Monday, August 8, 2011

சரித்திரம்


(Picture by cc licence, Thanks Ahmed Al.Badawy)

ல்லாவற்றையும் இழக்க
ஒரு மனசு வேணும்.

ழங்கவும்.

ம்மனசிடம் ஒரு குரல் உண்டு
கரகரவென்கிற உப்புக் குரல்.

கேட்க விருப்பமா?

ழுந்து நடங்கள்.

ளரவமற்ற பாலத்தை
தேர்வு செய்யவும்.

டர் நிசியெனில் நல்லது.

புகைவண்டி நேரங்களை
குறித்து வைத்திருப்பீர்கள் எனில்
உத்தமம்.

பாலத்தில் ஏறி நின்று
புகை வண்டி வருகிறதா எனப் பார்க்கவும்.
போதும்.

வ்வும் முன்பு கேட்டீர்களா?

ங்கள் தலையை வாங்கிய தாதிப் பெண்
வெளியில் ஓடிச் சொன்னாள்
நீங்கள் ஆண் எனவோ பெண் எனவோ.

குதூகலமாக
கரகரவென்கிற உப்புக் குரலில்.



25 comments:

க ரா said...

மாம்ஸ் இது மீள்கவிதையா... :)

ரிஷபன் said...

இல்லை ஸார்.. இது உங்க கவிதை இல்லை.. உள்ளீடாக வருவது..

சிநேகிதன் அக்பர் said...

கேட்டேன் குரலை!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எழுந்து நடங்கள். //
உங்களை சுமக்கும் தாயின் வலி குறைய .

aotspr said...

நல்ல கவிதை....
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை.

கல்யாணி சுரேஷ் said...

நல்லா இருக்கு அண்ணா

சுசி said...

அருமைங்க :))

கே. பி. ஜனா... said...

கேட்க முடிகிறது குரலை! கவிதை அபாரம்!

ஓலை said...

Arumai.

Touching. Touching.

rajasundararajan said...

கவிஞர்கள் பெரிதாகத் திட்டமிட்டு எழுதுவதில்லை. அவர்கள்பாட்டுக்கு எழுதுகிறார்கள். வாசகர்கள்தான் அதைப் பண்ணிப்பண்ணி வாசிக்கிறார்கள்.

ஆனால் எல்லா எழுத்தையும் அப்படிப் பண்ணிப்பண்ணி வாசித்துவிட முடியாது. பொம்மை பிடிப்பதற்கு வாகான களிமண் (கவனியுங்கள், ஞானம் அல்ல; களிமண்) எழுத்தில் இருக்க வேண்டும்.

தற்கொலைக்கு முன்னுகிற ஒரு தருணத்தைப் பற்றிய கவிதை இது.

அதற்கு இசைவாகவே, //எல்லாவற்றையும் இழக்க
ஒரு மனசு வேணும்// என்று, அது என்னவோ நேர்முறையான ஒரு விசயம் போல, தொடங்குகிறது கவிதை.

//வழங்கவும்// என்பது //இழக்க// என்பதின் எதிர்மறை என்றாலும், இங்கே, இதுவும் நேர்முறைப் பொருளின் தொனியிலேயே நிற்கிறது (காரணம், இரண்டு சொல்லாடல்களும் 'ஈதல்' என்னும் அறச்செயல் மனப்படிவில் சமன்படுவதால்).

//கரகரவென்ற உப்புக் குரல்// இதில், 'உப்பு' என்னும் சொல்லிடுகையின் பொருத்தமும் அருமையும்... என்ன சொல்ல!

||நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்|| (மத். 5:13) என்பது இயேசுவின் வார்த்தை. அதன் பொருள், ‘உலகவழக்கில் எளிமையும் பயனும் உள்ளவர்களாக நாம் இருக்கவேண்டும்’ என்பது. இப்போது பொருத்திப் பாருங்கள்:

//தாதிப் பெண்
வெளியில் ஓடிச் சொன்னாள்,
நீங்கள் ஆண் எனவோ பெண் எனவோ -

குதூகலமாக
கரகரவென்கிற உப்புக் குரலில்.//

'அடர்நிசி' இருண்மையைத் துணைக்கோடல். ஆனால், 'பாலம்' இரு கரைகளையும் இணைக்கிற ஒரு கட்டுமானம்; 'புகைவண்டி' அதில் இயலும் செயல்பாடு.

களிமண் இருக்கிறதா, இல்லையா?

rajasundararajan said...

ஆ! விடுபட்டுவிட்டது:

'ஈதல்', 'ஈனுதல்' இவை 'ஈ' என்னும் வேர்ச்சொற் பிறந்து, 'இழத்தல்' 'வழங்கல்' என்றும் பொருள் தருவன ஆம்.

'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்பதில் எதிர்மறையாக இயலும் 'தலைவாங்கிய', //உங்கள் தலையை வாங்கிய தாதிப்பெண்// என்பதில் நேர்முறையாக மாறி இயல்வதைக் கவனியுங்கள்!

கவிஞர் என்னமா வெளையாடியிருக்காரு! (ச்சும்மா, விளையாட்டுக்கு.)

இரசிகை said...

nadathunga nadathunga....

நேசமித்ரன் said...

ரா.சு அண்ணன் பிரம்மாதம்- பிரம்மிப்பு

நிலாமகள் said...

எங்க‌ள் புரித‌லின் குதூக‌லிப்பை அதிக‌ப்ப‌டுத்தியிருக்கும் திரு. ராஜ‌சுந்த‌ர ராஜ‌ன் ஐயா அவ‌ர்க‌ளுக்கும், இத்த‌னை க‌ருத்துக்க‌ளை பொதித்து வைத்த‌ க‌விதை த‌ந்த‌ த‌ங்க‌ளுக்கும் சிர‌ம் தாழ்ந்த‌ வ‌ந்த‌ன‌ம்! இல‌க்கிய‌ நுக‌ர்வு எப்ப‌டியிருக்க‌ வேண்டுமென‌க் க‌ற்க‌ முடிகிற‌து த‌ங்க‌ளிருவ‌ரிட‌மும்.

அண்ணாதுரை சிவசாமி said...

ரொம்ப நாள் கழித்து ராஜாவின் கவிதையை படித்து
நெஞ்சம் நெகிழ்ந்து ...பின்னூட்டம் போடலாம் என்றால்
அங்கே ராஜசுந்தரராஜன் சிலம்பாட்டம் ஆடி இருக்கிறார்.
கடைசிவரி "குதூகலமாக கரகரவென்கிற உப்புக் குரலில்"
தாதியின் குரூரமான குரலை கையில் இருக்கும் தலை கேட்க முடிந்திருந்தால்
இந்த மாதிரி ஜந்துக்கள் இருக்கும் உலகத்தை விட்டு போக முடிவு செய்தது
சரிதான் என்று சொல்லிக்கொண்டு ஆத்ம சாந்தி அடைந்திருக்கும்.

அண்ணாதுரை சிவசாமி said...

"சிங்கம் என்றால் என் தந்தைதான்...செல்லம் என்றால்
என் தந்தைதான்..."என்ற பாட்டைக் கேட்கும் போது ஏனோ
எனக்கு பாலு அண்ணன் ஞாபகம்தான் வரும்.பிற்காலத்தில்
சசி இதைச் சொல்ல வேண்டும்.
என் ராஜாவுக்காகவே பாரதியின் இந்தக் கவிதை..

சென்றது மீளாது.

---------------------------

சென்றதினி மீளாது மூடரே

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையென்னும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

தீமையெல்லாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

(புரிந்து கொள்வாய் என்று பெரிதும் நம்பும் உன் சித்தப்பா)

அண்ணாதுரை சிவசாமி said...

ஆற்று நீரின் ஓட்டத்திற்கேற்ப
உருண்டுகொண்டேயிருக்கிறேன்.
குதித்தும் தாவியும்
நொருங்கியும் கரைந்துமாய்
சிக்கிக்கொண்டாலும்
தடையறுத்த ஆறுதல்
எவருக்குமில்லை.

உருண்டுகொண்டேயிருப்பதால்
அறுபட்ட சில நிகழ்வுகள்
மாறி மாறி...
இருள் ஒளி கடக்கும் முகடுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள்.

ஓ.....
பாறையில் வேர் விட்ட
சிறுவிதை.
குட்டி மீன்கள்
பெரிய மீன்களாய்.
படர்ந்த பாசி
அடியில் ஊடுருவும் விஞ்ஞானம்.

என்றாலும் தட்டித் தடக்கி
உருண்டுகொண்டே....யிருக்கிறேன்
ஒற்றைக்கல்லாய்!!!

Ashok D said...

ரொம்ப எசவா இருந்தது மனசுக்கு சித்தப்ஸ் THANKS

special thanks to R.S Sir

பாலத்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன் :)

அண்ணாதுரை சிவசாமி said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அசோக்....
உங்களுக்காவது...நல்ல தாதி கிடைக்கட்டும்!
(ஓசோவின் புத்தகங்களெல்லாம் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.)

அண்ணாதுரை சிவசாமி said...

மேலே உள்ளதில் ஒரு திருத்தம்....'படிப்பதால்' என்ற வார்த்தை விடு பட்டிருக்கிறது.இப்படி இருந்திருக்கவேண்டும்....
(ஓசோவின் புத்தகங்களெல்லாம் படிப்பதால் இதை சீரியஸாக
எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.)

Kannan said...

அண்ணன் பா.ராஜாராம் ரமதான் வேலைகளில் பிசியாக இருப்பதாகவும், தானே வந்து தனித்தனியாக நன்றி சொல்ல விரும்புவதாகவும் என்னிடம் சொன்னான். எனக்கு கவிதைகளை மாற்ற வேண்டியது இருப்பதால் தங்கள் அனைவரின் தகவலுக்காக வைக்கிறேன். எல்லோருக்கும் என் நன்றியும் கூட!

-கண்ணன்

அண்ணாதுரை சிவசாமி said...

எனது 3 விமர்சனத்தில் உள்ள கவிதை 'ஹேமாவுடையது"
ஏன் பெயர் போடவில்லை என்பது ராஜாவுக்குத் தெரியும்.

Anonymous said...

முதல்,அருமை பாரா
இரண்டாவது ராசு அண்ணனால் புரிந்தபின் அருமை.
ரிஷபன் சொல்லியது போல உங்க கவிதை இல்லன்னு பார்த்தேன்.
அப்புறம்தான் தெரிஞ்சது படைப்பாளிக்கு ஏது பிரேம் ?பாராவோட பிரேம் இதுதான்னு
நினச்சிகிட்டது சின்ன உலகம்.

பா.ராஜாராம் said...

என் நெருங்கிய நண்பனொருவன் சமீபமாக, தீக்குளித்து இறந்து போனான். நெருங்கிய உறவு ஒன்று தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டாள். இதுவும் சமீபமாகவே. இந்த பாதிப்புகள் ஏற்படுத்திய அசைவே இக்கவிதை.


'நீங்கள் பிறக்கும் போது, உங்களை சார்ந்தவர்களுக்கு நீங்கள் ஏற்படுத்திய அசைவுகளையும் தெரிஞ்சுக்கோங்கடா பாவிகளா' இதை மட்டும் இந்தக் கவிதையில் சொல்லிட்டோம்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.ரா.சு அண்ணன் பின்னூட்டம் பார்த்து அரண்டு போயிட்டேன். உண்மையில் வாசிப்பவர்களின் சக்திக்கு தகுந்தது போல கவிதை விரிவடையும் என்பதை அண்ணன் உணர்த்தித் தந்தார் / தருகிறார்! அவருக்கு வழக்கம் போல தன்யனாகிறேன்.


ப்ரியங்கள் நிறைந்த என் சித்தப்பா மற்றும் நண்பர்களுக்கு அன்பும் நன்றியும்!