
(Picture by cc licence, Thanks JenTheMeister)
ஒன்று
உள்ளதிலேயே
சிறந்த புகைப் படத்தைத்தான்
பெண் வீட்டிற்கு அனுப்பினேன்.
வந்ததிலேயே
சிறந்த புகைப் படத்தை
தேர்வு செய்திருப்பார்கள் போல.
பதில் இல்லை.
--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!
***
இரண்டு

(Picture by cc licence, Thanks aye jay )
ரொம்ப மாறியிருந்தது
திருமண மண்டபம்.
அங்கவளை முதலில்
கண்டது.
இத்திருமணத்திற்கு
வருவேனென
அவளொன்றும் சொன்னதில்லை.
ஆனால் தெரியும்
வருவாளென.
அப்படியே அக்கா மாதிரி
என்றாள் மகனின் தலை கலைத்து.
பார்த்து சாப்பிடுங்க
வெடிச்சிறப் போறீங்க
என்றாள் பந்தியில்.
எல்லாத்துக்கும் சிரிப்பா?
என்றாள் மொய் எழுதிய
இடத்தில்.
மண்டபம் பரவால்ல போல
மாற்றத்தில்.
***
57 comments:
முதல் கவிதையை காலையிலேயே படித்தேன் விகடனில்.. இன்னொன்றும் வரும் என்று இவ்வளவ்வு நேரம் வெயிட்டிங்.. படிச்சாச்சு.. இரண்டுமே அற்புதம்... முதலாவது என்னோட வாழ்கைல நடந்தது மாம்ஸ்.. பின்னுங்க...
//வந்ததிலேயே
சிறந்த புகைப் படத்தை
தேர்வு செய்திருப்பார்கள் போல.//
என் போட்டோ கிடைச்சி இருக்குமோ ??
ரொம்ப மாறியிருந்தா, சிரிச்சுத்தானே மழுப்பணும்?
முதல் கவிதை ஸ்கோர் அள்ளுது..
இரண்டாவது ம்ம் வயிற்றின் அடியில் ஏதோ ஊர்வது போன்ற உணர்ச்சி நடந்தாலும் நடக்கும்.. பெருமூச்சு மட்டும் வைரமுத்துவின் இலையில் தங்கிய துளிகளில் வரும் காலபெருவெளியில் சில பத்தாண்டுகள் என ஆரம்பிக்கும் கவிதை படிச்சு ஒருவார தூக்கம் போனது போல இந்த கவிதையும் ரெண்டு நாள் தூக்கத்தையாச்சும் கெடுக்கும் நிச்சயமா
உங்க கவிதையிலயே எனக்கு பிடிச்ச கவிதைகள் இவையிரண்டும்
ஐ லவ் யூண்ணா...
கவிதை அருமை ,ரசித்தேன் அண்ணா
ரொம்ப அருமையான கவிதை.. இரண்டுமே நல்ல கருத்துக்கள் இயல்பாக இருக்கிறது பாரா சார்.
பா ரா அண்ணே..முதல் சூப்பர்... இராண்டாவது இரண்டு தடவை படிக்க வேண்டியதாப் போச்சு... நன்றி அண்ணே..
பா.ரா. அண்ணா,
இரண்டும் அருமை....
அழகுடன் பணமும் சேர்ந்திருக்கலாம்...
அதனால் போட்டோ மாறியிருக்கலாம்...
விடுங்க...
மறக்க முடியாத காதலை
வார்த்தைகளால் மாற்ற நினைத்திருப்பாளோ...?
http://www.vayalaan.blogspot.com
முதலாவது அருமை அண்ணா.
ரெண்டாவது... போங்கண்ணே உங்களுக்கு இதே வேலையாப்போச்சு.
அடிக்கடி இதே மாதிரி கொல்லுங்கண்ணே..
ராஜா அண்ணா
அந்த இரண்டாவது கவிதையில்
கனத்துப்போவதாய் உணர்கிறேன்!!!!
Nice ones Paa. Raa.
இரண்டிலும் வருத்தம் தெரிந்தாலும்
இவர்கள் கை கூடாததனால் தான் என் அன்பான சித்தி உங்களுக்கு அமைந்தார்கள் என்பதில் எனக்கு சந்தோஸமே.
முதல் கவிதை அக்மார்க் பா.ரா தெரிகிறார்...
சத்தியமா கலக்குறீங்க கவிஞரே!
//மண்டபம் பரவால்ல போல
மாற்றத்தில்//
மனசுல நச்சுனு ஒரு முள்ளு ஏறினாப்போல இருக்கு
அருமையான கவிதை பாராண்ணே.. இரண்டுமே மனதைவிட்டு நீங்காதவை.
:)
அண்ணன் கமெண்ட் நல்லாருக்கு
ரெண்டும் சூப்பர்.
/ நசரேயன் said...
//வந்ததிலேயே
சிறந்த புகைப் படத்தை
தேர்வு செய்திருப்பார்கள் போல.//
என் போட்டோ கிடைச்சி இருக்குமோ ??/
அல்ல்ல்லோ! இது உங்களுக்காக எழுதினதுதான்.
கடந்தவற்றை நினைப்பதில் சிறு இன்பம் இழை யோடுகிறது. எல்லோருக்கும் எல்லாமே
வெற்றி தருவதில்லை காதலும் கூடத்தான்.........
ரொம்ப நல்லாருக்கு பா.ரா.
ஒன்று
உள்ளதிலேயே
சிறந்த புகைப் படத்தைத்தான்
பெண் வீட்டிற்கு அனுப்பினேன்.
வந்ததிலேயே
சிறந்த புகைப் படத்தை
தேர்வு செய்திருப்பார்கள் போல.
பதில் இல்லை.
தலைவரே ம்ம் மனதை டெச் பண்ணிவிட்டிர்கள். அருமை.
இரண்டாவது சோகத்தை விட
முதலாவது சோகத்தில் கனம்
அதிகம்.
அருமையான கவிதை...
முதல் கவிதையில் ட்ராப்..
ரெண்டாவது பிக்-கப்பா?
எப்படியோ கவிதைகள் டாப் :))
எளிய வரிகளில் இத்தனை அடர்த்தியாய், சோகத்தை சொல்ல உங்களால் மட்டும் முடிகிற்து.
பாரா ஸ்பெஷல் கவிதைகள்.
முதல் கவிதை Typical பா.ரா டச்!
இரண்டும் அருமை....
இரண்டுமே நல்லாருக்கு.
முக்கியமா எனக்குப் புரியுது:)
ரெண்டாவது கவிதை
அடடா!!!
முத கவிதை விகடனில் வந்தே முத்திரை பெற்றது.2வ்து கவிதையும் அருமை.வாழ்த்துக்கள்
ரெண்டு கவிதையும் சூப்பர். கவிதைல உரைநடை போராட்டமே நடத்துரிங்க பா.
முதல், இரண்டு இரண்டுமே ரொம்ப பிடிச்சிருக்குங்க... ரெண்டாவது ஒருபடிமேல் நிற்கிறது...மண்டபத்திற்குள்...
ஒரு கவிதை மனதில் நிகழ்வாக, காட்சியாக (அ)வரியாக வந்து அதை நம் அனுபவத்திற்கும் சொற்களுக்கேற்ப வனைவதில் நிரம்பச் சலிப்பு.ஆனால் உங்களுக்கு மட்டும் பூவைக் கண்டவுடன் வந்துவிடும் வண்டாய், வண்ணத்துப்பூச்சியாய்..இயல்பாக உங்களை வந்தடைந்துவிடுகிறது. சொல்லப் போனால் சிலர் கவிதையை கண்டடைகிறார்கள். சிலரைக் கவிதை கண்டடைகிறது. நீங்கள் இரண்டாவது ரகம். குழந்தையே அழகு..சிரிக்கும்போது சொல்லவும் வேண்டுமோ..கவிதைக்கு உங்கள் வார்த்தைகளும் வடிவுமும் அப்படித்தானிருக்கிறது. வாழ்த்துக்கள்.
இரண்டுமே அழகாக விரிந்திருக்கிறது.
உணர்தல் காட்டும் நிகழ்வுகளை சட்டென எளிமையாக மடித்து கொடுப்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல.
வாழ்த்துகள் பா.ராஜாராம்.
அன்புடன்
ஆதவா.
முதலாவது :)
இரண்டாவது - ம்ம்.....
சிரிப்பதே சமாளிக்க மட்டும்தான் என்றாகிவிட்டது..
விகடன்- வாழ்த்துகள்
இரண்டாம் கவிதை மிகப் பிடித்தது.
வரிகள் லேசாகதான் தெரிகிறது
எனினும் ......
கணம் சொல்லிப்போகிறது.
அருமை பாரா. அசத்துங்க
//sakthi said...
அந்த இரண்டாவது கவிதையில்
கனத்துப்போவதாய் உணர்கிறேன்!!!! //
repeat.
கவிதை அருமை ,ரசித்தேன் .
சித்தப்பா....
இரண்டுமே...எதார்த்ததின் உரசல்கள்.....
டைரக்ட் டச்சிங்ஸ்!
பாரா,
போனவாரம் போட்டது 'போட்டோ' அனுப்புனதை ஞாபகப்பட்டுத்தி, கல்யாண மண்டபம் வரை கொண்டுவந்திருச்சி பார்த்திகளா!
அன்பு பாரா,
எப்படி இருக்கீங்க!
முதல் கவிதையில் இருக்கும் ஒரு ப்ளாக் ஹுயூமர் கொஞ்சம் அதிர்வை ஏற்படுத்துகிறது. ஆனந்த விகடனில் வருவது வழக்கமாகி விட்டது. பாரா யார் என்று யாரும் கேட்க போவதில்லை, இருந்தாலும் கேட்டால் ஆனந்தவிகடனில் எழுதுவாரே அவரு என்று சுலபமாய் சொல்லிவிடலாம் இனிமேல்.
ஆனந்த விகடனுக்கு அறிமுகமே பாரா கவிதை வருமே அதுதாங்கிற அறிமுகம் நிகழக்கூட வாய்ப்பிருக்கிறது பாரா.
இரண்டாவது கவிதை புது மொந்தையில் பழைய கள் தொட்டுக் கொள்ளும் வெஞ்சனம் மட்டும் தான் மாறுகிறது... சிலசமயம் மொச்சை, சில சமயம் கருப்பு சுண்டல் என்று... இது என் தவறாகவும் இருக்கலாம் பாரா... ஒரே கவிதை திரும்ப திரும்ப... திகட்டவில்லை ஆனாலும் ரெப்படிசன் இருக்குங்குறத மறுக்க முடியல...
இழந்த காதலிகளிடம் அப்படியே எஞ்சி இருக்கும் காதல் மட்டும். ஒரு பார்வையும், பேசாமல் பேசும் வார்த்தைகளும், மகனின் தலை கோதுதல் மட்டுமே எத்தனை கிறக்கம், முகிழ்ச்சிக்கு பின்னான கிறக்கமாய் கண் செருகி கிடக்க வைக்கிறது. மண்டபங்கள் எத்தனை சந்தோஷங்களையும், கண்ணீரையும் பார்த்திருக்குமோ. பதுமைகள் பொதித்து வைத்திருக்கும் ரகசியங்கள் எத்தனை பாரா...
பழைய கள்ளென்றாலும் கள் தானே...
அன்புடன்
ராகவன்
ரொம்ப நல்லாயிருக்குங்க
விகடனிலும் படித்தேன்
அண்ணா அண்ணா அண்ணா !
முதல் கவிதை இரண்டாவது.
இரண்டாவது முதலாவதா பிடிச்சிருக்கு.
VIKADA-KAVIKKU VAAZHTHTHUKKAL...:)
2 kavithaikalilume vazhamaipola rajarama sir!
thalaippu pidichchurukku.
முதல் கவிதையை அருமை
மாமா,
பழசெல்லாம் .... வருது போல.
ரெண்டுமே பிடிச்சிருக்கு மாமா.
மாமாவின் ‘கருவேல நிழல்’ நூல் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றேன். மாப்பிள்ளை ஜமால் பரிசளித்தார்.
1st one.. the best in recent times..
விகடன் z lucky :)
இரண்டும் பிரமாதமய்யா...
முதல் ஆச்சரியப்படுத்தியது வித்தியாசத்தில்... :)
முதலாவதாகவுள்ளதை யாராவது பட்டிமன்ற மேடையில் பேசி சிரிக்கவைக்க இந்நேரம் தயாராகிவிட்டிருப்பார்கள் என்றெண்ணுகிறேன்
இரண்டாவது கவிதை எனக்கு மிகவும் பிடிக்கிறது.
முதல் கவிதையை படிச்சவுடன். ஒரு சின்ன ஜெர்க். அதுதான் அதோட வெற்றி.
இரண்டுமே சூப்பர் அண்ணா.
மக்கா ரெண்டுமே அருமை.. வழக்கம் போல ஆனா இந்த கமெண்ட் பாருங்க ... ஹாஹாஹா..
நசரேயன் said...
//வந்ததிலேயே
சிறந்த புகைப் படத்தை
தேர்வு செய்திருப்பார்கள் போல.//
என் போட்டோ கிடைச்சி இருக்குமோ ??
அன்பின் பாரா இரண்டு முறை ஆனந்த விகடன் வாங்கிப்படிக்கும் போதும் அப்படியே என் கவிதை வந்தது போல வீட்டுக்காரியிடம் காட்டினேன்.
அப்படியொரு ஆனந்தம் வருமளவுக்கு பிடித்துப்போனது எதனால் ?
இன்னும் போட்டோ கூட அரிச்சலாகத்தான் நினைவுக்கு வருகிறது.குரலும் கூட மறுமுறை கேட்ல்கும் போது புதுக்குரலாகவே இருக்கிறது. இருந்தும் ஒரு யுகாந்திர
ஸ்நேகம் ஒட்டிக்கொண்டது எப்படி ?
எழுத்துக்கு எழுத்துக்கு மட்டுமே அப்படி ஒரு வல்லமை இருக்கிறதா ? இல்லை அதோடு சேர்ந்து ஒட்டிக்கொண்ட அப்பழுக்கில்லாத அன்புக்குமா?
மதுரையில் திருசீனாவைச்சந்தித்தேன்.வலைச்சரம் எழுத வாரீகளா என்று கேட்டபோது.மூடிதிறந்து கொப்பளிக்கும் பாராவின் எழுத்துக்கள் தான் வாசனையாய் வந்தது.
இதை பத்தியாக்கநினைத்தேன் அது தோதுப்படாது.இதோ மாதுவோடு சென்னைக்கு கிளம்புகிறேன்.ஒரு வாரம் ஓடிப்போகும். இடையிடையே ஓசிப்பேப்பர் பார்ப்பது போல அவனது லேப்டாப்பில் எட்டிப்பார்த்துக்கொள்வேன்.
சொல்ல விட்டுவிட்டேன் பாரா. ரெண்டு கவிதையும் ஆவி யில் அள்ளுகிறது.
இரண்டுமே அருமை.. உங்க எழுத்துக்கு கேக்கவா வேணும்
நிறைய கல்யாண மண்டபங்களுக்கு போன அனுபவம் மாதிரி இருக்கு பங்கு !!!!!!
வாழ்த்துக்கள் பங்கு
விஜய்
பா.ரா.எழுத்து நாளுக்கு நாள் மெருகு கூடிக் கிட்டே போகுது! அதுல இந்த கவிதைங்க ஒரு ஜொலிப்பு!
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
அனைவருக்கும் நன்றியும் அன்பும்!
தடமறிந்தேன் அண்ணா இரண்டும் நல்லா இருக்கு
Post a Comment