பழம்பதி மாமாவிற்கு (அப்பாவின் சகோதரி கணவர்) 74 வயது. ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பணத்திலிருந்து ஒரு நகை அடகுக்கடை வைத்தார். கடந்த 14 வருடங்களாக அந்தக் கடையே வாழ்வாக வாழ்ந்து வந்தார்.
நெத்தி நிறைய திருநூறு பூசி, செல்லமா ஒரு சந்தன தீற்றல். பத்தாததுக்கு நடுவாந்திரமா ஒரு குங்குமப்பொட்டு வைத்து ஜெகஜ்ஜோதியா m- 80 யில் கடைக்கு கிளம்பிப்போன மாமாவை முந்தைய பயணத்தில் பார்த்து வந்திருந்தேன்.
நான்கு குழந்தைகள் அவருக்கு. எல்லோரையும் செட்டில் செய்து பேரன் பேத்திகள் விரல்களைப் பிடித்தபடி மாமா நடந்து வரும் அழகு ஒரு அழகுதான்.நம் வாணியங்குடி வீட்டிற்கு எதிர்த்தாப்லதான் மாமா வீடு.
முந்தைய பயணத்தில் ஒரு நாளை இங்கு குறிக்க விருப்பமாக இருக்கிறது. அப்பா வாழ்ந்த வீடு என அம்மா மட்டும் வாணியங்குடி வீட்டிலேயே தங்கி விட்டார்கள். ஆகையால் அடிக்கடி அம்மாவைப் பார்க்க ஓடி விடுவேன். (மறக்காமல் ஒரு குவாட்டர் நெப்போலியனையும் தட்டிக்கொண்டு போவது உண்டு)
அப்படித்தான் அன்னைக்கும் போயிருந்தேன். அப்படி இப்படின்னு அம்மாட்டப் பேசிட்டே இருந்துட்டு பூ போட்ட கூடைச் சேரைத் தூக்கினேன். அதை தூக்கினேனா அம்மாவிற்கு நான் எங்க போவேன்னு தெரியும்ன்னு நினைக்கிறேன். 'ஏண்டா மத்தியானத்துலையே' ன்னு கேட்டாங்க. 'சும்மா அப்படி காத்தாட ஒக்காந்திருக்கேன்ம்மா' ன்னுட்டு என் ஃபேவரைட் பிளேஸ்க்கு. வந்துட்டேன்.
நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ வாணியங்குடி வீட்டில் வலதும் இடதுமாக இரண்டு வேம்புகள் தலையை உரசிக் கொண்டு சும்மா கொள்ளுன்னு இருக்கும். ரெண்டும் சேர்ந்த நிழலில்தான் நாங்க நீஞ்சுறது வைக்கிறது. நாங்கன்னா நான், பெரியப்பா சித்தப்பா பசங்க, அத்தை மாமா பசங்க. இப்படி.
இப்ப எல்லோரும் அங்கிட்டு இங்கிட்டுமா கிடக்கிறோம். இப்பவும் இடது வேம்பு மட்டும் நகலாமல் அங்கனேயேதான் நிக்குது. வலது அவுட். வலது ஞாபகமாக அப்பா இறந்த பயணத்தில் ஒரு வாதா மரம் வைத்து வந்திருக்கிறேன். அதையும் நான் வலது வேம்புன்னுதான் அழைப்பேன்னு வைங்களேன்.
இப்ப என் ஃபேவரைட் பிளேஸ் உங்களால் உணர முடிகிறதுதானே. யெஸ்! இடது வேம்பு. அது சிந்தும் பால்ய நிழல். அம்மாவை பார்த்தது மாதிரியும் ஆச்சு. பால்ய நிழலில் ஒரு குவாட்டரை சாத்தியது மாதிரியும் ஆச்சு. இல்லையா?
கூடைச் சேர், சொம்புத் தண்ணி, டம்ளர் எல்லாம் செட்டாகி நிழலில் அமரும் போதுதான் கவனித்தேன் மாமா m-80 அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது.
'மதியச்சாப்பாட்டிற்கு வந்திருப்பாரா இருக்கும். பசிக்க மட்டும் இல்லைன்னா கடைய விட்டுட்டு வரமாட்டாரே மாமா' ன்னு நினைத்தபடியும் அம்மா வந்துராமன்னு நினைத்தபடியும் நெப்போலியனைத் தட்டித் திறந்தேன்.
கத்திரிக்காய் வதக்கியதையும், கொத்தவரங்காய் பொரியலையும் வெஞ்சனப் போணியில் வைத்துக் கொண்டு டால்ஃபின் போல நடந்து வந்தார்கள் அம்மா. ( அம்மாவிற்கு கால்வலி ) திறந்ததை மூடி மறைத்தபடி 'ஏம்மா?'என்றேன். 'சரி டக்குன்னு வாடா' ன்னுட்டு போய்ட்டாங்க.
ஒருபோதும் என் நெப்போலியனைப் பார்க்க அம்மாவை அனுமதித்ததில்லை. ஆனால் அம்மாவின் நெப்போலியனை அம்மாவிற்கு தெரியும் போல.
இந்த மனுஷன் வண்டி வேற நிக்குதே ( நம்ம வீட்டைத் தாண்டித்தான் இவர் கடைக்கு போற ரோடை பிடிக்கணும்) கெளம்பட்டும் ன்னு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்த்தேன். கதைக்காவல. வர்றது வரட்டும்ன்னு லைட்டா கொஞ்சம் போட்டுட்டு தெம்பா எந்திரிச்சு நின்னேன்.
வெள்ளையும் சள்ளையுமா மாமா வெளியில் வந்து m-80 சீட்டை ரெண்டு தட்டு தட்டிட்டு உக்காந்தார். கெளம்புடா கெளம்புடான்னு புத்தி சொல்லியது. கெளம்பி இடது வேம்பின் அடியில் நின்ற போர் பைப்பை ஸ்டார்ட் பண்ணி ஹோஸ் மூலமாக இளம் பிள்ளைகளாக நின்ற தென்னைகளுக்கும், கறிவேப்பிலை மரங்களுக்கும் (செடிதானே மரம்) நீர்பாய்ச்சத் தொடங்கினேன்.
டுபு டுபு ன்னு க்ராஸ் பண்ணிய மாமா சற்று நின்று, 'மாப்ள மத்யானத்துல தண்ணி அடிக்காதீங்க. செடிக பட்டுப் போகும்' என்றார்.
'சரிங்க மாமா' என்றாலும் மாமா யாரைச் சொல்றாருன்னு குழம்பி வந்தது.
அப்பாவுடன் சேர்ந்து தண்ணி அடித்திருக்கிறேன். அம்மாவிற்கு தெரியும். இனி யாருக்கு நான் தண்ணி அடிக்கிற விஷயத்தில் பயப்படணும் அல்லது யோசிக்கணும்?
யோசனை என்பது நெற்றியில் பூசியிருக்கும் திருநூறு அன்ட் ஸோ அன்ட் ஸோ மூலமா வருது.? நடத்தையில் வருவதுதானே. மாமா அப்படி நடந்து காட்டினார். நான் மட்டுமில்லை. ஊரே அப்படித்தான் மாமாவைக் கண்டதும் எந்திருச்சு நிக்கும்.
ஒரு அக்கு இல்லை. ஒரு பிக்கு இல்லைன்னு வாழற ஆளுக்கு ஊர் கொடுக்கிற மரியாதையாக இருக்கும்ன்னு நினைக்கிறேன். நானும் அந்த ஊரிலிருந்து கிளம்பி வந்தவன்தானே. எனக்கு மட்டும் என்ன கொம்பா இருக்கு?
இன்னைக்குப் பிறந்து இன்னைக்கே செத்துப் போகும் ஒரு ஈசலுக்குக் கூட தொந்திரவு நினைக்கக் கூடாதுன்னு வாழ்ந்து காட்டுகிற மனிதர்களின் மேல் எப்பவும் எனக்கு ஒரு பயம் பிடித்துக் கொள்ளும். பிறகு அது மரியாதையாகவும் பூத்து ஆடும். அந்த வரிசையில் பழம்பதி மாமாவை முதலாவதாக அடுக்குவேன்.
#
இந்த பழம்பதி மாமா எல்லாத்தையும் தொலைத்திருந்திருக்கிறார். இது எனக்கு சமீபகாகத்தான் தெரியவந்தது. கனடாவில் நிக்கிற தம்பி கண்ணன் போன் பண்ணி,
' டே நம்ம பழம்பதி மாமா கடைய கொள்ளயடிச்சிட்டாய்ங்ளாண்டா உனக்குத் தெரியுமா?' ன்னு கேட்டான்.
'என்னடா சொல்ற..எப்படா..ஏண்டா' ன்னு என்னென்னவோ கேட்டேன்.
'அது நடந்து ஆறேழு மாசம் ஆச்சு போல. நேத்து காளியப்பன் அண்ணன்ட்ட பேசும்போதுதான் சொன்னாரு. என்னண்ணே ஆறேழு மாசங்கிறீங்க. டெய்லிதானே போன் பண்றேன். ஒண்ணுமே சொல்லலையேண்ணேன்னு கேட்டதுக்கு என்னத்தடா சொல்லச்சொல்ற? நீங்க அங்கிட்டு கெடக்குறீங்க. எல்லாத்தையும் எதுக்கு கஷ்ட்டப் படுத்தணும்ன்னு விட்டதுதான். ஆயிரம் பவுனுக்கிட்ட இருக்குமாம். இப்ப ரொம்ப நெருக்கடியா இருக்குடா மாமாவுக்கு. என்ன வகையில் அவருக்கு ஆறுதல் சொல்றதுன்னு தெரியலன்னு சொல்றாரு. போலீஸ் ஸ்டேசனுக்கும் வீட்டுக்குமா அலைஞ்சுக்கிட்டு இருக்காராம். மிச்ச நேரம்லாம் நம்ம பிள்ளையார் கோயில்லயே கைலியக் கட்டிக்கிட்டு ஒரு துண்டையும் போத்திக்கிட்டு கெடக்குறாராம்டா. டெய்லி நூறு பேருக்கு மேல பதில் சொல்லிக்கிட்டு இருக்காராம். மாமாவுக்குலாம் இப்படி ஒரு சோதனை வரலாமாடா. பாவமா இருக்குடா மாமாவ நினைக்கும்போது. சிவாதேன் கெடந்து உருண்டுக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கான் போல. ( சிவா, மாமாவின் கடைசி மகன். சிவகங்கை ICICI வங்கியில் அப்ரேசராக இருக்கிறான். மூத்தவன் திருமுருகன். என் செட்டு. ஜெயவிலாசில் கண்டக்டராக இருக்கிறான். ரெண்டாவது மணிமேகலை. வாணியங்குடியிலேயே வாக்கப்பட்டிருக்கிறது. மூணாவது செல்வம். சென்னையில் ஏதோ ப்ரைவேட் கம்பனியில் இருக்கிறான்)
கண்ணன் பேசப் பேச ஐயோ.. ஐயோ.. ஐயோ.. என சொல்லிக்கொண்டிருந்தேன். ஐயோ'விற்கென தனியாக கண்கள் கலங்கும்போல. கண்களை மட்டும் கலக்கி விட்டுட்டு நம்ம வேலைகளை பாக்கப் போறது போலதானே இருக்கிறது நம்ம வேலைகளும்
ஆச்சா.
வேலையோடு வேலையாக சிவாவை அழைத்தேன். ( மாமாவை கூப்பிடறதுக்கு அவ்வளவு சக்தி இல்லை)
'அத்தான்' என்றான்
'இப்பதாண்டா தெரியும் சிவா. கண்ணன் சொன்னான்டா' ன்னு தொடங்கி கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வைக்கும் போது,'சிவா உனக்கு ஒரு கதை சொல்லவா. அப்பா எனக்கு சொன்னதுடா' என்றேன்.
'சொல்லுங்க அத்தான்'
'ஒரு மன்னர் அல்லது சக்ரவர்த்தின்னு நெனைக்கிறேண்டா. நளனோ என்னவோ. அப்பா பேரோட சொல்லியிருந்தாரு இப்ப ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. அவருக்கு கெட்டகாலம் தொடங்கியிருச்சாம். அதுனால ஒம்போது லெக்ஷ்மிக்களும் விடை பெற வந்திருக்காங்க. பார்ட்டி, சரிங்க போய்ட்டுவாங்க போய்ட்டுவாங்கன்னு ஒவ்வொரு லெக்ஷ்மிகளையும் உக்காந்து கொண்டே வழி அனுப்பி வைத்திருக்கிறார். கடைசியா தைரிய லக்ஷ்மி வந்தபோது எழுந்து நின்று கைகளை பிடித்துக் கொண்டு என்ன தாயீ நீங்களும் கெளம்புறீங்க. நீங்க ஒரு ஆளு மட்டும் நில்லுங்க. மத்த எட்டுப் பேர்களையும் திரும்பக் கொண்டு வர்றது என்னோட பொறுப்புன்னு சொன்னாராம். தைரியத்தை மட்டும் விட்டுறாத சிவா. சரியா. ' என்றேன்.
'சரிங்கத்தான்' என சிரித்தான். குரல் தழு தழுப்பாகவோ கரகரப்பாகவோ இருந்தது.
#
கம்ப்யூட்டர் பக்கம் வரமுடியாத வேலைகளில் இருந்தேன். வந்த போது தம்பி கண்ணனிடமிருந்து இப்படி ஒரு மெயில் வந்து கிடந்தது.
Dear annath, hope you are doing fine. I got a call from Siva (our palampathy mama son), and he was enquired that shall we publish a letter in our friends circle and ask for help such as advice or highligt this prob. until now nothing is progressing and police are grabing money when ever they visit police station
Mama is almost mad since the people who gave the gold troubling him to retrun their part of their gold. Can you please write up small note about mama,incident and the current situation and send back to me? I will show it to siva mapla, and may be we can share with our friends in the blog. even though, if we didnt receive any help, the news may spread and may get a help from some where.
Can you please do this favour and reply back at your leisure
thanks annath
#
சிவாவை அழைத்தேன். 'என்ன மாதிரி உதவிகள் வேணும்டா சிவா' என்று கேட்டதுக்கு,'போலீஸ் ஸ்டேசனில் ரொம்ப புவர் ரெஸ்பான்ஸ்த்தான். ஏழு மாசம் முடியப்போது. 1500 கஸ்டமர்கள்த்தான் அப்பாவோட முதலீடு உழைப்பு எல்லாத்தையும் விடுங்க. பப்ளிக் ப்ராபர்ட்டிய ஒழுங்கா நம்ம செட்டில் பண்ணனும்ல. கிடைச்சதைல்லாம் வச்சு உள்ளுக்குள்ளயே உருட்டிக் கொண்டிருந்திருப்பார் போல அப்பா. லாபத்தை பிரிச்சு இடங்கிடம் வாங்கிப் போட்டிருந்தாலும் சொத்துகளை வித்தடிச்சு கொஞ்சம் சந்திக்க முடியும். இது ஒண்ணுமே புரிய மாட்டேங்குது அத்தான். அப்பாவை இதிலிருந்து வெளியில் கொண்டுட்டு வரணும்ங்கிறது மட்டுமே தோணுது. கடைசி காலம் அத்தான். அவரை நிம்மதியா வச்சாப் போதும். அரசியல் லெவல்ல போலீஸ் உயரதிகாரிகள் லெவல்ல இந்த கேஸ் விஷயமாக பெர்சனல் இன்ட்ரெஸ்ட் எடுத்தால் நடக்கும்ன்னு தோணுதுத்தான்.
'சரி ஒண்ணு செய்யலாம் சிவா. விபரங்களை மெயில் செய். நான் கூகுள் ப்ளஸ்ன்னு ஒண்ணில் இருக்கிறேன். பெரிய உலகம் இது. அதில் அரசியல், பத்திரிக்கை, தொலைக்காட்சின்னு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த விஷயத்தை ஹைலைட் பண்ணப் பார்க்கலாம். ஆலோசனைகளை கேட்கலாம்' என சொன்னேன்.
#
இது என் மாமா கதை. இவருக்கு 1500 வாடிக்கையாளர்கள் எனில் அது 1500 குடும்பங்கள்தானே. என்ன தேவைகளுக்காக அவசர அவசரமாக இவரை அனுகியிருப்பார்கள். இந்த ஏழு மாதங்களில் எத்தனை குடும்பங்களின் சுப காரியங்கள் தள்ளிப் போயிற்றோ? மீட்க வரும்போது எப்பேர்ப்பட்ட மாமாவா இருந்தாலும் கைலியும் துண்டுமா பிள்ளையார் கோயிலில் கிடந்தால் பத்துமா?
இது மாப்ள சிவா கொடுத்த விபரங்கள்..
'எனது தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர். தற்போது அவர் 74 வயதை கடந்துவிட்டார் . ஸ்ரீ காமாட்சி கார்பரேசன் என்ற நகை அடகு கடையை சிவகங்கையில் கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வந்தார். கடந்த ஜனவரி 24 ந் தேதி கடையின் பூட்டு மற்றும் பாதுகாப்பு இயந்திரப் பெட்டகம் உடைக்கப் பெற்று வாடிக்கையாளர்களின் அடகு நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டன. நகைகளின் மொத்த எடை 6891.100 கிராம். அதாவது சுமார் 7 கிலோ ஆகும். இதன் மதிப்பு சுமார் 2. 00 கோடி. காவல்துறையில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் சுமார் 1500 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என் தகப்பனாரின் மேல் இருந்த நம்பிக்கையாலும் அவரது நேர்மையான செயலாலும் பொறுமை காத்து வந்த வாடிக்கையாளர்கள் மாதங்கள் பல கடந்துவிட்ட நிலையில் தற்போது தினமும் எனது தந்தையாரை சந்தித்து நகைகளை உடனடியாக மீட்டுத்தருமாறு நூற்றுக் கணக்கானோர் வற்புறுத்துகின்றனர். இதனால் எனது தகப்பனார் மிகவும் மனம் உடைந்த நிலையிலும் வயது முதிர்ந்த காரணத்தினாலும் இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீள்வது எப்படி என்பது புரியாமல் கடவுளையும் காவல் துறையையும் மட்டுமே முழுமையாக நம்பி நல்ல செய்தியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.'
#
மக்களே,
எனக்கும் ஒண்ணும் புரியலை. எனக்கு என் மாமா மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறார். எதையாவது நகட்டி மாமாவையும் கண்ணுக்கு தெரியாத 1500 குடும்பங்களையும் இதிலிருந்து விடுபட வைக்க முடிஞ்சுட்டா நான் எம்ஜியார்தான். வேறு வழியில்லாமல் உங்கட்ட கொண்டுட்டு வர்றேன். லேட்டஸ்ட்டா, போலீஸ் மெத்தனத்தை கண்டித்து வாடிக்கையாளர்கள் மற்றும் நம் ஊர்க்காரர்கள் பஸ் மறியலில் இறங்கியதாக கேள்விப்பட்டேன்.
அரசியலில், பத்திரிக்கையில், தொலைக்காட்சியில் இருக்கிற நண்பர்கள் இந்த விஷயத்தை ஃபிளாஷ் பண்ணினால், அழுத்தம் கூடி எங்கயோ இருக்கிற புரையோடிப் போயிருக்கிற சிவகங்கை போலீஸ் ஸ்டேசனின் பல் சக்கரங்கள் இயங்கலாம்.இயங்கி 1501 குடும்பங்கள் மூச்சு விட்டுக் கொள்ளலாம். அப்புறம் கடவுள் விட்ட வழி.
#
இது என் மொபைல் நம்பர் 00966502089705
மெயில் I.D rajaram.b.krishnan@gmail.com
சிவா மொபைல் நம்பர் 9865702140
17 comments:
Vanakkam Pa.Ra.
Nallavai seekkiram nadakkattum.
iyo...
gupeer nnu aakuthu..
5 maasam kazhichu paakkurome illa illa padikiromnu santhoshamaa vanthen sir....
:(
நல்லவர்களை கடவுள் சோதிப்பார்; ஆனால் கைவிடமாட்டார். மைத்துனர் சிவாவுக்கு சொன்ன கதையை மறக்க வேண்டாம். அரசியல் பத்திரிகை, தொலைக்காட்சி எந்த தொடர்புமற்றிருப்பினும் எங்களைப்போன்ற எளியோரின் பிரார்த்தனை தங்கள் மாமாவுக்காக...
பிராத்தனைகள், நிச்சயம் வழி பிறக்கும் :(
என்னால் செய்தியில் எதாவது கொண்டு வர முடியுமா என்று பார்த்து விட்டு சொல்கிறேன்.
நன்றி மக்கள்ஸ்.
சாய் ராம் சார், இதை எதிர்பார்த்துத்தான் போஸ்ட் பண்ணேன். ப்ளீஸ் ட்ரை பண்ணுங்க சார். ரொம்ப நன்றி சார்.
யோசிப்போம் மக்கா, திடீரென இதைப் படித்ததும்,
வாழ்வின் மீது, உண்மை, சத்தியம், காவியம்,
காப்பியம், கடவுள் போன்றவற்றின் மீதான
நம்பிக்கைதான் முதலில் தகர்கிறது.
நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் இதைப் பகிர்வோம்.
சரியான் நபர், சரியான நேரத்தில் கிடைப்பார்.
தேடுவோம், கிடைக்கும் ஒரு நல்ல தீர்வு மக்கா.
Why not send this info to Kumudam Reporter or Jr.Vikatan and these type of Investigation journalists?
வாசன்ஜி, ரொம்ப நன்றி. முயற்சியில்தான் இருக்கிறேன். பாக்கலாம் மக்கா.
சிரமத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலான ஒரு வார்த்தை எவ்வளவு பெரிய சப்போர்ட்! அதைத்தான் நான் மாப்ள சிவாவுக்கு செய்தேன். அதைத்தான் நீங்கள் எல்லோருமாக மாமாவிற்கு, சிவாவிற்கு, எனக்கு செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அப்புறம் பிரார்த்தனை. இந்த ஸ்ட்ரெந்த்தான் நடுத்தர வர்க்கத்தின் பலம். இல்லையா? நடக்கும் வாசன்ஜி, மக்கள்ஸ். நம்புவோம்..
ஆமா வாசன்ஜி, நீங்க ஏன் கூகுள்ப்ளஸ் பக்கம் வரக் கூடாது? அங்க செம்ம கலாட்டாவா இருக்கு. உங்களையும் சுந்தர்ஜியையும் பெர்சனாலா கூப்பிடணும்ன்னு ஒரு ஞாபகம்.
பின்னுட்டம் போடவில்லை என்பதால் படிக்கவில்லை என்றோ வரவில்லை என்று நினைத்து விட வேண்டாம் அண்ணே ... தொடந்து வருகிறேன் வாசிக்கிறேன் - வருவேன் வாசிப்பேன். நலமா அண்ணே ?
படித்ததும் மனசு வலிக்கிறது சித்தப்பா...
அவருக்கும் நிச்சயம் நல்லது நடக்கும்...
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Umar Sithappu
சவுதி அரெபிய நண்பர்கள் கவனத்திற்க்கு....கொஞ்சம் வேகமாக உதவவும்......ப்ளீஸ் ....ஷேர் பன்னுங்க ப்ளீஸ்
இந்தப் புகைப்படத்தில் உள்ள எனது சகோதரன் பெயர் முத்துராஜ் மாசிலாமணி . இவரது மனைவியின் பெயர் சந்திரா. இவர்களுக்கு தர்ம துரை வயது 15 என்கிற மகனும், மான்சி வயது 11 என்கின்ற மகளும் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் காரசேரி என்கின்ற ஊரில் வசித்து வருகின்றனர் . அவர் கடந்த 1 1/2 வருடங்களாக சவுதி அரேபியாவில் ரியாத் என்னும் இடத்தில் ஓட்டுனராக முஹம்மத் பின் க்ஹலிட் பின் முஹம்மத் அல் சபிஈ( MOHAMMED BIN KHALID BIN MOHAMMED AL SABIEE)என்பவரது வீட்டில் பணி புரிந்து வந்தார். கடந்த பெப்ரவரி மாதம் 9 ம் தேதியில் இருந்து இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் எந்த வித தொடர்பு இல்லாமல் இருந்தார். நாங்கள் எல்லாவிதமான முயற்சிகள் செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பத்து நாட்களுக்குப் பிறகு சவுதி அரேபியாவில் இருந்து ஒரு தகவல் வருகிறது , அவர் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டார் என்றும் அவரது உடல் அல் கொயா பொது மருத்துவமனையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் அவரது முதலாளி குடுமத்தினர் அனைவரும் இறந்துவிட்டதாக கூறுகின்றனர். மேலும் அவரது உடலை பார்த்து முத்துராஜ் தான் என்று உறுதியாக யாரும் கூறவில்லை, மேலும் சில தினங்களுக்கு முன் ஒரு தகவல் வந்துள்ளது எனது சகோதரன் இறக்கவில்லை என்றும் அவர் கோமா நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கடந்த திங்கட் கிழமை அன்று மனு ஒன்று வழங்கியுள்ளோம் . மேலும் சவுதி அரேபியாவில் எங்களுக்கு தெரிந்தவர் யாரும் இல்லாததால் எந்த வித தகவலும் பெற இயலாமல் இருக்கிறோம். ஆகவே நண்பர்களே, உங்களால் அல்லது உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக எனது சகோதரன் எங்கு எந்த நிலையில் உள்ளார் என்பதை விசாரித்து தகவல் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தயவு செய்து இந்த செய்தியை அனைவரும் பகிருங்கள்..........
Like · · Share · 24 minutes ago ·
பொது சனம் உங்களில் ஒருவன் and 43 others like this.
37 shares
View 6 more comments
Ksr Vasan plz help to all friends
18 minutes ago · Like · 1
Duraisamy Gopalakrishnan our embassy is useless........
18 minutes ago · Like · 2
Prasath Siva Nandhi mudindhavarai udhavungal tholargale neegal engaludan illai endralum tamil patru maravaamal irupeergal enbadhal dhan ungalidam udhavi ketkirom
15 minutes ago via mobile · Like
Ahamed Ashik Hussain Ghani
11 minutes ago · Like
Manivannan Kandhasamy K Any Mobile No Or Address Please
8 minutes ago · Like
வணக்கம் சித்தப்பா...
தங்களது கவிதையை கவர்ந்த கவிதையில் வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்...
நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்... அதற்கான சுட்டி கீழே..
http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_7179.html
நன்றி...
நேசத்துடன்
சே.குமார்
Assalamu alaikum …sujud sukur berkat bantuan AKI DARMO dan berkat impormasi dari member-member AKI yang telah meyampaikan bahwa jika anda ingin mengubah nasib melalui angka togel ghoib hubungi AKI .dan malam ini kami udah buktikan berkat bantuan AKI yang telah memberikan angka togel ghoib 4D akhirnya kami menang 375 Duit indon,dan insyaallah kami bisa lunasi semua hutang-hutang kami yang lagi ada warung .sekali lagi kami ucapkan banyak-banyak terimah kasih kepada AKI dan kami selaku member- berhak mengimformasikan keberhasilan.dan kami atas nama Pak ibrahing DI MALAYSIA …turut mengimformasikan “jika anda merasa punya beban berat (hutang)yang sudah lama belum bisah terlunasi,dan ingin mengubah nasib lebih layak dibandingkan nasib yang sekarang seperti kami,dan member-member yang lain.
SILAHKAN GABUNG SAMA AKI DARMO...ANGKA NAIK TGL, 11,10, 2015…< 9742 > PUTARA TOTO 4D MEGNUM …DAN PUTARAN SPORT TOTO 4D, MALAYSIA <<<<< 0836 >>>>> TGL, 11, 10 , 2015….
KALAU INGGIN SEPERTI KAMI SILAHKAN HBG/SMS AKI DARMO... DI NMR:082-310-142-255..
ATAU, KUNGJUNGGI, BLOG, AKI DARMO… >>> KLIK DISINI ANGKA TEMBUS 2D,3D,4D,5D,6D,7D,9D-<<<<
SAYA SUDAH BUKTIKAN 5X KEMENANGAN TEPAT/TERBUKTI…!!!.
Apakah anda termasuk dalam kategori di bawah ini...!!
1: Di kejar2 tagihan hutang..
2: Selaluh kalah dalam bermain togel
3: Barang berharga sudah
terjual buat judi togel..
4: Sudah kemana2 tapi tidak
menhasilkan solusi yang tepat..!
5: Sudah banyak dukun ditempati minta angka ritwal y,
blum dapat juga jalan menyelesaikan masalah..
Biar masalah,a terselesaikan silahkan .HBG,ATAU SMS AKI DARMO.DI NMR:082-310-142-255.. AKI siap menbantu masalah anda…
KARNA RASA HATI YANG SERONOK ,MAKANYA NAMA BELIAU KAMI CANTUNKAN DI INTERNET…
Dijamin: 100% tembus…
.(`’•.¸(` ‘•. ¸* ¸.•’´)¸.•’´)..
«´ terimakasih atas angkanya¨`»
..(¸. •’´(¸.•’´ * `’•.¸)`’•.¸ )..
_INFO PREDIKSI AKI DARMO_ DENGAN ANGKA GOIB/ANGKA KARAMAT MELALUI RITUAL_
_PREDIKSI TOGEL SGP_ _PREDIKSI TOGEL TAYLAN_
_PREDIKSI TOGEL HKG_
_PREDIKSI TOGEL MALAYSIA_ JIKA ANDA INGIN CEPAT KAYA,BUTUH ANGKA JITU ATAU BELI TUYUL
_PREDIKSI TOGEL LAOS_
_PREDIKSI TOGEL SIDNEY_
_PREDIKSI TOGEL KAMBOJAH_
_PREDIKSI TOGEL TAYWAN_
angka GHOIB: kuda lari…
SUPREME TOTO 6/58.SBH 88,LOTTO 6/45 STS,/MEKNUM 4D,/DA MA CAI 1+3D, MEGA TOTO 6/52, PAWER TOTO 6/55, LOTTO 6/45, SUPREME TOTO 6/58, DAN LAIN-LAIN ….
அன்பின் சித்தப்பா...
இன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.
http://vayalaan.blogspot.com/2016/03/blog-post_8.html
Post a Comment