Thursday, July 15, 2010

பெயரில் என்ன இருக்கிறது?


(Picture by cc licence, Thanks Adam Jones, Ph.D.)

க் பக் பக் என அழைத்தால்
தானியம் தரவென அறிகிறது
பெயரில்லா கோழி.

தடு குவித்து ப்ரூச் என்றால்
புரியும் ரோசிப் பூனைக்கு.

கெத் கெத் கெத் என
மேல் அன்னத்தில் தட்டினால்
வாலாட்டி ஓடி வரும் ஜிம்மி.

"ந்தா" என்றதும் தட்டெடுப்பார்
முன்பு,
திரவியம் என்றழைக்கப்பட்ட
தாத்தா.

***

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

74 comments:

க ரா said...

மாம்ஸ்.. என்னன்னு சொல்றது இந்த கவிதைய பத்தி. இம்ம். கடைசி வரில நிக்கிது மொத்த மேட்டரும்.

சிநேகிதன் அக்பர் said...

மனசை கஷ்டப்படுத்திட்டிங்க பா ரா அண்ணே.

ராஜவம்சம் said...

என் பின்னூட்டம் எப்போதும் உங்கள் கவிதைக்கு மெருகூட்டாது.

நல்லாருக்கு என்று ஒரு வரியில் சொல்வதா? பதில் கவிதை எழுதி சந்தோஸப்படுத்துவதா?

என் மகிழ்ச்சியை எப்படித்தெரியப்படுத்துவது என்றே தெரியவில்லை!!!

சுந்தர்ஜி said...

அந்த முதியவர் திரவியமாக இல்லாதிருக்கட்டும்.வருத்தமாயிருக்கிறது பா.ரா. இதைப் படித்தவுடன்.

ராஜவம்சம் said...

என் அக்கா மகன் ஒரு முறை என்னிடம் சொன்னான்.

மாமா அத்தா எனக்கு தெரிந்து என்னை ஒரு முறைக்கூட பெயர் சொல்லிக்கூப்பிட்ட ஞாபகம் இல்லை என்று.

அவன் வலியை இன்று உணர்ந்தேன்.

(அத்தா என்றால் தகப்பணார்)

Mohan said...

கவிதையும் அதன் தலைப்பும் மிகவும் அருமை!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை. யதார்த்தமாக உள்ளது. மன‌தின் வலிகள் தெரிகின்றன.

பாரா அண்ணே.. உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

மிகவும் அருமை

நட்புடன் ஜமால் said...

மக்கா என்று உங்களிடம் நாங்கள் பேசுவது கூட - பெயரில் என்ன இருக்கு

கடைசி பத்தி வலியோடு ...

பிரபாகர் said...

இந்த கவிதையில் எல்லாம் இருக்கிறது!

அருமை. மனம் கனக்கிறது!

பிரபாகர்...

Ravichandran Somu said...

அருமை பா.ரா அண்ணே!

நான் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன்:(

கனத்த மனத்துடன்,
-ரவிச்சந்திரன்

Radhakrishnan said...

அசத்தல்

ச.முத்துவேல் said...

ப்பா ! பளார் !

CS. Mohan Kumar said...

ஒரு சில வரிகளில் மனம் கனக்க வைக்கிறீர்கள்; முன்பு விகடனில் வந்த காகம் (கூடு) கவிதை கூட இதே போல் தான் மனதை கனமாக்கியது.

தமிழ் உதயம் said...

மனசு வலிக்கிறது.

காமராஜ் said...

முதுமை ஒரு வரலாறு. ஆர்வமுள்ளவருக்கு பாடம்.
அல்லாதோருக்கு கற்பூரம்.

நல்லா இருக்குன்னு மட்டும் சொல்லிட்டு எப்டிப்போக ?
என்னா...பாரா..,ராகவன்,கதிர்,பாலாண்ணா இந்த வாரம் ஒரே
மனசைப்பிசையும் கவிதைகள்.

vasu balaji said...

இப்படியே கொள்ளையடிங்க பா.ரா. :((

Karthick Chidambaram said...

இன்று காலையில் நான் படிக்கும் பதிவு எல்லாம் இதயத்தை பதம் பார்கின்றன.

அன்புடன் அருணா said...

"பெயரில் என்ன இருக்கிறது?" என்றாலும் பெயரில்தான் எல்லாம் இருக்கிறது என்றும் அடிக்கடி தோன்றும்.

செ.சரவணக்குமார் said...

யப்பா சாமி, ஆளக் கொல்றதுல இந்தப் பா.ராவ அடிச்சுக்க ஆளே இல்ல போலயே.

வாசிச்சி முடிச்சதும் கண்ணு கலங்குது மக்கா..

அம்பிகா said...

கடைசி வரி் கலங்கவைக்கிறது.
மனதில் நிற்கும் கவிதை.

விக்னேஷ்வரி said...

அழ வெச்சுட்டீங்க மாம்ஸ். இது சரியில்ல. :(

நசரேயன் said...

//"ந்தா" என்றதும் தட்டெடுப்பார்
முன்பு,
திரவியம் என்றழைக்கப்பட்ட
தாத்தா.//

ம்ம் என்றதும்
கும்மி அடிப்பேன்

ஈரோடு கதிர் said...

ப்ச்

அன்புடன் நான் said...

படமும் வரிகளும் மிக அடர்த்தி.

வினோ said...

மறுக்கபடும் மனிதம்.... மனச விட்டு இறக்க முடியல பா ரா அண்ணே

ராமலக்ஷ்மி said...

கடைசி.. கனம்.

அ.வெற்றிவேல் said...

பா.ரா என்ன சொல்ல..எப்பொதும் போல் ..அருமை

'பரிவை' சே.குமார் said...

அண்ணே... உங்கள் கவிதைகள் ஆயிரம் கதைகள் சொல்கின்றன. எப்படி உங்கள் கவிதைகள் ஆழமான கருத்துடன் பிரசவிக்கின்றன என்பது எனக்குள் ஆச்சர்யத்தை அளிக்கின்றன.

ஆனந்த விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

rajasundararajan said...

//பக் பக் பக் என அழைத்தால்// இப்படி அழைக்கிற 'ராவணன்/ராவண்' படத்தின் நாயகன் என்ன சொல்ல வருகிறான் என்று இப்போது புரிந்துவிட்டது: ஐஸ்வர்யாவைக் 'கோழி' என்கிறான் (ச்சும்மா!)

"படைப்பு, படைத்தலையும் கடந்து, வேண்டி நிற்பது முறையான அங்கீகாரத்திற்கு உரிய Channel of approach-ஐ." என்கிறார் நேசமித்ரன் (தன் 'அங்கீகாரத்தின் அரசியல்' கட்டுரையில்).

"நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தையை ஆராய்ந்துப் பார்க்க மாட்டார்கள். எனது வார்த்தைகள், அபிப்பிராயங்கள் அதற்குண்டான சரியான மதிப்புப்பெறவேண்டுமானால், எந்த காரணத்தைக் கொண்டும் மனிதத்தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என் மீது சுமத்திவிடாதீர்கள்." என்றார் இ.வெ.ரா. பெரியார்.

சக மனிதனை மனிதத்தன்மைக்குள்ளும் அங்கீகரிக்க ஒப்பாததொரு பண்பின்மை பற்றிப் பேசுகிறது கவிதை. அதற்கான அவமானம்/ வருத்தத்தையும் நமக்குள் தோற்றுவிக்கிறது (ஏனென்றால் அம் மட்டத்தில் ஆனது நம் வாழ்க்கையும்).

'பெயரில் என்ன இருக்கிறது?" என்பது புத்தர், 'அநாத்மா' அல்லது 'சூன்யம்' இன்னதென்று உணர்த்த, வினவியதொரு வினா. "வடிவில் என்ன இருக்கிறது?", "சுவையில் என்ன இருக்கிறது?", "மோப்பத்தில் என்ன இருக்கிறது?" என்று விரித்துப் பொருளுணரவேண்டும்.

"ந்தா" என்றதும் தட்டெடுப்பவனே நானும்.

thamizhparavai said...

தொட்டது ஆழமாக...

ஹேமா said...

எங்க தாத்தாவும் *ந்தா*ன்னு கூப்பிட்டுக் கேட்டிருக்கிறேன் !

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கண் கலங்குது மக்கா.

நேசமித்ரன் said...

கைவிடப்படுதலின் துயரம் என்பதாக மேம்போக்காக பொருள் கொண்டு கடக்கவியா கூறுகளை கொண்டு பின்னப் பட்டிருக்கிறதாய் இந்த வரிகள்

தானியக் கோழி - பலன் கருதி வழங்கும் பிரியம் யாசித்து தன்னையே இழப்பது

ரோசிப் பூனை- மறைமுக ஏவல் /காரிய வளர்ப்பு

நாய் - காவலடிமை

திரவியத்தாத்தா- சக்கை /பாழ் கோவிற்சிற்பம்/துண்டித்ததொப்புள் மாசு


ரா.சு அண்ணனின் பிரியத்துக்கு நன்றி சொன்னால் நான் இவையனைத்தும் யாசிக்கும் பிரியத்துக்கு தகுதியற்றுப் போவேன் .வணக்கம் அண்ணன் !

மாதவராஜ் said...

உயர்திணையை அஃறிணை ஆக்கிவிட்ட் காலத்தின் சோகத்தை வரிகளாக்கி இருக்கிறீர்கள் மக்கா. ‘ந்தா’ மனதில் சொருகுகிறது.

Unknown said...

இவ்ளோ அர்த்தம் இருக்குமா!!!!!! அந்த கடைசி வரிகளில்

சாந்தி மாரியப்பன் said...

கடைசி வரியில் கனக்கிறது மனசு :-(

Ashok D said...

பரவாயில்ல.. சுமாரா இருக்கு சித்தப்ஸ்... :)))

சிவாஜி சங்கர் said...

மாம்ம்ஸ்...... நச்..

க.பாலாசி said...

என்னமோ போங்க... அழுத்தியும் அழுத்தாமலும் மனதில் தைக்கிறது ‘ந்தா’. மனதை பிசையவும் செய்கிறது.

Vidhoosh said...

இதே வேலையாப் போச்சு உங்களுக்கு :(

VELU.G said...

மிகவும் அருமை

உயிரோடை said...

கவிதை நன்று அண்ணா.

வாழ்த்துகளும் கூட

Unknown said...

!!!
கொல்றீங்களே மாமா.
:)))

அன்பேசிவம் said...

makaappaaa..... pona vaaramhaan sethu ponaaru ethrir veettu thaathaa... avarai paRRi eRkanave ezuthiyiruppen, en pathivil. mch...:-(
nthaa... naan sameebaththil athikam kettu saliththupona vaarththai...

enna solrathunnu theriyalai..
nallaa irungka..

Vidhya Chandrasekaran said...

கனக்கச் செய்கிறது.

(எனக்கே புரியுதே. இது கவிதை தானா??)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்கு ராஜாராம்.

பெயரில் என்னதான் இல்லை? என்றும் யோசித்துப் பார்க்கலாம்.

vasan said...

'திர‌விய‌ம்'என்ற‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ தாத்தா.
அதுதான் க‌விதையின் 'ம‌குட‌ம்'.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

:(

விஜய் said...

திரவியம் தாத்தாவின் ந்தா அழைப்புக்குரியவரை பற்றி யோசிக்கிறது மனம்

விகட வாழ்த்துக்கள் பங்கு

விஜய்

அன்பரசன் said...

கலக்கிட்டீங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

kadaisi oru vaarthaila kan kalanga vechuteengalee

பத்மா said...

இதனை பேர் சொல்லாததையா நா சொல்லபோறேன் ?
இது போல வார்த்தைகள் ஏன் தலை முறை தலைமுறையாய் தொடர்ந்து வருகின்றன? திரவியம் தாத்தா வாவது கடைசி காலத்தில இந்தா ன்னு கூப்பிட பட நேர்ந்தது .கல்யாணம் ஆன நாளிலிருந்து ந்தா ன்னு காலுக்கு கீழே தேய்த்து அழிக்கப்பட்ட பெண் ஜீவன்கள் எத்தனை?
இதெல்லாம் காலத்தின் சாபம் தான் போலும்
10 வரிகளில் கட்டிபோடும் வித்தை பா ரா சாருக்கு கை வந்தது ..
மனதையும் சேர்த்து தான் ..

விநாயக முருகன் said...

அருமை பா.ரா
நாவிஷின் இந்தக்கவிதையை படித்து பாருங்கள்

http://navishsenthilkumar.blogspot.com/2010/02/blog-post_06.html

Unknown said...

மனதைத் தொட்ட கவிதை.

இரசிகை said...

:(

peyaril "thiraviyam" irunthu yenna payan?........
athanaal mattume marakkappattta manitham.

saahadikkirathey unga velaiyaa pochchu rajaram sir.

vazhthukkalum anbum:)

Geetha said...

//ந்தா" என்றதும் தட்டெடுப்பார்
முன்பு...///
வலி நிறைந்த யதார்த்தம்...

வலைப்பூவின் வலப்பக்கத்தை
கண்டவுடன் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தேன் :)

பாலா said...

நடத்துங்க ஆனந்த விகட அரசவை கவிஞரே

பா.ராஜாராம் said...

நன்றி ஆர். கே மாப்ள!

நன்றி kartin!

நன்றி அக்பர்!

மகன்ஸ், நீங்கள் வருவது மட்டுமே என் கவிதைக்கான மெருகூட்டல். மற்றதெல்லாம் அப்புறம். நன்றி மகன்ஸ்!

நன்றி sundharji!

meendum நன்றி magans!

vaanga mogan, mikka நன்றி!

(naalai pesalaam makkale.. translation problems..)

sakthi said...

Nalla kavithai raja anna

Thamira said...

Vidhoosh(விதூஷ்) said...
இதே வேலையாப் போச்சு உங்களுக்கு :(

// அதே.

கமலேஷ் said...

ஆனந்த விகடன்லயே படிச்சேன்பா...
ரொம்ப அருமையா இருந்தது..
கடைசி வரி படிக்கும் போது
கையில இருந்த புக் தவறி விழுந்துட்டு

Guruji said...

super

இன்றைய கவிதை said...

ந்தா - கூவி அழைத்தோர் மனகுருக படிப்போர் மனமுருக பாரா கனக்க வைத்துவிட்டீர்கள்

மிகவும் நன்றாய் இருந்தது

நன்றி ஜேகே

தூயவனின் அடிமை said...

கடைசி வரி,மனதை கலங்க வைத்துவிட்டது.

ரிஷபன் said...

விகடன்ல படிச்ச உடனேயே ‘சபாஷ்’னு மனசு சொல்லிருச்சு..

தூயவனின் அடிமை said...

http://www.google.co.in/transliterate/indic/tamil

இதில் தட்டச்சு செய்து பாருங்கள் சகோதரரே, இது உங்களுக்கு எழிதாக இருக்கும் என நம்புகின்றேன்.

பா.ராஜாராம் said...

நன்றி சாரல்!

நன்றி மகன்ஸ்! கம்பனி ரகசியத்தை வெளிய விடாதீர், பாவி.:-)

நன்றி சிவாஜி மாப்ள!

நன்றி பாலாசி!

நன்றி சகோ! :-)

நன்றி வேலுஜி!

நன்றிடா லாவன்ஸ்!

நன்றி ஆ.மு. மாப்ள!

வாசித்திருக்கிறேன் முரளி. நன்றி!

விடுங்க வித்யா பொழச்சு போகட்டும், உள்ளூர் டி.ஆர்! நன்றி மக்கா! :-)

நன்றிடா சுந்தரா!

நன்றி வாசன்ஜி!

நன்றி சேரல்!

நன்றி பங்கு! :-)

வாங்க அன்பரசன், மிகுந்த நன்றி!

அமித்தம்மா!.. நலமா? எவ்வளவு நாளாச்சு? குட்டீஸ்கள் ரெண்டும் நலமா? சீக்கிரம் வாங்க அமித்தம்மா. நன்றி!

நன்றி பத்மா!

வாசித்தேன். நன்றி விநாயகம்!

நன்றி, கலா நேசன்!

நன்றி ரசிகை!

நன்றி கீதா!

யோவ், பாலா மாப்ள, நேரமின்மை, அலைச்சல். இவ்வளவு நக்கல் கூடாது உமக்கு. நன்றி பாலா!

நன்றிடா சக்தி!

நன்றி ஆதி!

நன்றி கமலேஷ்!

வாங்க, உஜிலா தேவி. நன்றி!

ஜேகே, நலமா? நன்றி மக்கா!

மிகுந்த நன்றி சுல்தான் சார்!

ரொம்ப நன்றி ரிஷபன்!

மீண்டும் நன்றி சுல்தான் சார். மாப்ள, ஆ. மு வீட்டில் நாளை தங்கள். அதற்குள் கற்று கொள்வேன்( என நினைக்கிறேன்..பார்க்கலாம் சார்!

ரோஸ்விக் said...

போ(ங்க) சித்தப்பா... நல்லாயிருக்கு... நல்லாயிருக்குன்னு சொல்லி வாயும் வலிக்குது... கைதட்டி கைதட்டி... கையும் வலிக்குது... ஊர்ல சந்திக்க விரும்புகிறேன்... செப்டம்பரில் எப்போது வருகிறீர்கள்?

Thenammai Lakshmanan said...

வாழ்வியல் கவிதைகள் என்பதா..தத்துவம் என்பதா மக்கா..

ராகவன் said...

அன்பு பாரா,

எல்லோரும் எழுதிவிட்டார்கள். இருந்தாலும் எழுத நிறைய இருக்கிறது பாரா. அழுத்தும் பாரங்களில் இருந்து மீளமுடியாமல் தேய்ந்து நகர்கிறது நாட்கள். வரமுடியவில்லை, யார் வலை அகத்திற்குள்ளும், அளவளாவ முடியாமல் மனசு முழுக்க திராவக புனல்.

ஆனந்த விகடனில் படித்ததும், ரொம்ப பிடித்தது, அங்கிருந்த கவிதைகளில் தனியாய் இருந்தது இது. திரவியம் எல்லா இடத்திலும் எல்லாரிடத்திலும் இருக்கிற படிமம். இது முதுமை என்று இல்லாமல் கையாலாகாததனத்தின் பிரதி என்று கொள்ளலாம் என்றால்.

உணவு என்பது உணவு மட்டுமா இல்லை தேவைகளா என்று தெரியவில்லை... மணக்க மணக்க கோழிக் குழம்பை ருசித்து விட்டு மீசை நீவி பெரிதாய் ஏப்பம் விட்ட காலங்களின் மீதான கொள்ளி இப்படி தான் ஆகிவிடுகிறது. கண் முன்னே எரியும் புகைச்சுருளாய் பொரிந்து பொசுங்குகிறது வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு காலகட்டத்தில்.

வேதனையாய் இருக்கிறது, இது போன்ற தருணங்கள்.

அன்புடன்
ராகவன்

அப்பாதுரை said...

நிறைவான வரிகள்.

ராசராசசோழன் said...

அவஸ்தியான கடைசி வரிகள்.

Kumky said...

:))

:((