Monday, July 5, 2010
இரண்டாம் பாகம்
(Picture by cc licence, Thanks krishnamohan01)
ஒன்று
கதவை திறக்க வெளியே தள்ளு
என்று எழுதி இருக்கும்
ஸ்ரீராம் டாக்கீஸ் கதவில்
அப்புறம் இது
ரவிபாலா a/c தியேட்டர் ஆச்சு.
அப்போ அது
EXIT ஆச்சு.
***
இரண்டு
வழி அனுப்ப வந்த
ரயில் நிலைய முகங்களில்
எனக்கானது இல்லை.
ஆயினும்,
டா..டா..வென அனிச்சையில்
அசையுமென் கையை
கட்டுப் படுத்தவில்லை.
***
மூன்று
"ஒரு சேர்ந்து பார்க்க"
எனும் ஒரு ஓவியம்
தொடங்கியிருந்தோம்.
ஓரிரு புள்ளிகள் பாக்கி.
நிலுவையை கருத்தில் கொண்டு
தலைப்பை மாற்றினோம்.
"ஒரு சேர்ந்து பார்க்கலாகாது"
***
Subscribe to:
Post Comments (Atom)
51 comments:
நல்லா இருக்கு...
:-)
இரண்டாவது பாரா டச்
நல்லா இருக்கு மாம்ஸ் அத்தனயும் :-).
////////இரண்டு
வழி அனுப்ப வந்த
ரயில் நிலைய முகங்களில்
எனக்கானது இல்லை.
ஆயினும்,
டா..டா..வென அனிச்சையில்
அசையுமென் கையை
கட்டுப் படுத்தவில்லை.
///////////
வாழ்க்கையில் பாதி நாட்கள் எதிர்பார்புகளிலே கழிந்துபோகிறது பலருக்கு .
கவிதை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி
இரண்டாம் பாகம் - எல்லாமே சரியாதான் இருக்கு..
ரொம்ப நல்லாருக்குப்பா..
நல்லா இருக்குங்க கவிஞரே..
இவ்வளவு இனிமையான விசயங்களை இப்படி எளிமையா எழுத முடியுங்கறது உங்ககிட்ட படிக்கிறேன்..மிக்க நன்றி அண்ணே..
ஆமா சரியா சொன்னீங்க பாரா அண்ணே.. மனுசனா பொறந்தா எத்தன எத்தன எதிர்பார்ப்புகள்.. கவிதை யதார்த்தமா இருக்கு..
good ones ba.ra.
good one paa raa
மூன்றும் அருமை அண்ணா.
இரண்டாவது :((
மாமா என்ன இயல்பிற்கு ஒத்தடங்களா!?
அருமை.. :)
அண்ணா...எல்லாமே நல்லாயிருக்கு.சின்னச் சின்ன விஷயங்கள் கூட தொட்டுவிடுகிறது உங்கள் மனசோடு !
mm..mm...super.
பா...ரா...நீங்க சிவகங்கையா......
நான்..
முதலா ஸ்ரீராம்-ல் பார்த்தது "நல்லவனுக்கு நல்லவன்."
கடைசியா ரவிபாலா-வில் பார்த்தது "நாடோடிகள்"
வழி அனுப்ப வந்த
ரயில் நிலைய முகங்களில்
எனக்கானது இல்லை.
ஆயினும்,
டா..டா..வென அனிச்சையில்
அசையுமென் கையை
கட்டுப் படுத்தவில்லை.
yethirparppukalai kattupadutha mudiyathathai alagai sollum kavithai nandru
இரண்டாவது கவிதைக்குள் ஒரு அழகான திரைக்கதை இருக்கிறது..
எங்க ஊர்ல கூட ஸ்ரீராம் டாக்கீஸ் இன்னும் இருக்கு. ஆனா தியேட்டர்க்கு மக்கள் தான் வரது இல்லை
ஆயினும்,
டா..டா..வென அனிச்சையில்
அசையுமென் கையை
கட்டுப் படுத்தவில்லை.//////
சில விஷயங்கள் அனிச்சையானவை, தவிர்க்க இயலாது. மனதை கொள்ளை கொண்ட கவிதை.
மூன்றுமே அழகு.
நிஜங்களிலிருந்தே உங்கள் கவிதையை எடுக்கிறீர்கள் என்பது கபிலன் பின்னூட்டம் வாயிலாக புரிகிறது. ஆகவேதான் அவை உயிர்ப்புடன் இருக்கின்றன.
தமிழ்ல தள்ளுன்னா,
ஏசி தியேட்டருக்கு
ஏது மதிப்பு?
அது என்ன 'இரண்டாம் பாகம்'?
சொந்தக் களத்துல ஆரம்பிச்சாச்சா:). அருமை
கவிதை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி
இரண்டாம் பாகம்?
தெருமத் துயனியலின் இரண்டாம் விதி (The Second Law of Themodynamics). இவ் விதிப்படிதான் நமது வாழ்க்கை என்று சொல்கிறார்கள். From order to disorder. (உங்களுக்கு அனுப்பித் தந்த எனது ‘மீளாப் போக்குகள்’ இதைப் பற்றியும் பேசுகிறது. நீங்கள் எங்கே வாசித்திருக்கப் போகிறீர்கள்?)
நீங்கள் எழுதிய மூன்றும் தனித்தனிக் கவிதையாகவும் இருக்கலாம், ஆனால் ஒருமிக்கத் தந்ததால் நான் ஒரே கவிதையாகவே வாசிக்கிறேன்.
‘ஒன்று’-இல், உரிய மொழி கழிகிறது. ‘இரண்டு’-இல், உரிய முகங்கள் (அடையாளங்கள்) கழிகின்றன. ‘மூன்று’-இல் உரிய புள்ளிகள் (தொடுப்புகள்) கூடவில்லை.
“அப்படி மட்டும் ஆகட்டும் என் பேரை மாத்தி வெச்சுக்கிறேன் பார்!” என்று சூளுறைப்பது உண்டு. கடைசியில் அங்குதான் வந்து சோர்கிறோம். ‘ஈழம்’ என்பது?
அனைத்தும் அருமை
//நிலுவையை கருத்தில் கொண்டு
தலைப்பை மாற்றினோம்.
"ஒரு சேர்ந்து பார்க்கலாகாது"//
நல்லா இருக்கு.
எளிமை, அருமை!...
பிரபாகர்...
நிழல் சேர்ந்து நாளாச்சு!
என்னையும் மகன்ஸ் என்றே அழைக்கலாம்!
அன்பின் ராஜன்!
மாறியது குறித்தும் மாறாதது குறித்தும் மாற்றியது குறித்தும் மாற்றமில்லாமல் அழகாய்ப் பூத்தது கவிதை பா.ரா.
i couldnt EXIT from the 1st one :)
நான் போட்ட முதல் கமெண்ட் காணவில்லை... என்ன சித்தப்ஸ் கொஞ்சம் கூட பயமில்லாம போயிடுச்சு என் மேலே .. ம்ம்ம்ம்...
//என்னையும் மகன்ஸ் என்றே அழைக்கலாம்!
அன்பின் ராஜன்!//
எங்கயிருந்துதான் புதுசுபுதுசா கிளம்புறாங்களோ ;)
மகனே அசோக்,
தம்பி கண்ணன், மெயில் பண்ணியிருந்தான். அது உங்களின் பார்வைக்கு..
Annath, When I was posting yesterday I forgot to change the date, So, the new post "இரண்டாம் பாகம்" has not posted on the 1st page, it moved to the middle. So, I have to remove that Post and changed the date and uploaded again. I didnt notice that Mr.D.R.Ashok has commented already. Please convey my 'Sorry' to Mr.Ashok.
Regards
Kannan
(ரெண்டாவது ரீலை முதலில் ஓட்டிட்டான் போல..) :-) மன்னிச்சுருங்க, பாவம்.
நன்றி பரணி! எவ்வளவு நாளாச்சு? நலமா?
நன்றி மாப்ள ஆர்.கே!
நன்றி கமலேஷ்!
நன்றிங்க வசந்து, கொசந்து! :-)
வினோ, நலமா? மிக்க நன்றி மக்கா!
நன்றி நட்சத்திர நாயகன், ஷேக்! :-)
நன்றி ப்ரியா!
நன்றி ராம்ஜி மக்கா!
நன்றி அக்பர்!
நன்றி சுசி!
நன்றி ஆ.மு. மாப்ள!
நன்றிடா ஹேமா!
நன்றி ஜெஸ்!
ஆம் கபிலா. நீங்களுமா? :-) நன்றி மக்கா!
நன்றிடா சக்தி!
நன்றி டைரக்ட்டர்ஜி! :-)
நன்றி லாவன்ஸ்!
"As everything goes from order to disorder, according to the Second Law of Thermodynamics, the universe gets expanded and with it, our own lives. So I appeal to you, friends, do not dream of seeing one another again. Do not nurse the hope of reconciliation. It is now to show your love. It is now, if you have wronged, to beg forgiveness.
“If at all, by chance, you meet again one of your old acquaintances, then recognize that that particular person has a link to your past or future, even the birth before or after."
ரா.சு. அண்ணனின் வரிகள்
நானும் மொத்தமாகத்தான் வாசித்தேன் மக்கா !
திரிதல் ...நிலை பெயர்தல்தரும் வெற்றிடம்...தகவமைதல் என்பதாகக் கொண்டேன் நான்
நன்றி தமிழ் உதயம்!
கிட்டத்தட்ட ஆதி. மிக்க நன்றி!
நன்றி வாசன்! பாருங்களேன், ஓவ்வொரு கவிதையிலும் chapter' 2 இருக்கான்னு.
நன்றி பாலாண்ணா!
நன்றி குமார்! வந்தாச்சா?
நன்றி அண்ணே.! என்ன சொல்றதுன்னு தெரியலைண்ணே..உங்களின் பார்வைக்கு பிறகு நானே என் கவிதைக்கு நிறைய அர்த்தம் பண்ணிக் கொள்கிறேன். :-) மற்றபடி,( எங்கே வாசித்திருக்கப் போகிறீர்கள்?) என்னண்ணே இப்படி ஒரு கேள்வி? மூச்சு, சாப்பாடு, மாதிரிதானே எல்லா தேவைகளும்?
நன்றி வேலு.ஜி!
நன்றி கீதா!
நன்றி ப்ரபா!
verygood, ராஜன்ஸ் என்ற மகன்ஸ்! கவிதைகளை தொடங்குங்கள்.
நன்றி சுந்தர்ஜி!
நன்றி karthin!
நன்றி அசோக் மற்றும் வில்லன் மகன்ஸ்! :-)
நன்றி, நேசன்ஜி! :-)
அடுத்த சுற்றுக்கு தயாராகியச்சா ?
நல்லா இருக்கு பாரா.
இப்படிச் சொல்லிட்டு போக மனசில்லை.
ஒரு மனிநேரம் கதைபேசிக்கிடந்த அனுபவம்
நிறைஞ்ச பக்கம் பாரா வோட. அதுவே பெரும் பாக்கியமில்லையா ?.
////என்னையும் மகன்ஸ் என்றே அழைக்கலாம்!
அன்பின் ராஜன்!//
எங்கயிருந்துதான் புதுசுபுதுசா கிளம்புறாங்களோ ;)
//
அவ்வ்வ்வ்!
முதல் இரண்டும் அருமை மக்கா..தொடர்ந்து வர இயலவில்லை.. மன்னிக்க..!!
நல்லாயிருக்கு பா.ரா.
நன்றி காமு!
அவ்வ்..also மகன்ஸ்! :-)
நன்றி தேனு மக்கா! be free boss.
நன்றி செ.ஜெ!
வழக்கம் போல் பா.ரா டச்!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
டாக்கீஸ்களில் எல்லாம் இப்பொழுது கெட்டிமேளம் கேட்கும் காலத்தில் ஞாபகமூட்டி பழைய நினைவுகளில் மூழ்கடித்து விட்டீர்கள் பங்கு
வாழ்த்துக்கள்
விஜய்
மூன்றுமே அழகு!
:))
வாசித்தேன் பா.ரா.
தாமதமாக வந்து படித்து பின்னூட்டமிடுகையில் கொஞ்சம் இப்படி அப்படியாகத்தான் இருக்கிறது..
நன்றி ரவி!
நன்றி pangu!
நன்றி teecchar!
nandri kumkki thozhar! varuveengannu theriyum. neramaa irukku? ithu unga veedu boss!
ரயில் நிலைய முகம் அருமையான சிந்தனை. தொக்கி நிற்பது ஏக்கமா நிம்மதியா?
நன்றிங்க அப்பாதுரை!
Post a Comment