அப்பாவை தத்தெடுத்த மகன்கள்
கமலேஷ் மற்றும் ஸ்ரீதர்தான் அந்த மகன்கள். அந்த அப்பா அடியேன்தான்.
இதுதான் நிகழும் என அருதியிடாத தருணங்கள்தான் எவ்வளவு அற்புதமானவை! அப்படி, எவ்வளவு அற்புதங்கள் வலை உலகம் வந்த பிறகு. d.r. அசோக் என நினைவு, முதன் முதலாக சித்தப்பு என்று அழைத்தது. அப்புறம் பூராம் வரிசையாக அண்ணா, அண்ணே, மாம்ஸ், சித்தப்பூஸ்தான். ஏன், சாரும் கூட உண்டு. விளக்கமாருக்கு பட்டுக் குஞ்சம் போல.
வீட்டில் மின்சாரம் போய்விடும். விளக்கு பொருத்தவென தீக்குச்சி உரசுகிற மனுஷி / மகளின் முகத்தை புதிதாக பார்ப்பது உண்டு. "அட, நம்ம பக்கிகள்தானா இது?" என்று மிதக்க எது காரணமாகிறது? இருளா? குறைந்த ஒளியா? இரண்டுமேவா?
ஊரில், காலத்தை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு திரிந்தவனை, சவுதியில் கொண்டு வந்து அடைத்தது வயிறுகள் சார்ந்த வாழ்வு. மின்சாரம் போனது போலான இருள். "அட, நம்ம பக்கிகள்தானா இது?" என அவ்வப்போது தீக்குச்சி உரசி முகம் காட்டுகிறார்கள் கருவேல நிழல் பெற்ற மக்கள்..
அண்ணா, அண்ணே, சித்தப்பு, மாம்ஸ், தோழர், சார், எல்லாம் கூட சரிதான். அப்பா என்பவன் எங்கிருந்து குதிக்கிறான் இதற்குள்? இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாய் என்னையும் பெற்ற என் கருவேல நிழலே?
சரி. கமலேஷ் ஸ்ரீதரை பார்ப்போம்.
ஓரிரு மெயில் செய்து, அழை எண் பெற்று, முதல் விளிப்பிலேயே அப்பா என்றான் கமலேஷ். குலுங்கினேன். 29 வயதுக்காரனான ஒருவன் 45 வயதுக் காரனான ஒருவனை அப்பா என்கிறான். வயசெல்லாம் zoom out ஆகி பச்சை வாசனையுடன் மகனே என மனசில் ஏந்துகிறான் அப்பன் காரனும்.
போக, மனசும் அடி வயிறும் சுண்டியது. பிரசவ காலங்களில் சுண்டுமாமே பெண்களுக்கு. அப்படி. இன்பத்தில் சுரந்தால்தான் என்ன? கண்களில் சுரந்துவிட்டால் அதன் பெயர் கண்ணீர்தானே எப்பவும்.
சந்திப்பதாக பேசிக் கொண்டோம். பேசிக்கொண்டே கிளம்பிக் கொண்டிருந்திருப்போம் போல. எல்லாம் வேகு வேகுன்னு கூடி வந்தது. எனக்கும் கமலேஷிற்குமான தூரம் சற்றேறக்குறைய 200 கிலோ மீட்டர்கள். றெக்கையடிப்பிற்குள் மடங்குமா கிலோ மீட்டர்கள்? கண் மூடி திறப்பதற்குள் எதிரில் நின்றார்கள் கமலேஷும் ஸ்ரீதரும். இங்கு யார் ஸ்ரீதர் என வருகிறது இல்லையா? எனக்கும் அதேதான்.
"அப்பா, கிளம்பிட்டோம்" என்று கமலேஷ் அழைத்த போதுதான், கூட ஒருவர் வருகிறார் போல என தட்டியது. "சரி..வாங்கடா" என்ற என்னால் வழி சொல்லத் தெரியல. இந்த ஒன்பது வருடமாக எனக்கு என் முதலாளி அரண்மனை தெரியும். சம்பளம் அன்று அல்ராஜி பேங்க் தெரியும். மதினா ஹோட்டல் தெரியும். தோசை தெரியும். மீண்டும் அரண்மனை வரத் தெரியும். குதிரை வண்டியில் பொருந்திய, குதிரையின் கண்களில் பொருத்திய, தகரத்தின் பெயர் குடும்பம் எனலாம், இங்கு. கழுதையாக கூட பிறந்து தொலைத்திருக்கலாம்தான். பொதி சுமந்தாலும் பார்வையை மறைக்காத கழுதையாக. சரி, பிறப்பென்ன நம் கையிலா இருக்கிறது? அறை நண்பர் குமார் சேட்டா உதவினார் அவர்களுக்கு.
ஆச்சா? எதிரில் நின்றார்களா?
டோசரி டவர் வாசலில் சிரித்துக் கொண்டே எனை நோக்கி வந்து கொண்டிருந்தனர் இருவர். இந்த இருவரில் யார் கமலேஷ்? தடக், தடக் தடக்,தடக்... தடக்,தடக்...தடக்,தடக்,. பறவையாக இருந்து, குதிரைக்கு மாறி, கழுதையாகி விரும்பி, புகை வண்டியாகவும் மாறிக் கொண்டிருந்தேன்.
தோராயமாக "கமலேஷ்" என கை பற்றினேன் ஸ்ரீதரை.
"நான் ஸ்ரீதர்ப்பா. இது கமலேஷ்" என்றான் ஸ்ரீதர். இருவரிடமும் அப்படி ஒரு ரகசிய சிரிப்பு. அதுசரி! ஸ்ரீதருக்கும் அப்பாவா? மீண்டுமொருமுறை சுண்டி அடங்கியது அடிவயிறு. என்னங்கடா நினைச்சுக் கிட்டு இருக்கீங்க பயல்களா?
எனக்கும் கமலேஷிற்கும் என்னவோ இருக்கு. ஸ்ரீதர்க்கும் எனக்கும் என்ன? ஏன் இந்த ராஸ்க்களும் அப்பா என்கிறான்? அறை நண்பனான கமேலேஷை நண்பனுக்கும் மேலாக வைத்திருப்பான் போல ஸ்ரீதர். அவன் இவனாகவும், இவன் அவனாகவும் மாறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பங்கிற்கும்.
பேசிக் கொண்டே ஸ்ரீதர் காரில் ஏறி ஆலமரம் வந்தோம். "கோடிப் பழங்களில் எதை வேணுமானாலும் கொத்திக் கோயேன் பறவை" என்கிற ஆலமரம். அல்லது கோல்டன் ஜூஸ் கார்னர்.
என்னென்னவோ பேசி தீர்த்துக் கொண்டிருந்தோம் மக்கா.
ரொம்ப நேரமாக தூக்கி வைத்திருந்த இந்த அப்பா பாரத்தை இளக்க விரும்பி, பேச்சின் ஊடாகவே, சிகரெட் பாக்கெட்டை இருவரிடமும் நீட்டினேன். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மீண்டும் ரகசியமாக சிரித்துக் கொண்டார்கள்.
" நீ அப்பாட்ட பேசிட்டே இரு. தம் அடிக்கனும்ன்னு தோணுறப்போ, ந்தா வர்றேன்ப்பான்னு போவேன். நா வந்த பிறகு நீ போய்ட்டு வான்னு சொல்லி வச்சிருந்தான்ப்பா கமலேஷ். நீங்க சிகரெட் பாக்கெட்டை நீட்டுறீங்க" என்று வெடித்து சிரித்தான் ஸ்ரீதர். "இருக்குப்பா" என்றான். பற்ற வைத்துக் கொண்டோம். விரும்பியது போலவே அப்பா பாரமும் இளக தொடங்கியது.
மகன்களை பார்த்த குஷியில் மகளையும் தேட வேண்டிய தேவை வந்தது எனக்கு. அத்தேவையை ஏற்படுத்தினார்கள் இம்மகன்கள். "என்னடா வாங்கிட்டு போறது அப்பாவுக்குன்னு கேட்டுகிட்டே வந்தான்ப்பா கமலேஷ். அப்பாட்டயே கேட்டு வாங்கிக்கலாம்ன்னு கூட்டிட்டு வந்தேன்" என்றான் ஸ்ரீதர், ஒரு கட்டத்தில்.
"ஐயோ. இதுவே தாங்க முடியாமல் வருகிறது. இவ்வளவு செலவு செய்து பார்க்கணுமுன்னு வர்றீங்களே. இது போதாதா?" என்றாலும் விடவில்லை.
"என்னப்பா இது. தங்கச்சிக்கு கல்யாணம் வருதுல்ல. அண்ணன்களா நாங்க எதுனா செய்ய வேணாமா. எங்க தங்கச்சிப்பா. உங்கட்ட என்ன கேக்குறது. நீ ஏண்டா இவர்ட்ட போய் இதை சொல்ற" என்றான் கமலேஷ்.
சரி. தங்கச்சிட்டியே கேட்கலாமேன்னு மகாவை அழைத்தேன். ரிங் போய் எடுக்கும் போது கட்டாச்சு. அவள் மொபைல் அப்படி. பேட்டரிக்கு மூட் இருந்தால் மட்டுமே பேச அனுமதிக்கும். சிரித்து, இவன்களிடம் விபரம் சொல்லி, சார்ஜரில் போட்டுட்டு மிஸ்கால் பண்ணுவாள்" என்றேன்.
சற்று நேரத்தில் மகா மிஸ் கால் செய்தாள். மகன்களை அறிமுகம் செய்து போனை இவன்களிடமும் கொடுத்தேன். அடேங்கப்பா! தங்கச்சியை கொண்டாட தொடங்கி விட்டார்கள் இருவரும். பேசி, பேசி கரைத்து பார்த்திருப்பான்ங்க போல. அவளும் கரையல போல. "தங்கச்சி உங்கட்ட பேசணுமாம்ப்பா" என்று போனை என்னிடம் கொடுத்தார்கள்.
"என்னப்பா என்னை மாட்டி விட்டுட்டீங்க?" என்றாள். சிரித்து, "என்ன செய்ய சொல்ற? என்றேன் அவளிடம். அதேதான் உங்களிடமும் கேட்கிறேன், "என்ன செய்ய சொல்றீங்க மக்கா?"
என்னை அறையில் விடுவதாக கூட்டிட்டு போய், LULU மார்க்கட்டில் e-63 மொபைல் வாங்கினார்கள். 740 ரியால் என்ற நினைவு. சற்றேறக்குறைய பத்தாயிரம் ரூபாய் நம் காசிற்கு. "சிம்ப்ளா பாருங்கடா" என்றாலும் கேட்கல. தோளுக்கு வளர்ந்து விட்டால் நம் பேச்சையா கேட்கிரான்கள் மகன்கள்? கூடவே சிகரெட் வேறு குடிக்கிற மகன்கள்.
அறை வந்து மகளை அழைத்து, " சூப்பர் மொபைல்டா. என் சிம்மை கழட்டி அதில் போட்டிருக்கான்கள். உனக்கு கத்து தரனும்ல. அதுனால பழகிட்டு இருக்கேன்" என்றேன்.
"அதுலாம் நான் கத்துக்குவேன்ப்பா. நீங்க சிம்ம கழட்டி உங்க மொபைல்ல போட்டுக்குங்க. அண்ணன்கள் வாங்கி தந்ததாக்கும்" என்றாள்.
"சர்தான் தாயி" என்றேன். சிரித்தாள்.
இந்த மகன்களையும், மகள்களையும் தோளுக்கு வளர விடாமல் செய்டா கடவுள்.
***
இந்த வாரத்திற்கான நட்சத்திர பதிவர் வாய்ப்பிற்கு மிகுந்த நன்றி தமிழ்மணம்!
புரை ஏறும் மனிதர்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9
Sunday, August 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
83 comments:
பாலா சார்கிட்ட பேனா கேட்டப்பவே தெரிந்துவிட்டது:)
நட்சத்திர வாழ்த்துகள் பா.ரா அண்ணா!
முதல்முறையாக “me the first"!!
வாழ்த்துக்கள்!!! :-)
ஆஹா.... நட்சத்திர வாழ்த்துக்கள் மக்கா!
நட்சத்திர வாழ்த்துகள் அண்ணாச்சி :)
வழக்கம்போல் நெகிழ்ச்சியான பகிர்வு!
றெக்கையடிப்பிற்குள் மடங்குமா கிலோ மீட்டர்கள்? நெகிழ்வான வரி.. இந்த ஒரு வரி போதுமய்யா
எதற்கு நாங்கள் ரஷ்ய, பிரெஞ்சு இலக்கியங்கள் தேடி நேரத்தை வீண் அடிக்க வேண்டும்.
உங்கள் நட்பு வட்டம், உற்றார் உறவினர் வட்டம் பெரிதாக வாழ்த்துக்கள்
நட்சத்திர நல்வாழ்த்துகள் பா.ரா
நட்சத்திர வாழ்த்துகள் பா.ரா
நட்சத்திர வாழ்த்துகள் பா.ரா
நட்சத்திர வாழ்த்துகள் பா.ரா
சிம்மை கழட்டிட்டீங்களா :)
வாழ்த்துக்கள் அப்பா :)
வாழ்த்துக்கள்
நல்ல பசியோட சாப்பிடப் போனா பரிமாரின அழகுல வயிறு ரொம்பிப் போகுமே. அப்படியிருக்கு. சொந்தக்காரங்கன்னு ஒன்னு உண்டா என்ன? எல்லாம் சொந்தம்தான். பகையாளி மட்டுமே நம்மிலிருந்து உருவாகிறான். வாழ்த்துகள் பா.ரா.
நட்சித்திர வாரத்திற்கு வாழ்த்துகள் சார்.
நட்சத்திர வாழ்த்துகள்...
பாலா சார் பதிவின் பின்னோட்டத்தில் பேனா கேட்டபோதே அட்வான்ஸ் வாழ்த்துக்களை சொல்லி விட்டேன்.... இப்போது இன்னொருமுறை...
நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள் அண்ணா.
வாழ்த்துக்கள் சார் தமிழ்மண நட்சத்திரத்துக்கு...
வாழ்த்துக்கள்
கலக்குங்கப்பு....வாழ்த்துக்கள்
/மிதக்க எது காரணமாகிறது? இருளா? குறைந்த ஒளியா? இரண்டுமேவா?/
Super.
வாழ்த்துகள் பா.ரா.
நட்சத்திர வாழ்த்துகள்.அண்ணா.
நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள் மக்கா
யப்பே!!! யப்பப்பே!!!
மழை பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி- இந்தப்
பதிவ படிச்சு என் கண்ணெல்லாம் வெண்ணி...
வாழ்த்துக்கள் பா.ரா...ப்பா ..... ;)
இயல்பான நடை!! நட்சத்திர வாழ்த்துக்கள்.
எத்தனை மகன்கள் வந்தாலும் பங்காளி நான் மட்டும்தான் பங்கு !!!
ஈரம் கசியும் பாசம் உமக்கு
தமிழ்மண வாழ்த்துக்கள்
விஜய்
வாழ்த்துக்கள் சித்தப்ஸ் :)
நட்சத்திர வாழ்த்துக்கள்.
இந்த உலகம் பொய், உறவுகள் அனைத்தும் பொருளாதாரம் சார்ந்தவை என்று நினைத்துக்கொண்டிருப்போம். இருந்தாற்போல யாராவது வந்து மனதில் அன்பெனும் பூவை எறிந்துவிட்டுப் போய்க்கொண்டேயிருப்பார்கள். இன்று உங்கள் பதிவு பூவாயிருந்தது. நன்றி.
நெகிழ்வுடன் ... வாழ்த்துகள் அண்ணே
வாழ்த்துக்கள் பா.ரா.
அஹா... நல்ல நல்ல படைப்பாளிகள் தேர்ந்தெடுத்து நட்சத்திரமாக்கும் தமிழ்மணத்திற்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். வாழ்த்துக்கள் சார்... மகிழ்ச்சியும்...
நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள் அண்ணே....
'ஊரில், காலத்தை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு திரிந்தவனை, சவுதியில் கொண்டு வந்து அடைத்தது வயிறுகள் சார்ந்த வாழ்வு. மின்சாரம் போனது போலான இருள். "அட, நம்ம பக்கிகள்தானா இது?" என அவ்வப்போது தீக்குச்சி உரசி முகம் காட்டுகிறார்கள் கருவேல நிழல் பெற்ற மக்கள் "இது ரொம்ப பிடிச்சிருந்தது . இன்னும் நிறைய நல்ல அருமையான உறவுகள் வரும் தம்பிக்கு, மனசு நிறைவாய் இருந்தது. இன்னும் இன்னும். அன்புடன் அக்கா
வாழ்த்துகள் பா.ரா.
போன வாரம் சென்ற விதம் தெரியவில்லை. பறந்தது,. இந்த வாரத்தை இனிமையாக்க வந்திருக்கிறது உங்கள் எழுத்து. மிகவும் நெகிழ்வாக உணர்கிறேன் உங்கள் யதார்த்தமான வார்த்தைகளால். மனம் நிறைந்த வாழ்த்துகள். நல்லாரைக் காணக் கொடுக்கும் தமிழ்மணத்துக்கு நன்றி.
வாழ்த்துககள் சார்
செளவுதியில் தமிழ் குரல் கேட்டாலே பரவசம்,
அதுவும் தத்தப்பன் பிள்ளைகள் சந்திப்பெனில் திருவிழாதான்.
மகிழ்ச்சி பதிவின் வழியாய் "நேர்முக வர்ணனையாய்" எங்களிடமும் பதிந்து விட்டது.
நட்சத்திர வாழ்த்துக்கள் பா ரா.
நட்சித்திர வாழ்த்துகள் சார்...
வாழ்த்துக்கள். அழகான பகிர்வு
//ராம்ஜி_யாஹூ said...
எதற்கு நாங்கள் ரஷ்ய, பிரெஞ்சு இலக்கியங்கள் தேடி நேரத்தை வீண் அடிக்க வேண்டும்.
வானம்பாடிகள் said...
சொந்தக்காரங்கன்னு ஒன்னு உண்டா என்ன? எல்லாம் சொந்தம்தான். பகையாளி மட்டுமே நம்மிலிருந்து உருவாகிறான்.
தமிழ்நதி said...
இந்த உலகம் பொய், உறவுகள் அனைத்தும் பொருளாதாரம் சார்ந்தவை என்று நினைத்துக்கொண்டிருப்போம். இருந்தாற்போல யாராவது வந்து மனதில் அன்பெனும் பூவை எறிந்துவிட்டுப் போய்க்கொண்டேயிருப்பார்கள். இன்று உங்கள் பதிவு பூவாயிருந்தது. நன்றி.//
நன்றி
வழிமொழிகிறேன்.
முதல்ல வாழ்த்துக்கள் அப்பா,
நான் உங்கள அப்பான்னு கூப்பிடப்ப இருந்த சந்தோசத்த விட நீங்க எங்கள மகன்களா ஏத்துகிட்டுத பார்க்கும் போது இன்னும் சந்தோசமா இருக்கு.
ஸ்ரீதர்,
அண்ணே எப்டி ணே இருக்கீங்க, கமலேஷ் உங்களை அப்பா னு கூப்டறத நான் பாத்திருக்கன், கமலை ரொம்ப நாளைக்கு முன்னாடியிருந்தே படிச்சிட்டு இருக்கேன், இன்னும் நிறய பேர் உங்கள உறவு சொல்லி அழைக்கறதை பாக்கறப்ப லாம் இப்டியொரு மனசும் எழுத்தும் வாய்ச்சிருக்கு இந்த மனுஷனுக்கு னு நினச்சி சந்தோஷப்பட்டுப்பேன். கண்ணு பொங்கி பொங்கி வருது படிக்கறப்ப, புரை மட்டுமா ஏறுது. யாருக்கு கிடைக்கும் அப்பா கையால சிகரெட் வாங்கி குடிக்கற சுகம் ம், எனக்கும் அண்ணன் கையால சிகரெட் வாங்கி ஒரே குச்சியில பத்தி வச்சி குடிக்கனும்
//தோளுக்கு வளர்ந்து விட்டால் நம் பேச்சையா கேட்கிரான்கள் மகன்கள்? கூடவே சிகரெட் வேறு குடிக்கிற மகன்கள்.//
இதுக்கு தான் அப்பா கூட சிகரெட் பிடிக்கக்கூடாதுன்றது, பாரு கமலேஷ் சைக்கிள் கேப்ல கம்ப்ளெயின் பண்றாரு அண்ணன் :))))))
நட்சத்திர வாழ்த்துகள் பா.ரா சார்!!
நட்சத்திர வாழ்த்துகள் மாம்ஸ் :) அடி பின்னுங்க.. நெகிழ்ந்து போச்சு மனசு :) இப்படியொரு மனுசன எழுத்து மூலம் அறிமுக படுத்தி வைச்சதுக்கு கடவுளுக்கும், காலத்துக்கும் நன்றி சொலிக்கிறேன் :)...
நட்சத்திர வாழ்த்துகள் ;-)
நட்சத்திர வாழ்த்துகள்
வாழ்த்துககள் சார்
பூங்கொத்துடன் நட்சத்திர வாழ்த்துகள்!
நட்சத்திர வாழ்த்துகள் பா.ரா அண்ணா!
:) :) :) :)
வாழ்த்துக்கள்!!! :-)
நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணா!
//" நீ அப்பாட்ட பேசிட்டே இரு. தம் அடிக்கனும்ன்னு தோணுறப்போ, ந்தா வர்றேன்ப்பான்னு போவேன். நா வந்த பிறகு நீ போய்ட்டு வான்னு சொல்லி வச்சிருந்தான்ப்பா கமலேஷ். நீங்க சிகரெட் பாக்கெட்டை நீட்டுறீங்க" என்று வெடித்து சிரித்தான் ஸ்ரீதர். "இருக்குப்பா" என்றான். பற்ற வைத்துக் கொண்டோம். விரும்பியது போலவே அப்பா பாரமும் இளக தொடங்கியது..//
மாமா,
அந்த நொடி செம கிக்கா இருந்திருக்கும் போல.
நட்சத்திர வாழ்த்துக்கள் பா.ரா.
தலைவரே... நட்சத்திர வாழ்த்துக்கள்..
அன்பு ஏதோ ஒரு பிளவில், எதிர்பாரா தருணத்தில் சுரந்து கொண்டேயிருக்கின்றது. அனுபவிக்கத்தான் வரம் வேண்டும்
ம்ம்ம்....
கூடவே நெகிழ்ச்சியான நட்சத்திர வாழ்த்துகள் பா.ரா
உங்க கூட இருந்த ஒவ்வொரு மைக்ரோ செகண்டும் இன்னும் பசுமையா இருக்குப்பா..
லுலுல உங்க கை பிடிச்சி நடந்தப்ப என்னோட வயசு 12 என்பதாய்தான் ஞாபகம்..
அப்பாவை மாதிரியே சில மனிதர்களை சந்தித்திருக்கிறேன்.
ஆனால் அப்பாவையே சந்திப்பேன் என்பதை எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் வாய்த்திருக்கிறது எனக்கு.
நன்றி காலத்திற்கும், கவிதைக்கும்...
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள் அப்பா..
@யாத்ரா :
உண்மைதாங்க யாத்ரா...நேரம் பார்த்து சிகரட் பிடிக்காதட பயலேன்னு, அப்பாவா ஒரு குட்டு குட்டுறாங்க பார்த்தீங்களா.இனிமே உசாரா இருக்கணும்..
நட்சத்திர வாழ்த்துகள் ..........நாளும் அன்பில் தொடர்வோம்
நட்சத்திர பா ராவிற்கு இந்த அகல் விளக்கின் வாழ்த்துக்கள்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
கோடி நன்றிகள் , இப்படி ஒரு பதிவு உலகத்தை அறிமுகம் செய்த அந்த புண்ணியவதிக்கு. மனம் நெகிழ்ந்து இருக்கிறேன் அன்பின் பரிணாமத்தைப் பார்த்து
ஜொலிக்கும் நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள் பாரா.அண்ணா :-))
நட்சத்திர வாழ்த்துகள் அண்ணே!
வாழ்த்துக்கள். வித்தியாசமான ஆனால் சுவைபடும் உறவு. இது மாதிரி உறவுகள் தான் நாடு விட்டு வந்தவர்களுக்கு ஒரு பிடிப்பு இல்லையா!
வாழ்த்துக்கள்.
நட்சத்திரமாய் ஒளிர வாழ்த்துகள் அண்ணா.
கமலேஷை பற்றி எங்களுக்கு அழகாக வர்ணித்துள்ளீர்கள்.. உங்க புரையில நாங்களும் இருக்கிறோம் என்று நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு பாராண்ணே...
தமிழ்மண நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள்.. கலக்குங்க பாராண்ணே..
நட்சத்திர வாழ்த்துகள் பா.ரா அண்ணா.
இந்த வாரம் முழுக்க ஒரு கலக்கு கலக்குங்க.
ஆரம்பமே அதிரடியா இருக்கு.
கமலேஷுக்கும் ஸ்ரீதருக்கும் வாழ்த்துகள்.
ஆலமரத்தடியில் நிற்கும் உணர்வு. மேலும் தழைக்கட்டும்!
நட்சத்திர வாழ்த்துக்கள்!
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்..:)
ரவிச்சந்திரா, :-) நன்றி இண்ட்டு மூணு!
நன்றி சித்ரா!
மாது, ரொம்ப நன்றி!
நன்றி ஆயில்ஸ்!
ஐயோ, ராம்ஜி. நன்றி!
கோவி சார், நன்றி!
டி.வி.ஆர் சார் நன்றி!
ரொம்ப நன்றி நண்டு!
இல்ல. சொல்லிராதீங்க. நன்றி முத்துலெட்சுமி!
ராதை மகள்ஸ், நன்றி!
ஜோதிஜி, நன்றி!
CA, என்னங்க ஆளையே காணோம்? நன்றி!
ரொம்ப நன்றி பாலாண்ணா!
நன்றி வித்யா!
யோகேஷ், ரொம்ப நன்றி! ;-)
நன்றிடா அம்பிகா!
இர்ஷாத், ரொம்ப நன்றி!
நன்றிடா சக்தி!
மணிஜி, நன்றி!
நன்றி செ.ஜெ!
நன்றி நர்சிம்!
A.M. நாத்து, நன்றி!
நன்றி taaru!
நன்றி எஸ்.கே.பி!
நன்றி பங்காளி!
நன்றி மகன்ஸ்!
தமிழ்நதி, நலமா? நன்றி!
வேல்கண்ணா, நன்றி!
vijayaraaj j.p நன்றி மக்கா!
பாலாசி, சந்தோசம். நன்றியும்!
வினோ மகன்ஸ்! :-)
மஹிக்கா, ரொம்ப நன்றி!
ரொம்ப நன்றி வல்லி சிம்ஹன்!
நன்றி வேலு.ஜி!
வாசன்ஜி, ஆம்! மிக்க நன்றி!
நன்றி சகா!
நன்றி செந்தில்!
நன்றிங்க கீதா! மொத ஆள் யாருன்னு பார்த்தீங்களா? ;-)
ராஜசுந்தரராஜன் அண்ணே, ரொம்ப நன்றி! உங்களை பார்க்கப் போகிற நாள் நெருங்கிக் கிட்டே இருக்குண்ணே.
ஸ்ரீஸ், சரிடா பயலே.
நல்லாருக்கேன் செந்தில்! நலமா? ஆமா, செந்தி, அனியாயம் பண்ரான்கள். :-) நன்றி மக்கா!
நன்றி செந்தில் வேலன்!
நன்றி ஆர்.கே. மாப்சு! பிச்சுப் புடுவேன் பிச்சு.
சிவராமன், நலமா? நன்றி மக்கா!
நசர், நன்றி!
நன்றி அன்பரசன்!
வணக்கம் டீச்சர். நன்றியும்!
குமார்ஸ், நன்றி மக்கா!
இந்த வார நட்சத்திரம் மகிழ்வாக உள்ளது.
இந்தப்பதிவு நெகிழ்வாக உள்ளது.
ஒவ்வொரு நாளும் எத்தனையோ நபர்களை சந்திக்கிறோம் அவர்களில் எத்தனைப்பேரை உரிமைகொண்டாடுகிறோம்.
உரிமை உள்ளவர்களிடம் மட்டுமே.
உரிமையுடன் இன்னொறு மகன்.
எழுத்தை ஆளுகிறீர்கள். வாழ்க!
நட்சத்திர வாழ்த்துகள் பா.ரா!!!
அன்பு பா ராவிற்க்கு
வலைதிடம் பதிவுகளும் நினைவுகளும் பரிமாறிக்கொண்டது போக இன்று உறவுக்குள்ளும் ஊண்றி விட்டது
உறவுகள் சுகம் இருக்கையில் அருமை புரியாத “taken for granted" சுகம். அது புரிதலில் அன்பும் அந்த புரிதல் விளங்குதலில் ஒரு இன்ம்புரியா இன்பமும் நானறிவேன், அதுவே என்னை சிங்கையிலிருந்து சென்னை இடம் பெயற காரணமாக இருந்தது பத்து வருடங்களுக்கு பின்.
இந்த புரிதலும் இன்பமும் சுகமும் உங்கள் அனுபத்திலும் எழுத்திலும் எனக்கு அளித்தீர்கள்
நெகிழ்த்திவிட்டீர்கள்..
நன்றி பா ரா , நன்றி கமலேஷ் ஸ்ரீதர்
ஜேகே
"பிள்ளைகளை தத்தெடுப்பார்கள்... இந்த வலையுலகமே உங்களை தந்தையாய் தத்தெடுத்திருக்கிறதோ எனத் தோன்றும்." என்று பல மாதங்களுக்கு முன்பே உங்களிடம் ஆரூடம் சொன்னேன் :-)
அப்பொழுதே சொன்னதுபோல் - " உங்களின் மக்கா, மகள்ஸ், மகன்ஸ் என்று அனைவரையும் பிள்ளை களாய் பார்க்கும் மனம் எங்களுக்கும் வாய்க்க வேண்டும். "
ப்ரியமுடன்,
--பாலா
நட்சத்திர வாழ்த்துக்கள்.
நட்சத்திர வாழ்த்துக்கள் பா.ரா. ஸார்!
நட்சத்திர வாழ்த்துக்கள் அன்பரே.
வாழ்த்துகள்
தங்கள் நெகிழ்வும் பிரியமும் ததும்பி வழிந்து எங்களையும் ஈரமாக்குகிறது. என்றென்றும் வலையுலகில் நட்சத்திரமாய் ஜொலித்திருக்க எல்லாம் வல்ல இறையருள் நிலைக்கட்டும்!
மிக்க நன்றி ஜெயசீலன்!
வசந்த், நன்றி தம்பு!
சத்ரியன் மாப்ள, மிக்க நன்றி! :-))
நன்றிங்க கோமதி அரசு!
சேகர், நலமா? மிக்க நன்றி!
ரொம்ப நன்றி கதிர்! :-)
கமலேஷ், மிக்க மகிழ்ச்சிடா குட்டி. @யாத்ரா, :-))
நன்றி ஜெரி! அவசியம்.
அகல்விளக்கு, ஆர்.வி. எஸ்! மிக்க நன்றி!
நாய்க்குட்டி மனசு, ரொம்ப ரொம்ப நன்றி!
நன்றிடா சாரல்!
சென்ஷி மிக்க நன்றி மக்கா!
ஆமாம் சேது. மிக்க நன்றி!
ஹேமா, மிக்க நன்றிடா!
நன்றி இரட்டையர்களான ஸ்டார்ஜன் & அக்பர்!
மிக்க நன்றி வேல்ஜி!
நன்றி, மணிநரேன்!
நன்றி என் இன்னொரு மகன்ஸ்! :-)
அப்பாதுரை, ரொம்ப நன்றி!
நன்றி மதார்!
ஜேகே, நலமா? மற்ற மூவரும் கூட? மிக்க நன்றி!
பாலா, உங்க வாய் முகூர்த்தம்தான்! மிக்க நன்றி பாலா!
கேபிள்ஜி! மிக்க நன்றி!
தீபா, ரொம்ப நன்றி!
குணா சார், நன்றி!
மிக்க நன்றி திகழ்!
ரொம்ப நன்றி நிலா மகள்!
அன்பின் பாரா
நெகிழ்வின் உச்சம்
வலை உலகில் எல்லோரும் அய்யா என அழைக்க - ஒருவன் என்னையும் அப்பா என அழைத்தான் - நெகிழ்ந்தேன் - ம்ம்ம்ம்ம்
வலை உலகில் அப்பா அண்னா சித்தப்பா மக்கா சார் தம்பி என வலையுலக உறுப்பினர்களால் அன்புடன் அழைக்கப்படும் பாரா - கொடுத்து வைத்தவரையா நீர்.
மகன்கள் - அதுவும் சிகரெட் குடிக்கும் மகன்கள் - மகாவிடம் அன்பாய்ப் பேசும் மகன்கள் - அலைபேசி வாங்கித்தரும் மகன்கள் - வாழ்க வாழ்க ! வலையுலகில் நட்பு உறவாவது பாராட்டத் தக்கது பாரா.
கருவேல மரநிழல் பெற்ற மக்கள் - அருமை அருமை
நட்சத்திரப் பதிவர் நல்வாழ்த்துகள் பாரா
நட்புடன் சீனா
சீனா சார், மிக நெகிழ்வு. மிக்க நன்றி சார்!
SANTHOSHAMAAYIRUKKU............
NIRAIYA VAAZHTHUKAL RAJARAM SIR:)
Post a Comment