Wednesday, February 2, 2011
இதழ் இதழாக சேரும் பூ
(Picture by cc licence, Thanks Daniel Paquet)
வணக்கம் நான் க.பாலாசி,
எப்டி இருக்கீங்க, நான் நலம். ஒண்ணுமில்ல என்னோட மேனேசர் வேலுஜி கணையாழி வச்சிருந்தார்.. அதுல உங்க கவிதை ஒண்ணு தட்டுபட்டது. அதான்.. கிட்டத்தட்ட 16 வருஷம் ஆகுது.. நெனக்கறப்பவே சந்தோசமா இருக்கும்ல .. சோ.. உங்களுக்காக.
***
தூங்குகிற மகனை
அருகே கிடத்தி படுப்பது வழக்கம்.
நான் - மகன் - இவள்
என்று துவங்கும் தூக்கம்.
சிறுநீர் கழிக்க எழும்போது
நான்-இவள்-மகன் என்றிருக்கும்.
பிறகு இவளுக்காக போக
எழுகையில்..
நானும் இவளும் போக
மகன் கிடப்பான்
கதவோர இடுக்கில்.
எப்ப, எப்படி நகர்வானோ?
இல்லை,
அவன் அப்படியே கிடக்க
நானும் இவளும் தான்
நகர்கிறோமோ என்னவோ?
பிரக்ஞையின்றி நகர்வது
நன்றாகத்தான் இருக்கிறது.
நானானாலும் இவளானாலும்
மகனானாலும்.
- பா.ராஜாராம்
(கணையாழி - ஜுன் 1995)
***
இப்படியாக ஒரு இதழும் வந்து சேர்ந்தது. இக்கவிதைக்கு '95- ல் என்ன தலைப்பு வைத்தேன் என நினைவில் இல்லை. 2011-ல் இந்த தலைப்பு வைக்க தோன்றியது. இதழ் இதழாக சேர்ந்தால்தானே பூ! கவிதைக்கு தலைப்பை விட இச்சூழலுக்கு தலைப்பு என எடுத்துக் கொள்கிறேன்..
தேடித் தர நண்பர்கள் இருக்கிறார்கள் என இனி எதையும் தைரியமாக தொலைக்கலாம்தான்- என்னை உட்பட! சற்றேறக்குறைய ஜீபூம்பாவிலும் இதையேதான் பேசியிருக்கிறேனோ?
பாலாசி, வேலுஜி, நன்றி!
***
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
க.பாலாசிக்கு, முதலில் நன்றி சொல்லணும். அருமையான கவிதையை, நாங்களும் வாசிக்க வகை செய்தாரே.
அருமை பா.ரா.
உங்களோட இந்த கவிதை ஏற்கனவே படிச்சிருக்கேனே! புத்தகத்திலோ?
பல வருடம் கழித்து பிரசுரம் ஆன புத்தகம் கைக்கு வந்ததும் ரொம்ப ஆனந்தமாய் இருந்திருக்கும்
"புத்தகத்திலோ?" என்றது உங்கள் கவிதை புத்தகத்தை. கணையாழி அல்ல :))
கிட்டத்தட்ட இதே தொணியில் ஒரு கவிதை உங்கள் பதிவில் படித்தேனோ..?
அப்புறம் உங்களிடமிருந்து ஒரு முக்கியமான விஷயம் எதிர்பார்த்திட்டிருக்கேன்.. அது என்னான்னு உங்களுக்கு தெரியும்.:))
நன்றி க.பாலாசி.
அருமையான கவிதை.
அருமை.
நன்றி பாலாஜிக்கும்
பாராட்டுக்கள் உங்களுக்கும்
என் வலைப்பக்கம் கொஞ்சம் வாங்க சார்.
\\தேடித் தர நண்பர்கள் இருக்கிறார்கள் என இனி எதையும் தைரியமாக தொலைக்கலாம்தான்- // நல்ல தைரியம்:)
இப்படி எழுத எங்க அண்ணாவால் மட்டுமே முடியும் இதழால் இணைந்த வரிகள்..
வைரம் வைரமா கண்டுபிடிச்சு கொடுக்கிறாங்க..
அடடடா அருமையான கவிதை.....
அருமை!
@மோகன் குமார்
//உங்களோட இந்த கவிதை ஏற்கனவே படிச்சிருக்கேனே! புத்தகத்திலோ?//
வாசித்திருக்கலாம் மோகன்ஜி. கூகுல் பஸ்ஸில் பகிர்ந்ததாக பாலாசி மெயில் செய்திருந்தார். நன்றி மக்கா!
அண்ணா...சொல்ற விஷயத்தை எப்பிடித்தான் இடக்கு முடக்கா எழுதிக் கவிதையா ஆக்குவீங்களோ !
பா.ரா. காலம் தாண்டிப் படிக்கையிலும் புதிதாகவே தோன்றுகிறது. தேடிக் கொடுத்தவருக்கு நன்றி.
ரொம்ப ரொம்ப பிடித்திருந்த கவிதையிது... மாமா, அத்தை, மருமகன்... ஒரு ட்ரெங்குப்பெட்டியிலிருக்கும் குடும்ப புகைப்படம்போல் அற்புதம் இந்த படைப்பு. அதுதான் மாமா.
:)
அட்டகாசம்... தமிழின் முக்கிய கவிதைகளில் இதுவும் ஒன்று...
பாலாசிக்கு என் சல்யூட் ..
உண்மையா சொல்லனும்னா, அப்ப இருந்த காரம், இப்ப கொறஞ்சு போச்சுன்னுதான் தோணுது...
சித்தப்பு இந்த எதார்த்தம் தான் வலையுலகிலும் உங்கள் பின்னால் ஒரு கூட்டம் சொந்தங்களாக.
பாலாசி @ சார் நன்றி.
உண்மையா சொல்லனும்னா, அப்ப இருந்த காரம், இப்ப கொறஞ்சு போச்சுன்னுதான் தோணுது//
நல்ல அவதானிப்பு தலைவரே.(சொல்ல நினைச்சது)
நண்பன் பாலாசிக்கு எனது நன்றிகளும்..
ஜீபூம்பாவில் பேசியிருந்த அதே விடயம் எனினும் இது தரும் அனுபவமும் அருமையே.. இத்தனை ஆண்டுகளாகியும் மாறாத உங்கள் அழகிய மொழி அற்புதம் அண்ணே.
கணையாழி... 1995 யிலேயே ம்ம்ம்
வாழ்த்துகள் அண்ணா
அருமையான கவிதை :-)
நன்றி சித்ரா!
நன்றி சமுத்ரா!
மோகன், நன்றி!
நன்றி கேபிள்ஜி! ஒரே மூச்சில் வாசித்து விட்டேன் தல. இரண்டு கதைகள் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, என்னிடம் போய் விமர்சனம்(சிலாகிக்க மட்டுமே தெரிந்தவன்) எதிர்பார்ப்பது ஓவர்ஜி! really, i'm unfit தல. பாத்திரம் அறியுங்கள். :-)
நன்றி சிவகுமாரன்! கண்டிப்பா வர்றேன் மக்கா.
நன்றி முத்துலெட்சுமி! :-)
நன்றிடா தமிழ்!
சுசி மக்கா, நன்றி!
நன்றி மனோ!
நன்றி கதிர்!
நன்றிடா ஹேமா!
கோநா, மிக்க நன்றி!
மாப்ள பாலாசி, மீண்டும் நன்றி!
happy journey மாப்ஸ்!
ரொம்ப நன்றி செந்தில்!
மகனே ராஜவம்சம், நன்றியப்பு!
நேசா நன்றி மக்கா!
நன்றி சரவணா!
நன்றிடா லாவன்ஸ்!
நன்றி நவனி!
Post a Comment