Saturday, July 4, 2009

ஜன்னல் வைத்த வீடு(கணையாழியில் வெளியான எனது கவிதை)

ங்கே இங்கே கடன் வாங்கி
அப்பா கட்டினார் வீடொன்று.
செங்கல் சாந்து கடனோடு
வளர்ந்து நின்ற பூதமது.

ண்ணா இட்ட கட்டளைக்கு
சுளித்து சிரித்தது மாடியறை.

"வனுக்கு மட்டும் ஆசை இருக்காதா?"
தவழ தொடங்கிய தம்பிக்காக
அம்மா வந்தாள் அப்பாவிடம்.

"டுத்தாத்துக்கு போறவளுக்கு
என்ன இருக்கு நம் வீட்டில்"
அப்பா அம்மா முதற்கொண்டு
அண்ணா வரையில் சொன்னாலும்...

ப்பா கட்டிய பூதத்தில்
அழகே அழகு ஒன்றுதான்...

க்ரகாரம் முழுக்க தெரியும்
தெருவை பார்த்த ஜன்னல் அது!

34 comments:

அ.மு.செய்யது said...

நல்லா இருந்துதுங்க கவிதை.

Simply superb..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்கள் சிவகங்கை பா ராஜாராமா? ஆம் எனில் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப முடியுமா (jyovramsundar@gmail.com)

பா.ராஜாராம் said...

டேய்...ராஸ்கல்....எங்கிருக்கிறாய் நீ...
அதே உன் ராஜாராம் தான்...15 வருஷம்
இருக்குமா உன்னிடம் இருந்து,அரவம் எழும்பி...
இதோ வருகிறேண்டா பயலே...மிக
அற்புதமான ஒரு நட்பை,கலைஞனை
மீண்டும் என் கைகளுக்கு சேர்த்த...ரமேஷ்,
கண்ணா...என்ன சொல்லட்டும்...!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐயோ.. this is just great! ராஜாராம்... இப்போ எங்கய்யா இருக்கீங்க... குமார்ஜியிடமும் தெய்வாவிடமும் எனக்கு இன்னமும் தொடர்பிருக்கிறது - உங்களிடம்தாம் இல்லை.. மக்கா உங்க அலைபேசி எண்ணை எனக்குத் தெரியப்படுத்தவும்.

நான் சிவகங்கை வந்ததும், குடிக்காக அலைந்ததும், நீங்க அம்பத்தூர் வந்ததும்... என எல்லாமே பசுமையா நினைவிலிருக்கிறது மக்கா.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை அபாரம் என்று கருத்துப் போட வந்தேன். ஆனால் அது தேடித் தந்த பழைய நட்பைக் கண்டு அப்படியே உருகிப் போனேன். வாழ்த்துக்கள் நண்பரே.

பா.ராஜாராம் said...

நல்ல நட்புபோல் ஒரு அற்புதமான
கவிதை இருக்க முடியுமா ஜெஸ்..
தேடி..தேடி..தொலைத்ததும்
பிறகு அது தேடாமலே கிடைப்பதும்
வாழ்வின் உன்னதமான தருணங்கள்...
இந்த நாளில் நீங்களும்
கை இணைத்து கொண்டதில் அவ்வளவு
சந்தோசம் எங்களுக்கு.அன்பு நிறைய ஜெஸ்..

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்க வளர்க உங்கள் நட்பூ

பா.ராஜாராம் said...

உங்கள் வீட்டிற்கும் வந்திருந்தேன் செய்யது..
"மேகங்கள் திரட்டுவது நீ"வாசிக்க வைத்து
மனசு நிறைத்து அனுப்பி வைத்தீர்கள்!வீடு
வந்ததற்கும் அன்பு நிறைய..

பா.ராஜாராம் said...

ரொம்ப நன்றி வசந்த்..

அண்ணாதுரை சிவசாமி said...

கவிதைக்கான காந்த சக்தியைப் பார்த்தாயா
மகனே!தேடித் தேடி தொலைத்த நட்பு
திரும்பவும் கிடைத்திருக்கிறது.உன் சிந்தை
முழுதும் நிறைந்திருக்கும் தந்தை தந்த
வலியைப் போக்கும் வல்லமையையும்
தரும்......உன் உலகை விசாலமக்கட்டும்.

கவிதாசிவகுமார் said...

உங்கள் கவிதையின் வலிமை உங்களது பதினைந்து வருடத்து முந்தைய நட்பையும் உங்களிடம் இழுத்து வந்துள்ளது.இனி வரும் கவிதைகள் உங்கள் அனைத்து நண்பர்களையும் ஒன்று சேர்த்து உங்கள் கவிதை பயணத்தை மகிழ்ச்சியுற செய்யட்டும் சித்தப்பா.

பா.ராஜாராம் said...

ஆமாம் சித்தப்பா...அப்பாவின்
இழப்பிற்கு பிறகு,,,அதேவிதமான
உணர்வுதடுமாற்றங்கள் நிகழ்ந்த
நாள்...இன்று.கேட்டா ஒரு இலை
உதிர்கிறது அல்லது ஒரு பூ மலர்கிறது...
அதுவாக நிகழ்கிறது...
அவ்வளவு அழகாகவும் இருக்கிறது..
இல்லையா சித்தப்பா?...

பா.ராஜாராம் said...

ஆகட்டும்டா கவிது...
சீக்கிரமே வந்துட்டாய் போல...
சிறு வயதில் கிடைத்த ஆயாவின்
குழாய் புட்டுக்கு சிலாகிக்கும் மனசு
உன்னிடம் இருக்கு...
சீக்கிரமே எழுதவும் தொடங்குடா..

நேசமித்ரன் said...

என் கவிதை அற்புதம் சொல்ரீங்களேயா
நீங்கதான் கலக்குறீங்க
நட்பு திரும்ப கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்

ரவி said...

கலக்குங்க...!

கவிதாசிவகுமார் said...

சித்தப்பா, நல்ல அன்புகளின் ஆசிகள்தான் நமக்கு பலத்தை கொடுக்கின்றது.பாலு தாத்தாவிடம் பிரசாத் கல்யாணத்தின்போது பேசும் வாய்ப்பு கிடைத்தது."நல்லா இருக்கியாடா தாயீ" என்று அனைவர் பற்றியும் விசாரித்தார்கள்.மிகவும் வருத்தமாக இருக்கிறது.நேரில் பார்க்கும்பொழுது குமாரி அப்பத்தாவிற்கு தைரியம் சொல்ல வேண்டும்.நீங்களும் தைரியமாக இருங்கள் சித்தப்பா.அன்புகலந்த அவர்களின் நல்லாசியுடன் நாமும் வைராக்கியத்துடன் சாதித்து காட்டுவோம்.

பா.ராஜாராம் said...

"அலகில் துள்ளும் மீனுக்கு ஒரு கண்ணில் ஆகாயம்"
என்றும்
"ஒருபோதும்
தன் கடைசி துளியை உணரத்தராத
மழயைபோல்
நிறைவுரதவையாய்
இருக்கின்றன
நம் உரையாடல்கள்"
எனவும் யோசிக்க...எனக்கு வாய்க்கவில்லையே
நேசமித்ரன்.
பால்யத்தில் தொலைந்த மகன்
வீடடைந்தது போல் இருக்கு சுந்தரா
கிடைத்தது.வரவுக்கு நன்றியும்!

பா.ராஜாராம் said...

வரவுக்கு அன்பும்
நன்றியும் ரவி...

பா.ராஜாராம் said...

ஆகட்டும்டா கவிது...

தெய்வா said...

தேடித் தேடித் தேடித்
சிவகங்கை - காரைக்குடி செல்லும் போது
1995- 1996 ல் வந்த போது சேர்ந்திருந்த
பொழுதுகள்

ஒவ்வொரு வருடமும் உங்கள் பிறந்த நாள் வரும்போதெல்லாம் வாழ்த்துக்கள் மனதிலேயே
சொல்லிக் கொள்வேன்

இன்று திடீரென உன் கவிதை என் முன்னே...

பொக்கிஷம் கிடைத்த சந்தோஷம்

உன் தெய்வா

+919447783040

தெய்வா said...

இன்று புதிதாய் பிறந்தோம்

கவிதை (கடிதம்) மூலம் பிறந்த உறவு....
கடிதங்களில் .... கவிதைகளில் தொடர்ந்த உறவு..


இன்னும் எழுதப்படாத கடிதங்களில்...
தொலைந்த உறவு....

மீண்டும் இணைய வெளியில் இணைகிறோம்...

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் தெய்வா...
சக்தியை..கைகளில் ஏந்தி வீடு வந்தாய்..
கல்லூரி போக போவதாக சுந்தரா,
குமரா சொன்னார்கள்.
மகாவும் கல்யாணத்திற்கு
நிற்கிறாள்...பார்த்தியா..காலம்
புனைகிற கவிதைகளை...நரை கூடி
கிழ பருவமெய்து நாம் வீழ்தோம்டா
நண்பா...காலை அழைப்பேன் உன்னை.

தெய்வா said...

இன்னும் இரவில் தூங்காத ஆந்தை தானா?

shakthi g d said...

ஹாய் மாமா....

எனக்கு கவிதை பாஷயில் எழுத தெரியாவிட்டாலும் ஏதோ எழுதுகிறேன்... நான்தான் சக்தி...எப்படி இருக்கீங்க?? அத்தையும் அக்காவும் எப்படி இருக்காங்க?? நான் கேட்டதாக சொல்லவும்.. கவிதையை படித்தேன்... நன்றாக உள்ளது...

பா.ராஜாராம் said...

டேய்...சக்திம்மா...
கவிதை வாசிக்க தொடங்கிவிட்டீர்களா...
கோகுலகிருஷ்ணன் வேடமிட்ட
சக்திதான் மனசில் இருக்காள்..
என்ன சந்தோஷ அநியாயங்கள்
செய்கிறது இந்த காலம் சக்தி!
அக்கா திருமணத்தில் எல்லோரும்
கூடடைவோம்.கோகுல கிருஷ்ணனையும்
கூட்டி வர வேணும்...கேட்டா மக்கா..

பா.ராஜாராம் said...

ஆமாம் தெய்வா...
நாட்டிலும் அப்படி..
இங்கு வேலையும் அப்படி..

நந்தாகுமாரன் said...

ஜன்னல் வைத்த வீடு ஒரு நட்பைக் மீட்டுக் கொடுக்குமெனில் வேறென்ன வேண்டும் ... கவிதை பிடித்திருக்கிறது ... கணையாழியில் எப்போது வெளியானது என்றும் குறிப்பிட்டிருக்கலாம் ...

பா.ராஜாராம் said...

நன்றி நந்தா..வருடம் நினைவில் இல்லை.
தற்சமயம்,பிரசுரமான எந்த கவிதைகளும்,
"பத்திரத்தில்" இல்லை.இங்கு பதிவது கூட
நினைவு படுத்தியே எழுதி வருகிறேன்.
நினைவு படுத்துவதில்,ஓரிரு வார்த்தைகள்
(அதே)கிடைக்காத அவஸ்தையும் நேர்கிறது.
"கடைசி தீக்குச்சியை பற்ற வைக்கும் கவனத்தில்"
என் பழைய மழைகளை கேட்க்க,பார்க்க
(நன்றி;நந்தாவின்,"மழை கேட்டல்") இயலாமல்
இருக்கிறது...இந்த கவிதை ஞானக்கூத்தன் தேர்ந்தது
என்பது மட்டும் நினைவில் இருக்கிறது..
மற்றபடி அன்பும்,நன்றியும்...

இரசிகை said...

unga kavithai maranthu poiduchunga..

yenna oru nesa alai..

vaazhththukal raajaraam!

பா.ராஜாராம் said...

ஆமாம் ரசிகை..
உணர்வுபூர்வமான தருணங்கள்..
ரொம்ப நன்றி..

தெய்வா said...

நமது நட்பிற்கு இத்தனை ஆதரவு அலைகளா?
சிறிய தூண்டுதலில் பிரகாசிக்கும் ஒளி வெள்ளம்...

நந்தாகுமாரன் said...

ராஜாராம் என் பின்னூட்டத்திற்கான உங்கள் பின்னூட்டம் என்னை நெகிழச் செய்துவிட்டது ... எப்போதோ கணையாழியில் நான் எழுதிய ஒரு கவிதையின் வரியை நீங்கள் படித்து இன்னும் நினைவில் வைத்திருப்பது என்பது ... இம்மாதிரி அனுபவம் எனக்கு முதல் முறை ... கடவுளே / சைத்தானே ...

தெய்வா said...

ஸ்கைப் - deivanayagam88
come online after 9 PM IST today

பா.ராஜாராம் said...

நன்றி ச.முத்துவேல்!இப்படியான அனுபவம்தான்,
இந்த கவிதைக்கான கருவும்.ஆனால் நான் சாப்பிடவும்
செய்கிறேன்.உறுத்தல் கூட இல்லையே என்கிற உறுத்தல்
மட்டும் இருக்கு.மற்றபடி,அன்பு நிறைய...