Wednesday, November 18, 2009

புரை ஏறும் மனிதர்கள்-இரண்டு

ண்பர் மணிஜியிடமிருந்து அழை எண் பெற்று கேபில்ஜியை தொடர்பு கொண்டேன்.

"டம்புக்கு சரி இல்லைன்னு விஷயம் கேள்வி பட்டுதான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக கார எடுத்துட்டு போறேன் தல. சட்டையை போட்டவர் சோபாவில் உட்கார்ந்தார். அப்படியே collapse ஆய்ட்டார். சகோதரி கணவர் கூட காலையில்தான் துபாய் போறார். பிறகு விஷயம் கேள்வி பட்டு உடனே திரும்புற மாதிரி ஆயிருச்சு. மருமகன்னா உயிர் இவருக்கும். எண்பது, நூறு பேரு இருக்கும் தல. நம்மாளுங்க. வந்து நின்னு, எல்லாவேலைகளையும் இழுத்து போட்டு பார்த்தாங்க. யாருன்னே தெரியாது. முகம் கூட பார்த்தது இல்லை. எங்கிங்கிருந்தோ எவ்வளவோ போன் கால்கள். என்ன செய்ய போறேன் தல, இவுங்களுக்கெல்லாம்?" என்று தத்தி,தத்தி,வெயிலிலும் மழையிலும் அமர்ந்து கொண்டு இருந்தது அவர் குரல். முதல் முறை கேட்க்கிற குரல். சம்பவமும், சூழலும் அடைத்து, அப்பா மேலான பிரியம் மட்டும் ஒழுகி கொண்டே இருந்தது அவர் குரலில்.

ப்பா என்பவர் அப்பா மட்டும்தானா? எவ்வளவு நிகழ்வு, எத்தனை நாள், எவ்வளவு இரவு, எத்தனை பிணி, எவ்வளவு சந்தோசம், போதனை, கல்வி, சிரமங்கள், எவ்வளவு மீசை குத்திய முத்தங்கள், இன்னும் எவ்வளவு எவ்வளவு இந்த அப்பா? போனை வைத்ததும் சொல்லொண்ணா அடர்த்தி கவ்வி கொள்கிறது. ஒரு சரித்திரம் ஒரு நொடியில், ஒரே ஒரு நொடியில் முடிந்து போய் விட முடியுமா? கேபில்ஜியின் முகம் பார்க்காத அப்பாவிடமிருந்து நினைவு தப்பி அப்பாவிடம் வருகிறது...

ப்பா என்றொரு மக்கா.

கோவையில் இருந்து திரும்பி கொண்டு இருந்தோம் அப்பாவும், நானும். ஆரப்பாளையம் இறங்கி, அண்ணா பஸ்ஸ்டாண்ட் வந்துதான் சிவகங்கை பஸ் மாறனும், அப்போ. அண்ணா பஸ் ஸ்டாண்ட் வந்ததும் அப்பா கேட்டார்,

"ம்பி அம்பது ரூபா வச்சுருக்கியாடா?" (ரொம்ப rare-ஆதான், இந்த"தம்பி"யை யூஸ் பண்ணுவார் அப்பா)

"ருக்குப்பா. என்னப்பா?" என்றேன்.

"தா"என்று வாங்கி கொண்டு நடந்தவர் நாலு அடி நடந்திருப்பார். திரும்பி என்னை பார்த்தவர் "வாடா"என்றார். பின்னாலேயே நானும் போனேன்.

ருகில் உள்ள ஒயின்ஸ் சாப்பிற்குள் அப்பா நுழைவதை பார்த்ததும் நின்றுவிட்டேன். உண்மையில் நான் உணவருந்த போகிறார் போல என்பதாகத்தான் பின் தொடர்ந்தது. "சரிதான்" என சிரித்துகொண்டு, அருகில் ஒரு மரியாதை நிழல் இருந்தது. வேம்புக்கெனவே வாய்க்கிற மரியாதை நிழல்! நிழலில் நின்று கொண்டேன் நான். அப்படி நிற்கிற என் மரியாதையும் பிடித்திருந்தது.

யின் சாப்பில் ஒரு குவாட்டரை பிடித்துகொண்டு, பக்கத்தில் உள்ள பாருக்குள் நுழைந்தார் அப்பா. இரண்டு நிமிடத்திற்கும் குறைவில் பாரில் இருந்து வெளிப்பட்டார். வாயை துடைத்து கொண்டே வந்தவரின் கையில் உரித்த வாழை பழம் ஒன்று இருந்தது. பாதியை வாயில் போட்டுக்கொண்டு மீதியை என்னிடம் நீட்டினார்.

"னக்கு வேணாம்ப்பா நீங்க சாப்பிடுங்க" என்றேன்.

"முண்டை, புடி. பாருக்குள்ளே போயி ரைட்ல திரும்பு. பாதி வச்சுட்டு வந்திருக்கேன். பார் பயல்ட்ட உன்னை காமிச்சு சொல்லிட்டு வந்திருக்கேன்." என்றவர் என் முகத்தை கூட பார்க்காமல், விடு, விடுவென பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்க தொடங்கி விட்டார்.

னக்கு பெரிய அதிர்ச்சி. நான் தண்ணி அடிப்பது அப்பாவிற்கு தெரியும். அப்பாவிற்கு தெரியும் என்பது எனக்கும் தெரியும். ஆனாலும் அப்பா இல்லையா? தண்ணியில் இருக்கும் போது அப்பாவை பார்த்ததும் தெறிப்பதும், புகைத்து கொண்டு இருக்கும் போது, அப்பா வந்து விட்டால்,சிகரெட்டை எறிவதும் பயமோ, மரியாதையோ சம்பந்த பட்டது மட்டுமில்லை. இப்படியெல்லாம் இருக்க பிடித்தும்தானே வருகிறது.

"ன்ன வெயில்டா.." என்று நண்பனுடன் பேசி கொண்டே சட்டை பட்டனை தளர்த்துகிற போது, கையிலிருக்கிற தினசரி கொண்டு நமக்கும் சேர்த்து விசிறுகிற நண்பனை போல், சுளுவாய் அப்பா மற்றொரு கதவை திறந்து தந்தார். அப்பாவிற்கும் எனக்குமான நீர்பாசன கதவை!

ர் வந்ததும் நண்பர்களிடம் சொல்லி சிரித்தேன். பிறகு வந்த காலங்களில் ஒரு சிப் உள்ளிறங்கியதும், tvs-50 சாவியை நண்பர்கள் யாரிடமாவது கொடுத்து "அப்பாவை போய் கூட்டிட்டு வாங்கடா" என்பேன். அப்பா வந்ததும் ரெண்டாவது ரவுண்டு தொடங்கும். நண்பர்கள் எல்லோரையும் அப்பா "சித்தப்பு" என்றுதான் அழைப்பார். (மகன்,அசோக்..உங்களிடம் மிக நெருங்கியதற்கு மன ரீதியான இவ்விளிப்பே காரணமாய் இருக்கலாம் எனக்கு). பசங்கள் எல்லோரும் "அப்பா" என்றழைப்பார்கள்.

ல்லா கிளாசையும் வட்டமாக அடுக்கி நிரவி ஊற்றுவது அப்பாவாகவே இருக்கும் பெரும்பாலும். நண்பர்களில் சூரி அண்ணனும், முத்துராமலிங்கமும் அப்பாவிற்கு மிக நெருக்கம். நண்பர்கள் எல்லோரும் ரவுண்டு கட்டி அமர்ந்து தண்ணி அடித்தாலும், நான் மட்டும் அப்பாவின் "முன்பாக" என அருந்துவது இல்லை. மூர்த்தி கடையில் ஒரு திரை இருக்கும். திறந்து மூடவென. திரையை இழுத்துவிட்டு பின்புறமாக நின்று கொள்வேன். முத்துராமலிங்கம் என் கிளாசை கொண்டுவந்து திரைக்குள் தருவான். சத்தம் பறியாமல் உறிஞ்சி கொள்வேன்.

"நீ தண்ணி அடிக்கிறேன்னு தெரியும். இங்க அடிச்சா என்ன. திரைக்கு பின்னால் அடிச்சால் என்னா, உக்காந்து அடிடா முண்டைக்கு மாரடிச்ச்சவனே" என்பார் அப்பா.

நான் சிரித்த படியே வெளியே தம் அடிக்க இறங்கி விடுவேன். ஒருமுறை தம் முடிச்சு சபைக்குள் நுழைய அப்பா எதிரில் உட்க்கார்ந்திருக்கிற முத்துராமலிங்கம் கையில் சிகரெட் புகைந்து கொண்டு இருந்தது. எனக்கு சுரீர் என்றது. அவன் கையிலிருந்த சிகரெட்டை பிடுங்கி வெளியில் எரிந்து விட்டு வெளியில் வந்து விட்டேன்.

பின்னாடியே வந்த முத்துராமலிங்கம் "என்ன மாமா?" என்றான்." என்ன, நொண்ண மாமா? ஒங்கூட உட்கார்ந்து தண்ணி அடிக்கிறார் என்பதற்காக அவரோடு உட்கார்ந்து தம் அடிப்பியா?" என்று கடித்து வைத்தேன். இப்பவும் எனக்கு இந்த சைக்காலஜி புரியவில்லைதான். ஆனால் புடிச்சிருக்கு. புடிச்சிருக்கும்படிதானே வாழவும் முடியும்.

ப்பாவிற்கு எல்லாம் ஒண்ணுதான். முன்னாடி, பின்னாடி எல்லாம்!

ராஜா, சூரிஅண்ணன், pcரவி அண்ணன், முத்துராமலிங்கம், மகந்தா, மதி, மூர்த்தி, அமரன்கார்த்தி, குண்டுகார்த்தி, டூல்ஸ்முத்து, நாகேந்திரன், செட்டி, ஜெயா, காலீஸ், எல்லாம்!!

விரிந்த வெளிகளில் அப்பா வாழ்வை சிந்திக்கொண்டே போனார். வெள்ளை பேப்பரில் சிந்திய மை நாலாய் மடித்தால் ஒரு சித்திரமும் எட்டாய் மடித்தால் மற்றொரு சித்திரமும் வருவது போல், சித்திரம் சித்திரமாக சிந்திக்கொண்டே போனார். பிறகு சிந்தியும் போனார்.

றவினர்கள் யாராவது அம்மாவிற்கு இதை வாசித்து காட்ட கூடும். "அப்பா பற்றி எழுத உனக்கு வேறு நல்ல விஷயங்கள் இல்லையாடா" என வெட்கி புன்னகைப்பாய் அம்மா, நீ.

ருக்கட்டும் அம்மா. இந்த முகம் நீ பார்க்கலைதானே? பார்த்துக்கோ!

து எல்லாம் சேர்த்துதான் அப்பா, அம்மா.

ப்பா என்றொரு மக்கா, அம்மா!

புரை ஏறும் மனிதர்கள் - ஒன்று

58 comments:

thamizhparavai said...

ராஜாராம் சார்... பொறாமையாக இருக்கிறது. எல்லாமே வெறும் வார்த்தைகள்தான் அவை உங்கள் பதிவில் இல்லாவிட்டால். ஆனால் அவைகளைப் படிக்கையில் ஒருவித நேசம் கட்டிக் கொண்டு வருகிறது.

நெகிழ வைத்த பதிவு இது.. இன்னும் முதல் பகுதி படிக்கவில்லை...

அதனை இன்னுமொரு இளமாலையில் தேனீருடன் படித்துக் கொள்கிறேன்...

Thenammai Lakshmanan said...

//விரிந்த வெளிகளில் அப்பா வாழ்வை சிந்திக்கொண்டே போனார். வெள்ளை பேப்பரில் சிந்திய மை நாலாய் மடித்தால் ஒரு சித்திரமும் எட்டாய் மடித்தால் மற்றொரு சித்திரமும் வருவது போல், சித்திரம் சித்திரமாக சிந்திக்கொண்டே போனார். பிறகு சிந்தியும் போனார்.//

அற்புதம் மக்கா அற்புதம் அப்பாவைப் பற்றி அறிய முடியாதவைகளையும் பதிவு செய்ததற்கு

இன்றைய கவிதை said...

அப்பா என்றாலே அருமைதானே பா.ரா!
நெஞ்சைத் தொடும் பதிவு!

-கேயார்

ஜெனோவா said...

ரொம்பவும் சிலாகித்து படித்தேன் ...
அப்பாவும் படித்துக்கொண்டிருப்பார் நிச்சயமாய் ...

வாழ்த்துக்கள்

Kannan said...

நீண்ட நாள் கழித்து ஊர் செல்லும் போது, துசியாலும், புழுதியாலும் தொண்டையில் ரண வலி உணர்வேன், அதே வலி உணர்கின்றேன் இதை படிக்கும் போது..

நேசமித்ரன் said...

சொற்கள் திகைத்த வெளியில் நிற்க வைத்து விட்டு கடந்து போகிறாள்
இவள்

இப்போதைக்கு முத்தஙகள்

பிறகு வருகிறேன்

சாகடிக்கறதே வேலையா போச்சு

Ashok D said...

சித்தப்ஸு.. கட்டிங் கொடுத்த பெரிப்ஸு வாழ்க.

கேபிளு ஒரு சிறந்த மனிதர். (visa ன்னு ஒருத்தர் நாங்க சொல்ல வேண்டியத அழகா சொல்லிட்டார்-commentsla)

(தண்டோரா,(2 வாரங்களுக்கு முன் வரை இவர் யார் என்று தெரியாது) காவேரி கணஷ், முரளிகண்ணன்,நர்சிம், வாசு(அகநாழிகை), உண்மைதமிழன், பெஸ்கி, surya Butterfly இவர்களின் பங்கு மகத்தானது சித்தப்ஸ்)

சரி சரி.. அதுக்குன்னு சொத்துல எனக்கு சம பங்கு கொடுக்காம இருந்திடாதிங்க.. சொல்லிட்டேன்.. அம்புடுதான்.... :))))

செ.சரவணக்குமார் said...

அன்புள்ள பா.ரா அண்ணா..

உரைநடையில் உங்களுக்கென்று ஒரு தனித்த மொழி இருக்கிறது. வாசிக்கும்போது அது ஏற்படுத்தும் பரவசம் அலாதியானது. தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளையும் எழுத வேண்டும் என வேண்டுகிறேன்.

'பரிவை' சே.குமார் said...

//"அப்பா பற்றி எழுத உனக்கு வேறு நல்ல விஷயங்கள் இல்லையாடா" என வெட்கி புன்னகைப்பாய் அம்மா, நீ.

இருக்கட்டும் அம்மா. இந்த முகம் நீ பார்க்கலைதானே? பார்த்துக்கோ!//


நெகிழ்வோடு கூடிய நேசமிகு வரிகள். வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

அப்பா - மகனுக்கு ஒரு ஆசான் - பல விதங்களில்...

அதை மிக மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.

வெரி நைஸ்.

வினோத் கெளதம் said...

அருமைங்க..உள்ளது உள்ளப்படியே எழுதி உள்ளிர்கள்.

கவிதாசிவகுமார் said...

அப்பாவின்(தாத்தாவின்) நினைவுகள் உங்களுக்குள் உறைந்துபோய் இருக்கிறது. தாத்தா உங்களுக்கு 'BEST FRIEND' ஆகவும் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அந்த அன்புத் தகப்பனை(நண்பனை) நினைத்து மருகும் மகனாக இருக்கிறீர்கள். தாத்தாவின் ஆசிர்வாதம் தொடர்ந்து வரும்ப்பா.

ஹேமா said...

அண்ணா இயல்பான வார்த்தைகளோடு அப்பாவை எஙக்ளிடம் கூட்டி வந்தமைக்கு நன்றி.மனம் நெகிழ்வாய் கண் கலங்கிவிட்டேன்.உண்மையில் எங்கோ தொட்ட குறை விட்ட குறையாயிருக்குமோ !

அண்ணா,பாத்துக்கோங்க.அஷோக் எப்பவும் எனக்குப் போட்டியா இருக்கார்.அவருக்குச் சொத்தில பங்குன்னா,எனக்கு யாராம் தாரது ...!

அம்மாவுக்கு என் வணக்கம் சொல்லுங்க.

velji said...

அதிகாலையில் வழக்கம்போல் என்வீடு இயங்கிகொண்டிருக்க..இது எனக்கு மட்டும் பெய்த மழை!
பிறகு அவர்களிடமும் சொல்வேன்.

ஆ.ஞானசேகரன் said...

அருமை.. எதார்த்தமான கலங்கள்...

அ.மு.செய்யது said...

//அப்பா என்பவர் அப்பா மட்டும்தானா? எவ்வளவு நிகழ்வு, எத்தனை நாள், எவ்வளவு இரவு, எத்தனை பிணி, எவ்வளவு சந்தோசம், போதனை, கல்வி, சிரமங்கள், எவ்வளவு மீசை குத்திய முத்தங்கள், இன்னும் எவ்வளவு எவ்வளவு இந்த அப்பா?//

உண்மை தான்..அப்பாவின் இந்த‌ ப‌திவோடு மிக‌ நெருக்க‌மாய் உண‌ர்கிறேன் பா.ரா !!

காமராஜ் said...

என்னவென்றே புடிபடல பாரா. எனக்கு முழுசும் படிக்க முடியல. கண்ணைக்கட்டிக் கொண்டு.. மீதியை நான் உணர்கிறேன்.
எப்பேர்ப்பட்ட கொடுப்பினை பாரா. பசங்களோட நண்பர்கள் அப்பாவென அழைக்கும் பேறு அவனுக, அவனுகளுக்குள் தன்னை நிமிர்த்துக்கொண்ட அப்பா, அப்பப்பா எப்பேர்பட்ட சிலாக்கியம். பாரா 4/140 குயில்த்தோப்பில் இன்னொரு புள்ள இருக்குன்னு சொல்லு. எங்கப்பாவுக்கும் சேர்த்து லால் சலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//விரிந்த வெளிகளில் அப்பா வாழ்வை சிந்திக்கொண்டே போனார். வெள்ளை பேப்பரில் சிந்திய மை நாலாய் மடித்தால் ஒரு சித்திரமும் எட்டாய் மடித்தால் மற்றொரு சித்திரமும் வருவது போல், சித்திரம் சித்திரமாக சிந்திக்கொண்டே போனார். பிறகு சிந்தியும் போனார்.//

:-))

அகநாழிகை said...

ராஜாராம்,
மிகவும் அருமையான எழுத்து நடை. உங்கள் வாழ்க்கையை, நீங்கள் அனுபவித்ததை மட்டுமே எழுதுவதால் அதன் உள்ளீடாக பயணிக்கும் வாசக மனது லயிப்பில் ஆழ்ந்து விடுகிறது.
வாழ்த்துக்கள்.

- பொன்.வாசுதேவன்

vasu balaji said...

அப்பா! அழகான அப்பா! எல்லா அப்பாக்களிலும் ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. அடயாளம் கண்டு சொன்ன விதம் அருமை ராஜாராம்.

Rajan said...

உயிர் குழைத்து எழுதுகிறீர்கள் !

பொறாமையா இருக்கு !

விஜய் said...

நெகிழ்ந் தேன்

மகிழ்ந் தேன்

வாழ்த்துக்கள்

நன்றி இறைவனுக்கு தங்களது சககாலத்தில் வாழ வைத்ததற்கு

விஜய்

ராகவன் said...

அன்பு பாரா,

எனக்கு இதை முழுதும் படிக்க முடியவில்லை, படிக்கவும் இல்லை. முதல் பத்தி எனக்காக எழுதியதாக இருக்கிறது. என் அப்பா மாட்டுப்பொங்கல், நாங்க (நானும் என் மனைவியும்) அவருடன் இல்லாத பொங்கல் நாளில் எங்களின் நினைவுகளில் இருந்ததாக ஹரி சொன்னான். அன்று காலை இடது கை ஒலையுதுடா ஹரி! நவ நீதன் டாக்டர்ட்ட போய்ட்டு வந்துடலாமா என்றவுடன், ஹரி சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்புகிறான். என் அப்பா எப்பவுமே 5 மணிக்கே எழுந்து அம்மாவுக்கு உதவியா இருக்கட்டுமேன்னு பாத்திரமெல்லாம் விளக்கி வச்சுடுவார், துணிமணியெல்லாம் துவைச்சு தருவார், ஒரு தாயுமானவனாய் இருந்தார், இருந்த வரை. ஊரில் இருந்து வந்தவுடன் என் துணிகளையும், என் மனைவியின் நைட்டி முதற்கொண்டு எந்தவித பாகுபாடும் இல்லாமல் துவைத்துத் தருவார். 6 மணிக்கு எல்லா வேலையையும் முடித்துவிட்டு, குளிர குளிர பச்சைத் தண்ணில குளிச்சுட்டு (என்ன சிதோஷ்ன நிலையாய் இருந்தாலும் அவர் வென்னீரில் குளித்ததே இல்லை) திவ்யமா, ஆண்டாள் பாசுரங்கள் எல்லாம் சொல்லி, உடல் முழுக்க சந்தனமோ, திருநீரோ இட்டு, ஈசி சேரில் சாய்ந்த படி பேப்பர் படிப்பார். மிக இலகுவான விஷயங்களில் மட்டுமே அவருக்கு ஈர்ப்பு. அரசியல் தெரியாது, சினிமா தெரியாது, ஆனாலும் பேப்பர் படிப்பார், எதற்கென்று தெரியாது இன்றுவரை.

ஹரி கிளம்புவதற்கு முன்னாலேயே அப்பாவுக்கு லேசா மார் வலிக்குதுன்னு சொல்லி சரிந்தார். இரண்டாவது மாடியில் இருந்து அவரை முதல் மாடிக்கு வந்து சேர்வதற்குள், மிகப்பெரிய விக்கலுடன் ஹரியின் கையில் இறந்து போனார். ஏழு நிமிடங்களே அந்த வலியில் முகம் சுருக்கியிருப்பார், போதும்டா என்பது போல ஹரியை பார்த்து ஒரு முறுவலுடன் இறந்து போனதாய் சொன்னான். பெங்களூரில் நான் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது என் மனைவிக்கு வந்த தகவலில் அப்பா இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் உடனே கிளம்பி வரவேண்டும் என்று ஹரியின் நண்பன் லட்சுமணன் கூறியிருக்கிறான். என் மனைவியின் மேல் பிரியத்தை, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருணனாய் பொழிந்தவர். இவர்கள் இருவரும் கைபிடித்து பேசிக் கொண்டிருக்கும்போது அம்மாவுக்கு கொஞ்சம் பொறாமையாய்க் கூட இருக்கும். பேண்ட் போட்டு பழக்கம் இல்லாத அப்பாவை, என் மனைவி பேண்டு போட வைத்து பெங்களூர் முழுக்க சுற்றிக் காட்டினாள். நான் கல்யாணம் ஆன நாள்ல இருந்து சொல்லுறேன், பேண்ட் போட்டுக்கோங்க, தலைமுடிக்கு டை அடிச்சுக்கோங்க, அப்பவெல்லாம் கேக்கல, மருமக வந்து சொன்னவுடனே, இவருக்கு வயசு திரும்பது என்று அடிக்கடி சடைத்துக் கொள்வாள் அம்மா. அப்பா என் மனைவியைப் பார்த்து, என் அம்மா இருக்கும் பக்கமாய் காட்டி, சரியான கோட்டி அவ! என்று லேசா தன் தலையில் அடித்துக் கொள்வார் என் மனைவியின் சிரிப்புக்கிடையே.

தொடர்கிறேன்!

Ashok D said...

சித்தப்ஸு.. இங்க சிங்கிள் டீக்கு ஜிங்கி அடிக்கும் எனக்கு சொத்தா? ’ஹேமா சுவிஸு’ன்னு கவிதை எழுதிகிட்டு சுத்தமான காத்த ஜாலியா சுவாசிக்கற ஹேமாவுக்கு சொத்தான்னு? முடிவு செய்ங்க...

ஹேமாக்கும் எனக்கும் அன்ப பிரிச்சுகொடுத்துட்டு, சொத்த மட்டும் எனக்கு கொடுத்துடுங்க. போனபோவுதுன்னு ஊர்லயிருந்து வரும்போது ஒரு கிலுகிலுப்பை வாங்கி வந்துகொடுத்துடுலாம் ஹேமாவுக்கு. எப்டி நம்ம IDEA :)

ராகவன் said...

அன்பு பாரா,

நிறைய எழுதத்தோன்றுகிறது பாரா!

நானும் என் மனைவியும் காதலர்களாய் இருந்த போது, கல்லூரியில் இருந்து கொடைக்கானல் போயிருந்தோம், அப்போது நான் சென்னையில் வேலைப்பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தேன் ஒரு மாலைக் கல்லூரியில். மதுரை வந்து தான் கொடைக்கானல் போனோம். என் வீட்டிலும் இதைப் பற்றி சொல்லியிருந்தேன், இவளைப்பற்றியும் சொல்லியிருந்தேன். என் மனைவி கிறித்துவ பெண் என்பதால் என் அம்மாவுக்கு அவ்வளவு இஷ்டம் இல்லை. அப்பாவிற்கு இவளைப்பார்க்க ஆசையா இருந்திருக்கு, ஹரியை உடன் அழைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு என் அம்மாவிடம் சொல்லாமல் எங்களை, இவளை பார்க்க வந்திருந்தார். மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்பாக ஒரு வினாயகர் கோவில் இருக்கும் அதற்கு அருகில் எங்களை இருக்கச் சொல்லியிருந்தார். கொஞ்சம் ஆட்டோக்களுக்கு மத்தியில் வெளிச்சம் குறைவாக இருந்ததால், நாங்கள் இருவரும் சிறிது தள்ளி ஒரு விளக்கு கம்பத்தின் கீழ் நின்றோம். ஹரி எங்கள் இருவரையும் பார்த்து அப்பாவை அழைத்துக் கொண்டு அருகில் வந்தான். வந்தவுடன் இவளை உற்றுப் பார்த்தார், கீழிருந்து மேலாக ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார், என்னம்மா நல்லாயிருக்கியா? கொஞ்சம் நேரமிருந்தா வீட்டுக்கும் வந்திருக்கலாம்னு, தன்னுடைய ஏமாற்றத்தைச் சொன்னார். தீபாவளிக்கு சாண்ட்ராவ கூட்டிட்டு வாடான்னு என்னை நோக்கிச் சொன்னார். நானும் சரியென்று மையமாக தலையசைத்து வைத்தேன். ஏனோ சிறிது கண்கலங்கினார், இவள் அவர் கையைப் போய் பிடித்துக் கொண்டாள். என்னைத் தனியே அழைத்து கொஞ்சம் குட்டையா இருக்காள்ல என்று என் ஆமோதிப்பை எதிர்பார்த்தார், பிறகு அவரே நல்ல பிள்ளையாத் தெரியுது, நானும் அம்மாகிட்ட பேசுறேன், தோத்திரம்மா, உங்க வீட்ல எல்லாரையும் நான் விசாரிச்சதா சொல்லும்மா. பத்திரமா போய்ட்டு வாங்க, சாப்டீங்களா, ஏதாவது சாப்பிடலாமா, நேரமிருக்கா என்று கேட்டார், நாங்க சாப்பிட்டதைச் சொன்னதும். பாலு ஆட்டோல தான் வந்தோம் என்று தொலைவாய் கை காட்டி அதோ அங்க நிக்கிறான். என்று விடைபெற்றார். என் மனைவியும் கண்கலங்கி இருந்தாள். எனக்கு நிறைவாய் இருந்தது அந்த சந்திப்பு. அப்பா எல்லா சாதாரண பொழுதுகளையும் உன்னதமாக்கி விடுவார்.

ஏதோ எழுதத் தோனிச்சு எழுதிட்டேன். பின்னூட்டம் மாதிரி இல்லாம ஒரு நினைவகழ்வாப்போச்சு.

அன்புடன்
ராகவன்

Ashok D said...

சித்தப்ஸ்.. உங்கள் பதிவு மிகவும் நெகிச்சியாகயிருந்து.. பல முறை படித்தேன். பதிலுக்கு உங்களுக்கு அன்பேனும் பாரத்தை ஏற்றாமல் குறும்பேனும் பானம்(அம்புதான்) தொடுத்தேன் :)

Ashok D said...

அச்சச்சொ .. அன்பின் மிகுதியில்
2 பெ 2 பே ஆகிவிட்டது. :)))))

க.பாலாசி said...

நெகிழ்வான அனுபவம் இன்னொரு அப்பாவிடமிருந்து. பொறாமைப்படுவதைத்தவிர வேறொன்றும் தெரியவில்லை.

கல்யாணி சுரேஷ் said...

அண்ணா எனக்கு வார்த்தையே கிடைக்கல. கண்ணு நிறைய தண்ணி நிக்குது. ஒரு வேளை நானும் ஒரு பையனா இருந்திருந்தா அப்பாவுடனான நெருக்கம் அதிகமாகியிருக்குமோ என்னவோ? இப்படி ஒரு பதிவுக்காக நன்றிண்ணா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிகவும் நெகிழ்ந்த பதிவு

S.A. நவாஸுதீன் said...

//அப்பா என்பவர் அப்பா மட்டும்தானா? எவ்வளவு நிகழ்வு, எத்தனை நாள், எவ்வளவு இரவு, எத்தனை பிணி, எவ்வளவு சந்தோசம், போதனை, கல்வி, சிரமங்கள், எவ்வளவு மீசை குத்திய முத்தங்கள், இன்னும் எவ்வளவு எவ்வளவு இந்த அப்பா? போனை வைத்ததும் சொல்லொண்ணா அடர்த்தி கவ்வி கொள்கிறது. ஒரு சரித்திரம் ஒரு நொடியில், ஒரே ஒரு நொடியில் முடிந்து போய் விட முடியுமா? //

மக்கா!

ரொம்ப நெகிழ்வா இருக்கு.

நான் ஏழாவது முடித்து ஆண்டு விடுமுறையில் இருந்த நேரம், அக்காவின் திருமண நாள் குறித்தாகிவிட்டது. அப்பாதான் தேதி முடிவு செய்தது. நாளை ரமளான் நோன்பு தொடங்குகிறது. இன்று லேசா நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாங்க. அதிரையில் உள்ள ராஜ் டாக்டரிடம் கொண்டு சென்றோம். வலி அதிகமானவுடன் தஞ்சை பெரியமருத்துவமனைக்கு கொண்டுசெல்ல சொல்லிவிட்டார். என்னையும் கூடவே அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனர். மறுநாள் நோன்பு திறப்பதற்கு முன்பாகவே அவர்கள் உயிர் பிரிந்தது. அவர்கள் கடைசியாக பேசியது பெரியண்ணனிடம் இரண்டே வாக்கியங்கள் தான். ”சின்னவன் நான் இல்லாமல் ரொம்ப ஏங்கிப்போயிடுவான் பத்திரமா பார்த்துக்குங்கப்பா. என் மகள் கல்யாணத்தையும் நான் குறித்த அதே தேதியில் வைத்துவிடுங்கள்.”

கண்கள் குளமாகிறது பா.ரா. எல்லா நினைவுகளையும் மீட்டு எடுக்கிறது இந்தப் பதிவு.

S.A. நவாஸுதீன் said...

//விரிந்த வெளிகளில் அப்பா வாழ்வை சிந்திக்கொண்டே போனார். வெள்ளை பேப்பரில் சிந்திய மை நாலாய் மடித்தால் ஒரு சித்திரமும் எட்டாய் மடித்தால் மற்றொரு சித்திரமும் வருவது போல், சித்திரம் சித்திரமாக சிந்திக்கொண்டே போனார். பிறகு சிந்தியும் போனார்.//

அப்படியே மனுஷனைக் கொல்லுறீங்களே மக்கா.

S.A. நவாஸுதீன் said...

//உறவினர்கள் யாராவது அம்மாவிற்கு இதை வாசித்து காட்ட கூடும். "அப்பா பற்றி எழுத உனக்கு வேறு நல்ல விஷயங்கள் இல்லையாடா" என வெட்கி புன்னகைப்பாய் அம்மா, நீ.

இருக்கட்டும் அம்மா. இந்த முகம் நீ பார்க்கலைதானே? பார்த்துக்கோ!

இது எல்லாம் சேர்த்துதான் அப்பா, அம்மா.

அப்பா என்றொரு மக்கா, அம்மா!//

எங்களை அழவச்சது பத்தாதுன்னு அம்மாவையும் அழ வைக்கிறீங்களே

விக்னேஷ்வரி said...

நெகிழ வைத்த பதிவு. படிச்சதும் ஏதோ கனமா இருக்குங்க.

இப்பவும் எனக்கு இந்த சைக்காலஜி புரியவில்லைதான். ஆனால் புடிச்சிருக்கு. புடிச்சிருக்கும்படிதானே வாழவும் முடியும். //
ரொம்ப.... ரசிச்சேன்.

CS. Mohan Kumar said...

சமீபத்தில் வாசித்ததில் இது ஒரு மிக சிறந்த பதிவு. உண்மைக்கென்று இயல்பாகவே ஒரு அழகு உண்டு, தெரிய வேண்டுமானால் இந்த கட்டுரையில் அப்பா- பிள்ளை வரும் பகுதிகளை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்

இரசிகை said...

1.nesamithran sir sonnathu pola
"saahadikkirathey ungalukku velaiyaap pochu"

:)

2.//இப்பவும் எனக்கு இந்த சைக்காலஜி புரியவில்லைதான். ஆனால் புடிச்சிருக்கு. புடிச்சிருக்கும்படிதானே வாழவும் முடியும். //

ithu unmai...

appa........:)

நர்சிம் said...

தொடருங்கள்

"உழவன்" "Uzhavan" said...

நனைச்சிட்டீங்க பாரா..

ஒருமுறை கபடி விளையாடும்போது கையில் லேசான பிசகல். நாட்டு வைத்தியர் கையைப் பிடிச்சி லேசா விலகியிருந்த எலும்ப சேர்த்து வைச்சி, முட்டைப்பசை போட்டு கட்டுனாரு. அப்போது வலியில் நான் துடித்ததைப் பார்த்த என் அப்பா, ஒரு குவாட்டர் வாங்கிட்டு வரட்டுமாடா.. நல்லா தூக்கம் வரும்; வலி தெரியாது என்றார்.

Anonymous said...

உறவுகளுக்கு முதலிடம் தரும் தங்கள் பக்குவம் பதிவிகளிலும் நீங்கள் பழகும் விதத்திலும் நன்கே வெளிப்படுகிறது அதை ஊர்ஜிதப்படுத்தும் இந்த பதிவு உங்கள் பதிவுகளில் ஒரு சிறப்பு வாய்ந்தது அண்ணா

சுசி said...

//நான் தண்ணி அடிப்பது அப்பாவிற்கு தெரியும். அப்பாவிற்கு தெரியும் என்பது எனக்கும் தெரியும். ஆனாலும் அப்பா இல்லையா? தண்ணியில் இருக்கும் போது அப்பாவை பார்த்ததும் தெறிப்பது பயமோ, மரியாதையோ சம்பந்த பட்டது மட்டுமில்லை. இப்படியெல்லாம் இருக்க பிடித்தும்தானே வருகிறது //

இது என் சின்னண்ணன் அனுபவித்த, என் கணவன் அனுபவிக்க கொடுத்து வைக்காத ஒன்று :((


//"என்ன வெயில்டா.." என்று நண்பனுடன் பேசி கொண்டே சட்டை பட்டனை தளர்த்துகிற போது, கையிலிருக்கிற தினசரி கொண்டு நமக்கும் சேர்த்து விசிறுகிற நண்பனை போல், //

அருமை.

//விரிந்த வெளிகளில் அப்பா வாழ்வை சிந்திக்கொண்டே போனார். வெள்ளை பேப்பரில் சிந்திய மை நாலாய் மடித்தால் ஒரு சித்திரமும் எட்டாய் மடித்தால் மற்றொரு சித்திரமும் வருவது போல், சித்திரம் சித்திரமாக சிந்திக்கொண்டே போனார். பிறகு சிந்தியும் போனார்.//

வார்த்தைகளின் கனம் கட்டாயம் படிப்பவர் மனதில் இறங்கும்...

//"அப்பா பற்றி எழுத உனக்கு வேறு நல்ல விஷயங்கள் இல்லையாடா" என வெட்கி புன்னகைப்பாய் அம்மா, நீ//

அப்பிடியே என் அம்மாவைப் போல்....

நெகிழ்ச்சியான பதிவு ராஜாராம்.

ஹேமா said...

அண்ணா பாருங்க,அஷோக் சொல்றதுக்கு சரி சொன்னீங்கன்னா !எனக்கு அஷோக் சொத்து ஒண்ணும் வேணாம்.எனக்காக ஏதாச்சும் யாருக்காச்சும் கொடுக்கணும்னான் கிலுகிலுப்பை வாங்கிட்டு சந்தோஷமா வருவாங்கனா கொடுங்க.எனக்கு சொத்து வேணாம்.

அதெப்பிடி அஷோக்,அன்பும் வேணும்.
சொத்தில பாதியும் வேணும்.பேராசை உங்களுக்கு.ஏதாச்சும் ஒண்ணுதான்.
அண்ணா சொல்லுங்க சத்தமா.

பின்னோக்கி said...

வித்தியாசமான கோணத்தில் அப்பா. அம்மாக்களைப் பற்றி பேசி..அப்பாக்களை மறந்துவிடுகிறோம்.

பா.ராஜாராம் said...

எனக்கு ஹேமாதான் வேணும்.ஹேமா போகத்தான் மத்தது எல்லாம்.சத்தமா சொல்லிட்டேன்...

ஆனால் ஹேமாம்மா....அப்பா மாதிரியே நண்பர்களை கூப்பிடுகிற அசோக்...அப்பா தானேடா.நம்ம அப்பாடா அசோக்!

கூப்பிட்டுக்கோ அப்பான்னு..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கொன்னுட்டீங்க தலைவரே.எனக்கு என் அப்பா ஞாபகம் வந்து விட்டது.

மணிஜி said...

ஏழெட்டு வருடங்களுக்கு முன் வரை நானும்,எங்கப்பாவும் ஓன்றாக மதுவருந்தி கொண்டுதான் இருந்தோம்..இப்போது அவர் விட்டு விட்டார்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஏன் இப்படி வார்த்தைகள் வராதமாதிரிச் செய்து விடுகிறீர்கள்? எங்கேயோ தொடங்கி சர சரவென
இழுத்துக் கொண்டு போய் உங்கள் அப்பா முன்னால் நிறுத்தி விட்டீர்கள். எனக்கு அவரை நேரே பார்த்த மாதிரி இருக்கு ராஜா. அது என்னமோ , உங்கள் அப்பா சொன்னதுபோல் ......அதுதான் உங்களுக்கு இன்னும் புரியவில்லை ஆனால் பிடித்திருக்கிறது என்று சொல்லி விட்டீர்களே! தப்பிப் போங்கள்.

யாத்ரா said...

இந்தப் பதிவு மனசை என்னவோ செய்கிறது, இம்மாதிரி ரசித்து ரசித்து வாழும் கணங்களை வாசித்து மகிழ ஆவலோடிருக்கிறேன்.

mathiyalagan said...

nanba...,

Enna solla...eppadi solla...

Engo elluthu sentruvittathu....un elluthu...

Mathi

பா.ராஜாராம் said...

@தமிழ்பறவை.
நன்றி பரணி!

@தேனு
நன்றி தேனு!

@கேயார்
நன்றி கேயார்!

@ஜெனோ
நன்றி ஜெனோ!

@கண்ணா
நன்றிடா கண்ணா!

@நேசன்
நன்றி நேசா!முத்தங்களும்.

@அசோக்
சரிங்க அப்பா!நன்றி.(அப்படியே அப்பா அசோக் நீங்கள்!)
@சரவணா
கண்டிப்பா சரவனா.நன்றி!

@குமார்
நல்வரவு மக்கா.நன்றியும்!

@இராகவன் அண்ணாச்சி
நன்றி அண்ணாச்சி!

@வினோ
நன்றி வினோ!

@உதிரா
சரிடா தாயி!நன்றி மக்கா!

@ஹேமா
ஹா..ஹா..நன்றிடா ஹேமா!

@வேல்ஜி
ஆகா!நன்றிப்பு!

@சேகர்
நன்றி சேகர்!

@செய்யது
நன்றி செய்யது!

@காமராஜ்
உடைந்துவிட்டேன் காமு.நன்றி!

@டிவிஆர்
நன்றி டிவிஆர்!

@அகநாழிகை
நன்றி வாசு!

@வானம்பாடிகள்
நன்றி சார்!

@ராஜன்
நன்றி ராஜன்!

@விஜய்
எனக்குமே விஜய்.நன்றி மக்கா!

@ராகவன்
உங்களை என்ன செய்யலாம் ராகவன்? எவ்வளவு அருமையான பதிவு தெரியுமா?அப்பாவையும்,சகோதரியையும் பற்றி கொள்ள காட்டி தந்ததிற்கு அன்பு ராகவன்.எங்கய்யா இருந்தீர்கள் இவ்வளவு காலமாக?நன்றி ராகவன்!(இந்த மனசை தளத்தில் இறக்குங்கள் மக்கா ப்ளீஸ்! )
@பாலாஜி
நன்றி பாலாஜி!

@கல்யாணி
நிறையடா..என் குடும்ப மனிதர்கள் என.அதில் நீயும்தான்.நன்றி கல்யாணி!

@அமித்தம்மா
நன்றி அமித்தம்மா!

@நவாஸ்
ராகவனுக்கு சொன்னதுதான் உங்களுக்கும்.ஒரு தளமே இருக்கு.இறக்குங்கள்!நன்றி என் நவாஸ்!

@விக்னேஸ்வரி
நன்றி விக்னேஷ்!

@மோகன்
நன்றி மோகன்!

@ரசிகை
வீட்டு மனுஷிகள் மாதிரி ரசிகை நீங்கள்...ஆரம்பம் தொட்டு!நன்றி மக்கா!

@நர்சிம்
நன்றி நர்சிம்!

@உழவன்
அப்பாவையும் காட்டியதற்கு நன்றி உழவரே!

@தமிழரசி
டேய்..ரொம்ப பேசுனா ராட்சசனிடம் சொல்வேன்.பாருங்க நவாஸ்..அனியாயத்துக்கு பேசுது தமிழ்.நன்றி தமிழ்!

@சுசி
பாருடா..தளத்துல சிலம்பம் ஆடும் சுசியா இது.உங்கள் நகைசுவையின் பெரிய ரசிகன் மக்கா நான்.நன்றி சுசி!

@ஹேமா
சொல்லிட்டேண்டா.

@பின்னோக்கி
நன்றி பின்னோக்கி!

@ஸ்ரீ
நன்றி ஸ்ரீ

@மணிஜி
டிட்டோ மணிஜி நீங்கள்..மீன்ஸ் மீ!நன்றி மக்கா!

@ஜெஸ்
கூல் ஜெஸ்..நன்றி மக்கா!

@யாத்ரா
நன்றி யாத்ரா!

@மதி
நன்றிடா மதி!

Cable சங்கர் said...

மிக்க நன்றி.. ராஜாராம்..

என் துக்கம் உங்கள் நினைவுகளை தூண்டிவிட்டுவிட்டதோ..? மிக அருமையான நடையில், உங்கள் அப்பாவை கண் முன் நிறுத்திவிட்டீர்கள்.

Ashok D said...

அப்பாவா.. நானா.... இப்பதான் 16 முடிஞ்சு 17 ஆகுது எனக்கு சித்தப்ஸ் :)

மண்குதிரை said...

rரொம்ப நல்லா இருக்குண்ணே

பா.ராஜாராம் said...

@கேபில்ஜி
நன்றிஜி!ஆம்.

மறந்துராதீங்க...

"அப்பாவின் கனவுகளை பறிக்க"

@அசோக்
16,17,ரவுண்ட் எல்லாம் அடிக்காதீங்க அப்பா.கட்டிங்கோட நிறுத்துங்க..என்று சொன்னால் கேட்கமாட்டீங்க.வயசான காலத்துல..
:-))

@மண்குதிரை
நன்றி மண்குதிரை!

இரவுப்பறவை said...

ஏதோ ஒன்று படித்துவிட்டு சென்று விட முடியாமல்,
நிறைய நினைவுகள் இருப்பினும் மனம் தயங்குகிறது...
வார்த்தைகள் இழந்த வெளிகளில்..

dondu(#11168674346665545885) said...

என் தந்தை பற்றிய நினைவுகள் உங்கள் பதிவைப் பார்த்ததும் வந்தன, பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_16.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Radhakrishnan said...

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி என பல இருக்கும், அதிலும் இந்த விசயத்தைத் தேர்ந்தெடுத்து சொன்ன விதம் உங்களின் நேர்மையை காட்டுகிறது. வெளிப்பூச்சு இல்லாத வெண்மையான வாழ்க்கை.

எழுத்து கண்டு பிரமிக்கிறேன்.

இன்றைய கவிதை said...

பா ரா

அப்பா என்பது தான் மகனாய் கண்டு கிடைக்காததை தன் மகனுக்கு காட்டுவது தான் பெரும்பாலும் இது எல்லாருக்கும் பொருந்தும்

ஆனாலும் சொல்லும் அழகில் அப்பா இன்னும் நெருங்கி வந்த்து போல் ஒரு உணர்வு

நன்றி பா ரா

ஜேகே

வல்லிசிம்ஹன் said...

எல்லா அப்பாக்களுக்கும்,உங்களுக்கும், உங்க அப்பாவுக்கும் என் நன்றி. அப்பா இறந்தது ஒன்றரை நாள் நோயில். அப்போதும் கண் நிறைய பாசத்தைத் தேக்கிக் கொடுத்துவிட்டுத்தான் போனார். மிக நன்றி பாரா.