Thursday, June 3, 2010

தோழி


(Picture by cc licence, Thanks Akash_Kurdekar)

ஹென்றி வாத்தியார்தான்
துப்பாக்கி சுட சொல்லித்தந்தார்.

முதல் என்பதால்
பெட்டை கொக்கு சுடுவது
வேட்டைக்காரன் சாஸ்த்திரம் என்றார்.

காடு, வயல்
வயல்க் காடென
பெட்டை கொக்கு தேடி
சுற்றி அழைத்தார்.

கொக்கை கண்டதும்
பெட்டைதான் சுடு என்றார்.

சுட்டதும் பறந்த
கொக்கை பார்த்ததும்
மல்லிகா நினைவு வந்தாள்.

தீபாவளி துப்பாக்கிக்கே
செத்து செத்து விழும் மல்லிகா.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

65 comments:

ஈரோடு கதிர் said...

இப்போ எப்படியிருக்காங்க தோழி

க ரா said...

காலைல விகடன்ல படிச்சேன். இத்தன நேரம் வெயிட் பன்னிட்டு இருந்தேன் என்ன பதிவ கானும்னு. வழக்கம் போல அருமை.

அகல்விளக்கு said...

அருமைங்க..... :-)

தமிழ் உதயம் said...

எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ முடிச்சிட்டிங்க. ஒரு தோழியின் ஞாபகத்தோட.

dheva said...

எல்லா தோழிகளும் நியாபகத்துக்கு வர்றாங்களே....! அருமை!

Ashok D said...

துப்பாக்கியல ரவை இருந்ததா?

எளிமையான வார்த்தைகளை எங்கள் முன் எடுத்துப்போட்டு எங்கள் மனதை சுட்டீர்ங்க... ம்ம்ம்.. நடத்துங்க வாத்தியாரே! :)

உண்மைத்தமிழன் said...

நல்லாயிருக்கு ஸார்..!

கவிதைகள் மேல் அவ்வளவு பரிச்சயமில்லை..!

ஆனாலும் வாசிப்பில் ஈடுபாடு உண்டு..!

இதனைப் படித்து முடித்தபோது அட என்று சொல்ல வைத்தது..!

நன்றி..!

செ.சரவணக்குமார் said...

வாங்க மக்கா வாங்க..

மறுபடியும் ஒரு சிறுகதையோட வந்துருக்கீங்க..

உணரச் செய்யும் எழுத்து பா.ரா உங்களுடையது.

ஹையா..

நேசன், ராகவன் எல்லாம் வந்து அருமையா கதை சொல்வாங்களே..

ஒரு வார வெப்பம் தணித்திருக்கிறது கவிதை.

Ashok D said...

//கவிதைகள் மேல் அவ்வளவு பரிச்சயமில்லை..!//
அதான் எங்களுக்கு தெரியுமே.. கவித பிடிப்பட்டா ஏன் இவ்வளவு பெரிய பதிவா போட்டு காலிபண்ணபோறீங்க... :)

Mugilan said...

அருமை! மனதை நெகிழச் செய்கிறது!

Unknown said...

அடடா மாமாஆஆஆஆஆஆஆ

:-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான நிகழ்வை சொல்லிருக்கீங்க பா.ரா. நன்று

rajasundararajan said...

//பெட்டைக் கொக்கு சுடுவது வேட்டைக்காரன் சாஸ்த்திரம்// இருக்கட்டும், ஆண்கொக்கு சுடுவது வேட்டைக்காரியின் சாஸ்த்திரமா? அப்படி சாஸ்த்திர சமநிலை இல்லாத பட்சத்தில் பெண்ணியம் சார்ந்து பேசலாம் என்று யோசிக்கிறேன். நாம ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்தாலும் பரவா இல்ல, முன்னுதாரணம் இருக்கு.

சுசி said...

வாழ்த்துக்கள் பா.ரா.

ராஜவம்சம் said...
This comment has been removed by the author.
ஹேமா said...

எப்பிடித்தான் உணர்வுகளை இயல்பாய் கொண்டு
வாறீங்களோ அண்ணா.

உங்க சாயல்ல நானும் எழுதியிருக்கேனே !

ராஜவம்சம் said...

வலக்கம்போல்
அருமை

நசரேயன் said...

//ஹேமா said...
எப்பிடித்தான் உணர்வுகளை இயல்பாய் கொண்டு
வாறீங்களோ அண்ணா.

உங்க சாயல்ல நானும் எழுதியிருக்கேனே !
//

கவுஜையா ?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமைங்க.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எளிமையாக
நல்லாயிருக்குங்க .

நேசமித்ரன் said...

//செத்து செத்து விழும் மல்லிகா//

இந்த செத்து செத்து .. மீண்டும் மீண்டும் வரும் நினைவை சொல்வது அழகு பா.ரா

ஆ.வி. யின் ஆஸ்தான கவி அய்யா நீர் !

:)


தப்பிய கொக்கும் மல்லிகா போலதானே

*இயற்கை ராஜி* said...

எளிமை அருமை

ப்ரியமுடன் வசந்த் said...

:)

ஜெய் said...

அழகா எழுதியிருக்கீங்க..

ஜெய் said...

அழகா எழுதியிருக்கீங்க..

Unknown said...

ரொம்ப இயல்பான ஒரு கவிதை பா

க.பாலாசி said...

நல்ல கவிதைங்க தலைவரே....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு

அன்பேசிவம் said...

makaappaa padichitten, anantha vikandalaye. :-)

vinthaimanithan said...

//செத்து செத்து விழும் மல்லிகா//
பால்யபிராயத் தோழமையின் இனிய நினைவுகளை மீட்டியிருக்கிறது... அழகு!

சுந்தர்ஜி said...

நெஜ கொக்கு குறி தப்பிப் பறக்க மல்லிகா மட்டும் பொய்யாய் தீபாவளித் துப்பாக்கிக்கு பலியாவது கொடும் சோகம் பா.ரா.

ஒரு குழந்தையின் உலகத்தில் நடமாடும் அழகுக் கவிதை பா.ரா.

Kumky said...

நேசன்.,

தப்பிய கொக்கும் மல்லிகா போலதானே.

தப்பியது மல்லிகாவும்தானேன்னு தோணுச்சு...பா.ரா.

:))

கவிதை அழகு, எளிமை.

கிளிப்பேச்சு போலாகிவிட்டது எங்கள் பின்னூட்டங்கள் பா.ரா.

எழுத்தினால் அதிகம் சம்பாதித்தவர் வலையில் நீங்களாகத்தான் இருக்க முடியுமென தோன்றுகிறது...இதயங்களை.

VELU.G said...

நல்லாயிருக்குங்க

பிரேமா மகள் said...

ஓவ்வோரு முறையும், ஆனந்த விகடனில் பஸ்ட் மெஷின் காப்பி-யிலேயே உங்கள் கவிதைகளை படித்து விடுவேன்.. இந்த முறை குடுத்து வைக்கவில்லை.. இனி அதற்கான வாய்ப்பும் இல்லை..

கவிதை அருமை..

சத்ரியன் said...

குறி பாத்து சுடத்தெரியல. அதைக்கொண்டே, கவிதையாக்கி எல்லோரையும் வீழ்த்தி விடுகின்றீர்கள், மாமா!

பாலா said...

wow super maams

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரொம்ப நல்லா இருக்கு ராஜாராம்.

ரிஷபன் said...

ஆஹா.. அருமையா வந்திருக்கு..

நளினி சங்கர் said...
This comment has been removed by the author.
நளினி சங்கர் said...

நல்லா இருக்குங்க பா.ரா

மன்னிக்கவும், ஏற்கனவே இட்டிருந்த பின்னூட்டம் இந்தக்கவிதைக்கு சற்றும் தொடர்பில்லாத ஒன்றாக தோன்றியது. அதான் அகற்றிவிட்டேன்.

விநாயக முருகன் said...

அருமை பா.ரா. வாழ்த்துக்கள் பா.ரா. கலக்குங்க பா.ரா. இன்னும் என்னவெல்லாம் சொல்வது

அ.மு.செய்யது said...

ஆ ஆ ஆனந்த விகடனா...வாழ்த்துக்கள் பா.ரா !!!!

அச்சில் பார்க்க வேண்டுமே !! கவிதை நல்லா இருக்குங்க.!

நீங்க எப்படியிருக்கீங்க பா.ரா ?

விஜய் said...

நிறைய சுட்டுரிக்கீங்க போல பங்கு

வாழ்த்துக்கள்

விஜய்

சாந்தி மாரியப்பன் said...

அருமையா இருக்கு.

SUFFIX said...

நல்லா ஞாபகம் வந்துச்சு போங்க...

பா.ராஜாராம் said...

நன்றி கதிர்! :-)

நன்றி ஆர்.கே!

நன்றி அகல் விளக்கு!

நன்றி தமிழ் உதயம்!

நன்றி தேவா!

நன்றி மகன்ஸ்! :-))

நன்றி நசர்!

நன்றி உண்மை தமிழன்!

நன்றி சரவனா!

அசோக், :-)

நன்றி முகிலன்! முதல் வரவிற்கும்.

நன்றி மாஆஆஆஆப்ஸ்! :-)உ

நன்றி staarjan!

நன்றி ராஜசுந்தரராஜன் அண்ணே! என்னவோ புழங்கிய வீடு போலவே இல்லைண்ணே, மொத்த பதிவுலகமும். கிலுக்கு சத்தம் கேட்டு சிரித்துக் கொண்டேன்.. என எடுங்களேன்.

நன்றி சுசி!

நன்றிடா ஹேமா. இதோ வர்றேன்.

நன்றி மகன்ஸ்!

மீண்டும் நன்றி நசர்! :-))

நன்றி ஜெஸ்! ங்க ஓவர் பாஸ். :-)

நன்றி நேசா! : // தப்பிய கொக்கும் மல்லிகா போலதானே// follow-up க்கு கும்கி வேறு வந்திருக்கிறார்...:-)) பாவிகளா..

பா.ராஜாராம் said...

நன்றி அருணா டீச்சர்!

நன்றிங்க ராஜி!

நன்றி வசந்த்!

நன்றி ஜெய், இன்டு மூன்று! :-)

நன்றி மகன், ஸ்ரீதர்! கமலேஷ் நலமா?

நன்றி பாலாஜி!

நன்றி டி.வி. ஆர். சார்!

நன்றி முரளி!

நன்றி விந்தை மனிதன்!

நன்றி சுந்தர்ஜி!

நன்றி கும்க்கி! நீங்கதான் எல்லாத்துக்கும் காரணம் தோழர் :-)

நன்றி வேலு.ஜி!

நன்றி பிரேமா மகள்! நலமா?

நன்றி மாப்ஸ், சத்ரியன்! குறி தவறுவதில் எம்புட்டு கெக்கலிப்பு! :-))

நன்றி அடுத்த மாப்ஸ், பாலா! ஓய், எம்புட்டு நாளாச்சு குரல் கேட்கணும் ...கூப்பிடுமேன்..

நன்றிடா சுந்தரா!

நன்றி ரிஷபன்!

நன்றி நளினி சங்கர்! முதல் பின்னூட்டமும் வாசிச்சேன் ந. சங்கர். அப்படியே இருந்திருக்கலாம். இனி, உங்கள் பெயர் பாத்தால் தீபாவும் நினைவில் வருவார்கள்.

நன்றி விநாயகம்!

செய்யது, எப்படி இருக்கீங்க மக்கா? செட்டில் ஆயாச்சா? டயம் இருந்தா கூப்பிடுங்களேன்.குரல் கேட்கும் தேவை... நன்றி செய்யது!

நன்றி விஜய் பங்கு! கொமட்டுலதான் குத்தனும் உம்மை. :-)

நன்றிங்க அமைதிச்சாரல்! ஒரு தொடர் பாக்கி. இல்லையா? நேரமின்மையே மக்கா. இருக்கட்டும். பாக்கி கருதியாவது உங்களை நினைச்சிக்கிறலாம்ல..:-)

நன்றி குசும்பன் சபிக்ஸ்! :-))

பா.ராஜாராம் said...

சரவனா,

பின்னூட்டப் petti thirakkala..

sarithaan ippo ennaa?

inga solliralaam..


பிறந்த நாள்!

அம்மா, அப்பா, மனைவி மகள். இவர்களை சேர்க்கும் விதம். கூடுதலாக நண்பர்களும்.

இது சரவணன்..

சரவணன் இது!

இல்லையா?

pirantha naal vaazhthugal saravanaa! ;-)

பா.ராஜாராம் said...

சற்று முன்பு நேசன் ஒரு கவிதை அனுப்பினான், சரவனா.

பிறந்த நாளுக்கு தருகிறோம்.

-- நேசன், அண்ணன்.

பா.ராஜாராம் said...

உன்னை ஒரு போதும் தாழ விட மாட்டேன்
கைகளை விலக்குவதும்

உன் நினைவின் பெட்டகத்தை நீ திறக்கும் போது
ஒரு கிளையைப் போல் ஏந்திக் கொண்டிருப்பேன்
கூடடையும் பறவையின் அதிர்வுக்கு
உதிரும் இலை என கசியும்கண்ணீருக்கு
என் மடியை

நீ குழந்தையாகும் தருணங்களில் தகப்பனாக
இருப்பதை காட்டிலும் துயருறும் கணங்களில்

நீயாய் தரும் முத்தங்களில் இருக்கும் காதல்
சிறுமை செய்து எள்ளுகிறது எனதில் இருக்கும் காமத்தை

பொருட்காட்சிகளில் பொம்மைகள் வாங்குவதை
நீ நிறுத்தும் நாளில் துவங்கலாம் எனக்கான முதுமை

உன்னை ஒரு போதும் தாழ விட மாட்டேன்
கைகளை விலக்குவதும்

இந்தப் பிரியம் இறந்த குழந்தை மீதம் விட்டுச்செல்லும் தாய்ப்பால்
என்ற உன் சென்ற கடிதத்துக்கான பதிலாகவும் இதைக் கொள்ளலாம்

நேசமித்ரன் said...

ஏற்புக்கு நன்றியும் அன்பும் சரவணா

பா.ரா/நேசன்

AkashSankar said...

எளிய நடையில் அற்புதம்...

குமரை நிலாவன் said...

அருமைங்க..... :-)

பா.ராஜாராம் said...

நன்றி நேசா! :-)

நன்றி ஆர்.ஆர். சோழன்!

வாங்க குமரை நிலாவன். நன்றி!

நளினி சங்கர் said...

அய்யயோ...

நீங்க வேற தீபா கீபா-னு ஏதாவது போட்டு விட்டுடாதிங்க பாரா...

தீபா மேட்டர் ஷோபாக்கு தெரியாது. (பெயர் மாற்றப்பட்டுள்ளது... {நன்றி-தினத்தந்தி}).

பா.ராஜாராம் said...

@ நளினி சங்கர்

:-)) பாவிகளா..

ஷோபா மேட்டராவது தீபாவிற்கு தெரியுமா? :-)

இப்படிக்கு,
தினத்தந்தி-சிறுவர் மலர்.

நளினி சங்கர் said...

அதுவா பாரா...

தீபா விட்ட கதை. சோ தீபாவ பத்தி கவல பட வேண்டாம்.
ஆனா ஷோபா அப்டி கிடையாது. தொடரப்போர கதை.

பீ கேர்புல்... நான் என்னச் சொன்னன்.

பா.ராஜாராம் said...

@நளினி சங்கர்.

:-) நடத்தும்...

பட், பீ கேர் புல்!

நான் ஷோபாவிற்கு சொன்னேன். -)

இப்படிக்கு,
சத்திய சோதனை.:-))

நளினி சங்கர் said...

நோ... நோ... காந்தி பாவம்.

நாளைக்கு ஆனந்தவிகடன் ரிலீஸ்.

இந்த வாரமும் உண்டா...

உங்கள் கவிதையை படிக்க ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கிறேன்.
மல்லிகாவை உங்களுக்கு
நினைவுபடுத்திய
பெட்டை கொக்கைப்போல...

சும்மாச்சுக்கும் கவித மாரி ட்ரை பண்ணலாம்னு...

சரி சரி... கண்ண தொடச்சுக்குங்க.
நோ... நோ... பீலிங்ஸ்.

சத்தியத்துக்கே சோதனை ஏற்படுத்திய பெருமிதத்துடன்

நளினி சங்கர்

பா.ராஜாராம் said...

@நளினி சங்கர்

:-)

//இந்த வாரமும் உண்டா...//

இல்லை. அடுத்தவாரம் இருக்கலாம் போல.

//சத்தியத்துக்கே சோதனை ஏற்படுத்திய பெருமிதத்துடன்//

ஓவர் பாஸ். எஸ்கேப் கவிதையா? :-)

அதுசரி, ஆள் இல்லாத கடையில் ரெண்டு பேர் மட்டும் மாத்தி மாத்தி டீ ஆத்துறோம் போலயே.. :-)

தொடர் விளையாட்டிற்கு நன்றி மக்கா!

நளினி சங்கர் said...

:-)
என்னோடு சேர்ந்து விளையாடியதற்கும் விளையாட இடம் அளித்ததற்கும் மிக்க நன்றி பாரா...

அடுத்த பதிவிலாவது அதிகாலையே டீ கடைக்கு வர ட்ரைபண்றன் மக்கா... வரட்டுமா...
:-)

பா.ராஜாராம் said...

நன்றி நளினி சங்கர் (எ) ஷோபா சங்கர்! :-)

இது நம்ம இடம் மக்கா. நாம விளையாடாட்டி எப்படி?

நளினி அம்மாவா? ஆம் எனில் சல்யுட்!

இல்லை எனில் திருப்பி சல்யுட் பண்ணால் போதும். :-)

தூயவனின் அடிமை said...

மிக்க அருமை வாழ்த்துக்கள்.

நளினி சங்கர் said...

நளினி என்பது அம்மாவின் பெயர் தான் பாரா. இதை முதல் முறை என்னிடம் கேட்ட வலைப்பதிவுலக நண்பர் என்பதால் உங்களுக்கு ஒரு சல்யூட்.

பா.ராஜாராம் said...

ராயல் சல்யுட் சங்கர்!

தீபா, ஷோபா, யாரையும் பத்திர படுத்த முடியும் உங்களால்.

வந்தனம்.