மனசு மட்டும் நிறைந்து போய் விட்டால் எவ்வளவு தூங்கிப் போகிறோம்!
"மாமா எந்திரிங்க, சாப்பிடுங்க" என்ற மாப்ள ஆனா ரூனா குரல் கேட்டுதான் எழுந்தேன். எழுந்து, குளித்து, சாப்பிட்டு புறப்பட தயாரானோம்.
இடையில் இரண்டு முறை அக்பர், ஸ்டார்ஜினடமிருந்து "புறப்பட்டீங்களா?" என்கிற அழை பேசி குரல்கள் வேறு.
"இனி பாட்டெல்லாம் வேணாம்டா. பார்!. பார்த்துக் கொண்டே இரு.. " என்றது உள்மனம். தயாரானேன். 'உள்'ளை நேசிக்கிற எல்லோருக்கும் கிடைக்கிற எல்லாம் எனக்கும் கிடைக்க தொடங்கியது...
இறங்கி, அக்பர் அறை அடைந்த போது, மனுஷன் இப்படியா சிரிப்பார் மக்கா? இரு கன்னத்திலும் குழி விழ, சிரித்து, பதறி, அணைத்துக் கொண்டார். கன்னக் குழிகளில் இருந்து "அண்ணே' என்கிற பூ மலர்ந்து கொண்டிருந்தது. (இந்த சிரிப்பை மறக்க ரொம்ப நாளாகும் அக்பர்)
ஸ்டார்ஜனோ வேறு தளத்தில் இருந்தார். நிதானம் என்கிற உன்னத தளத்தில். "பாராண்ணே..பாராண்ணே" என்று இடமும் வலமுமாக மூன்று முறை கட்டிக் கொண்டார். பாரா எனலாம். அண்ணே எனலாம். இதென்ன பாராண்ணே? என உடைந்து கொண்டிருந்தேன். (இந்த பாராண்ணேவில் எவ்வளவு என்னை இழக்கட்டும் ஸ்டார்ஜன்?)
அக்பரின் சகோதரர், மச்சினர், அறையில் இருந்தார்கள். கட்டிக் கொண்டார்கள். குறு குறு வென முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். போக, 'பேசட்டும்' என்று எங்களை அனுமதித்து விலகி நின்றார்கள். தனியாக, உயரமாக.
அவ்வப்போது, 'பாராண்ணே' என நெருங்கி அமர ஸ்டார்ஜனால் முடிகிறது. வேறு வழி இல்லாமல் சும்மா கை பற்ற முடிகிறது நம்மாலும்.
திட்டமிடாத அன்பை வைத்திருப்பார் போல அக்பர் எப்பவும். நம்மிடம் பேசிக் கொண்டிருந்தாலும், வீட்டிலும் இருந்தார்.(மகள் மற்றும் சகோதரர் மகள்கள் போடும் ஆட்டங்களை வீடியோவிலும் காட்டினார்) திட்டமிடாததில் உள்ள பூரிப்பை வாங்க முடியாத தவிப்பு எனக்கு.
வீட்டிற்கு விருந்தாளி வந்தாச்சு. என்ன செய்யும் வீடு? வந்த மனிதர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்கள் வீட்டு மனிதர்கள். பின்புலமாக சில நகர்வுகளும் இருக்கும்.அதிலும் இருப்பார்கள் வீட்டு மனிதர்கள். இல்லையா? அப்படி, அங்கும் இங்குமாக இருந்து கொண்டிருந்தார்கள் அக்பரும் ஸ்டார்ஜனும்.
பார்வையின் மூக்கு திறந்திருந்திருக்கும் போது,வாசனை நிரம்பிய, விழியின் ஆன்மாவை உணர முடியும். அப்படி, அங்கும் இங்கும் நகர்ந்து முகர்ந்ததில், அக்பர் குடும்பம் அங்கில்லை. இங்குதான் இருக்கிறார்கள். அவர் அறையில். ஸ்டார்ஜனில், தம்பியில், மச்சினரில், தன்னிலும் கூட!
அக்பரின் மச்சினர், "மச்சான் நீங்க இருங்க" என தன்னை அக்பர் இடத்திற்கு நகர்த்தும் போது அக்பர் யாரென நம்மிடம் சொல்கிறார். பேச்சுக்கு பேச்சு "ஷேக்" என்பதில் ஸ்டார்ஜன் யார் என்பதை அக்பரும் சொல்கிறார். எல்லோரும் யார் என்பதை, இவர்கள் எல்லோரையும் இங்கு கொண்டு வந்த அக்பரின் தம்பியும் சொல்கிறார். சொன்னால்தானா சொல் என்பது?
கிளம்பும் போதே, "பாட்டு வேணாம்டா" என்று கௌலி தட்டியது. இல்லையா? தட்டியது போலவே பாட்டெல்லாம் மறந்து போய் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"டேய்,குடிகாரா இது குடும்பம்டா" என்கிற படம். எனக்கும் லதா நினைவு வந்து, "சரி புள்ள. இனி குடிக்கல" என எனையறியாது, எனக்குள் பேசிக் கொண்டேன், வழக்கம் போல.
புறப்பட்ட நேரம் பிரியாணி ஓரை உச்சத்தில் இருந்திருக்கும் போல. ஆனா ரூனா அறையில் சிக்கன் பிரியாணி எனில், இங்கு மட்டன் பிரியாணி. (பேசி வைத்துக் கொண்டீர்களா பாசு?)
சமையல் குறிப்பெல்லாம் எழுதுகிறாரே ஸ்டார்ஜன், அவர் செய்ததாகத்தான் இருக்கும் என " சூப்பர் ஸ்டார்ஜன்!" என்ற போதுதான் தெரிந்தது, பிரியாணி அக்பரின் தம்பி செய்தது என.
அப்புறம் என்ன செய்றது? அசடு வழிந்த அதே சூப்பரை அக்பரின் தம்பிக்கு அனுப்பினேன். அவரும் ஒன்னும் சொல்லல. ஒரே சிரிப்பில், சூப்பரா வாங்கி வச்சுக்கிட்டார்.
சாப்பிட்டு முடிந்து, கொஞ்ச நேரம் சாரு, ஜெயமோகன், என கட்டப் பஞ்சாயத்து ஓடியது. சரவணனை நாட்டாமை ஆக்கி," தீர்ப்பை மாத்தி சொல்லு நாட்டாமை" என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம்.
வெள்ளிக் கிழமையில் வந்திருக்கிறோம். வார அசதியை, ஒரே நாளில் அடிச்சுப் போட்டது போல தூங்குவார்கள். எழுந்து துணி துவைப்பார்கள். மீண்டும் தூங்குவார்கள். "போதும் மக்கா, புறப்படலாம்" என்று எவ்வளவோ மன்றாடியும் அழைத்துப் போனார்கள் ஜபல் காராவிற்கு.
கல்லூரி காலத்தில் சுற்றுலா போனது போல இருந்த அனுபவம் அது. அதை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார், ஸ்டார்ஜன். அது 'இது'
டாட்டால்லாம் காட்டி, அறை வந்ததும், கணிணியை திறந்தேன். "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என்ற கணேஷ் கொட்டகை பாடலோடு, முத்திய இடம்...
கருவேல நிழலாக இருந்தது.
****
Tuesday, July 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
மாம்ஸ் வார்த்தைகளால அப்படியே மனச வசியம் பண்ணிடறீங்க...
//
மாம்ஸ் வார்த்தைகளால அப்படியே மனச வசியம் பண்ணிடறீங்க...
//
சரக்கு போடாமலே வா
//குறு குறு வென முகத்தையும்
பார்த்துக் கொண்டிருந்தார்கள். //
இருந்த குவட்டரையும் குடிச்சா ?
எப்டிதான் முடியுதோ.. எங்களையும் உங்க கூடவே கூட்டிட்டு போய்டுறிங்க :))
நானும் அங்கு இருந்ததைப் போல ஒரு உணர்வு...உங்களால் தான் முடிகிறது... நன்றி அண்ணே...
அடடா இந்த மனுஷனுக்குத்தான் உரைநடை எவ்வளவு அழகா வருது
அப்படியே உள்ள இழுத்துக்குற உத்தி
நாமளும் வேடிக்கை பார்க்கிற நெகிழ்கிற அமிழ்கிற புளகிக்கிற மனசாய் ஆக வைக்குற எழுத்து
எல்லாருக்கும் என் அன்பு மக்கா
*****************************
மூன்று விமானப் பயணங்கள் காத்திருப்பின் யுகங்கள் கடந்து
நாடு சேர்கையில்
வரவேற்புக்கு நிலையம் அடைந்திருக்கும்
துணைவியின் தம்பியின் குதூகலம்
கொண்டாடும் புன்னகைக்கு இடையில் ஓரம் திரும்பி கண்துடைக்கும் நெக்குருகுதல்
பயணிக்கும் வாடகைக் காரில்
உறங்கத் துவங்கியிருக்கும்
மகளை பார்த்துக் கொண்டே இருக்கும் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கும்
அவளை எதிர்கொள்ளும் பார்வை
”உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீதான் கண்ணே என் சன்னிதி
நீ இல்லாமல் எது நிம்மதி “
என்று இசைத்துக் கொண்டிருக்கும்
பாடலை இடைவெட்டி பேசுவாள்
’இது தீவாளிக்கு எடுத்ததுன்னு சொன்னேனே வெப் கேம்ல இத பார்க்கல நீங்க ’
கொஞ்சம் வளர்ந்துட்டால்ல
இது நாம்
பொம்பளைப் பிள்ளைங்கன்னா அப்பிடிதான் இது அவள்
’நீதாண்டி இளைச்சுட்ட ’
அந்த நிமிஷம் மேலெழும் இமைகள்
திறக்கும் நீர்த்திரை கட்டிய விழிகளுக்கு
கைகளைப் பற்றிக் கொள்ள மட்டுமே
முடியும்
இப்போது மானசீகமாய் ஆனா.ரூனா
ஸ்டார்ஜன் பா.ரா. சரவணனைப் பற்றிக் கொள்ளத் தோன்றுகிறாற் போல
எழுத்தில் பாசம் காட்ட பா. ரா. தம்பியால் மட்டுமே முடியும்
வாரம் ஒன்னு இப்படி எழுதலாமே பா.ரா.கவிதைன்னா கவிதை. உரைநடைன்னாலும் கவிதைன்னு இருக்கே:))
நசரேயன் said...
//குறு குறு வென முகத்தையும்
பார்த்துக் கொண்டிருந்தார்கள். //
இருந்த குவட்டரையும் குடிச்சா ?//
ஏன் ஓவராயி காலொடிஞ்சி போச்சோ. 3 வார்த்தை அதில ஒன்னு அவுட்டு:))
நீங்க ஆறுமுகம் ரூம்ல இருந்தப்ப உங்களுக்கு போன் பண்ணி இருந்தேன் பா..
அப்ப நீங்க நாலு பேரா இருந்தீங்க. பா.ரா + பா.ரா + பா.ரா +பா.ரா இந்த format ல.. நான் ஒரு ஹலோ சொன்னா நீங்க நாலு ஹலோ சொன்னீங்க... அப்படியே மகா தங்கச்சிக்கு ஒரு போனை போட்டு மாட்டி விட்டுரலாம்னுதான் நினைச்சேன்...சரி ஒரு நாள்தானே சந்தோசமா இருக்கட்டும் என்றுதான் விட்டுட்டேன்.
உங்க பதிவை படிச்சிட்டு அருமையான சில நிமிஷங்களையும் மனிதர்களையும் இழந்துட்டேன்னு கஷ்டமா இருக்குப்பா...
தேனில் ஊறிய பலாச்சுளை உங்கள் உரைநடை
//
நேசமித்ரன் said...
அடடா இந்த மனுஷனுக்குத்தான் உரைநடை எவ்வளவு அழகா வருது
அப்படியே உள்ள இழுத்துக்குற உத்தி
நாமளும் வேடிக்கை பார்க்கிற நெகிழ்கிற அமிழ்கிற புளகிக்கிற மனசாய் ஆக வைக்குற எழுத்து
எல்லாருக்கும் என் அன்பு மக்கா
//
appadiye naanum....:)
[nalla padikkiravangattayirunthuthaan naanga bit adippom...]
rajanna rajathaan...:)
vaazhthukkal rajaram sir.
//
”உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீதான் கண்ணே என் சன்னிதி
நீ இல்லாமல் எது நிம்மதி “
//
mithran sir....
yennaiyum thinnum varikal ithu:)
anneram kamalai paakkanume...paavippayalukku thondai kuzhiyellaam nadikkum!!
//
”உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீதான் கண்ணே என் சன்னிதி
நீ இல்லாமல் எது நிம்மதி “
//
mithran sir....
thappa ninachchukkaatheenga...,
varikalai maaththeetteenga.
[venumnethaano...?]
அன்பு பாரா,
எல்லோரும் ஒரே சாயலில் இருக்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே முகம் சில சம்யங்களில். எல்லோருக்குள்ளும் பிறருக்கான சாயல்கள் இருக்கிறது.
நெகிழும் கனங்களில், எல்லோருக்கும் கண்ணீர் தித்திக்கிறது பாரா. நேசன் சொன்னது போல உரைநடை ராஜபாட்டையில் போய் கொண்டிருக்கிறது.
நேசா... பிரிவு என்னவெல்லாம் செய்கிறது, தூரம் வளர்க்கும் பிரியம் அலாதியானது...
அழும்போது கண் துடைக்க நீளும் சுட்டுவிரல்கள், சிரிக்கும்போது தளும்பி தோள் தட்டும் கரங்கள் எத்தனை, எவ்வளவு சம்பாதித்தாய் சீமைக்கு போய் என்றவர்களின் கேள்வியே அபத்தமாய் படுகிறது, இப்படி மனிதர்களையும், உறவுகளையும் பார்க்கும் பொழுது.
பிரிவாற்றாமையில் பெருகும் சமுத்திரம் கடந்த வாழ்க்கை, சில உப்புக்கல் தொலைவே என்பது எத்தனை உண்மை. அழகு இந்த பின்னூட்டம், பாராவுக்கா, நேசனுக்கா இல்லை, கடலை நடுவே கொண்டு இரண்டு நிலங்களுக்கு கால் பரப்பி நிற்கும் வாமணர்கள் எல்லோருக்குமா என்று என்னால் வரையறுக்க முடியவில்லை.
அன்பும் நன்றியும் பாரா,
ராகவன்
அவளேதான்....:))
நச்சுன்னு இருக்கு செந்தில் ஜீ
உங்கள் எழுத்தின் மூலமாக என்னை அழகாக காட்டிவிட்டீர்கள் அண்ணா.
விண்ணைத்தாண்டி வருவாயில் த்ரிஷா கேட்பார். என்னை ரொம்ப நல்லவளா காட்டியிருக்கே. நான் இந்த அளவு நல்லவளா கார்த்தீன்னு. அது போல உங்களிடம் கேட்கத்தோணுது பா.ரா. அண்ணே.
சரவணன் நாட்டாமை மேட்டர் சூப்பர். ஆறுமுகம் மீதான ஈர்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.
அதிகமாக எழுதவில்லை என்றாலும் எல்லாமே நிறைந்திருக்கிறது. விடுபடாமல்.
அடுத்த முறை சந்திக்கும் போது இன்னும் நிறைய பேசுவோம்.
மிக்க நன்றிண்ணே.
//வானம்பாடிகள் said...
வாரம் ஒன்னு இப்படி எழுதலாமே பா.ரா.கவிதைன்னா கவிதை. உரைநடைன்னாலும் கவிதைன்னு இருக்கே:)) //
அதேதாங்க... எல்லாமே கவிதையாகவே இருக்கு... இப்படியும் அப்பப்ப எழுதுங்க...
அன்பு பாராண்ணே!!.. என்னை வார்த்தைகளால் நெகிழவைத்து விட்டீர்கள். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.. உங்களை சந்தித்தது மறக்க இயலாது.
உங்கள் எழுத்துக்கள் மூலம் எனக்கு ஒரு அடையாளம் ஏற்படுத்தியுள்ளீர்கள். உங்கள் சங்கமமான கவிதையில் நானும் கரைந்து போனேன். ரொம்ப நன்றி..
உரைநடையில் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறீர்கள்.
பகிர்வுக்கு நன்றி.
ரெட்டை போதை. ஒண்ணு பாட்டிலில், இன்னொண்ணு
எழுத்தில். கலக்குங்கப்பூ..
பாரா எனலாம். அண்ணே எனலாம். இதென்ன பாராண்ணே? ...அதானே !
டாய்ய்ய்ய்ய்..அம்புட்டுதான்
நேரில் உங்கள் அனைவரையும் பார்த்தை போல் உணர்வு பாராண்ணே!!!
அருமை
அருமை
விவரித்திருக்கும் விதம் அழகு
பா.ரா..
இந்த உரைநடையைத் தொடருங்கள்
@ அக்பர்,கமலேஷ் மன்னிக்கனும் மக்கா உங்க பேரை விட்டுட்டேன்
@ ரசிகை
நன்றி! அந்த வரிகள் விரும்பி மாற்றி எழுதியதுதான் ;)
@ ராகவன்
சில உப்புக்கல் தொலைவே என்பது எத்தனை உண்மை
கடலை நடுவே கொண்டு இரண்டு நிலங்களுக்கு கால் பரப்பி நிற்கும் வாமணர்கள்
எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க
அன்பு மக்கா !
பாசம் என்பது, சொல்லி வருவது அல்ல, அது சொல்லாமல் வருவது. இதில் உங்கள் பாசத்தை அருமையாக தெளிவான நடையில் வெளிபடுத்தி இருக்கின்றிர்கள் .
அடடா! நிகழ்வுகளை விரல்நீட்டி கண்னழுந்த செய்யுறீங்களே மாமா :)))
நேசன் விடுமுறைக்கு வாழ்த்துக்கள்..
நண்பா நீங்களுமா என்னைய "ஆனா.ரூனா" ?? ம்ம்ம் வெச்சுக்கிறேன் உங்களையும்,
நேசன்ன்ன் :)))
நெகிழ்ந்தேன்
பாராட்டுக்கு ரொம்ப நன்றி நேசமித்ரன் அண்ணே.. என்றும் உங்கள் அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன்.
தேனில் ஊறிய பலாச்சுளை உங்கள் உரைநடை... அப்படியே மனச வசியம் பண்ணிடறீங்க...
நல்ல எழுத்து நடை.
நெகிழ்வானப்பதிவு.
நான் அங்கு இல்லையே என்ற ஏக்கம். நீங்கள் மகிழ்ந்தீர்கள் என்பதே என் மகிழ்ச்சிப்போல்.
நான் ஏற்கனவே உங்களிடம் சொன்னதுதான் உறைநடைக் க(வி)தை
எழுதவும்.
குடிப்பதை குறைப்பதை விட விட்டுவிடுவது நல்லது - மகனாக.
||Mahi_Granny said...
எழுத்தில் பாசம் காட்ட பா. ரா. தம்பியால் மட்டுமே முடியும்||
:)..
நன்றி ஆர்.கே. மாப்ள!
நன்றி நசர்!
நன்றி கொசர்! :-)
நன்றி சுசி!
நன்றி, வினோ தம்பு!
நன்றிடா நேசன் மக்கா!
நன்றி மஹி அக்கா!
நன்றி பாலாண்ணா! நசருக்கு, அதானே? :-)
கமலேஷ், பின்னூட்டம் பார்த்த பிறகுதான் தோண்டினேன், புகை மண்டலமான உங்கள் குரல்களை. :-). சந்தோசமா இருந்துச்சுடா பயல்களா. வந்திருக்கலாம் நீயும், ஸ்ரீயும். உங்களைப் போலவே தங்கைக்கும் பிடிக்கும், அப்பாவின் சந்தோசம். நன்றி கமலேஷ்!
ரொம்ப நன்றிங்க நாய்க்குட்டி மனசு!
நன்றி ரசிகை! என்ன ரசிகை, என்னால் உங்க தளத்திற்கு வர முடியல? (பாவிப் பயலுக்கு தொண்டைக் குழி எல்லாம் நடிக்கும்) சிரித்துக் கொண்டே இருக்கிறேன், ரசிகை அம்மாச்சி என்ற அப்பத்தா. :-)
கவிதை, உரைநடை, அன்பு, நண்பர்கள் எல்லாத்தையும் நீங்களே வச்சுகிட்டா எப்படி சித்தப்பா... மகனுக்கும் பங்கு சேர்த்து கொடுக்கலாம்ல... (பங்கு பிரிக்க வேண்டாம்)....
கலக்கல் அப்புச்சி..... :-)))
அன்பால் ஆன, அதீத அன்பு கிடைக்கும் அதிர்ஷ்ட காரர் நீங்க; உங்க பேரை அன்பு என்று கூட வச்சிக்கலாம் ( குறைந்தது பட்ட பேராக..)
ராகவன் பின்னூட்டம் அற்புதம்; என்னமா எழுதிருக்கார்!!வாழ்த்துக்கள் ராகவன்
அன்பால் கட்டிப்போடும் எழுத்து... மிக அருமை பா.ரா அண்ணே!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
//பா.ராஜாராம் said...
நன்றி ரசிகை! என்ன ரசிகை, என்னால் உங்க தளத்திற்கு வர முடியல? (பாவிப் பயலுக்கு தொண்டைக் குழி எல்லாம் நடிக்கும்) சிரித்துக் கொண்டே இருக்கிறேன், ரசிகை அம்மாச்சி என்ற அப்பத்தா.
:-)
//
yennaalumthaan nuzhaya mudiyala......:)
pass word laam maari poiduchchu.
comments laam yenga pokumne theriyaathu.
ivarukkku, kaathu.....mookkuk kannaadi maatturathukkaaga mattumthaan kadavul koduththurukkaarnnu oru funny vasanam varum.athu pola namma rasihai thalam yenakku ippo comments-i maththa thalaththukku seiyurathukkaaga mattumthaan pola...:)
yenakku kamal na remba pidikkum...athaan appadi sonnen.
"appaththaa" nu sonnenga....remba santhosham.
vaazhththukkalum anbum........
அப்பா, அப்போ அடுத்த சந்திப்ப எங்க இடத்லையே வெச்சுக்கலாமே
ராஜாராம்,
தங்களின் "தோழி" மற்றும் "பெயரில் என்ன இருக்கிறது " என்ற இரண்டு
கவிதையும் என்னை மிகவும் கவர்ந்த கவிதைகள்.
// தீபாவளி துப்பாக்கிக்கே
செத்து செத்து விழும் மல்லிகா.// இந்த வரிகளை எனது நண்பர்கள் அனைவரிடமும்
படித்து காட்டிவிட்டேன்.இன்னும் அந்த வரிகளின் மேல் உள்ள மோகம் குறையவே
இல்லை.ஒவ்வொரு முறையும் புதிதாய் வாசிப்பது போன்றே உள்ளது.
தங்களின் காவிதைகளில் வரும் இடங்கள் சில சிவகங்கையை நினனிவுட்டுகின்றன.
உங்களின் "PROFILE" சென்று பார்த்தேன் அதற்க்கான தகவல்கள் ஏதும் இல்லை.
தங்கள் அடுத்த கவிதைக்காக காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.
வாசித்தேன் பா.ரா.
வழக்கம் போலவே...என்ன சொல்வதென தடுமாற்றமாக இருக்கிறது.
அதிக அன்பை சுமந்து திரிகிறீர்கள்.
தகுதியான உங்களிடம் நீரோட்டம் போல எல்லாம் வந்தடைகிறது போல..
அன்பும், ஆச்சரியங்களும், நெகிழ்வுத்தனமையும் நிதமும் அளிக்க உகந்ததாகவே எப்போதும் இருக்கிறது கருவேல நிழல்.
இருக்க இருக்க நிழலின் வெளி அதிகரித்துக்கொண்டே போவதாக தோன்றுகிறது..
இணைய வெளியெங்கும் சுற்றிவிட்டு பலவித எண்ணக்கலவைகளுடன் நிழலில் ஒதுங்குகையில்தான் அக்கம்பக்கத்தில் அற்புதமான மனிதர்களை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்களென புரிகிறது.
மனதின் விசாலம் எதனுடனும் ஒப்பிட்டே பார்க்கவியலாத அளவிற்கு பரந்துபட்டு கிடப்பதை அவ்வப்போது உணர முடிகிறது பா.ரா.
தமது கவிதைகளை போலவே நேசனும், ராகவனும் குறைந்தபட்சம் ஒரு சின்ன அதிர்வையாவது உண்டாக்காமல் போகமாட்டார்கள் போலிருக்கிறது தமது பின்னூட்டங்கள் மூலம்.
கூடியிருந்து எல்லாமும் பகிர்ந்துகொண்ட நமது நட்புக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
ஒரு கோப்பையுடனும், வானுக்கும் பூமிக்குமான திறந்த மனதுடனும், அந்த மாமரத்தினடியில் உங்களை சந்திக்கும் ஆவல் மிகுந்தவனாகவே உள்ளேன் பா.ரா..நாட்கடத்தலில்.
இந்த ஞாயிறேனும் அழைப்பீர்களென்ற எதிர்பார்ப்புகளினூடாகவே ஒவ்வொரு வாரமும் கழிந்துகொண்டிருப்பதை நினைவு படுத்துகிறேன் பா.ரா..
ரொம்ப நன்றி ராகவன்! பிழிஞ்சு பிழிஞ்சு பின்னூட்டம் செய்வது எப்படி என ஒரு பதிவு போடலாம் மக்கா நீங்க... இதை பார்த்து எவ்வளவு நாளாச்சு!
நன்றி நாஞ்சில்ஜி! (இது நம் தளத்திற்கான பின்னூட்டம்தானா?) :-) விடுங்க. வாசனை வந்துச்சே.
அக்பர், உங்கள் கன்னக் குழிகளை நீங்கள் கண்ணாடியில்தான் பார்க்கணும். எங்களால் நேரில் பார்க்க இயலும். அப்படித்தான் எல்லாம். நன்றி மக்கா!
நன்றி பாலாஜி! செஞ்சுருவோம்..
நன்றி ஸ்டார்ஜன்! உம்மை விடவா வேறு அடையாளம் வேணும், அன்பிற்கு!
நன்றி சரவனா! எல்லாத்துக்கும் நீர்தானே காரணர்!
உண்மையில், ரொம்ப சந்தோசமாய் இருந்துச்சு காமு. பார்க்கும் போது பேசி தீர்ப்போம். நன்றி மக்கா!
அதானே, ராஸ்கல்ஸ்! நன்றி ஹேமா! :-)
டாய்ய்ய்ய்...ரௌடி மணிஜி, நன்றி ராஸ்கல்! :-)
நன்றிடா சக்தி பயலே!
நன்றி கதிர்! ஹலோ, ஹலோ..கதிர்தானே? :-)
நன்றி வித்யா! ஒரு வித்யா வந்தா, ஒரு வித்யா(விதூஸ்) வரக்காணோம். பார்த்தா 'டூ' ன்னு சொல்லிருங்க. :-)
இந்த ராகவனை என்னடா பண்ணலாம் நேசன் மக்கா? இல்லையா?.. நன்றிடா பயலே!
சுல்தான்ஜி, நன்றி!
ஆனா ரூனா, நன்றி ஓய்!
வாங்க அப்துல் மாலிக். மிக்க நன்றி!
ஸ்டார்ஜன், :-)
நன்றி குமார்ஜி!
மகனே, நன்றி! (முடியுமுன்னு நினைக்கிறீங்க?) :-)
நன்றி, அக்காவை கூட்டி வந்த தங்கை, ப்ரியா!
மகன் ரோஸ்விக், பார்க்கும் போது பகிர்ந்துட்டா போச்சு.நன்றி!
மோகன்ஜி, மிக்க சந்தோசம். நன்றி!
'பின்னூட்ட ராகவன்' தான் அவர் பட்டப் பெயர் மோகன்ஜி! :-)
ரொம்ப நன்றி ரவி! சகோதரி கீதா நல்லா எழுதுறாங்க. வாழ்த்துகளை சொல்லுங்கள்.
ஐயோ, என்ன ரசிகை? ரொம்ப கஷ்டமாய் இருந்தது. நம் ப்ளாக்கர்ஸ் இருவர்களுக்கு இதே பிரச்சினை படித்த நினைவு இருக்கு. நம் மக்களிடம் உதவி கேட்கலாமே ரசிகை. என் தளத்திலோ, நேசன் தளத்திலோ. தேவை எனில் பின்னூட்டுங்க மக்கா.
வச்சுக்கிட்டா போச்சு ஸ்ரீ குட்டி. நன்றி!
நன்றி கா.ப! சிவகங்கையேதான். சந்தோசம்.
தோழர், எவ்வளவு காலமாச்சு, இப்படி நீங்க பேசி! வானுக்கும் பூமிக்குமான அம் மாமரத்தில், ஒரு கோப்பை பிசின் இருக்கு மக்கா, நமக்கென! பச்சக் என ஒட்டும் பிசின். நன்றி என் கும்க்கி!
Post a Comment