Wednesday, April 28, 2010

தொடங்கி முடிவன


(Picture by cc licence, thanks Manish Bansal)

ஒன்று

ழை பிடிக்குமா?
குழந்தைகள்?
பட்டம் ஏன் பறக்குது தெரியுமா?
மருதாணிக்கு இங்கிலீஸ்ல என்ன?
சிகரெட் பிடிப்பீங்களா?
கவிதை எழுதும் போதுமா?
என்றவள்,
பேசாமல் உங்களையே
லவ் பண்ணியிருக்கலாம்.
என்றாள்.

இரண்டு

வெள்ளியோடு வெள்ளி எட்டு
சனி ஒம்போது நாளாச்சு,
கோபமாய் நீ பேசாமல் இருந்து.
என்று பேசும்போது புலம்புகிறாய்.
இடையில் கிடந்த,
சனி,ஞாயிறு,திங்கள்,
செவ்வாய்,புதன்,வியாழன்,
வெள்ளி,சனியை..
எப்படி இப்படி தாண்டிப் போகிறாய்?

மூன்று

குழந்தைக்கு சோறூட்டிக் கொண்டே
நிலவை பார்த்தாள்.
நினைத்துக் கொண்டார் போல
பாலா என்றாள்.
குழந்தை திரும்பியது.
உன்னை இல்லைடாவென
கண் நிறைந்தாள்.

69 comments:

ஈரோடு கதிர் said...

மூன்றும் முத்தானவை...

நேசமித்ரன் said...

//சோரூட்டிக் கொண்டே
கொன்டார் போல
//

ஸ்பெல்லிங் பாருங்க அண்ணே

கவிதை ...!

பெறவு வருவோம்ல !

:)

க ரா said...

அற்புதம் சார்.

விஜய் said...

மூன்றாவது மனம் கலங்கி கதி கலங்க வைத்து விட்டது

வாழ்த்துக்கள்

(நம்ம பக்கம் வர்றதே இல்லை, பெரிய இடங்களுக்கு மட்டும் தான் விசிட் போலருக்கு)

விஜய்

இரசிகை said...

//சோரூட்டிக் கொண்டே
கொன்டார் போல
//

karuppattikkulla kallu......:)

3-me remba nallayirukku rajaram sir.....!!

இரசிகை said...

ippo..........

//சோரூட்டிக்//

mattum.

நசரேயன் said...

//
ஈரோடு கதிர் said...
மூன்றும் முத்தானவை..//

உண்மை

ராஜவம்சம் said...

மூன்றாவதில் என் மனம் கனத்தது

இதே போல் பல ஆண்களும்

Chitra said...

படத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன்......... அருமை....
உங்கள் கவிதைகள், அழகு.

அம்பிகா said...

படமும், கவிதைகளும் அருமை.
மூன்றாவது, கொஞ்சம் அதிகமாய்...
பிடித்திருக்கிறது.

செ.சரவணக்குமார் said...

அன்பு பா.ரா அண்ணா மூன்றுமே மிகப் பிடித்திருந்தது.

உங்கள் பெரும்பாலான கவிதைகளை வாசித்து முடித்ததும் உதட்டோரம் ஒரு மென் புன்னகை தோன்றுகிறது. கூடவே கொஞ்சம் வலியும். அதுதான் பா.ரா என்ற கவிஞனுடைய‌ எழுத்தின் தனித்துவம்.

மாதவராஜ் said...

மூன்றையும் ரசித்தேன், சிறு சிறு பிழைகளைத் தாண்டி. எல்லாமே அழகு.

மக்கா, நீ ஒரு ஆள்தான்!

செ.சரவணக்குமார் said...

தூங்கப் போற நேரத்துல பா.ரா பிளாக் பக்கம் போகக்கூடாதுன்னு இன்னிக்கு புரிஞ்சுக்கிட்டேன். மூனாவது ரொம்பக் கொல்லுது.

மதுரை சரவணன் said...

அனைத்துக் கவிதையும் அசத்தல் வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

கவிதையும் படமும் மிக அருமை.

Kumky said...

நாட்கள் இழுத்து போயாகிவிட்டது....நம்மளையும்தான்.

கடைசியில் கண்ணீர் அது இல்லாமலா...இங்கு வந்தும்.

எந்த வார்த்தைகளையும் போட்டு நிரப்ப முடியாமல்தாம்

புலம்பிக்கொண்டிருக்கிறது.....

நடக்கட்டும்...எல்லாமும்...
மவுனத்துடனும்...புரிதலுடனும்.

Kumky said...

அடக்க முடியா கண்ணீர்..அந்த மூன்றாவதுக்குத்தான்...எதற்கென தெரியாமலே....இருக்கட்டும் பா.ரா.
இந்த விசையும் கூட இல்லாமலா வாழ்வு...?

Starjan (ஸ்டார்ஜன்) said...

மூன்றும் முத்துக்கள். அருமையான கவிதை. நல்லாருக்கு பா.ரா சார்.

இரசிகை said...

m...........thiruthinathukku piraku innum cherivaayirukku kavithaikal......!

yen ippadi azha vaikkireenga??......[unga kavithai moolamaa]......:(

valikku sir......3-vathu[ada ponga sir neenga]....!

இரசிகை said...

innaikku vera powrnami..........!!

ஹேமா said...

அண்ணா எப்பவும்போல எடுத்துக்கொண்ட கவிதைக்கருக்கள் மிக மிக அழகு.படமும் அழகு.

நேசமித்ரன் said...

பா.ரா

(அப்பாடா வீட்டுக்கு வந்தாச்சு)

மெய்யாகவே முடிவன தானா ?

கூந்தல் விரிந்த நீள்முக்கோண முடிப்பின்
நீர் வடிந்த ரவிக்கைக்கு சேணமிட்டிருக்கும் சைக்கிள் ஸ்டேரிங் பாரின் கிள்ளிங் கிள்ளிங் சிணுங்கல்

பெருங்காற்றில் நெட்டி முறிக்கும் ஸ்கவுட் கேம்ப் படுதா தோற்க
பாவாடை சஹக் சஹக்க
மந்தையின் கடைசி ஆட்டுகுட்டி நடை

வேறு கிரகமாக
உற்சவப் பதுமைகளில் அமர்ந்த கருடனின் சிறகின் பின் மொத்த உலகமும் ,கீழுதட்டை என்னவோ
ஜவ்வி மிட்டாயில் வாட்சு செய்பவளைப் போல் இழுத்துப் பிடித்துக் கொண்டு “ எரும்ம மாடு
எங்க சித்தி விட்டுக்கு முன்னாடி பெல்லடிப்பியாடா .. இனி விசில் சத்தம் கேட்குமாடா.. காக்கா வெரட்டி ப்ப்பயலே” என்ற அந்தக் கொட்டுக்கு எட்டு வைக்கையில் அரை மாத்திரை அளவுக்கு ஒலிக்கும் கொலுசும் வளையலும்

சென்ற முறை நான் இறங்கிய டவுண் பஸ்ஸில் தோள் ஈந்து ஏற்றிக் கொண்டிருந்தாள்
மகன் அலுமினிய கை தாங்கிகள்
சுமக்க
எக்ஸ் மிலிட்டரி மேனை

ஒரு நிமிஷம் தனக்குத்தானே செத்து கோமாவுக்குப் போனாப்ல இருந்துச்சு அவ பார்வ

எலேய் செந்தாழை என கூப்பிட்டிருக்க கூடாது போல

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்லாருக்குங்க

சைவகொத்துப்பரோட்டா said...

மூன்றாவது, ஒரு கதையே சொல்லிவிட்டது!!!

taaru said...

!!!!!!! விக்கித்து நிக்கிறேன் பா.ரா அய்யா....
நேசமித்திரன் சார் ... மிக அருமை... .

பத்மா said...

இது மாதிரி ஞாபக சுமைகள் இருப்பதே வாழ்கையை சில சமயம் இழுத்துப்போகத்தான் .
சுமை இருந்து கண்ணீர் விடுவது, சுமையே இல்லாமல் இருப்பதற்கு மேல் .

Ashok D said...

அட.................
சித்தப்ஸ் எங்கயோ போயிட்டிங்க...

பெண்களின் உலகத்தில் நன்றாக மூழ்கி முத்தெடுத்து உள்ளீர் :)

Mugilan said...

முத்தான கவிதைகள் மூன்றும்!

CS. Mohan Kumar said...

ஒன்னும் மூணும் அருமை. ம்ம் இன்னும் காதலை நீங்க மறக்கலை

மணிஜி said...

நைட்டு கூப்பிடறென்யா!!

இரசிகை said...

**********
நேசமித்ரன் said...
பா.ரா

(அப்பாடா வீட்டுக்கு வந்தாச்சு)
//
மெய்யாகவே முடிவன தானா ?
//

*************

:)

super question.........!!

mithran sir nallaa irukku unga pinnoottak kavithai!

பனித்துளி சங்கர் said...

/////மூன்று

குழந்தைக்கு சோறூட்டிக் கொண்டே
நிலவை பார்த்தாள்.
நினைத்துக் கொண்டார் போல
பாலா என்றாள்.
குழந்தை திரும்பியது.
உன்னை இல்லைடாவென
கண் நிறைந்தாள்.
///////////


நினைவுகளின் தேடல் நிழலாடுகிறது இந்த கவிதையில் . மிகவும் அருமை . தொடருங்கள்

அன்பேசிவம் said...

மூணுலயும் கொன்னுட்டிங்க,
மூணாவதுல கொன்னேபோட்டிங்க....
:-)

Vidhoosh said...

ஐயோ.. ராகவன் வரத்துக்கு முன்னாடியே வந்துட்டேனே...

ஹுக்கும்... இதத்தான தொடங்கினீங்க...??? அல்லாரும் என்னவோ 'மகா'வுக்குன்னு சப்பை காட்டு கட்டினீரே.. உமா கமான்னுகிட்டு..

நேசன் : 'அரை மாத்திரை அளவுக்கு ஒலிக்கும் கொலுசும் வளையலும் '

முடிக்க விடுவதாயில்லை என்கிறபோது எங்கேருந்து முடிக்கிறது... வீட்டுக்கு முன்னாடி பெல்லடிப்பியா???

இப்படிக்கு.
டவில்யு டவில்யு டவில்யு டாட் ஆண்டிமேடம்.காம் :))

? said...

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!

நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு


கண்டன உரை:

தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.

திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.

திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.


ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!

அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!

Thamira said...

மூன்றுமே அழகு. அதிலும் முதல், முத்து.!-

Radhakrishnan said...

பிரமாதம். தனி மனித உணர்வுகளுடன் உரசும் உங்கள் கவிதைகளில் இருக்கும் நேர்த்தி பாராட்டுக்குரியது.

நட்புடன் ஜமால் said...

[[பேசாமல் உங்களையே
லவ் பண்ணியிருக்கலாம்.
என்றாள்.]]

இதையே தாண்டி போக முடியலை, இதுல வெள்ளி சனி எங்கே தாண்டுவது மக்கா ...

vasan said...

பா ரா
க‌விதையை 1,2,3
என வ‌ரிசையிட்டால், அது
மூன்று, இர‌ண்டு, ஒன்று என‌
த‌லைகீழாய் ம்.ம். இல்லை
ச‌ரியான வ‌ள‌ர்ச்சியாய் ...

சத்ரியன் said...

//பேசாமல் உங்களையே
லவ் பண்ணியிருக்கலாம்.
என்றாள்.//

மாமா,

லவ்’ தானே பண்ணியிருக்கலாம்னு சொன்னாங்க.

உங்களையே ‘கல்யாணம்’ பண்ணியிருக்கலாம்னு சொல்லல. அத மைண்ட்ல வெச்சிக்குங்க.

Paleo God said...

அசத்தல்.

:))

சத்ரியன் said...

மூன்றாவது கவிதை ‘எதையெதையோ’ நினைவூட்டுது!

பிரேமா மகள் said...

முதலாவது காதலைச் சொல்ல முடியாத ஏக்கம்...

மூன்றாவது பிரிந்த காதலின் ரணம்..


உங்கள் கவிதைகள் ஒவ்வோன்றும் நட்சத்திரம்... கலக்கறீங்க மக்கா.. ம்ம்...

rajasundararajan said...

ஒரு நண்பர் தான் எழுதியதை அனுப்பி, இது கவிதையாகத் தேருகிறதா என்று கேட்டிருந்தார். நான் ஒன்றும் ஆசான் இல்லை, ஆனால் ரசிகன். "விளக்கி விளக்கிச் சொன்னா அது உரை. உணர்ந்தது உணர்ந்தமானிக்கு நின்னா அது கவிதை. உங்களோடது உணர்ந்தமானிக்கு நிற்குது இல்ல, அப்புறமா என்ன கவலை?" என்று திருப்பிச் சொன்னேன்.

கவிதை என்றால் நேசமித்திரன் யாப்பது போல, பாளைவடித்துக் காய்ச்சிமுறுக்கி அச்சுவார்த்து இறுக்கித் தரவேண்டும் என்பது இல்லை. 'மாரி ஒருவனும் அல்லன் பாரியும் உண்டீண்டு' என்பது போல் பா.ரா.

//இடையில் கிடந்த... எப்படி இப்படித் தாண்டிப் போகிறாய்?// ஒரு கவிஞராலும் தாண்ட முடியாது, அதனால்தான் கவிஞர் ஆகிறார்.

பாலுமகேந்திராவின் 'கோகிலா' படத்தில் முதலில் பார்த்தது: தன் குழந்தைக்குத் தன் காதலனின் பெயர் இட்டிருப்பாள். அன்று நிறைந்த கண்கள் இன்றும் நிறைகின்றன, ஆனால் இங்கு நிலவின் பால்ஆவும் சேர்ந்து.

Lune - நிலா; lunatics - அது காதலரும் கவிஞரும்தாம்.

நேசமித்ரன் said...

ராஜ சுந்தரராஜன் அண்ணே

//கவிதை என்றால் நேசமித்திரன் யாப்பது போல, பாளைவடித்துக் காய்ச்சிமுறுக்கி அச்சுவார்த்து இறுக்கித் தரவேண்டும் என்பது இல்லை. 'மாரி ஒருவனும் அல்லன் பாரியும் உண்டீண்டு' என்பது போல் பா.ரா.
//

நன்றி !

:)

க.பாலாசி said...

கடைசியின் ஏக்கம் கண்களில் முட்டுகிறது.... அருமையான கவிதைகள்....

Ashok D said...

நேசமித்திரன்...

உங்களது பின்னூட்டம் :-)

நேசமித்ரன். said...

நன்றி அஷோக் :)

ராகவன் said...

அன்பு பாரா,

எத்தனை நாள் பேசப்போகிறோம் இந்த பழங்காதலை... மிதிக்க மிதிக்க மழுங்கி மினுமினுக்கிறது படியில் போட்ட கருங்கல் மாதிரி. இன்னும் ஏக்கம் கிடந்து விக்கிக் கொண்டே இருக்கிறது, தன் ஏக்கத்தை பிறரின் மீது திணிப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது பாரா... இழந்த எல்லாவற்றையும் திரும்ப திரும்ப நினைத்து கொண்டே இருக்கிறோம், ஏகி பறந்த பறவை அபூர்வம் மாதிரி வின்னோக்கி பார்த்துக் கொண்டே மாய்ந்து போகிறோம். முதல் காதல் முதல் முத்தம் மறக்கமுடியாதென்று புலம்பி தள்ளுகிறோம். அவ என்னை உசுரா காதலிச்சா... நான் இல்லேன்னா செத்துடுவேன்னு சொன்னா கிணற்றடியில் நனைத்த துணிகளின் சாட்சியாய்... புளியமரத்தின் ஒரு விலகிய நேர் கிளையில் தான் தூக்கு மாட்டிட்டு சாவப்போறேன்... என்னை யாருக்காவது பேசிட்டாய்ங்கன்னா... என்றவள்கள் எல்லோர் வாழ்க்கையிலும் சகட்டு மேனிக்கு நிறைந்திருக்கிறார்கள். கோடையில் திரண்டு மேகம் கொஞ்சம் உதிர்ந்து விட்டு போவது மாதிரி பெரிய ஆசுவாசமாய் இருக்கிறது இந்த பழம் நினைவுகள், நனைத்தும் நனைக்காமலும் சூட்டை கிளப்பி விட்டுக் கொண்டே இருக்கிறது...

முதல் கவிதையும், இரண்டாம் கவிதையும் ரொம்ப நல்லாயிருந்தது பாரா... மூன்றாவது கவிதை உங்கள் அனேக கவிதைகளின் சாயலில் இருக்கிறது...

பழங்காதல் நினைவுகள் செய்யும் அக்கிரமங்கள் அனேகம் பாரா... சும்மா விடாது...கண் கிறங்கி கிடக்க வைக்கிற காதல் பாதி உலகத்தை மட்டுமே காட்டுகிறது பாரா... இன்னும் தெரியாமல் ஒரு உலகம் இயங்கி கொண்டு தான் இருக்கிறது லோகாதாயக் கவிதைகளை எழுதிக் கொண்டே... தன்னுடைய அனுபவத்தை இதனுடன் பொருத்தி பார்ப்பது எல்லோருக்கும் எளிதாய் இருக்கிறது போல... நிறைய பேர் தேடப்போகிறார்கள் எத்தனை பழங்காதலிகள் மகன்களுக்கு தன் பெயரென்ற நினைப்பில்... இல்லாத பட்சத்தில் வேறு மாதிரி கவிதை எழுதலாம்... என்ன பன்றது என் எண்ணற்ற காதலிகள் பெற்றதெல்லாம் பெண் பிள்ளைகள் தான்... இந்த கவலை எனக்கு இல்லை என்று தேறிக் கொள்ளலாம்.

நேசனின் பின்னூட்டம் அபாரம்...

அன்புடன்
ராகவன்

ரோஸ்விக் said...

அருமை சித்தப்பு...

பா.ராஜாராம் said...

இப்படியாக.. :-(

கடந்த ரெண்டு பதிவிற்கு பொத்தாம் பொதுவா நன்றி ஸ்லைட் போட்டாச்சு.எவ்வளவு மனிதர்கள்,அன்பு,எதிர்பார்ப்பு எல்லாம் ஒரே தாவல்.இப்படியாக இருக்கு மக்கள்ஸ்.நேரமின்மை..பயணம்..அலுவல்..

ஆரம்பம் முதலே,பின்னூட்டத்தில் அன்பு செய்யும் விஜய்,'பெரிய இடங்களுக்கு மட்டும்தான் விசிட் போல'என்றதும் கதக் என்றது.

இப்படி நிறைய கதக்குகள்.

நிலாரசிகன் கூட,

கருவேலநிழல் தொகுப்பு வாசித்த பின் ஒரு மின் மடல் செய்திருந்தார்..அந்த மின் மடலையும் அதற்கான என் பதிலையும் இங்கு வைப்பது மூலம் என்னை உங்களுக்கும்,என்னை எனக்கும் சுளு படுத்திக் கொள்ள முடியும் என தோனுகிறது..

**

அன்புள்ள பா.ரா அவர்களுக்கு,
உங்களது கருவேல நிழலிருந்து இக்கடிதத்தை எழுதுகிறேன். கடந்த வாரம் எங்கள் கிராமத்திற்கு சென்றிருந்தபோது கருவேல மரங்கள் கண்ணில் தென்பட்டபோதுதான் உங்களது கவிதை தொகுப்பின் ஞாபகம் வந்தது. வெளியீடு நடந்த அன்றே வாங்கியிருந்தபோதும் வாசிக்க முடியாமல் தள்ளிப்போனதன் காரணம் தெரியவில்லை. இப்படித்தான் ஆகிவிடுகிறது சில நேரங்களில் பிடித்தவற்றை நினைத்தவுடன் அணுகமுடியாமல்.
சென்னை வந்தவுடன் உங்களது "கருவேல நிழல்" கவிதை தொகுப்பை எடுத்துக்கொண்டு மொட்டை மாடியின் மாமர நிழலுக்கு போய்விட்டேன். நிழலிருந்து நிழலை வாசிப்பதுதானே சரி? வலைப்பூவில் சில கவிதைகள் வாசித்திருந்தபோதும் முழுவதும் வாசித்ததில்லை. ஒவ்வொரு பக்கமும் என்னிடம் பறைசாற்றியது ஒன்றே ஒன்றைத்தான். இந்த மனிதர் ப்ரியங்களால் நிறைந்திருப்பவர்.
தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மிக நுட்பமாக பதிவு செய்வதில் கல்யாண்ஜியை நினைவூட்டுகிறது உங்களது எழுத்து.
தகப்பனாக இருப்பது கவிதை ஒன்றே உங்களது முகவரியாய் இன்னும் பல வருடம் நீடிக்கும் என்றெண்ணுகிறேன். பிரமிளுக்கு சிறகிலிருந்து பிரிந்த / இறகு ஒன்று/ காற்றின் / தீராத பக்கங்களில் / ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது கவிதை போல்.
இயலாமையின் வலியை தகப்பனாக இருப்பது கவிதையில் முழுவதுமாக உணர்ந்தேன். அந்த உணர்வு கவிதையின் வெற்றி.
ஞாபகப்பொதியில் மூன்றாவது கவிதை (மனசுள்ள தச்சன்) மனதை ஏதோ செய்கிறது. இந்தக் கவிதையே இந்த மடலுக்கான துவக்கப்புள்ளியோ எனவும் தோன்றுகிறது. ஒரு கவிதை தொகுப்பில் ஒரே ஒரு கவிதை வாசகனை ஈர்த்தாலே அந்தக் கவிதை தொகுப்பு வெற்றி பெற்றதாக மார்தட்டலாம். உங்களது கவிதை தொகுப்பில் பல கவிதைகள் என் வாழ்வோடு பொருத்திப்பார்க்க ஏதுவானதாகவும் என்னுலகில் வலம் வரும் மாந்தர்களை நினைவூட்டுவதாகவும் இருப்பது மிகுந்த மகிழ்வைத் தருகிறது.
ஒன்றிரண்டு கவிதையல்லாதவைகளும் இடம்பெற்றிருப்பது முதல் தொகுப்பு என்பதால் கவலை கொள்ள தேவையில்லை.
மொத்தத்தில் நல்லதொரு கவிதானுபவம் தந்தமைக்கு என் நன்றி.
பின்குறிப்பு:
உங்களது வலைத்தளத்தில் வருகின்ற பின்னூட்டங்கள் கவிதைக்காக மட்டுமே எனில் தொடர்ந்து சிறந்த கவிதைகளை நீங்கள் தருவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.மாறாக,வருகின்ற பின்னூட்டங்கள் நட்புக்காக எனில் உங்களது கவிதைகளின் தரத்தை பாதுகாக்கும் மிக முக்கிய பொறுப்பு உங்களிடமே இருக்கிறது.
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
-1-
**

பா.ராஜாராம் said...

-2-

ப்ரியங்கள் நிறைந்த என் நிலா,

நல்லாருக்கீங்களா?வீட்டில் யாவரும் நலமா?

முன்னதாக,மன்னியுங்கள் நிலா.முந்தாநாள் இரவு உங்கள் மின் மடல் பார்த்துவிட்டேன்.உடன் பதில் எழுத முடியாத சூழல்.

ரொம்ப நன்றி மக்கா.நன்கு வாசிப்பவர்கள்,எழுதுபவர்கள் கையில் எல்லாம் நம் கருவேல நிழல்
தவழ்கிறது எனில்,இதைவிட வேறு என்ன வேணும்?

ரொம்ப நெகிழ்வான,அக்கறையான. கடிதமாக,விமர்சனமாக இதை எடுத்து கொண்டிருக்கிறேன்.முகமறியாத எவ்வளவோ நட்புகளை,உறவுகளை இந்த சாளரம் எனக்கு திறந்து தந்திருக்கிறது.இதை பத்திரப் படுத்த வேணுமே என்கிற பொறுப்பு மட்டுமே தற்சமயம் சோர்வு தருவதாய் இருக்கிறது.

அநியாயத்திற்கு தொலைப்பவன் நான்.பொறுப்பற்றவனும்.என்னை நன்கு உணர்ந்தவன் என்பதினாலேயே இந்த சோர்வும்.குருவி தலை பனங்காய்தான்.என்றாலும் எதை ஒன்றையும் தீர்மானிக்கிற,திட்டமிடுகிற விஷயம் ஒன்றும்
என்னிடம் இல்லாததால் என்னை நான் நேசிக்கும் படியும் நேர்ந்துவிடுகிறது நிலா.

போகட்டும் மக்கா.உண்மையில் நான் பத்திரபடுத்த வேண்டிய கடிதம் இது.

இவ்வளவு பெரிய சிலாகிப்பிற்கு,பின்னூட்டங்களுக்கு ஆளாவேன் என எப்பவும் நினைத்ததில்லை நிலா.ஒவ்வொரு பின்னூட்டங்களையும் ஒரு மனிதம் எனவே எடுக்கிறேன்.இது மிகப் பெரிய மனச்சிக்கலை கொடுக்கிறது எனக்கு.வந்தவர்களை கவனிக்க இயலவில்லையே என்பது போல்.

// பின்குறிப்பு:
உங்களது வலைத்தளத்தில் வருகின்ற பின்னூட்டங்கள் கவிதைக்காக மட்டுமே எனில் தொடர்ந்து சிறந்த கவிதைகளை நீங்கள் தருவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.மாறாக,வருகின்ற பின்னூட்டங்கள் நட்புக்காக எனில் உங்களது கவிதைகளின் தரத்தை பாதுகாக்கும் மிக முக்கிய பொறுப்பு உங்களிடமே இருக்கிறது.//

இதை என்னால் அறுதியிட முடியவில்லை நிலா.loneliness கவிதையின் அடர்த்திக்கு உதவும் இல்லையா?அந்த தனிமை குறைவுதான் தற்சமயம்.என்றாலும் கவிதைகளை விட மனிதர்கள் பிடித்து வரும் எப்பவும் எனக்கு.அப்படி சந்தோசமே.

மற்றபடி இது முக்கியமான வார்த்தை நிலா..குறித்து கொள்கிறேன்.

மிகுந்த அன்பும் நன்றியும் நிலா!

நிறைய அன்புடன்,
பா.ராஜா ராம்.

**
விஜய் மற்றும் நண்பர்களுக்கு,

இப்பவரையில்,இதுவே என் நிலையாக இருக்கிறது.

கிடைக்கிற நேரத்தில் வாசிப்பும்,கூடி இருக்கிறது.இது எழுதுவதை விட பிடிச்சிருக்கு.

இந்த பதிவிற்கு தனி தனியாக நன்றி சொல்ல வாய்த்திருக்கிறது...காலதேவனுக்கு நன்றி. :-)

நிலா,

கடிதத்தை உபயோகம் செய்து கொண்டேன்.நன்றி.

பா.ராஜாராம் said...

நன்றி கதிர்!

நன்றி நேசா!ஆப்பரேட்டர் கண்ணனுக்கு கெட்ட வார்த்தை வருவது போல்,நாம் தவறிய நல்ல வார்த்தை வருவதில்லை.வெயில்பட பசுபதி. :-)

நன்றி ஆர்.கே!

நன்றி விஜய்!சூழ்நிலையை சொல்லி இருக்கேன் மக்கா. :-)

நன்றி ரசிகை!கருப்பட்டிக்குள் கல்.ஆகா.. :-)ரசிகை,பாட்டியா?பாட்டி ரசிகையா?(நல்லது சொன்னாலும்,கடயுராங்கையா என அழக் கூடாது.இதெல்லாம் உரிமை.:-)

நன்றி நசரேயன்! :-) விரும்பி இடும் ஸ்மைலி இது நசர்.

நன்றி மகன்ஸ்-3 ..ஆம்.மேலும் இருவர் உளர். :-)

நன்றி சித்ரா மாம்சு!சும்மா..மாம்சு. :-)

நன்றி அம்பிகா!

நன்றி சரவனா!தேரை இழுத்து தெருவுல விட்டாச்சு :-) இன்னும் தெய்வத்தை காணோம்..

நன்றி மாது! கொமட்டுல குத்துறது போல இருக்கு. :-) பெருந்தலைவனை இன்னும் காணலை.வரட்டும் ரேஸ்கள்.. :-)

இரசிகை said...

nila-vin kadithamum,ungalin pathilum azhagu....pakirnthamaikku nantri.

kurippaaga..,kuththu vaiththuk konda kurippil miga kurippaaha irungal..:)

//
ஒவ்வொரு பின்னூட்டங்களையும் ஒரு மனிதம் எனவே எடுக்கிறேன்.இது மிகப் பெரிய மனச்சிக்கலை கொடுக்கிறது எனக்கு.வந்தவர்களை கவனிக்க இயலவில்லையே என்பது போல்.
//

ithil naan unarntha rajram sir-i paarkkiren!!

விஜய் said...

தங்களின் மீது கோபம் கொள்ள உரிமை உள்ளது என்று கருதியே அப்பின்னூட்டமிட்டேன்.

அண்ணன் தம்பி என்றாலே பகிர்வு பிரச்சினை தானே பங்காளி

வருத்தபடுத்தி இருந்தால் மன்னிக்க.

விஜய்

'பரிவை' சே.குமார் said...

முத்துக்கள் மூன்றும் அருமை.

நல்ல கவிதைகள்.

RaGhaV said...

மூன்றும் மிக மிக ஆழமாக இருக்கிறது பா.ரா.

படித்துவிட்டு பத்து நிமிடம் அப்படியே அமர்ந்திருக்கிறேன்.. எதைஎதையோ யோசிக்கிறேன்..

இப்ப சந்தோசமா..??

பா.ராஜாராம் said...

நன்றி சரவனா! :-)

நன்றி ம.சரவணன்!

நன்றி அக்பர்!மதியம் மணிஜி வீட்டிற்கு சாப்பிட போயிருவோம்.நேசனும் சரவணனும் வர்றேன்னு சொல்லியிருக்காப்ள. :-)

கும்க்கி மக்கா,நல்லாருக்கீங்களா?நேரம் வாய்க்கிறபோது வருவீங்கன்னு தெரியும்.வர்றீங்களே இது போதாதா?நன்றி தோழர்!

ரொம்ப நன்றி கும்க்கி! :-)

மிக்க நன்றி starjan!

விடுங்க ரசிகை அடுத்த கவிதை சிரிக்க வச்சுரலாம்.//இன்னைக்கு வேறு பௌர்ணமி// என்ன பெயர் கூப்பிட்டீங்க? :-)நன்றி பாஸ்!

எனக்கும் இந்த படம் ரொம்ப பிடிசிருந்ததுடா ஹேமா.கண்ணன்,கலக்குவான்.நன்றி சகோ!

நேசா,freez பண்ணிய பின்னூட்டம் இது.வெகுநேரம் வரையில் இயங்க இயலவில்லை.க.வே.நிழல் பின்னூட்ட பகுதியை உயிர்க்க வைக்கிற சில உயிர்கள் உண்டு.//எலேய் செந்தாழை என கூப்பிட்டிருக்க கூடாது போல//எலேய் நேசா... வந்தனம் மக்கா.நன்றியும்!

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு மூணுமே..

பா.ராஜாராம் said...

நன்றி நண்டு@ :-)

நன்றி எஸ்.கே.பி!

நன்றி பெ.ப.ஐயனார்!

நன்றி மகள்ஸ்! //சுமை இருந்து கண்ணீர் விடுவது, சுமையே இல்லாமல் இருப்பதற்கு மேல்//beutiful..

நன்றி மகன்ஸ்! உள்ளீர்? :-)

நன்றி முகிலன்!

நன்றி மோகன்!யாரும்,எப்பவும் மறக்க இயலாதது-காதல் மோகன்! நீங்க? :-)

நன்றி மணிஜி! கிடு,கிடு. :-) இன்று பேசுவோம் ஜி.

நன்றி ரசிகை!நேசா,உனக்கும் சேர்த்து சொல்லிட்டேன்.குட்டிப் பிசாசிடம். :-)

நன்றி ப.து.சங்கர்!

நன்றி முரளி!நல்லாருக்கீங்களா? :-)

நன்றி வித்யா!//டவில்யு டவில்யு டவில்யு டாட் ஆண்டிமேடம்.காம்//என்னா டைமிங் :-)

அழைப்பிற்கு நன்றி ?.ஆனால்,விசா அனுப்புக.வெல்லட்டும் மக்களே.

நன்றி ஆதி! :-)

நன்றி ராதா! :-)

நன்றி ஜமால் மக்கா!எங்கு உங்களை பார்த்தாலும் நவாசும் நினைவில் வருகிறார். :-)-ராட்சசன்/ராட்சசன்கள். :-)

இந்த குழப்பம்தான் எனக்கும் வாசன். :-) நன்றி மக்கா!

நன்றி மாப்ள சத்ரியன்@முரளி.காம் :-) சாரல் நலமா?

நன்றி ஷங்கர்! நல்லா தொடங்கி வச்சீங்க,நேத்து.. :-)

ச.முத்துவேல் said...

எப்படி இப்படி ?
கலக்கிட்டீங்க.

பா.ராஜாராம் said...

நன்றி மாப்ள சத்ரியன்! ஊட்டும்ல,படவா.. :-)

நன்றி மக்கா, பிரேமா மகள்! :-)

நன்றி ராஜசுந்தரராஜன் அண்ணன்!எங்க அண்ணன காணோமேன்னு இருந்தது.சந்தோசம் அண்ணே..கிளி,கூடடைந்தது.:-)

நன்றி நேசா!

நன்றி பாலாஜி! :-)

நன்றி,மகன்ஸ் & நேசன்ஸ்!

நன்றி ராகவன்!வந்ததும் சட்டையை கழட்டி ஆணியில் மாட்டிட்டு சாப்பிட உட்கார்கிற நன்பன் மாதிரி,உங்கள் குழைவு,உரிமை ஒவ்வொரு முறையும். :-)

நன்றி மகன்ஸ்-2!இந்த முறை மூணு மகனும் வந்தாச்சு.(அசோக்,ராஜவம்சம்,நீங்கள்) வீடும் மனசும் நிறைஞ்சு போச்சு.

நன்றி ரசிகை!//kurippaaga..,kuththu vaiththuk konda kurippil miga kurippaaha irungal..:)//ஆகட்டும் சமூகம். :-)

நன்றி விஜய்!கண்டிப்பா,உங்களுக்கு இல்லாத உரிமையா பங்காளி? :-)நீங்கள் இப்படி கேட்டதினால்தான்,நானும் என் சூழ்நிலைகளை விளக்கி,என்னை free பண்ணிக் கொள்ள முடிந்தது.இல்லையா?அதுக்கொரு நன்றி சகோதரா.

நன்றி குமார் மக்கா!

நன்றி ராகவ்! ரொம்ப சந்தோசம்.(அடப் பாவி என்கிறீர்களா?) :-)

நன்றி ஆறுமுகம் முருகேசன்!

நன்றி ச.முத்துவேல்! நல்லாருக்கீங்களா?

SUFFIX said...

மூன்றுமே பிடிச்சு இருக்கு, 1 & 3 டாப்பு....

Unknown said...

//பேசாமல் உங்களையே
லவ் பண்ணியிருக்கலாம்.
என்றாள்.//

சும்மா ஓர் எதிர்கவுஜ

அவளுக்கு மறக்காம தெனமும்
நடு ராத்திரி goodnight sms!
நாலு மணி பஸ்ல வர்றான்னு
மூணு மணிக்கே எழுந்து ஓடுற!
நாள் தவறாம பத்து மெயில்
வாரத்துல கொறைஞ்சது மூணு ஃபோன் கால்
ஏன் டா? என்றாள்
அவ என் ப்ரண்டுடி என்றேன்
பேசாம நானும் உனக்கு ஃப்ரண்டாவே இருந்திருக்கலாம் என்றாள் என்னைக் காதலித்து மணந்தவள்

Unknown said...

உங்க பதிவு பார்க்கும்போதெல்லாம் “இன்னைக்காவது ராகவன் சாருக்கு கால் பண்ணணும்”ன்னு நினைச்சு ஒவ்வொரு முறையும் வீட்டுக்குப் போனதும் மறந்துடுறேன். இன்னைக்காவது பேசணும் - இன்ஷா அல்லாஹ்

மெல்லினமே மெல்லினமே said...

nalla irukku sir!

இரசிகை said...

***
//இன்னைக்கு வேறு பௌர்ணமி// என்ன பெயர் கூப்பிட்டீங்க? :-)
***

ammmaaaadi..........
aaaaaththththeeeeeeeee..........
nalla kekkuraangaiiyaa detail-lu...:))

but..,
naan kutypisaapi pattam petruth thantha kavithaiyai yezhuthinen!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமையான கவிதை. நல்லாருக்கு பா.ரா.

பா.ராஜாராம் said...

நன்றி சபிக்ஸ்! :-)

நன்றி கே.வி.ஆர்! எதிர் கவுஜ அருமை. :-).அவசியம் ராகவனிடம் பேசுங்கள்.அருமையான மனிதன்,நன்பன்.

நன்றி மெல்லினமே! :-)

ஹா..ஹா..நன்றி,கு.பி.ரசிகை!நிலாவை தொட்டு,அல்லது தொடுகிற எவ்வளவு கவிதைகள்! :-)

ஜெஸ் மக்கா,நல்லாருக்கீங்களா?ரொம்ப நாள் ஆனது போல் இருக்கு.நன்றி மக்கா!