Saturday, October 31, 2009

தொப்புள் வீடு


(picture by cc license, thanks ideowl)

ந்த முக்கு போய்
அந்த முக்கு திரும்பினால்
அக்கா வீடு.

றேழு மாதமாகிறது போய்.

ந்த ஊர்லதான் இருக்கியா
என தொடங்கி
எல்லாத்துக்கும்
ஒரு சிரிப்பு வச்சுருக்கடா
என முடிப்பாள்
கண் நிறைந்து.

ழக்கம் போல்
மறக்காமல்
எடுத்து வைக்கிறேன்
ஆறேழு மாதத்து
பள்ளத்தை மேவும்
சிரிப்பையும்.

ருவேளை
இன்று பார்க்கலாம்
அக்காவும் நீங்களும்..

"லகத்தில் இல்லாத தொம்பியை"
(இப்படித்தான் உச்சரிப்பாள்,இறுதியில் அக்கா!)


44 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல அக்கா. நல்ல தம்பி. மிக அருமையான தலைப்பு.

Ashok D said...

வாழ்வில் கவிதை தவிர்த்து
வாழ்வே கவிதையாகிபோகிறது
உங்களிடம்.

நடத்துங்க சித்தப்ஸ்

S.A. நவாஸுதீன் said...

"உலகத்தில் இல்லாத தொம்பியை"

மக்கா! ஒன்னும் சொல்றதுக்கில்ல. நல்லா இருக்கு, நல்லா இருக்குன்னு சொல்லி சொல்லி வாய் வலிக்குது.

ராகவன் said...

அன்பு பா.ரா.,

ஒரு பாசமான, வாரி அனைக்கும் பார்வை, குரல் தொனியை கொண்டிருக்கும் அக்காவை கடக்காத தொம்பி என்று யாருமே இல்லை என்று நினைக்கிறேன். எத்தனை அக்காக்கள், எல்லா அக்காக்களுக்கும் ஒரு பொது தண்மை இருக்கிறது சுனை நீர் மாதிரி, குளிர்வாய், தெளிவாய், உரூசியாய்.
கடந்து போன அக்காவை கூப்பிட்டு ஒரு ஞாயிறு விடியலில் வாசலில் வந்து நிற்க வைத்து விட்டீர்கள் பா.ரா. உறவுகளுக்குள் எத்தனை இருக்கிறது, பேச, எழுத, மௌனித்திருக்க, எத்தனை பரிமாணங்களில் மிளிர்கிறது. ஒரு ஊடகத்தில் புகுந்து எத்தனை கோடி வர்ணங்களை பாய்ச்சுகிறது. பக்கபக்கமாய் எழுதலாம், முடிவில் ஏன் எழுத வேண்டும், சொல்லாமல் விடுவது உன்னதம் அல்லவா? சொல்லியும் சொல்லாமலும் முடிக்கிறேன்.

அன்புடன்
ராகவன்

இன்றைய கவிதை said...

அதெப்படி தோழரே!
எல்லாவற்றையும் கவிதையிலும்
சில வரிகளிலும் அடக்கி ஆள்கிறீர்?!

நந்தாகுமாரன் said...

நல்லாயிருக்குங்க ராஜாராம்

விஜய் said...

யதார்த்தம் = பா.ரா

வாழ்த்துக்கள்

விஜய்

ரோஸ்விக் said...

நண்பா அருமை. எனக்கு உடன் பிறந்த அக்கா இல்லை :-( இது போன்ற உபசரிப்புகளை அனுபவிக்க முடியவில்லை. ஆனால், எனது தந்தையின் அக்கா தங்கைகளின் உறவு மிகவும் அன்பானது. அவர்களுக்கிடையேயான அன்பின் பரிமாற்றங்களை பார்த்து வியந்து பெருமைப்பட்டிருக்கிறேன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமையான கவிதை பாஸ்.

அ.மு.செய்யது said...

எல்லா தொம்பிகளின் அக்காக்களையும் ஒரு நிமிடம் கண் முன் நிறுத்தி விட்டீர்கள் !!!

எந்த பூச்சுகளும் பாசாங்கும் இல்லாமல், இரண்டொரு வார்த்தைகளில் மனதை நிறைத்து விடுவதில்
ராஜாராமுக்கு நிகர் நீங்கள் தான்.

இன்னும் நிறைய எழுத அன்பும் வாழ்த்துகளும் !!!

ஈரோடு கதிர் said...

அக்கா இல்லாத ஏக்கத்தை கிளறுகிறது கடைசி வரி

பாலா said...

எதார்த்தம் = பா. ரா
எளிமை = பா. ரா
இளக்கமான மொழி = பா. ரா

காமராஜ் said...

என் கல்யாணத்தில், என் வீட்டுக் கிரஹப்பிரவேஷத்தில்,உடனிருக்க ஒரு பொம்பளப்பொறப்பு இல்ல.
அது அந்த தவிப்பு ரொம்ப அடியிலே கிடந்திருக்கும் போல. கிரஹப்பிரவேஷத்தன்று சருவப்பானையோடு எனது சித்தி மகள் நுழைந்த போது நான் குலுங்கிக்குலுங்கி அழுதது இப்போது அலையடித்த மாதிரி திரும்புகிறது.

ஹேமா said...

அண்ணா அந்தப் போட்டோ நீங்களும் அக்காவுமா ?இந்தச் சிரிப்பைப் பார்த்தால் எந்த அக்காக்குத்தான் திட்ட வரும் !நல்ல தொம்பிதான் நீங்க,

செ.சரவணக்குமார் said...

அன்புள்ள அண்ணன் பா.ரா...

அசலான மனிதர்கள் உங்கள் கவிதைகளில் நிறைந்துள்ளார்கள். அருமையான கவிதை.

நன்றி.

மாதவராஜ் said...

உறவுகளின் சாத்தியங்களை அறிந்து தவிக்க வைக்கிறது. இனம்புரியாத ஒரு வலி தருகிறது.

தமிழன்-கறுப்பி... said...

படம் பொருத்தம் வாசனையோடிருக்கிறது கவிதை...

ப்ரியமுடன் வசந்த் said...

தலைப்பும் கவிதையும் ரொம்ப பிடிச்சுருக்குண்ணே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு

அகநாழிகை said...

கவிதை மிக அருமை ராஜாராம்.

- பொன்.வாசுதேவன்

புலவன் புலிகேசி said...

//தொப்புள் வீடு//

பொருத்தமான தலைப்பு........நன்றாக உள்ளது நண்பரே.....

ஆ.ஞானசேகரன் said...

நல்ல தலைப்பு.. நல்ல வரிகளிம் சொல்லிய விதமும் அருமை....

rvelkannan said...

அக்காவை நெருக்கமாக உணர முடிகிறது பா. ரா
நன்றி

உயிரோடை said...

க‌விதையும் அக்கா பாச‌மும் ந‌ன்று. வாழ்த்துக‌ள்

உயிரோடை said...

//என் கல்யாணத்தில், என் வீட்டுக் கிரஹப்பிரவேஷத்தில்,உடனிருக்க ஒரு பொம்பளப்பொறப்பு இல்ல.//

நாங்க‌ இருக்கோமே இனி விசேச‌ங்க‌ளுக்கு கூப்பிடுங்க‌.

Rajan said...

அன்பின் பா ரா

பாமர வாழ்வின் இயல்பான உணர்வுகள் உங்கள் படைப்புகளில் அழகாக மிதக்கின்றன...
மிகவும் ரசித்து லயிக்கிறேன் தங்கள் கவிதைகளில்...

நிதர்சனமான நிஜம் வாசகனை சற்றே கட்டிப் போடத்தான் செய்கிறது ...

ப்ரிய ராஜன்

இரசிகை said...

vazhakkam pola.......arumai:)

தமிழ் நாடன் said...

அனுபவித்து பார்த்தவர்களுக்குத் தெரியும் உங்கள் இந்த கவிதையின் ஆழம்!

அருமை!

அமிர்தவர்ஷினி அம்மா said...

D.R.Ashok said...
வாழ்வில் கவிதை தவிர்த்து
வாழ்வே கவிதையாகிபோகிறது
உங்களிடம்.

வழிமொழிகிறேன்

சந்தனமுல்லை said...

தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன், இங்கே!

http://sandanamullai.blogspot.com/2009/11/blog-post.html

நேசமித்ரன் said...

கவிதை நல்லாவே இல்லை
கவிதை எனக்கு பிடிக்கல
கவிதை எனக்குப் புரியல
கவிதைக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை
கவிதை அன்பு பிரியம் உறவுகள்
பத்தி பேசவே மாட்டேங்குது
கவிதை பாசாங்கு பண்ணுது
இந்தக் கவிதை எழுதுனவரை
வன்மையா கண்டிக்குறேன்
அப்டீன்னு ஒரு கவிதைக்காவது யாராச்சும் போடுவாஙகளான்னு பார்க்குறேன்
எல்லாரையும் மயக்கி வச்சுருக்காருஙக இவரு

(எத்தனை நாளைக்குதான் பா.ரா நல்லா இருக்குன்னு சொல்றது :))

கவிதாசிவகுமார் said...

அன்புத் தம்பியைப் பார்த்து கண் நிறைந்து நிற்கும் அக்காவைப் போல உங்கள் கவிதையைப் படித்தபின் மனம் நிறைந்துபோய் விடுகிறது. வாழ்த்துக்கள் பா.ரா. சார்.

ஊர்சுற்றி said...

ராஜாராம்,

இதன் ஒவ்வொரு வரிகளையும் வார்த்தைகளையும் நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் இடுகை என்னை புல்லரிக்க வைத்துவிட்டது. மிகவும் அருமை. :)

அண்ணாதுரை சிவசாமி said...

84 வயது அக்காவையும்,92 வயது மாமாவையும் மெனக்கெட்டு
போய் பார்க்க வைத்ததுடா ராஜா... இந்த அறுபது வயது தொம்பியை
உன் கவிதை.

சத்ரியன் said...

//"உலகத்தில் இல்லாத தொம்பியை"
(இப்படித்தான் உச்சரிப்பாள்,இறுதியில் அக்கா!) //

பா.ர்ரா,

யாரையாவது ஒருசிலரை பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.அவர் பேசுவதே கவிதைப் போலிருக்குமென்று.
என் மாமாவை விட்டு நான் யாரைச் சொல்லட்டும்?

கடசி வரி மட்டும் சற்று கலக்கத்தை உணர்த்துகிறதே. ஏன்?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/இந்த முக்கு போய்
அந்த முக்கு திரும்பினால்
அக்கா வீடு.

ஆறேழு மாதமாகிறது போய்./

இந்த வரிகளைப் படித்த நினைவு இன்னும் பசுமையாய் இருக்கிறது.

பழைய கவிதைதானே இது...

பெசொவி said...

உங்க வலைப்பதிவுக்கு மிக மிகத் தாமதமாக வருகிறேன். உங்கள் கவிதைகள் எல்லாமே அருமையாக இருக்கின்றன. நீங்கள் என்னைப் பின்தொடர்வது குறித்து மிக்க மகிழ்ச்சி.

வாழ்த்துங்கள், வளர்கிறேன்!

மண்குதிரை said...

enakku romba nerukkama irukku

thamizhparavai said...

நான் மட்டும் வேறென்ன சொல்லப் போகிறேன்....

ரௌத்ரன் said...

கவிதை ரொம்ப அழகா இருக்கு ராஜா சார்...

பிடிச்சிருக்கு...

விக்னேஷ்வரி said...

நல்லா இருக்கு.

பா.ராஜாராம் said...

@ராமலக்ஷ்மி
நன்றி ராமலக்ஷ்மி!உற்சாக ஊற்று!

@அசோக்
நன்றி மகனே..இவ்வளவு உறவுகளை தருமா,இந்த வலை உலகம்!

@நவாஸ்
நன்றி மக்கா!மாத்தி சொல்லி பாருங்க என்கிறேன் கேட்க்க மாட்டீங்கறீங்க.அனுபவிங்க..

@ராகவன்
சுனை நீர் மாதிரி,பிடி கருணை மாதிரி...உங்களுக்கு என ஊறிய வார்த்தைகள் வாய்க்கிறது மக்கா.பின்னூட்டங்களில் பதிவு போடுகிற என் ராகவன்...நன்றி மக்கா!

@இன்றைய கவிதை
நன்றி நால்வரே!..இப்பல்லாம் முதல் ஆளாய் ஓடி வருகிறீர்கள்!உங்கள் வீட்டு விசேஷம் போல..நெகிழ்வு மக்கா.

@நந்தா
நன்றி நந்தா!

@விஜய்
பா.ரா=விஜய்.
விஜய்=பா.ரா.
நன்றி விஜய்!

@ரோஷ்விக்
நன்றி நண்பா.முதல் வரவு.ரொம்ப சந்தோசம் மக்கா.

@ஸ்ரீ
வாங்க சீயான்.ரொம்ப நன்றி பாஸ்.

@செய்யது
நீங்கதான் முதலில் கேட்டீர்கள் செய்யது.தொகுப்பு தயாராகுது.நம்ம வாசுதான்.முகூர்த்த வாய் மக்கா.நன்றியும் செய்யது!

@கதிர்
நன்றி கதிர்.பிரமிப்பு கதிர் நீங்கள்!

@பாலா
குசும்பு=பாலா.
கொலைவெறி=பாலா.
பாலா=பாலா.நன்றி மாப்ஸ்!

@காமராஜ்
இப்படி ஒரு,பின்னூட்டம் இல்லை எனில்,லாவண்யா நமக்கு நண்பியாக மட்டுமே இருந்திருப்பார்கள்..இல்லையா காமராஜ்?எப்படியெல்லாம் மலர்கிறது இந்த தருணங்கள்!நன்றி காமு,லாவண்யா!

@ஹேமா
என்னையவும் நிறைய பாதித்த புகைபடம் ஹேமா...ஒரு கவிதையை எவ்வளவு அலங்கார படுத்திவிடுகிறார்கள் நம் பசங்கள்.நன்றிடா,ஹேமா!

@சரவணா
'அசலான மனிதர்கள்' அருமையான வார்த்தை சரவணா..நன்றி மக்கா!

@தமிழன்-கறுப்பி
ரொம்ப நாள் ஆச்சு மக்கா..நல்லா இருக்கீங்களா?நன்றி தமிழன்-கறுப்பி!

@மாதவன்
இன்றைய உங்களின் கவிதை பெரிய பாதிப்பு மாதவன்.என்னென்னவோ செய்கிறீர்கள்-திருத்தமாய்!நன்றி மாதவன்!

@வசந்த்
ரொம்ப சந்தோசம் வசந்த்!இதை விட என்ன வேணும்.நன்றி மக்கா!

பா.ராஜாராம் said...

@T.V.R.
நன்றி டி.வி.ஆர்.!

@வாசு
நன்றி வாசு!

@புலவன் pulikesi
நன்றி புலவரே!

@சேகர்
நன்றி சேகர்!

@வேல்கண்ணன்
நன்றி வேல்கண்ணா!

@லாவண்யா
காமராஜின் பின்னூட்டம்,ஒரு நெகிழ்வேனில்,உங்கள் பதில் மற்றொரு நெகிழ்வு லாவண்யா.இது இங்கு நிகழ்வது இன்னும் பிடிச்சு இருக்கு...(பா.ரா.உங்கள் கவிதைகளை தொகுக்க விருப்பமிருக்கா என மற்றொரு தொடக்கத்தையும் தொடங்கி வைத்தீர்களே..அது போல!)

@ராஜன்
நன்றி ராஜன்!உங்களை தேடி அடைய நான்தான் தாமதித்து விட்டேன்.

@ரசிகை
நன்றி ரசிகை!

@தமிழ் நாடன்
நன்றி தமிழ்!தொடர் வருகை இல்லையா?நான்தான் வர முடியாமல் இருக்கு.இப்படி நிறைய பேரிடம் பலகீனபடுகிறேன்,மக்கா.வேலை மட்டும்தான் காரணம்.

@அமித்தம்மா
நன்றி அமித்தம்மா!

@முல்லை
நன்றி முல்லை.பார்த்துட்டேன்.சீக்கிரம் போட்டுறலாம்.

@நேசா
ஹா..ஹா..ஹா.நேசா.நன்றி மக்கா!

@உதிரா
புடிங்கடா இந்த குட்டியை!பா.ரா.சாராமுல்ல...நன்றிடா கவிதும்மா!

@ஊர்சுற்றி
நன்றி மக்கா!முதல் வரவுன்னு நினைக்கிறேன்.அம்மா கூப்பிடுவது
போல் இருக்கு உங்கள் பெயர்-மிக நெருக்கமாய்..

@அண்ணாதுரை சிவசாமி.
சித்தப்பா....பின்னூட்டம் பார்த்ததும் கண்கள் கலங்கியது.வேறு என்ன சொல்லட்டும்...வரணும் என்பதை தவிர.நன்றி சித்தப்பா!

@சத்ரியன்
நன்றி மாப்ள!நீங்களுமா?சும்மா அடிச்சு ஆடுங்கய்யா.உங்க வீடு.மச்சினன் மாதிரியே இல்லை.

@சுந்தரா
மெமரி சிப் எதுவும் முழுங்கி இருப்பியோ..சிறு வயதில்?முதல் மூன்று வரி மட்டும்!..துருவி பார்த்ததில் இதுதான் சிக்கியது.பெரிய ஆச்சர்யம்டா,நீ!..உனக்கு எதுக்கு நன்றி?..

@பெயர் சொல்ல விருப்பமில்லை.
சரி போங்க!..முதல் வரவுக்கு சந்தோஷமும் அன்பும்.நிறைய வாழ்துக்கள்!நிறைய வளரனும்.

@மண்குதிரை
என்ன மக்கா..இப்பல்லாம் அண்ணே..சேர்க்க மாட்டுங்கிறீங்க..ரொம்ப சின்னதா இருக்கும்.ஆனால் அது சேர்ந்த பிறகே நிறைவா இருக்கும்..பார்த்திங்களா..கேட்டு வாங்குறேன்.நன்றி மண்குதிரை!

@தமிழ்ப்பறவை
ரொம்ப நாள் ஆச்சு மக்கா!வேலையா?நல்லா இருக்கீங்களா?நன்றி மக்கா!

@ரவுத்திரன்
நன்றி ராஜேஷ்!

@விக்னேஷ்வரி
நன்றி விக்னேஷ்வரி!

ஊர்சுற்றி said...

//நன்றி மக்கா!முதல் வரவுன்னு நினைக்கிறேன்.அம்மா கூப்பிடுவது
போல் இருக்கு உங்கள் பெயர்-மிக நெருக்கமாய்..
//
:)
நண்பர்கள் என்னை இப்படியே கூப்பிட்டதால் நான் இந்த பெயரைப் பயன்படுத்திக்கொண்டேன். :)