Saturday, July 4, 2009

ஜன்னல் வைத்த வீடு



(கணையாழியில் வெளியான எனது கவிதை)

ங்கே இங்கே கடன் வாங்கி
அப்பா கட்டினார் வீடொன்று.
செங்கல் சாந்து கடனோடு
வளர்ந்து நின்ற பூதமது.

ண்ணா இட்ட கட்டளைக்கு
சுளித்து சிரித்தது மாடியறை.

"வனுக்கு மட்டும் ஆசை இருக்காதா?"
தவழ தொடங்கிய தம்பிக்காக
அம்மா வந்தாள் அப்பாவிடம்.

"டுத்தாத்துக்கு போறவளுக்கு
என்ன இருக்கு நம் வீட்டில்"
அப்பா அம்மா முதற்கொண்டு
அண்ணா வரையில் சொன்னாலும்...

ப்பா கட்டிய பூதத்தில்
அழகே அழகு ஒன்றுதான்...

க்ரகாரம் முழுக்க தெரியும்
தெருவை பார்த்த ஜன்னல் அது!

Wednesday, July 1, 2009

பிராய்லர் இல்லம்



கேள்விகளற்று
ஒருவர் மேல் ஒருவராககூட
நெருக்கியடித்து
அமர்ந்து கொள்கிறோம்.

ம்பி வலையிடை விரைகிற
உலகம் பார்த்து
வியந்து கொள்கிறோம்.

ன்னதென்று
அறுதியிட இயலாத
பதட்டம் இழையோடியபடி
அறிந்தவர், அறியாதவர்
எல்லோருடனும்
பேச்சிறைத்து கொள்கிறோம்.

தவு திறந்து
கை
உள்நீண்டு
வரும்போதெல்லாம்
கை
இரைக்கானது
என்றெண்ணி
அடித்து, புரண்டு
விழுந்து கொள்கிறோம்.

நின்று, நிதானித்து
தேடுகையில்
யாரோ
குறைந்ததுபோல்
இருக்கும்.

யாரை
எங்கென்று
எப்படி
தேட?...

றக்க
புதிதொன்று
பேச கிடைக்கும்.
மென் சிறகுரசும்
கதகதப்பு
கூடலுடன்.

செத்த நேரத்திற்கு.