜா.அன்பும் நன்றியும்!