Tuesday, December 8, 2009

கடனுக்கு கவிதைகள்


(Picture by CC licence, thanks B. Sandman)

பாக்கியை கொடுத்துட்டு
பலசரக்கு வாங்கலாமென
கடைக்காரர் சொன்னதை
சொன்னேன் அம்மாவிடம்.

சொல்லவில்லை அவளிடம்
புறப்படும்போது
கடைக்காரர் அள்ளி வைத்த
உள்ளங்கை சர்க்கரையை.

துக்கெடுத்தாலும்
அழுகிறாள், அடிக்கிறாள்
அம்மா இப்போ.

****

கூட்டிக்கூட்டிப் பார்த்தேன்
குறையக்காணோம் கடன்.
கடனோடு கவலையும் சேர்ந்தது.
கூட்டலுக்கு முன்
கடன் மட்டுமே இருந்தது.

****

காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கியாவது
பரவால்லைடா இருக்கும் போது தா
என்பவனுக்கு தர வேணும்
இந்த மாதமாவது.

****

ந்த சம்பளத்தில்
எப்படியும் திருப்பலாம்
என தொட தயாரானான்.
தண்ணில எழுத வேண்டியதுதான்
என தர தயாரானாள்.
வேறு வழி இன்றி
வாழ்ந்து கொண்டிருந்தது
அதே தாம்பத்யம்.

****

"ராஜாராம், புனர்பூச நட்சத்திரம்"
அர்ச்சனை தட்டில் கை வைத்த யாரோ அவள்
எல்லோரும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டிருந்தாள்.
கடன் வாங்கியே பழகிய நான்
கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டேன்.
"அவிட்ட நட்சத்திரம்"

49 comments:

செ.சரவணக்குமார் said...

பா.ரா அண்ணே.. உங்களிடமிருந்து மீண்டும் ஒரு மிகச்சிறந்த கவிதை.

vasu balaji said...

//கடன் வாங்கியே பழகிய நான்
கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டேன்.
"அவிட்ட நட்சத்திரம்"//

இதற்கு மட்டுமே உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் பா.ரா. ஒவ்வொரு கவிதையும் நெஞ்சுக்கூட்டில் பந்தாய் அடைக்கிறது.

இன்றைய கவிதை said...

//"ராஜாராம்,புனர்பூச நட்சத்திரம்"
அர்ச்சனை தட்டில் கை வைத்த யாரோ அவள்
எல்லோரும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டிருந்தாள்.
கடன் வாங்கியே பழகிய நான்
கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டேன்.
"அவிட்ட நட்சத்திரம்"//


கலக்குங்க!
பா.ரா!!

-கேயார்

விஜய் said...

அவிட்ட நட்சத்திரம் தவிட்டு பானையெல்லாம் தங்கமென்பார்கள்

சீக்கிரம் கொட்டப்போகிறது

வாழ்த்துக்கள்

விஜய்

பூங்குன்றன்.வே said...

//கூட்டிக்கூட்டிப் பார்த்தேன்
குறையக்காணோம் கடன்.
கடனோடு கவலையும் சேர்ந்தது.
கூட்டலுக்கு முன்
கடன் மட்டுமே இருந்தது.//

உணர்வுப்பூர்வமான கவிதைகள் பா.ரா. கலக்கீட்டீங்க.எல்லாமே அசத்தல் என்றாலும் இந்த வரிகள் மட்டும் நெஞ்சுக்குள் நிற்கிறது.

முரளிகண்ணன் said...

\\கடன் வாங்கியே பழகிய நான்
கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டேன்.
"அவிட்ட நட்சத்திரம்"\\

super

RaGhaV said...

//கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டேன்//

இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சியிருக்கு பா.ரா.. :-))

கவிதாசிவகுமார் said...

அவிட்ட நட்சத்திரமா நீங்க, அதான் உங்க கைவிரல் பட்ட பேனாவிலிருந்து ஜொலிக்கும் வைரங்களாய் கவிதை மழை கொட்டுது. கலக்குங்க.

அ.மு.செய்யது said...

//காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கியாவது
பரவால்லைடா இருக்கும் போது தா
என்பவனுக்கு தர வேணும்
இந்த மாதமாவது.//

எல்லா கவிதையுமே நல்லா இருந்தாலும் இது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது பா.ரா..இத கூட போட்டிக்கு அனுப்பிச்சிருக்கலாம்.

அவிட்ட நட்சத்திரமும் சூப்பர்.உங்க கற்பனையை எங்களுக்கும் கொஞ்சம் கடனுக்கு தாங்களேன்.

கலகலப்ரியா said...

ஒவ்வொரு கவிதையும் மிகச் சிறப்பு..!

//காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கியாவது
பரவால்லைடா இருக்கும் போது தா
என்பவனுக்கு தர வேணும்
இந்த மாதமாவது//

உண்மை உணர்வுகள்..! எல்லாமே..!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை சூப்பர். ஏன் தான் இப்படி மனத்தைக் கசக்கி விடுகிறீர்கள்.?

ஹேமா said...

அண்ணா எப்பவும்போல மனதைத் தட்டிச் செல்லும் இயல்பான நடையில் நல்ல கவிதை.

யாத்ரா said...

எல்லாமே ரொம்பப் பிடிச்சிருக்குண்ணா

சுசி said...

படிச்சு முடிச்சதும் எனக்கும் சொற் பஞ்சம் வந்துவிட்டது.

நல்லா இருக்கு ராஜாராம்.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே...

பின்னீட்டீங்க...

உங்க கவிதைகளை வாசிக்கின்ற போது, இனம் புரியாத ஒரு உணர்வு உண்டாகின்றதுங்க...

Priya said...

நல்ல கவிதைகள்!

ஆ.ஞானசேகரன் said...

எப்பொழுதும் போல கடனைப்பற்றிய பல்முனை வரிகள் எதார்த்தமாக....

புலவன் புலிகேசி said...

//காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கியாவது
பரவால்லைடா இருக்கும் போது தா
என்பவனுக்கு தர வேணும்
இந்த மாதமாவது.//

அழகா சொன்னீங்க பா.ரா....

நாடோடி இலக்கியன் said...

எளிமையான வரிகளில் மிகச் சிறப்பான கவிதைகள்.

அத்தனையும் அருமை.

ரோஸ்விக் said...

சித்தப்பா...கடன்காரனுக்கும் அருமையா கவிதை சொல்லுறீங்க...இத படிச்சா வலியெல்லாம் தீரும்...

பா ரா கவிதையெல்லாம் இருக்குது ஜோரா...

உயிரோடை said...

//கடைக்காரர் அள்ளி வைத்த
உள்ளங்கை சர்க்கரையை.//

knot பிடிப‌ட‌லை.

//கூட்டலுக்கு முன்
கடன் மட்டுமே இருந்தது.//

classssss

//அவிட்ட நட்சத்திரம்//

யாருக்கு அவிட்ட‌ம்?

அண்ணா வ‌ர‌ வ‌ர‌ முடிச்சி அதிக‌ போட்டு வைக்கிறீங்க‌. விள‌ங்க‌மாட்டேகிதுல்ல‌

Cable சங்கர் said...

/"ராஜாராம், புனர்பூச நட்சத்திரம்"
அர்ச்சனை தட்டில் கை வைத்த யாரோ அவள்
எல்லோரும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டிருந்தாள்.
கடன் வாங்கியே பழகிய நான்
கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டேன்.
"அவிட்ட நட்சத்திரம்"
//


தலைவரே சூப்பர் சீன்.. கண் முன்னே ஓடுகிறது.. ம்ஹும்.. நானும்தான் இந்த மாதிரியெல்லாம் எழுதணும்னு நினைச்சிட்டு இருக்கேன் வந்து தான் தொலைய மாட்டேங்குது..

கோமதி அரசு said...

நெஞ்சை நெகிழ வைக்கும் கவிதை.

வாழ்த்துக்கள்! வாழ்கவளமுடன்.

ஷங்கி said...

வழக்கம்போலதான்! என்ன சொல்ல?!
அப்புறம் புத்தகத்திற்கு வாழ்த்துகள் நண்பரே! (தாமதமான வாழ்த்துதான், இருந்தாலும்...!)

Rajan said...

:-)

கல்யாணி சுரேஷ் said...

//பாக்கியை கொடுத்துட்டு
பலசரக்கு வாங்கலாமென
கடைக்காரர் சொன்னதை
சொன்னேன் அம்மாவிடம்.

சொல்லவில்லை அவளிடம்
புறப்படும்போது
கடைக்காரர் அள்ளி வைத்த
உள்ளங்கை சர்க்கரையை.

எதுக்கெடுத்தாலும்
அழுகிறாள், அடிக்கிறாள்
அம்மா இப்போ.//

எனது சிறு வயதில் இது போன்ற அனுபவங்கள் எனக்கும் வாய்த்ததுண்டு

//காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கியாவது
பரவால்லைடா இருக்கும் போது தா
என்பவனுக்கு தர வேணும்
இந்த மாதமாவது.//.

சூப்பர்ண்ணா.

இந்த சம்பளத்தில்
எப்படியும் திருப்பலாம்
என தொட தயாரானான்.
தண்ணில எழுத வேண்டியதுதான்
என தர தயாரானாள்.
வேறு வழி இன்றி
வாழ்ந்து கொண்டிருந்தது
அதே தாம்பத்யம்.

ஏழைகள் வீட்டின் எதார்த்தம்.

எல்லாமே நச் னு இருக்கு. நன்றிண்ணா.

ராமலக்ஷ்மி said...

//காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கியாவது
பரவால்லைடா இருக்கும் போது தா
என்பவனுக்கு தர வேணும்
இந்த மாதமாவது.//

மிகவும் அருமை. இதுவும்..

//கடன் வாங்கியே பழகிய நான்
கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டேன்.
"அவிட்ட நட்சத்திரம்"//

வாழ்த்துக்கள் பா ரா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதல் கவிதை பிடிபடவில்லை

காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கியாவது
பரவால்லைடா இருக்கும் போது தா
என்பவனுக்கு தர வேணும்
இந்த மாதமாவது.

****

இந்த சம்பளத்தில்
எப்படியும் திருப்பலாம்
என தொட தயாரானான்.
தண்ணில எழுத வேண்டியதுதான்
என தர தயாரானாள்.
வேறு வழி இன்றி
வாழ்ந்து கொண்டிருந்தது
அதே தாம்பத்யம். //

கடன் இல்லாத வாழ்வு சுவாரஸ்யப்படாதோ எனத் தோன்றுகிறது பா.ரா

anujanya said...

எல்லாமே அட்டகாசம். முதல் கவிதை வாசகர்கள் கற்பனைக்கு விட்டிருப்பதால், வலி அதிகமாகத் தெரிகிறது.

உரையாடல் அமைப்பின் கவிதைப் போட்டிக்கு, நீங்க ஒரே ஒரு கவிதை கடன் தர முடியுமா?

அனுஜன்யா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//
"ராஜாராம், புனர்பூச நட்சத்திரம்"
அர்ச்சனை தட்டில் கை வைத்த யாரோ அவள்
எல்லோரும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டிருந்தாள்.
கடன் வாங்கியே பழகிய நான்
கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டேன்.
"அவிட்ட நட்சத்திரம்"//


கலக்கிட்டீங்க.

Ashok D said...

:)

அன்பேசிவம் said...

//கூட்டிக்கூட்டிப் பார்த்தேன்
குறையக்காணோம் கடன்.
கடனோடு கவலையும் சேர்ந்தது.
கூட்டலுக்கு முன்
கடன் மட்டுமே இருந்தது//


மகாப்பா......

படித்து படித்துப் பார்த்தேன்
குறையக்காணோம் எதிர்பார்ப்பு.
எதிர்பார்ப்போடு மகிழ்ச்சியும் சேர்ந்தது.
படிப்பதற்கு முன்
எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது.

S.A. நவாஸுதீன் said...

அசலும் வட்டியுமா சேர்த்து வச்சு வெளுத்து வாங்குறீங்க மக்கா.

//கூட்டலுக்கு முன்
கடன் மட்டுமே இருந்தது.//

//இருக்கும் போது தா
என்பவனுக்கு தர வேணும்
இந்த மாதமாவது.//

//கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டேன்.
"அவிட்ட நட்சத்திரம்"//

கடனுக்கும் கௌரவம் கூடியது உங்கள் கவிதையால். அமித்தம்மா சொன்னமாதிரி நிஜமாவே கடன் இல்லாத வாழ்வு சுவாரஸியம் இல்லாத வாழ்வுதானோன்னு தோணவைக்கும் போல.

இரசிகை said...

nenjadaiththathu... valiyaalum santhoshaththaalum.

aththanaikkum poruppu....
rajaram sir kavithaikal mattume:)

க.பாலாசி said...

//காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கியாவது
பரவால்லைடா இருக்கும் போது தா
என்பவனுக்கு தர வேணும்
இந்த மாதமாவது.//

கடன் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்தான் எத்தனையெத்தனை....

அனைத்து கவிதைகளும் அழகு....

சிவாஜி சங்கர் said...

பாராட்ட வார்த்தைகளே இல்ல... பாராது விட்டவரும் பார்க்க பா.ரா.வை....

நேசமித்ரன் said...

""கேட்க்கும்படி"" ?

*********************************
பாக்கியை கொடுத்துட்டு
சொல்லவில்லை அவளிடம்
எதுக்கெடுத்தாலும் கூட்டிக்கூட்டிப் பார்த்தேன்
காசை வச்சுட்டு
**********

அதே தாம்பத்யம்.
"அவிட்ட நட்சத்திரம்"

ரிஷபன் said...

கவிதை நன்றாக இருந்தது.. அதிலும் அவிட்ட நட்சத்திரம் நல்ல பினிஷிங் டச்

தமிழ் said...

அருமையான கவிதைகள்

தங்களின் கவிதையைப் படிக்கையில் பல கவிதைகள் நினைவிற்கு வருகின்றன‌

தங்களின் ஐந்து காசு கவிதையும் , இந்தக் கவிதையும் என்னுடைய வலைப்பூவில் இட அனுமதி வேண்டுகின்றேன்

அன்புடன்
திகழ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அடுத்தமுறை கோவில்ல என் பெயரையும் சொல்லுங்க..அவிட்ட நட்சத்திரம்தான் நானும்

பாலா said...

முதல் கவிதை எனக்கு எக்கசக்கமா புரியுது மாம்ஸ்
பட் எந்தளவுக்கு எடுதுகறதுன்னு தெரியலை
ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் அசத்தல்

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு..

கடந்த மூன்று கவிதைக்கு மேலாக பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்ல இயலாமல் இருக்கு.தற்சமயம் ரியாத்தில் இருக்கிறேன்.பத்து நாளாகவே நல்ல அலைச்சலும் வேலையும்.

கைகளை பிடித்து கொண்டு தனித்தனியாக நன்றி சொல்லவேணும்,என்று நேரத்தை விரட்டி கொண்டிருக்கிறேன்.தாமதமானாலும் தனி தனியாக பேச,நன்றி சொல்ல ஆசை.தாமதமானாலும் சொல்வேன்.

நண்பன் நேசமித்திரன் வேறு "என்ன நன்றி சொல்லாமல்..என்னை விட சோம்பேறியாகி விட்டீர்கள்" என்று திட்டுகிறான்.சூழ்நிலையை சொல்லவும் சாந்தமாகிறான்.

பொறுக்கணும் மக்காஸ்..ப்ளீஸ்.

@திகழ்.

தாராளமாக திகழ்.இது உங்கள் தளம்...உங்களுக்கு இல்லாததா?எடுத்துட்டு போங்க.

நன்றியும் கூட!

ஜெனோவா said...

எதையாவது இயல்பா , எதார்த்தமா எழுதலாம்னா சிக்கல , இனிமே எதார்த்தத்தையே (பா.ரா ) எழுத வேண்டியதான் போல ;-)
அடிச்சு ஆடுங்க பா.ராண்ணே, இது உங்கக் களம் !

rvelkannan said...

நடுத்தர வர்க்கத்தின் எல்லா வலியையும் சொல்கிறது பா.ரா. இனி என்றும் மறக்க முடியாத கவிதைகள் இது.

அம்பிகா said...

சாப்பாட்டுக்கென செல்லம்மாள்
வைத்திருந்த அரிசிமணிகளை
குருவிகளுக்கு இறைத்துவிட்டு
ரசித்த பாரதியைப் போல,
வாழ்வின் இயலாமைகளை,
யதார்த்தங்களை,
கவிதையாய் ரசிக்கும்
உங்கள் மனோபாவம்
பிரமிக்கவைக்கிறது.

இரவுப்பறவை said...

எழுதறதுக்கு கொஞ்சம் கூச்சமா இருந்தாலும்,
அந்த கடைசி கவிதை கண்களைக் கழுவிவிட்டது...

kovai sathish said...

அண்ணா..கடைசி கவிதை பட்டாசுங்க...

கவிதாசிவகுமார் said...

சித்தப்பா தாங்கள் எழுதிய "தொட்டிலில் இட்டு உயிரைக் கிள்ளிய உனக்கு"(JUNE 25) என்ற கவிதையின் பின்னூட்டத்திலேயே தங்களின் கவிதைகளை புத்தகமாக வெளியிடுமாறு எழுதியிருந்தேன். இன்று நிஜமாகவே உங்களின் கவிதை தொகுப்பு அழகான புத்தகமாக வெளிவந்திருக்கிறது. வாழ்த்துக்கள். இந்தியா வரும்பொழுது இந்த கவிதை புத்தகம் வாங்குவேன்.

தொடரட்டும் உங்களின் கவிதை பயணம்.
BEST WISHES.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

மிகுந்த உற்சாகமும்,நன்றியும் மக்களே!