Tuesday, January 4, 2011
பால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும் - ஒன்று
(Picture by cc licence, Thanks Ryemang)
ஷண்முக பவன் வாசலில்தான
அவனைப் பார்த்தேன்.
அடையாளமே தெரியவில்லையாம் நான்.
என்னை நான் இல்லாவிட்டால்
என்ன செய்வது என்று
யோசனையாய் இருந்ததாம்.
நல்லவேளை நான் நான்தானாம்.
முன்போல் இல்லையாம் ஊரும்.
ருக்மணி மில்ஸ் வந்ததில் இருந்தே
ஊர் மினுக்கிக் கொண்டு விட்டதாம்.
டேவிட் வாத்தியார் செத்துப் போனாராம்.
இவனும் நானும் வைத்த வில்வங்கன்று
மரமாகி விட்டதாம்.
எல்லாம் பேசி மீள்கையில் சொன்னான்
நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேனாம்
ஒரேயடியாய்.
இவன் இல்லையாம் ஸ்ரீதர்
இவன் தம்பியாம்.
- '94- பிப்ரவரி கணையாழி.
***
பி.கு.
இந்தப் பயணத்தில், நண்பர் G.ரவி, கணையாழியில் வந்த உங்கள் கவிதை ஒன்றும், ஜூனியர் விகடனில் வந்த 'காதல் படிக்கட்டுகள்' கட்டுரை ஒன்றும் என் கோப்பில் இருக்கு ராஜா" என்று கொடுத்து உதவினார்...நான்தான் எல்லாவற்றையும் தொலைக்கிறேன் போல. நண்பர்கள் முதற்கொண்டு! நண்பர்கள் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறார்கள் . எனை முதற்கொண்டு! நன்றி ரவி!
**
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
அருமையான கவிதை.
'பி.கு' உங்களைப் போல்
பிகு பண்ணாமல் நீங்களாய்.
அருமை பா.ரா.
சித்தப்பா......நம்ம ஊரு சண்முக பவனா?
முதல் வரியில் மூழ்கி கடைசி வரியில் எழுந்தேன்............!
// இவன் தம்பியாம் //
அருமை :)
செம திருப்பம்....
அன்பு பாரா,
வழக்கம் போல நல்ல கவிதை... அதே வாசத்துடன்...
இவனும் நானும் வைத்த வில்வங்கன்று ம்ரமாகிவிட்டதாம்...
அப்புறம், இவன் இல்லையாம் ஸ்ரீதர், இவன் தம்பியாம் என்பதில் எங்கோ நெருடுகிறது...
அன்புடன்
ராகவன்
வழக்கம் போல அருமை.
நினைவுக்கு தப்பிய நட்பின் நீட்சி .. அண்ணனாகவும் ...
அருமையான கவிதை..
இவன் இல்லையாம் ஸ்ரீதர்
இவன் தம்பியாம்//
திரும்பி பார்க்கும் நினைவுகளில்
சற்றே தடுமாற்றம் இயல்புதான்
மக்கா...
நீண்ட இடைவெளிக்கு பிறகு
.........சங்கர்.
//நான்தான் எல்லாவற்றையும் தொலைக்கிறேன் போல. நண்பர்கள் முதற்கொண்டு! நண்பர்கள் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறார்கள் . எனை முதற்கொண்டு! //
எல்லாரிடமும் இது உண்டு.
1994-ல் கவிதை அருமை.
அருமைன்னு சொல்லித்தான் தெரியனுமாயென்ன... பின்னுறீங்க..
இனிமேல் என்ன...
அடிச்சு நவுத்துங்க தம்பி
சாரி
சித்தப்ஸ் ;)
அண்ணே எப்படிண்ணே இப்படில்லாம்.
அண்ணே கவிதை அருமை!
பி.கு மிக அருமையாய்!
மனதை நெருடுகிறது மயில் இறகு போல்
அண்ணே
//நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேனாம்
ஒரேயடியாய்.
இவன் இல்லையாம் ஸ்ரீதர்
இவன் தம்பியாம்.//
நான் கள் எப்போதுமே இப்படித்தான்! மறந்து தொலைத்து விடுகிறோம் நினைவுகளை!
பகீர் கவிதை பா.ரா.
ஸ்ரீதரும் தொலைந்துபோய்விட்டதாகவே என் வாசிப்பில் உணர்ந்தேன்.
அவன் நம்மை நாம்தானென்றுணர்ந்து நமக்கு அவனில்லாமல் போகும் தருணங்கள் துயரம் நிரம்பியவை-மழையற்ற கோடை நாட்களின் வெக்கை போல.
ஆமாண்ணே பாலாசி சொல்றதை தான் நானும் சொல்றேன்..
ம்ம்
அசத்தல். காதல் படிக்கட்டுகளையும் பதிவிடுங்கள்ண்ணே.
கணையாழி காணாத எனக்கு, கணையாழிக் கவிதை தந்தமைக்கு மகிழ்ச்சி. 94லேயே பின்னிருக்கீங்க :-)
நன்றிங்க சகா!
வாசன்ஜி, மிக்க நன்றி!
நன்றி செ.ஜெ!
ஆமாம் தேவா! வேறு என்ன தெரியும் நமக்கு? நன்றி மகன்ஸ்!
நன்றி ராதா கிருஷ்ணன்!
வினோ பயலே, நன்றி!
நன்றி ராகவன்!
மருமகள்ஸ், நலமா? எவ்வளவு நாளாச்சு! நன்றி மக்கா!
நன்றி செந்தில்!
நன்றி அஹமது இர்ஷாத்!
அடேங்கப்பா, சங்கர்! நலமா? ரொம்ப காலமாச்சே மக்கா! நன்றி சங்கர்!
நன்றி குமார் மகன்ஸ்!
நன்றி பாலாசி!
சரிங்ணா! சாரி..அசோக் ரேஸ்கல்! நன்றி மகன்ஸ்! :-)
நன்றி இரா மாப்ஸ்! என்ன ஓய் வெறும் சிரிப்போடு போயிட்டீரு?
நன்றி அக்பர்! இருந்தாலும் ஓவர் பாஸ்! :-)
நன்றி கதிர்ஜி!
நன்றி வேல்கண்ணா!
ஆம்தான் ஜனா! :-) நன்றி மக்கா!
நன்றி சுந்தர்ஜி! கவிதைகள் போலவே உங்கள் பின்னூட்டங்களும் சுவராசியங்கள் நிரம்பியது சுந்தர்ஜி!
நன்றி தமிழ்! நலமா?சக்தி மூலமாக உங்கள் குரல் கேட்டதும் ரொம்ப சந்தோசம்!
நன்றி பாலாண்ணா!
கண்டிப்பா பதிவிடுகிறேன் சரவனா! நன்றி மக்கா!
நன்றி உழவரே!
கணையாழி... ம்ம் அண்ணா ஹாட்ஸ் ஆப் 2 யூ
ராமசந்திரனா கவிதை போல இருக்கு
நன்றிடா லாவண்யா!
Post a Comment