Wednesday, October 7, 2009

பயணம்

நின்றபடி
பெருக்கிக்கொண்டிருக்கிறான்
புங்க மரத்தடி
சாலையை
ஒருவன்.

பெருக்க இயலாத
கொண்டை ஊசி
ஒன்றை
குனிந்தெடுத்து
காது சொருகுகிறான்.

காதலி
மனைவி
மகள்
சகோதரி

யாரோ
ஒருத்தியை
அழைத்துக்கொண்டு
வண்டி
திரும்பிக்கொண்டிருக்கிறது

முண்டித்தள்ள
இயலாத
கொண்டை ஊசி
வளைவொன்றில்.

40 comments:

இன்றைய கவிதை said...

அருமையான பதிவு!

ப்ரியமுடன் வசந்த் said...

ஏன் கவிஞர்கள் எல்லாரும் இப்படி புரியாத மாதிரி எழுதுறீங்க எழுதுகிற நீங்கள் படித்த மாமேதைகளாக இருக்கலாம் ஆனா என்னை மாதிரி வாசிக்கிறவங்க

ஒருசாரருக்கு மட்டுமே புரிகிற மாதிரி ஏன் எழுதுகிறீர்கள் ஏன் இதிலும் வஞ்சனை

சும்மா அடுத்தவன் போட்ட கமெண்ட் பாத்து சூப்பரா இருக்குன்னு சொல்ல விரும்பலை..

சிலருக்கு பிடிக்கலாம்..

அப்படித்தான் நான் என்று நீங்கள் கூறினால்

என்னைக்கு எனக்கு புரியுதோ அன்னிக்குத்தான் கமெண்டுவேன்...

மன்னிச்சுக்கோங்க எதுனாலும் தப்பா சொல்லியிருந்தால்.....

ஹேமா said...

அண்ணா வாழ்வு பயணம் என்பது அத்தனை சுலபம் அல்ல.அப்படித்தான் நான் அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.

பா.ராஜாராம் said...

சாலை பெருக்கிகொண்டிருக்கிறான் ஒருவன் வசந்த்.பெண்கள் தலையில் அணியும் கொண்டை ஊசி ஒன்றை பெருக்க இயலாமல் போகிறது.இது நம்ம வீட்டு மனுஷிகளுக்கு ஆகுமே என அதை சேமிக்கிறான்.(காது சொருகுகிறான்).அந்த கொண்டை ஊசி,அவன் நேசிக்கும் மனுஷியை நினைவிற்கு கொண்டு வருகிறது.அவனின் வறுமையையும் நிகழ்வையும் சாலை வளைவுகளோடு பொருத்தி இருந்தேன்.இது நேரடியான கவிதைதான் மக்கா.

சரி,என் கோணத்தில் நீங்கள் பார்க்கவேண்டிய அவசியமில்லைதான்.அப்படியும் சொல்லலாம்தான் வசந்த்.அது உரைநடையாக மாறும்.அதனால் கொஞ்சம் இந்த சுத்தி வளைப்பு.உங்கள் அன்பு எனக்கு பிரதானம் வசந்த்.அதனால்தான் இந்த விளக்கம்.

பின்னூட்டம்,ஓட்டளிப்பது உங்கள் சுதந்திரம்.இந்த கவிதையை புரிந்து பின்னூட்டம் இடுபவர்களை,"சும்மா அடுத்தவர் போட்ட கமன்ட் பார்த்து சூப்பரா இருக்குன்னு சொல்ல விரும்பலை"என்று இருந்திருக்கவேணும் வசந்த்.அங்கு நீங்கள் நிதானம் தவறி இருக்க கூடாது.அந்த "ன்" விளிப்பை,"ர்" விளிப்பாக மாற்றி தருகிறீர்களா வசந்த்?

மற்றபடி,உங்கள் நேர்மையான விமர்சனத்தை சந்தோசமாய் ஏற்கிறேன்.மன்னிப்பெல்லாம் எதுக்கு வசந்த்?உங்கள் மனசில் இருப்பதை சொல்கிறீர்கள்!

மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா.

ஆ.ஞானசேகரன் said...

கவிதை எதார்த்தம்.... பிரியமுடன் வசந்த் பின்னூட்டமும் அதற்கு உங்களின் விளக்கமும் அழகு...

சந்தான சங்கர் said...

இயல்பான கவிதை
ஊசி முனையில்
வளைந்திருக்கின்றது..

சில கவிதைகளிலும்
பெருக்கமுடியாத
கொண்டைஊசிபோல்தான்
அர்த்தங்கள்..

நன்றி நண்பரே.
நன்றி வசந்த்..

தமிழ் நாடன் said...

தெளிவா புரிஞ்சுட்டது! நன்றி அண்ணா!
நன்றி வசந்த்!

அ.மு.செய்யது said...

நேரடி கவிதையாக இருந்தாலும் உங்கள் விளக்கத்திற்கு பிறகே முழுமையாக புரிந்தது.
கவிதையென்றால் இப்படித்தானிருக்க வேண்டும்.

அருமை ராஜாராம்...வித்தியாசமா யோசிக்கிறீங்க...!!!

விஜய் said...

வளைந்த கவிதையின் வளையாத அர்த்தங்கள்

வாழ்த்துக்கள்

நேசமித்ரன் கவிதையை பார்த்தால் வசந்த் என்ன சொல்வாரோ ?

rvelkannan said...

தற்செயல் சம்பவத்துடன் ஒரு உணர்வு ரீதியான நினைவை
ஏற்படுத்தும் கவிதை. அருமை பா.ரா

velji said...

புங்க மரத்தடி சாலை ரம்மியமான சூழ் நிலையை சொல்ல,அவன் எடுத்துச் செருகிய கொண்டை ஊசி வாழ்வுப் பயணத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் முன்டித்தள்ளி போக இயலாத உறவுகளைச் சொன்னதாக நான் புரிந்து கொண்டேன்.(உங்கள் விளக்கத்தை படிப்ப்தற்கு முன்)

வசந்தின் கருத்து நியாயமானதே...உங்கள் பதிலில் அன்பிருக்கிறது!( நந்தா விளக்கின் ரயில் கவிதை எனக்கு புரிபடவில்லை).இது போல் கனமான கவிதைகளுக்கு பின்னூடட்டமிடுபவர்கள் தாங்கள் புரிந்துகொண்டதை விளக்கினால் நன்றாயிருக்கும்.இறுதியில் ஆசிரியர் தன் விளக்கத்தை கூறினால்..அதற்குள் நிறைய கவிதைகள் கிடைதிருக்கும். நாமே எடிட்டராகவும் இருக்கும் வலைத்தளத்தை முழுமையாக பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது. நான் சொல்றது சரியா மக்கா?!

Ashok D said...

தூள் கிளப்பிவிட்டார் கொண்டை ஊசி முனையில். பயணம் - நெகிழ்வு.

S.A. நவாஸுதீன் said...

இப்படியும் யோசிக்க முடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும் பயணம். உங்களின் விளக்கம் படித்த பிறகு முழுமையாக கவிதையோடு பயணிக்க முடிகிறது. கலக்குறீங்க நண்பா.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை அழகு ராஜாராம். எப்பிடி இந்த கொண்டை ஊசியில் எல்லாம் கவிதை பிறக்குது என்று வியந்து போய் இருக்கிறேன். என் வலயப் பக்கம் வாருங்கள். பதிவு போட்டிருக்கிறேன்.

மண்குதிரை said...

paaththiingkala anney

niingkal arhththam solla athan

panmukam paathikkappattuvittathu.

ஆரூரன் விசுவநாதன் said...

யதார்த்தமான வரிகள்


அருமை

அமிர்தவர்ஷினி அம்மா said...

வசந்த்திற்கு நீங்கள் அளித்த விளக்கத்திற்குப்பின் கவிதை புரிந்துவிட்டது.

நன்றி இருவருக்குமே :)

நர்சிம் said...

அருமை ஸார்.

கல்யாணி சுரேஷ் said...

எனக்கும் கூட பின் பாதியை புரிந்து கொள்ள இயலாதிருந்தது. வசந்த் அவர்களுக்கு நீங்கள் அளித்த விளக்கம் எனக்கும் பயனளித்தது. நன்றி அண்ணா. ( விருதினை பகிர்ந்தளித்தமைக்கும். )

கவிதாசிவகுமார் said...

கொண்டை ஊசியை மையமாக வைத்து ஒப்புமையாக கவிதையைக் கோர்த்திருப்பது மெருகு.

நேசமித்ரன் said...

பா.ரா

பற்களால் பிரிந்து கூந்தல் சேரும் அழகே தனிதான் கொண்டை ஊசிகள்
ஆனால் கொண்டை ஊசிகள்... குதிரை வண்டிகளைப் போல ,திருக்கழுகுன்றத்து கழுகுகளைப் போல, மீனாட்சி கோபுரத்து கிளிகளைப் போல, நகரத்தில் காகங்களைப் போல , கிராமங்களில் கரடிவித்தை காட்டுபவர்களைப் போல, பழையது எடுத்து வைத்து ஊற்றும் கரங்களைப் போல .வாசகனின் அறிதலார்வம் போல தொலைந்து கொண்டிருக்கின்றன

கவிதை மிக நுண்ணிய வளைவுகளைக் கொண்டிருக்கிறது .வார்த்தைகள் பல்லாங்குழி முத்து போல் இல்லாமல் மோதிரக்கல் மாதிரி மிக பொருத்தமாக அமைந்திருக்கின்றன

சர்வே கல் மாதிரி இருந்தால் அது வெறும் வாக்கியம் தானே

ஆங்கிலத்தில் thought dictators என்றொரு பதம் உண்டு ஒரு கவிஞன் அப்படி இல்லாமல் இருக்க வேண்டும் நீங்கள் அப்படி இல்லாமல் இருப்பவர்களில் எனக்கு பிடித்தமானவர்

அன்பு நிறைய மக்கா

நட்புடன் ஜமால் said...

எதுவும், எதிலேயும் அவர் நினைவு

----------------

விளக்கம் நன்றி - வசந்துக்கும்.

நந்தாகுமாரன் said...

நல்லா இருக்குங்க

மாதவராஜ் said...

புரிந்த கவிதையில், உங்கள் விளக்கம் சிறு குழப்பமாக்கிவிட்டதோ என தோன்றுகிறது. வறுமையை கொண்டை ஊசியில் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அது இங்கே வளைவுகளற்று நேர்கோடாகவே இருக்கிறது. அருகில் வந்தவர்கள், தொலைதூரம் பிரியவோ, விலகவோ நேர்ந்ததற்கு கொண்டை ஊசி சரியான குறியீடு. கவிதையின் தலைப்புக்கும் அதுவே பொருந்துகிறது. நான் இப்படியே புரிந்துகொள்கிறேன். நண்பா!

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை.

Deepa said...

அருமை ராஜாராம்!
எனக்கு இன்னொன்றும் புரிகிறது. :) கொண்டை ஊசி வளைவில் வண்டியில் வரும் அப்பெண்கள் தேயிலைத் தொழிலாளிகளோ என்று!


//பெருக்க இயலாதகொண்டை ஊசிஒன்றைகுனிந்தெடுத்துகாது சொருகுகிறான்// இந்த வரி தான் நமக்குப் புரியாத அர்த்தங்கள் ஏதேனும் இருக்குமோ என்று நினைக்க வைத்தது.

ஷங்கி said...

எனக்கு உங்கள் வழக்கத்தை விட ஏதோ குறைந்த மாதிரி இருக்கிறது.

உயிரோடை said...

//முண்டித்தள்ளஇயலாதகொண்டை ஊசிவளைவொன்றில்//

இந்த‌ கொண்டை ஊசிக்கும்

பெருக்காம‌ல் அவ‌ன் எடுத்து வைத்து கொண்ட‌ கொண்டை ஊசிக்கும் எந்த‌ ச‌ம்ம‌ந்த‌மும் இல்லை தானே.

ப்ரியமுடன் வசந்த் said...

ர்ர்ர்ர்ர்.....


ஹ ஹ ஹா

ஏதோ ஒரு வேகத்தில் வந்துருச்சு சார் தவறாய்..மன்னிக்கவும்


பார்த்தீர்களா?

இடுகையில் கவிதை வெளியிட்டதும் விளக்கம் சொல்ல வேண்டாம்..

நன்றி சொல்லிய பின்பு கடைசியாய் அதன் விளக்கத்தையும் கூறி விடுங்கள் நான் கவிதைகளை சுவாசிப்பவன்

எழுதுபவன் அல்ல

தங்கள் புரிந்து கொள்ளலுக்கு மிக்க நன்றி...பாசத்திற்க்கும்

நன்றி ராஜாராம் அண்ணா....

இரசிகை said...

inthap pyanam.........inimai!!

pinoottak kalam anbu..dan nirainthu vazhivathil aanantham:)

nesamithran sir... pinnoottam rasiththen:)

இரசிகை said...

appuram.......rajaram sir,

en pinootathirakkaana pathil(neengal post seithathaagak kooriyathu) angu (preeththi vidai)illai yentre yennukiren:)

இரசிகை said...

yennaik kavartha varikal

thalaipin keezhl..

vanthulla varikal yenakkum pidiththathu:)

ini "maram" paarththal intha kavithai ninaivu nitchchayam:)

sabaash vel kannan...

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க பாரா

thamizhparavai said...

நல்ல பயணம்...
விளக்கத்திற்குப் பின் கொண்டை ஊசியும் நுழைந்து விட்டது மனதில்...
வசந்துக்கு நன்றி...

துபாய் ராஜா said...

கவிதையும், விளக்கமும், பின்னூட்டங்களும் அனைத்துமே அருமை.

பா.ராஜாராம் said...

வேலை நெருக்கடி நண்பர்களே...முன்பு மாதிரி வர இயலவில்லை.என்றாலும்,மிகுந்த சந்தோசமாய் இருக்கிறது...

உண்மையில் மண்குதிரை சொல்கிற கவிதையின் பன்முகம் அறிய வாய்க்கிறது.சகோதரர் வசந்தின் நிலை எனக்கும் நண்பன் நேசனின் தளத்தில் நிறைய நேர்கிறது.ஜெகன் மாதிரி ஆட்கள் நேசனின் கவிதைகளை பிரித்து சிலாகிக்கும் போது கவிதையை உள் வாங்க இயலாத குறையை எது கொண்டும் நேர் செய்ய இயலாமல் இருக்கும்.

ஆக,குறை ஒன்றும் இல்லை வசந்த்!எனக்கும் நேர்கிரதுதான்.

ஆனால் ஒன்னு,

முண்டி,முனைந்து கவிதை புரியும் போது அது எடுத்து செல்லும் இடம் அலாதியானது.இதுவும் நேசன் தளத்தில் எனக்கு வாய்த்திருக்கிறது.

இனி,இந்த கவிதை குறித்து..

இந்த கவிதைக்கு இவ்வளவு முகம் இருக்கும்
என இதை எழுதிய போது அறிய இயலவில்லை
.ஹேமா,வேல்ஜி,மாதவன்,தீபா,
லாவண்யா,என நம் நண்பர்கள்
தனி தனியாக இக்கவிதையின் முகம் காட்டி தருகிறார்கள்.

"ஓஹொ இப்படி கூட இருக்குமோ?"என வியந்தபடி பார்த்துகொண்டிருக்கிறேன்.ஒருவேளை மண்டபத்தில் இருந்தவரிடமிருந்து எழுதிவாங்கி வந்துவிட்டேனோ என இருக்கு. :-)

என்னை பொறுத்தவரையில்,இக்கவிதையின் பார்வை,வசந்திற்கு விளக்கம் கொடுத்த அளவே."இந்த கேசை எப்படிடா கண்டு பிடித்தாய்?"என கேட்க்காதீர்கள் நண்பர்களே...

உண்மையில் பதில் அறியாது இந்த துப்பறியும் சாம்பு!

மிகுந்த நன்றியும் அன்பும் மக்காஸ்!

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்..
இன்றைய கவிதை,
வசந்த்,
ஹேமா,
சேகர்,
சங்கர்,
தமிழ் நாடன்,
செய்யது,
விஜய்,
வேல்கண்ணா,
வேல்ஜி,
அசோக்,
நவாஸ்,
ஜெஸ்,
மண்குதிரை,
விஸ்வா,
அமித்தம்மா,
நர்சிம்,
கல்யாணி,
உதிரா,
நேசா,
ஜமால்,
நந்தா,
மாதவன்,
யாத்ரா,
தீபா,
ஷங்கி,
லாவண்யா,
ரசிகை,
கருணா,
தமிழ்ப்பறவை,
ராஜா,

மிகுந்த அன்பும்,சந்தோஷமும்,நன்றியும் நண்பர்களே!

விநாயக முருகன் said...

இரண்டாவதின் கவிதை வரிகள் எனக்கு பிடித்திருக்கிறது ராஜாராம்

விநாயக முருகன் said...

Sorry Rajaraam. This comment should published in next post

ரௌத்ரன் said...

நல்ல கவிதை ராஜா சார் :)