Wednesday, July 29, 2009

துக்கம்செல்வநாயகம் செத்துப்போனது அறியாது
"செல்வா நல்லா இருக்கானா?" என்றேன்
அவனின் மனைவியிடம்.
இதில் அவளை விட
எனக்கு துக்கம்.

"ண்ணே மல்லிபூ அண்ணே" என்று
தினமும் விசாரிக்கிற ரயிலடி பூக்காரி
இன்று என்னை தவற விட்டாள் எதனாலோ
இதில் என்னைவிட
அவளுக்கு துக்கம்.

னைவியின் சேலையணிந்த
மனைவியின் தங்கையை
மனைவி என கை நீட்டிய குசும்பிற்கு
இரவெல்லாம் வெட்கி கிடந்த
துக்கம் எனக்கு.
பாவம் அதுக்கென்ன பாடோ?..

னைவியின் தங்கை முதற்கொண்டு,
ரயிலடி பூக்காரி, செல்வா மனைவி வரையில்
"எல்லா நேரமும் போலவா
எல்லா நேரமும் இருக்கும்" என்று
தெரிந்து வைத்திருந்தால் தேவலாம்தான்.

னக்கு தெரிந்ததுபோல்

(கணையாழியில் வெளியான எனது கவிதை)

25 comments:

குரும்பையூர் மூர்த்தி said...

//எல்லா நேரமும் போலவா
எல்லா நேரமும் இருக்கும்//
இதை உணர்ந்தால்
அவன் தேவன்!!

கவிதை நன்றாக உள்ளது!

நர்சிம் said...

அருமை..பூக்காரியின் துக்கம் கவிதை.

Veera said...

ரொம்ப நல்லா இருக்கு!

கவிதாசிவகுமார் said...

நெளிய வைக்கும் தர்மசங்கடங்களை ரசிக்கத்தக்க கவிதையாக சொல்லியிருக்கிறீர்கள். நல்லாருக்கு.

நட்புடன் ஜமால் said...

கணையாழிக்கு வாழ்த்துகள்.

எதார்த்த நிகழ்வுகள் -
அதன் பின்னே இருக்கும் உணர்வுகள்

ஷங்கி said...

நல்லாருக்கு அன்பரே

அ.மு.செய்யது said...

எத்தனை கோணங்களில் தான் உங்கள் துக்கம்.

ரொம்ப வித்தியாசமா இருக்கு ராஜாராம் அவர்களே !!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருக்கு ராஜாராம். கவிதைக்கு கடைசில எதுக்கு ஆச்சரியக்குறி?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஒரு வித்தியாசமான கவிதை. துக்கம் வரக் கூடிய சம்பவங்களைத் தொகுத்துள்ளீர்கள்.
அருமை.

Unknown said...

நல்லா இருக்கு. வீணாப்போனவனின்( முகுந்த் நாக்ராஜனின்)மெல்லிய நகைச்சுவை மாதிரி ஆனால்
ஒரு சுற்று தடித்த இழை.

S.A. நவாஸுதீன் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு நண்பா.

கணையாழி இதழில் உங்களின் கவிதை பிரசுரமானதற்கு வாழ்த்துகள்.

anujanya said...

கடைசி வரியில் கவிதை மிகப் பிரம்மாண்டமாகப் போவது போலத் தோன்றுவது என் பிரமையா?

அனுஜன்யா

இரசிகை said...

remba pidiththathu.....:)

நேசமித்ரன் said...

துக்கத்தின் கால் கதை

கிரேக்கப் பெண்களின் கால்களைபோல்
துக்கம் என்று தலைப்பிட்டிருந்தாலும்
அவர்களின் சல்லாத்துணி
அரை ஆடை போல்
ஒரு மெல்லிய எள்ளல்
முடியும் இடத்தில் அவர்களின் இடுப்பு போல
மாயம் நிகழ்த்தும் கவிதை

யாத்ரா said...

கவிதை மிகவும் பிடித்திருக்கிறது, அருமை.

பா.ராஜாராம் said...

நந்தா
======
நிறைய நன்றியும் அன்பும் நந்தா...

குரும்பையூர் மூர்த்தி
=====================
வாங்க மூர்த்தி...உங்கள் முதல் வருகையும் தத்துவார்தமான விளக்கமும் நிறைவடைய செய்கிறது.மிகுந்த நன்றியும் அன்பும்.

Nathanjagk said...

எல்லா நேரமும் போலவா
எல்லா நேரமும் இருக்கும் - இருந்துட்டா ​போரடிச்சுரும் பாரா. புன்னகைக்க ​வைக்கும் கவிஞரய்யா நீர்!

பாலா said...

சில சமயம் இப்படி நடந்துதான் தொலைத்து விடுகிறது
நூறு சத எதார்த்தம் சாமியோவ்

பா.ராஜாராம் said...

நர்சிம்
=======
"மாத கடைசி மதிய நேரங்கள்" நிதர்சனம் தெறிக்கும் வீச்சு நர்சிம்.வேலையோடு வேலையாக வந்து உற்சாகம் செய்வதற்கும் மனசு வைத்திருக்கிறீர்கள்.நிறைய அன்பும் நன்றியும் மக்கா.

வீரா
=====
ஆகட்டும் வீரா.தமிழ் தட்டச்சு செய்ய இயலாத கணினியை கடந்து வந்து பின்னூட்டம் தர "நம்மாள் கடைப்பா'என்கிற உங்களின் அன்பு பார்க்க இயலாவிட்டாலும், பார்க்க இயல்கிறது...தர அன்பு இருக்கிறது வீரா-நிறைய!

தமிழ்
======
வாடா கவிதும்மா.சித்தப்பாவின் நிறைய அன்பும் நன்றியும்..

பா.ராஜாராம் said...

நட்புடன் ஜமால்
===============
வணக்கம் ஜமால்.தாமதமாகி விட்டது.வேலை அப்படி.நல்லா இருக்கீங்கதானே..".திரும்பிபார்க்கிறேன்"நண்பருக்கு செய்திருக்கலாம் உங்களின் உற்சாகம்.மகத்தானது,நெகிழ்வானது.வாழ்த்துக்கள் அன்பரே...எப்பவும்போல் அன்பும் நன்றியும்...

சங்கா
=======
ஆகட்டும் சங்கா..ரொம்ப சந்தோசம்.நிறைய அன்பும் நன்றியும்.

அ.மு.செய்யது
==============
செய்யது...நல்லா இருக்கீங்களா...அன்பும் நன்றியும் மக்கா...

பா.ராஜாராம் said...

ஜ்யோவ்ராம் சுந்தர்
===================
ஆகட்டும் சுந்தரா...ஆச்சர்யகுறியை எடுத்தாச்சு...நிறைய அன்பும் நன்றியும் மக்கா.

ஜெஸ்வந்தி
===========
வணக்கம் ஜெஸ்...வாழ்வு எப்படி உள்ளது...பயண நாட்கள் அருமையான அனுபவம்.வீட்டில் எல்லோருக்கும் என் அன்பை தாருங்கள்.எப்பவும் போல் அன்பும் நன்றியும்.

கே.ரவிஷங்கர்
==============
வரணும் ரவி.தொடர்ச்சியான வருகையும்,விமர்சனமும்...நிறைவை தருகிறது.அன்பும் நன்றியும் ரவி!

S.A.நவாசுதீன்.
==============
ஆகட்டும் நவாஸ்.ரொம்ப சந்தோசம் நீங்கள் தொடர்ந்து வருவது.அன்பும் நன்றியும் நவாஸ்.

பா.ராஜாராம் said...

அனுஜன்யா
============
ஒரு பிரம்மையில் சந்தோசபடுத்துகிறீர்கள்.அன்பும் நன்றியும் மக்கா...

ரசிகை
=======
ஆகட்டும் மக்கா..நன்றி நிறைய.

நேசமித்ரன்
===========
வழக்கம் போல் எனக்கு வேறொரு ஜன்னலை திறந்து தந்த என் நேசன்.நன்றியும் அன்பும் நேசா..

பா.ராஜாராம் said...

யாத்ரா
=======
ஆகட்டும் யாத்ரா.அண்ணனின் அன்பும் நன்றியும்.

ஜெகநாதன்
===========
எங்களுக்கும் காமடி வருதுல்ல...ஜெக மொழி வந்துருச்சா...நன்றி மக்கா...

பாலா
======
என்னடா பாலாவும் புலம்புகிறார் என தளம் வந்தபோது தெரிந்தது...."அவளுக்கு!".நன்றியும் அன்பும் பாலா..

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அருமையான உணர்வுகள்!

-ப்ரியமுடன்
சேரல்

பா.ராஜாராம் said...

ஆகட்டும் சேரல்.அன்பும் நன்றியும்.