Monday, July 27, 2009

மஞ்சுவிரட்டு



ஞ்சுவிரட்டுக்கு போக
ஆறேழு காரணங்கள் உண்டு.

ரமேறி நின்று மாடணைய
பார்ப்பது ஒரு காரணமென
கொள்ளலாம்.

கொல்லையில் நுழைந்தால்
சாராயம்.
வாசலில் நுழைந்தால்
கறிச்சோறு
எல்லாவீட்டிலும்.

வாடாமல்லி
பூச்சூடிய சிறுசுகளை
டிராக்டர் வண்டிகளில்
வேறெப்போதும்
காணகிடைக்காதுதானே.

லை கரும்பு தின்று
சக்கையை
மச்சான்களின் மேல் எறிய
மச்சினிகளும் வருகிறார்கள்.

ஸ் வியாபாரிகளின்
அதட்டல் மீறி
ஹாரன் அடித்து சிரிக்கிற
சிறுவர்கள்
வேறொரு ஓவியம்.

பிரியம் தவறக்கூடாதென
போகலைன்னா ஆத்தா கோவிக்கும்
காரணங்களை காட்டி
இடுப்பு குழந்தைகளோடு
வந்து சிரித்து
"இறங்கி புடி....ஆம்பளை"
எனச்சீண்டும்
கன்னக்குழி கறுப்பிகளும்
காணக்கிடைப்பதுண்டு கூடுதலாக.

போக,
வேறு சிலவும் உண்டு.

னால்...
நான்தான் சொன்னேனே
மஞ்சுவிரட்டுக்கு போக
ஆறேழு காரணங்கள்தான்
உண்டென.

38 comments:

நாடோடி இலக்கியன் said...

//ஐஸ் வியாபாரிகளின்
அதட்டல் மீறி
ஹாரன் அடித்து சிரிக்கிற
சிறுவர்கள்
வேறொரு ஓவியம்.//

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.

எங்க ஊர் மஞ்சு விரட்டுக்கு போய் வந்த ஃபீல் கொடுத்து உங்க கவிதை.

கவிதாசிவகுமார் said...

அப்படியே ஒரு மஞ்சுவிரட்டு களத்தில் மாட்டு வண்டியில் அமர்ந்து நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனை காரணங்களையும் நேரில் பார்த்த பிரமிப்பை ஏற்படுத்தியது கவிதை. மஞ்சுவிரட்டு வீரமாக மாடு பிடிப்பதற்கு மட்டுமின்றி அதற்குள் இத்தனை ரசனைமிக்க காரணங்கள் உண்டு என்று சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது சிறப்பு.

நேசமித்ரன் said...

பிரியம் தவறக்கூடாதென
போகலைன்னா ஆத்தா கோவிக்கும்
காரணங்களை காட்டி
இடுப்பு குழந்தைகளோடு
வந்து சிரித்து
"இறங்கி புடி....ஆம்பளை"
எனச்சீண்டும்
கன்னக்குழி கறுப்பிகளும்
காணக்கிடைப்பதுண்டு கூடுதலாக.


போக,
வேறு சிலவும் உண்டு.//

இந்த வரிகள் சொல்லாத கவிதை பேரழகு

//மாடணய //

மாடணைய எது சரி ?

\\மச்சான்களின் மேல் எறிய
மச்சினிகளும் வருகிறார்கள்.//

அப்புறம் ஹாரன் சிறுவர்கள்
கன்னக்குழி கறுப்பிகள்

அற்புதம்
வேறென்ன சொல்ல

தெய்வா said...

கன்னக்குழி கறுப்பிகளும்....

ராஜாராம் உன்னால் மட்டும் தான் இதை இப்படியே
சொல்ல முடியும்...

யாத்ரா said...

அருமை, ஒரு அருமையான மஞ்சு விரட்டுக்கு போய் வந்தது போலிருக்கிறது.

யாத்ரா said...

என் தம்பி,(திரு ரமேஷ் குறிப்பிட்டிருந்த) ஒரு பிரௌசரை தரவிறக்கம் செய்து தந்தான், அதில் இங்கு பின்னூட்டமிடலாமென முயற்சித்துப் பார்த்தேன், பின்னூட்டமிட முடிகிறது, மகிழ்ச்சி. ரமேஷ் அவர்களுக்கு நன்றி

ஹேமா said...

ராஜா,நானும் மலையகப் பகுதியில் வசித்திருக்கிறேன்.அப்போது இந்த
"மஞ்சு விரட்டி"நிகழ்வில் கலந்து சந்தோஷப்பட்டிருக்கிறேன்.நீங்கள் சொன்ன அத்தனையும் அப்படியே கண்ணுக்குள் வருகிறது.இனி எங்கே அந்த நாட்கள் என்னைப் பொறுத்த மட்டில்!

அ.மு.செய்யது said...

அசத்தலா எழுதியிருக்கீங்க ராஜாராம்...

உங்கள் காரணங்கள் வெகு அழகு...

இந்த கவிதையை குறித்து வைத்து கொள்கிறேன்...பின்பு எப்போதாவது மேற்கோள் காட்ட உதவும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மஞ்சு விரட்டு என்றாலே என்னவென்று தெரியாத எனக்கு அதன் சுவாரசியத்தை நன்றாகப் புரிய வைத்திருக்கிறீர்கள்.நன்றி நண்பரே.

பா.ராஜாராம் said...

நாடோடி இலக்கியன்
=====================
வரணும் இலக்கியன்.ஆற அமர உங்களின் முதல் மழைக்கும் வரவேணும்.மழை என்றதும் நண்பர் நேசமித்ரனின்,இன்று வாசிக்க கிடைத்த "மழை-மூன்று குறிப்புகள்"நினைவிற்கு வருகிறது.நேரம் கிடைக்கிறபோது நேசாவின் மழையிலும் நனைய வேணும் இலக்கியன் ...உங்களின் "ஜன்னலோர இருக்கை"யும்,"கவிதைகள் மாதிரி சிலவும்"வெகுவாக கவர்ந்தது.மீண்டும் வர வைக்கிற எழத்து!வருவேனும் கூட!நன்றியும் அன்பும் இல்லக்கியா...

தமிழ்
======
வாடா கவிதும்மா...மஞ்சுவிரட்டையும்,பொங்கல் விழாவையும்,வானியங்குடியின் பாட்டு போட்டியையும்,முனியம்மாள் அக்காவையும்,பேச்சிமகன் தாத்தாவையும்...இறக்கி வைத்துவிட்டா,நாம் வண்டி ஏறி இருக்கிறோம்?எல்லோருடனும்,எல்லாவற்றையுடனும்தான்..அன்பு நிறைய கவிதும்மா!

நேசமித்திரன்
============
ரொம்ப நன்றி நேசா..."மழை மூன்று குறிப்பு" பிரமாதமாய் வந்திருக்கு.என் தளத்தில் வந்து எழுதுகிற உங்கள் கவிதைகளுக்கும்,உங்கள் தளத்தில் எழுதுகிற உங்கள் கவிதைகளுக்கும் பிறந்த குழந்தை போல!...எப்பவும் போலான அன்பும் நன்றியும் நேசா!

நட்புடன் ஜமால் said...

[[ஆலை கரும்பு தின்று
சக்கையை
மச்சான்களின் மேல் எறிய
மச்சினிகளும் வருகிறார்கள்.]]

மிகவும் இரசித்தேன்

மேலும்

[[ஆனால்...
நான்தான் சொன்னேனே]]

வெகு இயல்பாய் - மிகவும் அருமை நண்பரே!

Kannan said...

சொன்னவைகளை விட சொல்லாதவைக்கு உயிர்ப்பு அதிகம், கடைசி வரி இக் கவிதையின் உச்சம்.

RRSLM said...

எனக்கெல்லாம் கவிதைய ஒரு பத்து பதினைந்து முறை திருப்பி திருப்பி படித்தால் தான் ஒரு 10% ஆவது புரியும்........ உங்க கவிதைய படிக்க படிக்க அப்படியே ஒரு திருவிழா கூட்டத்துகுள்ள போய் ஆனந்தமா சுற்றி கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு....வெகு அருமை

ஷங்கி said...

ஓவியச் சிறுவர்களும், கன்னக்குழி கறுப்பிகளும் ஒரு கோட்டோவியாமாக மனதில் நின்று விட்டார்கள். நன்றி!

Nathanjagk said...

அன்பு பா.ரா.. திருவிழா ஊருக்குள் திணறலாய் சுற்றி வந்தது ​போலிருக்கு!!! சாராய வாசத்தில் உடல் முறுக்கேறுகிறது! சீண்டும்
கன்னக்குழி கறுப்பிகள் நினைப்பில் மனம் கிளர்கிறது. காரணங்கள் ஆறேழுதான், ஆனா கனாக்கள் கடல் ​கோடி!!

Anonymous said...

நல்ல கவிதை ராஜாராம். காட்சிகள் கண்முன்னே சட் சட்டென விரித்தன.

S.A. நவாஸுதீன் said...

வரிகளில் எதார்த்தம் நிறைந்திருப்பது அழகு. காரணங்கள் அனைத்தும் கொள்ளை அழகு

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கதைக் கவிதை பிடித்திருக்கிறது.

துபாய் ராஜா said...

அருமை.அருமை.

அழகான வரிகளில் காட்சிகள் கண்முன்.

படமும் நன்று.

இரசிகை said...

arumai...

vera kaarangalaiyum solli irunthirunthaal rasiththiruppom...:)

மண்குதிரை said...

arumai mikavum rasiththeen

நர்சிம் said...

அற்புதம் ஸார். என்ன சொல்ல.. மிக அருமை.

ஜல்லிக்கட்டு..நினைவுகளை மீட்டிவிட்டீர்கள்.

பா.ராஜாராம் said...

தெய்வா
==========
நல்லா இருக்கியா மக்கா?..".கன்னக்குழி கறுப்பிகளை" speciall ஆ, சொல்லுறியே,..லக்ஷ்மி வீட்டில் இல்லையா?குமரன் சமீபமாக எழுதிய கவிதைகளை சுந்தரா,அவனின் தளத்தில் வெளியிட்டிருந்தான் தெரியுமா?,..மக்கா..எவ்வளவு வச்சுருந்துருக்கான் உள்ளுக்குள்ளயே..சந்தோசமாக இருந்ததுடா மீண்டும் அவன் எழத வந்திருப்பது...சுந்தர் தளம் போ.அவன் கவிதைகள் பார்க்கலாம்.அன்பும் நன்றியும் மக்கா..

யாத்ரா
========
நேற்றே உங்கள் பின்னூட்டம் பார்த்து விட்டேன்...உடன் பதில் சொல்ல முடியாத,எதிர் பாரா வேலைகள்.நல்லா இருக்கீங்கதானே மக்கா?...தம்பியும் நண்பர்களும் இருக்கும் வரையில் கற்றுக்கொள்ள சுலபம்தான் நம் மாதிரி மனிதர்களுக்கு..இல்லையா?ரமேஷும், இது குறித்தான ஒரு பதிவு வெளியிட உள்ளார்.எல்லோருக்குமே உபயோகமாகட்டும்...இனி நேரடியாக அன்பு செய்ய முடியும் நம்மால்!நன்றியும் அன்பும் யாத்ரா...

ஹேமா
========
ஆமாவா ஹேமா?...எதுவும் எங்கும் போய்விடாது ஹேமா,..நமக்கு இல்லாவிட்டாலும் நம் குழந்தைகளுக்கு என நம்பிக்கை கொள்வோம்...மற்றபடி தொடர்ச்சியாக வந்து உற்ச்சாக படுத்தும் உங்கள் அன்பிற்கு எப்பவும் போலான என் அன்பும் நன்றியும்தான்..

நந்தாகுமாரன் said...

க(வி)தை நல்லாயிருக்குங்க

பா.ராஜாராம் said...

அ.மு.செய்யது
===============
ஆகட்டும் செய்யது...பிரியங்கள் ஏந்தி தருகிறது,தொடர்ச்சியான உங்கள் வாசிப்பும் அன்பும்.வேறு,விசேஷங்கள் என்ன தோழரே?நலம்தானே?நிறைய அன்பும் நன்றியும்...

ஜெஸ்வந்தி
===========
ஆகட்டும் தோழி...எனக்கு கிடைத்த அனுபவத்தை உங்களுக்கு காட்சியாக்கவும்,உங்களுக்கு கிடைத்த காட்சியை எனக்கு அனுபவிக்க கொடுக்கவும்தானே இந்த பதிவுகள்!நிறைய அன்பும் நன்றியும்...

நட்புடன் ஜமால்
================
ரொம்ப நன்றியும் அன்பும் ஜமால்...குழந்தைகள் மேலும்,குடும்ப உறவுகளின் மேலும் கொண்டிருக்கும் உங்களின் அக்கறையான பகிர்வுகளும் பதிவுகளும்,..மனித நேயமிக்க மனிதனாக அடையாளபடுத்திகொள்ள உதவியாக இருக்கிறது.நுண்ணிய சமுதாய அக்கறை...பிரவாகமான அன்பே!தொடருங்கள் ஜமால்...

தினேஷ் said...

//ஐஸ் வியாபாரிகளின்
அதட்டல் மீறி
ஹாரன் அடித்து சிரிக்கிற
சிறுவர்கள்
வேறொரு ஓவியம்//

இது ஒரு அள்வில்லா மகிழ்ச்சி காவியம் , சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை , அதை அனுபவித்து பார்த்த இப்பொ நினைச்சா ..

அட அட அட

நட்புடன் ஜமால் said...

நுண்ணிய சமுதாய அக்கறை...பிரவாகமான அன்பே!தொடருங்கள் ஜமால்...]]

மிக்க நன்றி நண்பரே!

பா.ராஜாராம் said...

கண்ணன்
============
மிகுந்த அன்பும் நன்றியும் கண்ணா..."சொன்னவைகளை விட சொல்லாதவைகளுக்கு உயிர்ப்பு அதிகம்"டேய்...ராஸ்கல்...

RR
===
ரொம்ப நாளாய் ஆளை காணோம் mr.RR!...நீங்கள் சொல்லியவிதம்,"அப்படியே திருவிழா கூட்டத்துக்குள்ள போய் ஆனந்தமாய் சுற்றிக்கொண்டு இருப்பது போல் ஒரு உணர்வு"ரொம்ப அற்புதமாக இருந்தது!..கவிதையை உணர்ந்தவர்கள் உணர தருவது உன்னதமான அனுபவம்!இந்த உன்னதத்தை நீங்கள் தந்தீர்கள் RR!..நிறைய அன்பும் நன்றியும்!

சங்கா
=========
ஆகட்டும் சங்கா...உங்கள் தொடர்ச்சியான அன்பு மிகுந்த உற்சாகம் எனக்கு!அன்பும் நன்றியும்..

நேசமித்ரன் said...

என்னை பரிந்துரைக்கும் தொடர்ந்த அன்பிற்கு
நன்றியெல்லாம் சொல்ல மாட்டேன் நண்பா..
ஒளியை நிறமாக்கி காற்றை வாசனையாக்கும் மலர் போல் நன்றியை பிரியமாக்கி
பொழியும் வரம் கேட்பேன்

பா.ராஜாராம் said...

ஜெகநாதன்
===========
ரொம்ப நாள் ஆனது போல் இருக்கு ஜெகன் உங்களை பார்த்து...பத்து நிமிஷம் பிரிந்தாலும் அப்படி உணரும் மனிதமும்,எழுத்தும்!"பச்சபுள்ளை" ...சும்மா கலக்கலா போய்க்கிட்டுருக்கு மக்கா...நன்றியும் அன்பும் ஜெகன்!

வடகரை வேலன்
=================
வரணும் வேலன்...உங்களின் சுயம் தொலைத்த மற்றொரு முகம்...வாசித்து வந்திருக்கிறேன்..ஆற அமர மீண்டும் வரவேணும்.உங்கள் அன்பிற்கு மிகுந்த அன்பும் நன்றியும்!

S.A. நவாசுதீன்
==============
வரணும் நவாஸ்.உங்கள் தொடர் வருகையும் உற்சாகமும் அவ்வளவு சந்தோசபடுத்துகிறது.எப்பவும் போலான அன்பும் நன்றியும்!

பா.ராஜாராம் said...

ஜ்யோவ்ராம் சுந்தர்
====================
மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா.

துபாய் ராஜா
============
வணக்கம் ராஜா.உங்கள் முதல் வருகை நிறைய நெகிழ்வூட்டுகிறது!..மிகுந்த அன்பும் நன்றியும்!உங்கள்...அ.ஆ.இ.ஈ...யின் படங்களும் கவிதையும் ரசனை மிக்கது!நிறைய அன்பும் நன்றிகளும்!

ரசிகை
=========
நமுட்டு சிரிப்பு ரசிகை.!..நல்லா இருக்கீங்களா?உண்மையில் இந்த மஞ்சுவிரட்டின் சரியான முகம் அல்லது மற்ற காரணங்கள் வாசிக்க விருப்பமா உங்களுக்கு?...நர்சிம்மின் "ஜல்லிக்கட்டு" வாசித்து பாருங்கள்...நானெல்லாம் மரத்தில் நின்றபடி பார்த்ததுதான்!

anujanya said...

ஒரு சிறுகதையே கவிதையில்.
மிகப் பிடித்தது கடைசி வரிகள்.

அனுஜன்யா

பா.ராஜாராம் said...

மண்குதிரை
============
நல்லா எழுதுபவர்களிடமிருந்து தொடர்ச்சியாய் ஊக்கம் கிடைப்பதில் மனசு நிறைந்து வருகிறது மண்குதிரை...உங்கள் இயற்பெயர் அறிய விருப்பம் எனக்கு...பெயரில் ஒன்றும் நிறைந்து விடபோவதில்லைதான்.ஆயினும் இப்படியான கிறுக்குத்தனங்கள் எல்லாம் சேர்ந்தவன்தான் நான் என அறிய தருவதில் கொஞ்சம் கூச்சமும் நிறைய சந்தோஷமும்...

நர்சிம்
======
ஆகட்டும் நர்சிம்...நிறைய அன்பும் நன்றியும்.உங்கள் ஜல்லிக்கட்டு வாசித்து விட்டேன்.நுனுக்கமான விபரங்கள் பிரமிப்பூட்டியது.களத்தில் நிற்காது,பார்வையாளனாக இவ்வளவு விபரங்கள் சேகரிக்க இயலாது...எப்படியோ...நல்ல பகிர்வு!

நந்தா
======
மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா..

சூரியன்
==========
வரணும் சூரியா...விளையாட்டில் நிறைய ஆர்வம் போல...ஒரு காலத்தில் மதுரை காமராஜ் பல்கலை கழகத்தின் தடகள வீரர்களில் ஒருவனாக இருந்த நினைவை மீட்டுக்கொண்டேன் உங்கள் தளத்தில்...இப்பவும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.வாழ்வு துரத்துகிறது...உங்கள் முதல் வருகையில் நீங்கள் அறியாத ஒரு நினைவை புதிப்பித்து தருகிறீர்கள்...ஒன்றை தொட்டுதானே மற்றொண்டும்!அன்பும் நன்றியும்...

பாலகுமார் said...

களத்துல எறக்கி விட்டது மாதிரி இருந்துச்சுங்க... நல்லா இருக்கு!

பா.ராஜாராம் said...

ஜமால்,நேசா,அனு...மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா..

பா.ராஜாராம் said...

பாலகுமார்
============
உங்களை எனக்கு அறிமுகம் செய்து தந்ததில் மிகுந்த அன்பும் நன்றியும்."என் மகனின் முதல் ஆசிரியருக்கு" அவ்வளவு அழகாய் வந்திருக்கு.வந்து கிறங்கி கிடக்க நிறைய வைத்திருக்கிறீர்கள் உங்கள் வீட்டில்.இனி என்னை அடிக்கடி பார்க்க நேரிடும் உங்களுக்கு.அன்பு நிறைய...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

:)

-ப்ரியமுடன்
சேரல்

பா.ராஜாராம் said...

நன்றி சேரல்.அன்பு நிறைய.