Friday, July 24, 2009

வீதி அல்லது விதி


பிணைக்கப்பட்ட
சங்கிலி நாய்களுடன்
நடு வீதியில் நின்றபடி
பேசிகொண்டிருக்கிறார்கள்
அவளும் அவளும்.

ரு திமிறல்
ஒரு முனகல்
ஒரு குதியாட்டம்
ஏன்
ஒரு மொழி அசைவும் இல்லை
அதுகளிடமும்.

திர் எதிர் பாலை
பிணைக்க இயலாத சங்கிலியால்
விஷயங்களற்று
வெறிச்சோடி கிடக்கிறது
வீதி!

28 comments:

நேசமித்ரன் said...

எதிர் எதிர் பாலை
பிணைக்க இயலாத சங்கிலியால்//

ஒரு வெற்றிடத்தை இட்டு நிரப்ப
வேண்டியிருக்கிறது
ஒரு கிரகம்
ஒரு கடவுள்
oரூ சாத்தான்
கொஞ்சம் காற்று
கொஞ்சம் பிரியத்தின் வாசனை

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் கவிதையில் வருவதைப்போலவே அந்தப் படமும் வெறிச்சோடிக் கிடக்கிறது.
உணர்வுகளுக்கு எதிராக நாம் செய்யும் அத்தனையும் இப்படித்தான் .........

மதன் said...

அசிரத்தையான
அன்பொழுகி வழியும்
வெற்றிடங்களின்
விதியை விட

புறங்கள்
வெற்றாயிருத்தலே
நலம்

நட்புடன் ஜமால் said...

படமும் வரிகளும் அருமை.

Unknown said...

கவிதை நன்றாக வந்திருக்கிறது.ஆனால் ரசிக்க முடியாமல் ’லாஜிக்” அல்லது ”யதார்த்தம்” தடுக்கிறது.ரோடில் இரண்டு நாய் பார்த்தாலே அதன் அடிப்படை குணத்தைக் காட்டி சேட்டைச் செய்யும்.

//ஒரு திமிறல்
ஒரு முனகல்
ஒரு குதியாட்டம்
ஏன்
ஒரு மொழி அசைவும் இல்லை
அதுகளிடமும்//

மனிதர்கள்தான் இப்படி கல் மாதிரி ரோடில் போவார்கள்.விலங்குகள் ஏதாவது துடிப்போடுதான்
நகர்தல் இருக்கும்.

நன்றி.

Anonymous said...

திரு கே.ரவிஷங்கர் அவர்களுடைய கருத்துடன் நானும் ஒத்துப்போகிறேன்.லாஜிக்?

//மனிதர்கள்தான் இப்படி கல் மாதிரி ரோடில் போவார்கள்.//
அடுத்தவர்களிடம், அவர்களுக்கான ’எதுவும்’ இல்லாவிடில்...

பா.ராஜாராம் said...

நேசமித்ரன்
==========
பள்ளியில் இருந்து திரும்புகிற குழந்தைகளின் உற்சாகம் நேசா உங்களிடம்."குட்டீஸ் மொத ஆளா வந்துருச்சா"என்று நானும் கூவி எடுத்து கொண்டேன்.

ஜெஸ்வந்தி
===========
நன்றியும் அன்பும் ஜெஸ்...பதில் எழுதிய கையோடு உங்கள் "இது அவள்தானா"வாசித்து திரும்பவேனும்.அன்பு நிறைய..

ஷங்கி said...

கவிதை நல்லாயிருக்கு. நான் இங்கே தினமும் காலையில் பூங்காவில் பார்த்தவரை, நாய்களும் மனிதர்களைப் போலத்தான். அவை பலவகை. சில எப்போதுமே, யாருடனும் ஒரு குதியாட்டத்துடன், உற்சாகத்துடன்! சில எஜமானர்களின் நண்பர்களின் நாய்களைக் கண்டால் மட்டும்! சில அடுத்தவரை அனுமதித்து விட்டு மௌனம் காக்கும்!(நான் உன்னைக் கவர்ந்திருந்திருக்கிறேனா, ஆனால், நீ என்னைக் கவரவில்லை) , சில சோம்பலாக அவர்கள் எஜமானர்களைப் போல் (சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்காவிட்டாலும்)! பூங்கா நாய்களை வைத்தே ஒரு இடுகையிடலாம் போல!

நேசமித்திரன் அவர்களின் தொடர்ச்சியும் அருமை!

பாலா said...

அதேதான் சார் ரவி சார் சொன்னதுதான்
கொஞ்சம் இடிக்குற மாதிரி இருக்கு

பா.ராஜாராம் said...

மதன்
=======
மக்கா...அடிச்சு கிளப்புறீங்களே!தொடர்ச்சியான வருகைக்கும்,பற்றிக்கொண்ட அன்பிற்கும்,நிறைய நன்றி மதன்..

நட்புடன் ஜமால்
================
இங்கு மட்டுமில்லை...உங்கள் பெயர் எங்கு பார்த்தாலும்,"பரமக்குடியும் பட்டு சட்டியும் நான்கு பரவச கண்களையும்"நினைவு படுத்துகிறீர்கள் jamaal...முன் கை நீளும் போது முழங்கையும் நீளுவது போல்.மிகுந்த நன்றியும் அன்பும் ஜமால்!

கே.ரவிசங்கர் & அமிர்தம்
=======================
வாஸ்த்தவம்தான்.இந்த காட்சியும் எனக்கு அனுபவத்தில் கிடைத்ததுதான் ரவி & அமிர்தம்.!...மனைவியுடன் நடை பயிற்சிக்கு போய் கொண்டிருந்த நாளில்,இப்படி ஒரு காட்சி அனுபவமாகியது."இந்த நாய்கள் கூட பெண்ணும் பெண்ணுமாக இருக்க வேணும்.இல்லாவிட்டால் இவர்கள் இப்படி பேசிகொண்டிருக்க அனுமதித்து இருக்குமா"என்று நான் மனைவியிடம் கேட்டதுண்டு பதிலாக..மனைவியின் பார்வையையும் வார்த்தையையும் என்னால் எழுத்தில் கொண்டு வர இயலவில்லை.எல்லாமா எழுதிவிட முடிகிறது?ஒரு வேலை அந்த "திமிறல்,முனகல்,,குதியாட்டம்" கிடைத்திருந்தால், இந்த கவிதை கிடைத்திருக்காதோ என்னவோ...நல்ல கண்ணோட்டம்...அன்பு நிறைய இருவருக்கும்!

jothi said...

அழகான கவிதை

அ.மு.செய்யது said...

நல்லா இருக்கு....உங்களுக்கு வந்த விமர்சனம் கூட ரசிக்கும் படியா இருக்கு !!!

Veera said...

உணர்வுகளற்ற உலகத்தில்
உறவுகளும் அற்றுப் போகும்.

பெரும்பாலும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், எழுதப்பட்ட ஒரு கணிணி நிரலைப் போல. சொல்வதைச் செய்து விட்டு, அதற்குரிய இடத்தில் சென்று படுத்துக் கொள்ளும்.

ஆனால், தெரு நாய்களாக இருந்தால், நீங்கள் கண்ட காட்சியே மாறி இருக்கும். :)

கவிதாசிவகுமார் said...

முந்தைய பதிவில் கவிஞ நண்பர்கள் கூட்டம் நடை பெற்று கொண்டிருந்தது. நாகரீகம் கருதி தயங்கி இருந்தேன். மற்றபடி சித்தப்பாவின் அடுத்த படைப்பு கதையா அல்லது கவிதையா என்ற எதிர்பார்ப்பே அதிகமாக இருக்கிறது. இந்த கவிதையும் அதற்கான விளக்கங்களும் நன்றாய் உள்ளது சித்தப்பா.

பா.ராஜாராம் said...

சங்கா
=======
உங்கள் தொடர்ச்சியான அன்பிற்கும் விசாலமான பின்னூட்டத்திற்கும் அன்பு நிறைய சங்கா.

பாலா
=======
நல்லா இருக்கீங்களா பாலா...விருதுக்கு வாழ்த்துக்கள்!..எனக்கு அந்த காட்சியின் முரண்தான் பாலா கவிதையாக தெரிந்தது..(."தலைபற்றவன்" அற்புதமான வெளிபாடு)நன்றியும் அன்பும் பாலா...

ஜோதி
========
தொடர்ச்சியான உங்கள் அன்பிற்கு மிகுந்த அன்பும் நன்றியும் ஜோதி!

ஹேமா said...

ராஜா,உறவின் பிணைப்பிற்கு உணர்வு...அதவாது சந்தோஷமாகவோ கோபமாகவோ இருக்கணும்.இல்லையேல் அந்தப் படம்போலவே உறவு வெறுமையாய்த்தான் இருக்கும் என்பது என் கருத்து.

பா.ராஜாராம் said...

அ.மு.செய்யது
===============
ஆகட்டும் செய்யது.நன்றியும் நிறைய அன்பும்!

வீரா
========
வீரா...நல்ல இருக்கீங்களா?...எவ்வளவு நாளாச்சு நீங்கள் வருகை தந்து?...உங்களின் சில "புத்தகங்கள்-சில நினைவுகள்" நல்லா வந்துருக்கு வீரா...கடவுளின் சொந்த பூமி எப்படி இருக்கிறது?வர போக இருங்கள் வீரா!அன்பும் நன்றியும்!

தமிழ்
======
ஆகட்டும்டா கவிதும்மா..அன்பும் சந்தோஷமும்!

Veera said...

நன்றி ராஜாராம்.

பணிச்சுமை காரணமாக பின்னூட்டம் போட நேரமில்லையானாலும் (அலுவலகத்தில் தமிழ் எழுத்துரு இல்லை!), உங்களின் பதிவுகளை ரீடரில் படித்துக் கொண்டுதான் வருகிறேன். :)

கடவுளின் தேசத்தில், மழை பெய்விக்கலாமா, இல்லை வெயிலைக் காட்டலாமா என அந்தக் கடவுளுக்கே குழப்பம் போலும். நினைத்த நேரத்திற்கு தூறிக் கொண்டு ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறது கேரளம். :)

பா.ராஜாராம் said...

ஹேமா
=======
உங்களின் வணங்காமண் வாசித்து வந்தேன் ஹேமா.என்ன சொல்லட்டும்...வாழ்வு தரும் வலியை மறக்க இப்படி எதிலாவது நம்மை திணித்து கொள்ளத்தான் வேண்டிவருகிறது...இல்லையா ஹேமா?உங்கள் தளத்தில் சொன்னதைத்தான் இங்கும் சொல்ல நேரிடுகிறது.."சொல்ல வேறொன்னும் இல்லை தாயி...விடியவேனும் எனும் வேண்டுதலை தவிர"...அன்பும் நன்றியும் ஹேமா.

வீரா
======
ஆகட்டும் வீரா,..அன்பு நிறைய!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என் பதிவு அழகு நடனத்துக்கு ஒருமுறை போங்கள். என் பதில் கருத்தைப் படியுங்கள்.

இரசிகை said...

nallaayirukku...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதை பிடிச்சிருக்கு - அந்தக் கடைசி ! இல்லாமலிருந்தால் இன்னும் பிடிச்சிருக்கும் :)

பா.ராஜாராம் said...

ஜெஸ்வந்தி
============
உங்களின் follow-up சந்தோசம் தருவதாய் இருந்தது.நன்றியும் அன்பும்!

ரசிகை
=========
நல்லா இருக்கீங்களா ரசிகை...ரொம்பநாள் ஆனது போல் இருக்கு...உங்களை பார்த்து.மிகுந்த அன்பும் நன்றியும்!

சுந்தர்
=========
நன்றியும் அன்பும் சுந்தரா!

கவிதாசிவகுமார் said...

எப்படி சித்தப்பா உங்களுடைய எழுத்து மிகவும் யதார்த்தமாகவும் நேரில் பேசுகிற மாதிரியேவும் இருக்கு. பாந்தமான அன்போடு எழுதுகின்ற பாங்கு உங்களால் மட்டுமே சாத்தியம், தாயன்பு நிறைந்த அன்பு சித்தப்பா.

நந்தாகுமாரன் said...

நல்லா இருக்குங்க ராஜாராம்

பா.ராஜாராம் said...

நன்றியும் அன்பும் நந்தா!..

anujanya said...

நல்லா வந்திருக்கு ராஜா.

அனுஜன்யா

பா.ராஜாராம் said...

அனுஜன்யா
============
எங்கடா அனுவை கொஞ்ச நாளாக காணோமேன்னு பார்த்தேன்...வந்தாச்சா!அன்பும் நன்றியும் அனு..

தமிழ்
=========
நன்றிடா கண்ணம்மா...நாம் வேறு நம் இழுத்து வேறா என்ன?...