Sunday, November 22, 2009

பா.ராஜாராம் கவிதைகள்-5


(picture by CC licence, thanks sugar_pond)

ஒன்று
தத்து
நொறுங்குகிறது
கூடுதல் கவனத்துடன்
குழந்தையின்
வெறுங்காலடியில்
ஒரு சருகு

இரண்டு
கிஞ்சித்தும்
முயற்சி இல்லை
அவளை நினைக்க
என நினைக்க
ப்ரியமாய் இருக்கிறது.

மூன்று
லை துவட்டி
உதறிய துண்டிலிருந்து
வானவில் மிதந்தது.
அடச்சே...இது
இவ்வளவு நேரம்
தலையிலா இருந்தது?

நான்கு
"போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"
என்கிற குரலை
இங்கதான் வச்சேன்.
யாராவது
பார்த்தீங்களா சார்?

ஐந்து
ருந்து வச்சு
கட்டிய இடத்தில்
வின்,விண்ணென்று
தெறிக்கிறது
செவிலியின் ரூபம்.

பா.ராஜாராம் கவிதைகள்-4
பா.ராஜாராம் கவிதைகள்-3
பா.ராஜாராம் கவிதைகள்-2
பா.ராஜாராம் கவிதைகள்-1

57 comments:

சுசி said...

ஐந்துமே அருமை... நான்காவது கொஞ்சம் கூடுதலாய்....

ஆ.ஞானசேகரன் said...

ஐந்தும் அருமை,... ஐந்தாவது கூடுதல் அருமை...ஹிஹிஹி

Ashok D said...

me the 3 ஹிஹிஹி

ராமலக்ஷ்மி said...

//"போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"
என்கிற குரலை
இங்கதான் வச்சேன்.
யாராவது
பார்த்தீங்களா சார்?//

வெகு அருமை:)!

Ashok D said...

1. அது கொடுக்கும் சப்தம்
அம்சத்தவனி ராகம்
2 :)
3 :)
4 :)
5 என்னிய மாதிரியே இருக்கியே சித்தப்ஸு.. சாரி உன்ன மாதிரியே நானு...

வினோத் கெளதம் said...

ஐந்தும் அருமை..:)

இராகவன் நைஜிரியா said...

அண்ணே அனைத்தும் அருமை...

எதை சொல்ல எதை விட...

5 தான் என்க்கு ரொம்ப பிடிச்சது..

'பரிவை' சே.குமார் said...

அஞ்சும் பஞ்சவர்ணம். அருமை.

கலகலப்ரியா said...

//"போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"
என்கிற குரலை
இங்கதான் வச்சேன்.
யாராவது
பார்த்தீங்களா சார்?//

ஆமாம் சார்... இப்போதான் ஒரு செவப்பு நிறக் காக்கா தன்னோட பச்ச நிற அலகால கொத்திக்கிட்டு... மண்ணைத் தோண்டிப் பறந்து போச்சு..!

அட அட பின்னிட்டீங்க அருமை...

vasu balaji said...

நம்ம சாய்ஸ் இரண்டு, நான்கு, மூன்று, ஐந்து, ஒன்று:)) அருமை ராஜாராம்.

செந்தில் நாதன் Senthil Nathan said...

அஞ்சுமே பிடிச்சது!! ரெம்ப அழகா இருக்குது!!

என்னோட வோட்டு நான்குக்கு!!

செ.சரவணக்குமார் said...

பா.ரா கவிதைகள் அருமை. வழக்கம்போல...

விஜய் said...

அனைத்தும் அருமை என்றாலும் மூன்றாவது மிக அருமை. பல வர்ண கவிதைகள் படித்து எப்போதாவது கிடைக்கும் வானவில் போல

வாழ்த்துக்கள்

விஜய்

ப்ரியமுடன் வசந்த் said...

மூன்றாவது வானவில் கவிதை செம்ம சிந்தனை பா.ரா.

ஹேமா said...

அண்ணா ஐந்தும் சிப்பிக்குள் பெயர்த்தெடுத்த முத்துத்தான்.அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஐந்தும் அருமை,...

உயிரோடை said...

ந‌ல்லா இருக்குங்க‌ அண்ணா க‌விதைக‌ள் எல்லாம். க‌விதை ஒன்று மிக‌ க‌வ‌ர்ந்த‌து

அகநாழிகை said...

ராஜாராம்,

கவிதைகள் எல்லாமே பிடித்திருக்கிறது.

முதல் கவிதையில் ‘பதைத்து‘ என்றல்லவா இருக்க வேண்டும்?

- பொன்.வாசுதேவன்

velji said...

கவிதைகள் அருமை.

1,3 ..ஆஹா!

rvelkannan said...

கவிதை ஒன்று
//கூடுதல் கவனத்துடன்../
இங்கே தான் கவிதையின் சிறப்பு
கூடுகிறது

இரண்டு
எண்ணி எண்ணி இனிமையை
கூட்டும் கவிதை

மூன்று
அட ... துண்டிலிருந்து அழகான
துண்டு கவிதை.

நான்கு
கடிதத்தை பற்றி சொன்னதால்
அலைபேசியிலும் தொலைபேசியிலும்
காணமல் போய் இருக்கும். அங்கே தேடி
பாருங்கள். ஒருவேளை கிடைக்கலாம்

ஐந்து
ஐந்தில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை இது பா.ரா.

அ.மு.செய்யது said...

3,4,5 தாறுமாறு ரகம் !!!!

ராக்கெட் வேகத்துல போறீங்க பா.ரா..!!!

எல்லாவற்றையும் ஒரு புத்தகமாக கொண்டு வரலாமே !!!

அ.மு.செய்யது said...

//முதல் கவிதையில் ‘பதைத்து‘ என்றல்லவா இருக்க வேண்டும்?

- பொன்.வாசுதேவன்
//

வாசு சார் !!!

"பதத்து" என்ற சொல்லாக்கம் அப்பளம் போன்ற மொரு மொரு
வஸ்துக்கள் நைந்து கிழியும் நிலைக்கு ஆளாத‌லை சொல்ல பயன்படுத்தும் சாதாரண பேச்சு வழக்கு தான் என்று நினைக்கிறேன்.

அப்படித்தானே பா.ரா ?? ( ஒரு வேளை "பதத்து" என்ற பேச்சு வழக்கு எழுத்து நடையில் "பதைத்து" என்று சொல்வார்களோ !! புதசெவி !! )

இரவுப்பறவை said...

அழகாய் இருக்குங்க ஐந்தும்.....

மணிஜி said...

ஆறாவது அருமை.இன்னும் எழுதப்படாத காரணத்தால்..சீக்கிரம் எழுதுங்க மக்கா...(போரடிக்குது ..அதான்)

சந்தனமுல்லை said...

அனைத்தையும் ரசித்தேன்!

அப்புறம் லதா அண்ணிக்கு சொல்லணுமா ..அஞ்சாவது கவிதையை?!! :-)))))

S.A. நவாஸுதீன் said...

மக்கா!

என்னத்த சொல்ல. நேசன் சொன்னமாதிரி மனுஷனைக் கொல்றதே வேலையாப்போச்சு உங்களுக்கு.

பதத்து - நம்ம ஊர்பக்கம் பேச்சுவழக்கில் நைத்துப்போச்சுன்னு சொல்லுவாங்க.

க.பாலாசி said...

//"போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"
என்கிற குரலை
இங்கதான் வச்சேன்.
யாராவது
பார்த்தீங்களா சார்?//

நான் பாக்கலைங்க....நல்லா தேடிப்பாருங்க...உங்க பாக்கெட்ல சின்னதா சிணுங்கும்.

நல்ல கவிதைகள்....

சிவாஜி சங்கர் said...

3.//தலை துவட்டி
உதறிய துண்டிலிருந்து
வானவில் மிதந்தது.
அடச்சே...இது
இவ்வளவு நேரம்
தலையிலா இருந்தது?//

Supper.. keep rockking..

பா.ராஜாராம் said...

@வாசு
பதத்து,நனைந்து எனும் அர்த்தமாகும் ஒரு வார்த்தையைத்தான் அங்கு பிரயோகம் செய்தேன் வாசு."பட்டாசு பதத்து போச்சு"என்று சொல்வோமே அது போல..


@செய்யது.

ஆம்,செய்யது நீங்கள் சொல்வது சரியே.தொகுப்பு, தயாராகி கொண்டிருக்கு செய்யது.நம் வாசுதான் தயார் செய்கிறார்.
நன்றி இருவருக்கும்! . .

புலவன் புலிகேசி said...

//பதத்து
நொறுங்குகிறது
கூடுதல் கவனத்துடன்
குழந்தையின்
வெறுங்காலடியில்
ஒரு சருகு//

ஐந்தும் அருமை.........எனக்கு பிடித்தது மேலே..

காமராஜ் said...

மூன்று
தலை துவட்டி
உதறிய துண்டிலிருந்து
வானவில் மிதந்தது.
அடச்சே...இது
இவ்வளவு நேரம்
தலையிலா இருந்தது?

நான்கு
"போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"
என்கிற குரலை
இங்கதான் வச்சேன்.
யாராவது
பார்த்தீங்களா சார்?

ஐந்து
மருந்து வச்சு
கட்டிய இடத்தில்
வின்,விண்ணென்று
தெறிக்கிறது
செவிலியின் ரூபம்.

மனசுல என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்கீங்க பாரா.
சிரிக்கவும் அழவும் வைக்கிற சிவாஜி மனநிலயில் வலை மக்கள்.
கைகுடு மக்கா.

ரௌத்ரன் said...

1 ம் 3 ம் பசக்னு ஒட்டிகிச்சு...மத்தகவிதைகளும் ரொம்ப நல்லாயிருக்கு ராஜா சார்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான்கும் ஐந்தும் நன்றாக இருக்கிறது.

ராகவன் said...

அன்பு பாரா,

ஒன்றும், நான்கும், ஐந்தும் எனக்குப் பிடித்தது.

கூடுதல் கவனத்துடன் பதத்து நொறுங்குகிறது..அன்பு பாரா...ரொம்ப அழகு...கறந்த பாலின் சூடு போல இதம். தலைக்கு மேலே சுழல விட்ட ஒளிவட்டம் போல எல்லாத்துக்கும் உச்சானி கொம்புல போய் உக்காந்துட்டது.

வாழ்த்துக்கள் பாரா!

அன்புடன்
ராகவன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் கவிதைகள் என்று முத்திரை குத்தி பிரசுரிக்கிறீர்கள் இப்போ. பெயர் போடாமல் எழுதினாலும் கண்டு பிடித்து விடலாம் ராஜா. குறும்பு கலந்த எழுத்து.நடத்துங்கள்.

சத்ரியன் said...

பா.ரா,

கவிதைகளை யோசிக்கிறதுக்குன்னே ரூம் போடறீங்களோ?

கலக்கறீங்க மாம்ஸ்...

S.A. நவாஸுதீன் said...

//சத்ரியன் said...
பா.ரா,

கவிதைகளை யோசிக்கிறதுக்குன்னே ரூம் போடறீங்களோ?

கலக்கறீங்க மாம்ஸ்..//

கவிதைதான் ரூம் போட்டு இவருக்காக வெயிட்டிங்ல இருக்கு நண்பா!

நேசமித்ரன் said...

இனிதுகள் 5

இனிதினும் இனிது 5

- பிசாசுகளில் ஒருவன்

:)


//@செய்யது.

ஆம்,செய்யது நீங்கள் சொல்வது சரியே.தொகுப்பு, தயாராகி கொண்டிருக்கு செய்யது.நம் வாசுதான் தயார் செய்கிறார்//

எப்போ மக்கா ரிலீசு ?

ஊடகன் said...

ரொம்ப நல்லாயிருந்தது.........

நல்ல கவிதை நாடியும் இருக்கிறது............. வாழ்த்துக்கள்..............

Deepa said...

அனைத்தும் அருமை... என்றாலும் ரொம்பப் பிடித்தது:

//"போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"
என்கிற குரலை
இங்கதான் வச்சேன்.
யாராவது
பார்த்தீங்களா சார்?//
//
:)

கவிதாசிவகுமார் said...

கவிதைகள் அனைத்தும் வர்ணஜாலம் படைக்கிறது. மூன்றாவது கொள்ளை அழகு. வாழ்த்துக்கள்.

விநாயக முருகன் said...

நான்கு
"போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"
என்கிற குரலை
இங்கதான் வச்சேன்.
யாராவது
பார்த்தீங்களா சார்?


எனக்கு இ‌து பிடித்திருந்தது பா.ரா

யாத்ரா said...

எல்லா கவிதைகளுமே ரொம்பப் பிடித்திருக்கிறது.

பா.ராஜாராம் said...

@சுசி
நன்றி சுசி!

@சேகர்
நன்றி சேகர்!நம்ம ஆள் ஆனதுக்கும் சேர்த்து.(அதே ஹி..ஹி..தான்.)

@அசோக்
வாடா அப்பா என்று செந்திலை கவுண்டமணி ஒரு படத்தில் கேட்பாரே..அப்படியே கேட்டுச்சு மகனே.நீங்க இல்லைல்ல?(பெத்த மகனாக இருக்குமோ ஒருவேளை..)நன்றி அசோக்!

@வினோ
நன்றி வினோ!

@இராகவன் அண்ணாச்சி
மகனே அசோக்..அண்ணாச்சி வந்துட்டார்.துணைக்கு.நன்றி அண்ணாச்சி!

@குமார்
நன்றி குமார்!

@கலகலப்ரியா
வாங்க வால்பொண்ணு. வானம்பாடிகள் சார்,கேளுங்க என்னன்னு.நன்றி மக்கா!

@வானம்பாடிகள் சார்
நன்றி சார்!இந்த வால் பொண்ணை என்னன்னு கேளுங்க சார்.

@செந்தில்
மிக்க நன்றி செந்தில்!

@சரவனா
நன்றி சரவனா!பார்க்க வேண்டிய விருப்பம்..இன்று அதிகமாக..பார்க்கலாம்.

@விஜய்
நன்றி,ப்ரியங்களில் கூடி கொண்டிருக்கும் என் விஜய்!

@வசந்த்
நன்றி ஸ்டார்!

@ஹேமா
சித்தப்பாவிடம் வத்தியா?நன்றிடா ஹேமா?

@டிவிஆர்
நன்றி டிவிஆர்ஜி!

@லாவண்யா
நன்றிடா லாவண்யா!

@வாசு
நன்றி வாசு!

@வேல்ஜி
நன்றி வேல்ஜி!

@ வேல்கண்ணா
ரொம்ப நன்றி வேல்கண்ணா!

@செய்யது
நன்றி செய்யது!

சந்தான சங்கர் said...

போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"
என்கிற குரலை
இங்கதான் வச்சேன்.
யாராவது
பார்த்தீங்களா சார்?//

இங்குதான்
பார்க்க
விழைகிறது
பா.ராவின்
யதார்த்தத்தை


அருமை மக்கா...

விக்னேஷ்வரி said...

கிஞ்சித்தும்
முயற்சி இல்லை
அவளை நினைக்க
என நினைக்க
ப்ரியமாய் இருக்கிறது.//
ரொம்பப் பிடிச்சிருக்கு.

"உழவன்" "Uzhavan" said...

மனம் வருடும் கவிதைகள்.

இரசிகை said...

arumai.......

:)

கல்யாணி சுரேஷ் said...

//கிஞ்சித்தும்
முயற்சி இல்லை
அவளை நினைக்க
என நினைக்க
ப்ரியமாய் இருக்கிறது.//

உண்மைய சொல்லுங்கண்ணா. அது யாரு? நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.

//"போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"
என்கிற குரலை
இங்கதான் வச்சேன்.
யாராவது
பார்த்தீங்களா சார்?//

அண்ணியை பற்றிதானே சொல்லி இருக்கீங்க?

அன்புடன் நான் said...

மூன்று
தலை துவட்டி
உதறிய துண்டிலிருந்து
வானவில் மிதந்தது.
அடச்சே...இது
இவ்வளவு நேரம்
தலையிலா இருந்தது?

நான்கு
"போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"
என்கிற குரலை
இங்கதான் வச்சேன்.
யாராவது
பார்த்தீங்களா சார்?//

கவிதைகள் கலக்கல்...

//"போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"
என்கிற குரலை
இங்கதான் வச்சேன்.
யாராவது
பார்த்தீங்களா//

அடுத்த எனது கவிதையும் இந்த விடயமாகவே. ”பாரா”ட்டுக்கள்.

thamizhparavai said...

நான்கும், ஐந்தும் எனக்குச் செல்லம்...

பா.ராஜாராம் said...

@இரவுப்பறவை
நன்றி மக்கா!

பா.ராஜாராம் said...

@மணிஜி
மாலை போட்டாச்சா?.போனை காணோமே...:-))
மாலை போட்டால் வீட்ல சந்தோசம்.போடாட்டி எனக்கு சந்தோசம்.நன்றிஜி!

@முல்லை
ஹலோ..ஹலோ..சிக்னல் எடுக்கலை முல்லை.கொஞ்சம் சத்தமா பேசுங்க.என்ன எழவுடா..இந்த சிக்னல்.நன்றி முல்லை!

@நவாஸ்
நன்றி நவாஸ்!குரல் தேவை தொடங்கியாச்சு.பார்த்தும் கூப்பிடுங்க.நான் கூப்பிட்டாலும்,கட் பன்னி அழைக்கிற மனுஷனிடம் தேவைகளை சொல்ல கூட பயமாய் இருக்கு..ராட்சசா.(நன்றி தமிழ்!)

பா.ராஜாராம் said...

@பாலாஜி
ஹா..ஹா..நன்றி பாலாஜி!

@சிவாஜி
நன்றிஜி.மிகுந்த ப்ரியம்.

@புலவன் புலிகேசி
நன்றி புலவரே!

@காமராஜ்
கடைசி சுவரையும் உடைத்த வார்த்தை இந்த "கை குடு மக்கா!".நன்றி என் காமு!

@ரவுத்திரன்
ரொம்ப நன்றி ராஜேஷ்!

@அமித்தம்மா
அமித்து,சார்,நீங்கள்,எல்லோருமாக கோயிலுக்கு போய் கொண்டிருந்ததை பார்த்தது போல் நினைத்து நிறைத்து கொண்டேன் அமித்தம்மா.இங்கேயும் சொல்லணும் போல் இருக்கு.."பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா அமித்து!நன்றி அமித்தம்மா!

பா.ராஜாராம் said...

@ராகவன்
அது உங்களுக்கு பிடிக்கும் என தெரியும் ராகவன்.அதுவாகவே இருக்கிற உங்களுக்கு!நன்றி மக்கா!

@ஜெஸ்.
உடல் நலம் தேருங்கள் மக்கா..துஷ்..பாருங்கள் அடங்க மாட்டேன்கிறார்கள் இந்த ஜெஸ்.பின்னூட்டமெல்லாம் பிறகு செய்தால் போதாதா.எப்படியோ போங்கள்...நன்றி மக்கா!

@சத்ரியன்
சம்பந்தி...பார்த்தீர்களா?
எப்படி இருக்கிறாள் என் மருமகள்?பாருங்கள் உங்களுக்கு எடுத்து கொடுக்கிறாரு நம்ம நவாஸ்.நன்றி மாப்ள!

@ நவாஸ்
உங்களை அந்த மாமரத்தில் கட்டி வைத்து உரிக்கணும் மக்கா.மறுமுறை அது!

@நேசன்
தொட்டியும் ஆட்டி,பிள்ளையும் கிள்ளுகிறாயா பிசாசே..நன்றி நேசா!

@ஊடகன்
நல்வரவு ஊடகன்.நன்றி மக்கா!

@தீபா
நன்றி தீபா!

@உதிரா
இன்று நம் ராஜா குரல் கேட்டுகொண்டேண்டா.சரிங்க.நன்றிங்க!

@விநாயகம்
நன்றி விநாயகம்!

@யாத்ரா
நன்றி தம்பு!

@சங்கர்
மிக்க நன்றி சங்கர்!

@விக்னேஸ்வரி
ஐயையோ.."பத்து விதிகள் பத்தலை" பார்ட்டியா?பா.ரா.வீட்ல இல்லைங்க.வந்தா சொல்றேன்.நன்றி விக்னேஷ்!

@உழவன்
நன்றி உழவரே!

@ரசிகை
அப்பாடி..ட்ரேட் மார்க்!
நன்றி ரசிகை!

@கல்யாணி
1.யார் கிட்டயும் சொல்லாதே..---------!கேட்டதா?..
சொன்னா பிச்சு புடுவேன் பிச்சு.
2.ஆமாத்தா ஆமா!..வேறு யாரை சொல்லட்டும்?(கிடு..கிடு..)நன்றி கல்யாணி!

@கருணா
ரொம்ப நன்றி தோழா!சந்தோசம்,கருணா.

பின்னோக்கி said...

3,4 ரொம்ப பிடித்தது. அருமை.

கமலேஷ் said...

பிடிச்ச வரிகள்னா
மொத்த கவிதையும் எழுதணும்...
அதனால் மொத்தமாக
ஒற்றை வரியில் சொல்லி விடுகிறேன்
------ "பா.ரா"------