Monday, July 20, 2009

உங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது



ண்பர், ரங்கன் தொடங்கி வைத்த இந்த, "best friend" விருதை, தோழி ஜெஸ்வந்தி, அவர்களின் ஒன்பது நண்பர்களில் ஒருவனாக என்னையும் தெரிவு செய்தார்கள். இந்த பதிவுலகம் வந்து கிட்டத்தட்ட ஒன்னரை மாத காலம் ஆகிறது. பதினைந்து வருடம் முன்பாக பித்து பிடித்து அலைந்த அந்த இலக்கிய வாசனையை மீண்டும் உணர்கிறேன். எழுத்தனுபவம் காட்டிலும் வாசிப்பனுபவம் மிகுந்த சுகம் கொள்ள செய்கிறதுதான். மீண்டும் எழுத வந்த பிறகு, எழுதியதை விட வாசித்தது அதிகம் என கொள்ளலாம். இப்படியான ஒரு சூழலில், வாசிப்பனுபவம் கொண்டு நல்ல நண்பர்களை தேர்வு செய்வதில் (அநேகம் பேர் இருப்பதால்) மிக குழப்பமே...ஆயினும், நேர் செய்யத்தானே வேணும். அதில்..

அப்பாவின் இளைய சகோதரர். நல்ல வாசிப்பனுபவமும், மிகுந்த அன்பாளரும். அப்பாவின் அன்பை அப்படியே தருபவர். ஆயினும் நண்பர்!சமீபமாக எழுத வந்து, எழுத்தில் வியப்பு ஏற்படுத்தியவர். ஆக,அவரிடமிருந்து தொடங்குவதே என் best frind பயணம் நியாமாகிறது.

அறிமுக காலம் தொட்டே நல்ல இலக்கிய அறிவு கொண்டவன். அவன் தளம் வேறு என் தளம் வேறு. அவனை அவன் நேசிப்பது போலவே என்னையும் என் எழுத்தையும் நேசிப்பவன். எழுத்தையும் நட்பையும் குழப்பிகொல்லாதவன். எழுத்தை கடந்த அன்பு பிரதானம்தானே எப்பவும்.

தளம் தொடங்கிய பிறகு அறிமுகமான நண்பர்களில் ஒருவர். சுந்தராவை போலவே தளம் வேறு வேறு. ஆயினும் வாசிப்பனுபவம் சொக்குகிறது. என் தளத்திற்கு இறங்கி வந்து, எனக்கு புரியும் படியான பின்னூட்ட கவிதைகளில் அன்பு தெறிக்கும்!

மீண்டும் எழுத வந்த பிறகு, சுந்தராவின் மூலம் கிடைத்த, நல்ல நண்பர்கள் நிறைய!அதில், முக்கியமானவர் அனு (எ)அனுஜன்யா. எழுத்து எப்படியோ அப்படியே நானும் என உணர தருகிற நண்பர்!

மனிதர்களை படிக்கவும், படிப்பின் மூலமாக உரிமை கொண்டழைக்கவும் எழுத்து ஆக சிறந்த ஒன்று. அதில் இவர் எனக்கு வாசு அண்ணா ஆனார். அப்படி அவரும்.

முகம் தெரியாது.ஆனாலும் எழுத்து, கூட பிறந்தவனை போல காட்டித்தரும். இப்படி உணரும் அடிநாதம் எதுவென அறிய இயலவில்லை. அறியவும் வேண்டாம்தான்.அப்படி நந்தா.

இனம் புரியாத எளிமையான எழுத்து நடை இவரை நண்பராக்குகிறது. ஆக, அ.மு.சையதும்!

கவிதை வாசிக்க எப்போ நுழைந்தாலும், "ராஸ்கல்..உக்காரு..எங்கே போற" என்ற சிநேகம் ததும்பும் எழுத்து செயலர். அவரும் கூட!

மன இறுக்கம் தளர்த்தக்கூடிய,தொடர்ந்து வாசிக்க விரும்பும் எழுத்து ஜெகனை நண்பராக்கும் யாருக்கும்.பிறகு நான் மட்டும் விடுவானேன்?...

விலக முடியாத வாசிப்பனுபவம் ரௌவ்த்ரனின் கவிதைகள். இங்குதான் சவுதியில் இருக்கிறார். எந்த ஒரு விசையாவது நகர்த்தி என்னையும் இவரையும் இணைத்தால், குலசாமிக்கு பொங்கல் கூட வைக்கலாம்தான். அவ்வளவு ஈர்க்கிறார் எழுத்தில்!

எந்த தளத்திற்கு போனாலும் ரசிகையின் பின்னூட்டம் காண கிடைக்கிறது. ஓடி..ஓடி..எழுதுபவர்களை உற்சாக படுத்த ஒரு மனசு வேணும். அப்படி... இந்த நமுட்டு சிரிப்பு ரசிகை!


போதும்தான். எல்லோரையும் நானே எடுத்து கொண்டால்...கொல்லங்குடி ஆத்தாளே காசு வெட்டும்!

*** ***

நெரிகிற நகர பேருந்து கூட்டத்தில் முண்டி ஏற மனசு அனுமதிப்பதில்லை.."சரி..நாலு கிலோ மீட்டர்தானே...நடக்கலாம்" என நடக்க தொடங்கையில்..."மாப்ள பத்திரிக்கை வைக்க வீட்டுக்குத்தான் போய்கிட்டுருந்தேன்..ஏறு..போகலாம்"என்று கார் கதவு திறந்து சிரிக்கிற நண்பர்கள் போல்...ஒரு சேர தனி,தனி காரில் அழைக்கிறார்கள், ஜெஸ்வந்தியும், அனுஜன்யாவும்.

"ரெவ்வண்டு,ரெவ்வண்டு கிலோமீட்டராக இறங்கி மாறுவேன்..."என சிரித்து முதல் காரில் ஏறியிருக்கிறேன். "ரெண்டு கிலோ மீட்டர் வந்ததும் இறக்கி விடுங்கள் அனுஜன்யாவுடனும் பயணிக்க வேணும்".

ல்லோருக்கும் அன்பு நிறைய!
பா. ராஜாராம்

20 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அந்தமாதிரிக் கலக்கியிருக்கிறீர்கள் நண்பரே.! கார் பயணம் சுகமாக இருந்ததா ?.
இறக்கி விடுகிறேன் உங்கள் மற்றப் பயணத்துக்கு. விரைவாக இந்தப் பயணங்களை முடித்து விட்டு எழுத வாருங்கள். காத்திருக்கிறேன்.

Nathanjagk said...

நான் இங்கு ​சொல்ல வந்தது ​வேறு... வந்து பார்த்தால் எனக்கு விருது!!! அன்பு ராஜாராம்... மிக்க நன்றி!
இதுதான் நான் ​சொல்ல வந்தது:
ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கி​றேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

நேசமித்ரன் said...

திருக்கழுகுகுன்றத்தில் சங்கு குளம் என்று ஒன்று உண்டு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சங்கு பிறந்து மிதந்து வரும்
ஞான சம்பந்தர் "கல்லாடை புனைந்த கதளி மலர்" என்று அந்த சுயம்புவை பாடி இருக்கிறார்

குளத்தில் எப்படி சங்கு பிறக்கும் ?
பிறக்கிறதே ..!

இன்று அப்படி ஒரு நாளாக உணர்கிறேன் பா.ரா
பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் நாளாக
விருதைத் தாண்டி உங்கள் மனசில் கொடுத்திருக்கும் இடத்திற்கு

வாய் திறந்த கண்ணனுக்குள் இருக்கும் உலகம் ஒரு சொல் உரு கொண்டு வந்தாற் போல உங்கள் நட்பு..!

'' நெடும் பாலை கொடும் காற்றில்
தலை புதைத்துகொள்ளும்
நெருப்புகோழியின் ஒரு பிடி மண்

தலை எலும்பு கூடாத குழந்தையை
தூக்கும் தகப்பனின் கரம் நடுங்குகிறது

கருவறைக் காளியின் சூலம் கண்டு திரிந்த பிள்ளையின் கண்
மண்டபத்தூண் மாதினைபார்த்து அம்மம்மா .."

தீராப் பிரியங்களுடன்.....

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் அனைவருக்கும்.


[["ரெவ்வண்டு,ரெவ்வண்டு கிலோமீட்டராக இறங்கி மாறுவேன்..."என சிரித்து முதல் காரில் ஏறியிருக்கிறேன். "ரெண்டு கிலோ மீட்டர் வந்ததும் இறக்கி விடுங்கள் அனுஜன்யாவுடனும் பயணிக்க வேணும்".]]

அருமை.

ny said...

இத்தனை உரிமையோடு உயரிய இடமளித்து....
திரு. பா.ரா..
உங்கள் உளம் பெற்றுத்
திக்கு முக்காடியிருக்கிறேன்!!
சில பேரின்பத் தருணங்களிலும் முன்னெப்போதும் போலவே நன்றி என்ற ஒற்றைச் சொல் மட்டுமே எழுத வருகிறது!!

மாதேவி said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி ராஜாராம்!

anujanya said...

உங்க நண்பர்னு சொல்லிக் கொள்வது எனக்கு ரொம்பவே பெருமை ராஜா. நன்றிகளும், ஏராளமான அன்பும்.

அனுஜன்யா

S.A. நவாஸுதீன் said...

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

"ரெவ்வண்டு,ரெவ்வண்டு கிலோமீட்டராக இறங்கி மாறுவேன்..."

இது எங்க ஊர்ல (அதிரை) பேசிக்கிற மாதிரியே இருக்கே.

பாலா said...

aduththa award ready aayittey irukku wait pannavum rajaram sir

நந்தாகுமாரன் said...

ராஜாராம்,

நான் ஜெகநாதனுக்கு ஒரு கதை சொன்னேன் அதை மீண்டும் இங்கே சொல்கிறேன் ...

ஒரு சிறுவன் ஒரு ஐஸ்க்ரீம் கடைக்குச் சென்றான். அங்குள்ள பணியாளரிடம் எனக்கு Butter Scotch வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டானாம். பிறகு அந்தப் பணியாளர் அவனிடம் ரசீதை நீட்டிய போது அவன் சொன்னான் “நன்றியைத் தவிர எனக்குத் தங்களுக்குக் கொடுப்பதற்கு வேறெதுவும் இல்லையே”.

:)

மிக்க நன்றி. நான் மேலே சொன்ன கதைக்கும் உங்கள் பதிவிற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை அந்த சிறுவன் நான் என்பதைத் தவிர ...

நந்தாகுமாரன்,
அன்புடன்.

அ.மு.செய்யது said...

தாமத வருகைக்கு மன்னிக்கவும் ராஜாராம் அவர்களே !!!

என்னையும் உங்கள் நண்பராக தேர்ந்தெடுத்தமை குறிந்த பெருமை கலந்த மகிழ்ச்சி !!!

மிக்க நன்றி !!!

இரசிகை said...

intha periya periya manushanga list il yenakkum idam...

santhoshama irukku..
nantriyum koodave!!

ippadikku,
namuttu siruppu rasihai:)

பா.ராஜாராம் said...

பிரியங்களில் நிறைந்த,ஜெஸ்...ஜெகன்..நேசா..ஜமால்...கார்த்தி...மாதேவி...சுந்தரா...அனு...நவாஸ்...பாலா..நந்தா...செய்யது...ரசிகை..நிறைய அன்பும் நன்றியும்!

மண்குதிரை said...

எளிய நடையில் என்னை ஈர்க்கிறேர்கள்

பா.ராஜாராம் said...

இப்பதான் உங்கள் நதியில் நனைதல் வாசித்து வந்தேன் மண்குதிரை.இங்கு நீங்கள் இருந்துருக்கிறீர்கள்...இன்னும் மனசிலேயே இருக்கு கவிதை!நன்றியும் அன்பும்!

ரௌத்ரன் said...

உங்கள் அன்புக்கு என் நன்றி..நிச்சயம் நாம் சந்திப்போம்...0543411466..உங்கள் தொடர்பு எண்ணை தெரிவித்தால் நானே தொடர்பு கொள்கிறேன் :)

பா.ராஜாராம் said...

கூடுதல் ஸ்பரிசமான உங்கள் குரல் தேடி அடைந்ததில் அவ்வளவு சந்தோசம் ரௌத்ரன்.இனிது ஒரு பொழுதில் கை இறுக்கி கொள்வோம்.நிறைய அன்பும் நன்றியும்!..

அண்ணாதுரை சிவசாமி said...

கடந்த பத்து நாளா நான் இருந்த நிலை உனக்கு
தெரியும்.என்னையும் தேர்வு செய்ததற்கு நன்றிடா,ராஜா.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் சித்தப்பா...
பாலா வந்தாச்சு.இதை விடவா நமக்கு வேறு சந்தோஷம் வேணும்...வேறு என்ன சித்தப்பா...இனி உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும். சீக்கிரம் எழுத வாருங்கள். ..நிறைய அன்பு சித்தப்பா.