Tuesday, December 22, 2009

அவள்


(Picture by CC licence, Thanks Bradley )

தொல் பொருள்.
ஆராய விரயம்.
ஆயினும் செய்நேர்த்தி.

ட்டுச்சோறில்
புளிச்சாறு பிரியாணி.

யணக் களைப்பின்றி
தூங்கும் தோள் குழந்தை.

பாத தொடு உணர்வில்
சிலிர்ப்பிக் கொள்கிறது
லெச்சுமி பசு.

55 comments:

காமராஜ் said...

அன்பான பாரா. கவிதை அழகு. வணக்கம் சொல்லவந்தேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருக்கு அண்ணா

தொல்பொருள் விரயம்

சிந்தனை நன்று...!

Paleo God said...

என்னா செதுக்கு செதுக்கறீங்க....::)) பிரமாதம்..
//ஈ பாத தொடு உணர்வில்//

சிலிர்க்குது... அதிலும் எங்க தொடுமோ அங்க மட்டும் பசுவோட சதை ஆடும்...

ஹும்ம் பார்த்து ரசிச்சிருக்கேன்.. இப்ப படிச்சு ரசிக்கிறேன்..:))

(சரி வால் இருக்கே :) நோட் பண்ணிக்கிட்டேன்..)

தமிழ் உதயம் said...

பயணக் களைப்பின்றி
தூங்கும் தோள் குழந்தை.///// நேற்றைய பின்னூட்டத்தையே இன்றைக்கும் வழிமொழிகிறேன்

Ashok D said...

:)

வினோத் கெளதம் said...

அட்டகாசம்

நந்தாகுமாரன் said...

மாற்றுக்கவிதை ... அது இருக்கட்டும் ஒரு நாளைக்கு எத்தனை கவிதை எழுதுவீங்க பா.ரா. :) ... தற்போது உங்கள் கவிதைத் தொகுதியை படித்துக் கொண்டிருக்கிறேன் :) ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை பா ரா சார்

vasu balaji said...

மீண்டும் மீண்டும் அதே உணர்வு. பிரமிப்பு.:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகு

நேசமித்ரன் said...

கர்ப்ப வயிறு படியும் காது
தலை தடவும் தாய்

கதிரறுத்த வயலில் கொக்குத்தடம்

பட்டையடித்த மரத்தின் வதை

லாடம் சூட்டில் கண் கசியும் நீர்

- மக்கா கெளப்பிட்டீங்க

அன்புடன் அருணா said...

கலக்கல்ஸ்!

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக எழுதுவதுதான் உங்கள் பலமே.. கலக்குங்க..

இராகவன் நைஜிரியா said...

அருமையிலும் அருமை. ஓவ்வொரு வரியும் அருமை.

பின்னோக்கி said...

எல்லோரும் புரிந்து ரசிக்கும் படி இன்னொரு கவிதை.

Ramesh said...

அற்புதமாக இருக்கு பா.ரா..

na.jothi said...

எனக்கு என்னமோ இது நேசமித்ரனோட தொணி மாதிரி இருக்கு

ராமலக்ஷ்மி said...

//பயணக் களைப்பின்றி
தூங்கும் தோள் குழந்தை.//

அழகு. அத்தனை வரிகளுமேதான். வாழ்த்துக்கள் பா ரா.

Chitra said...

கட்டுச்சோறில்
புளிச்சாறு பிரியாணி.............எளியவரின் திருவிழா சோறு. அருமைங்க.

ராகவன் said...

அன்பு பாரா,

அழகான கவிதை. ரிசல்டில் தொங்கியதை தூக்கி நிறுத்துகிறது இந்த கவிதை. என்ன ஒரு சொற்கட்டு, சிக்கனம். தலைப்பு அம்மாவின் சுங்குடி முந்தியாய் இறுக்குகிறது மனசை, மொத்த கவிதையும்.

உங்களின் உறவுக்குடித்தனங்கள், நிழலாய் விரிந்து குளிர் பரப்புகிறது. எத்தனை பரிமானங்களில் உறவு மிளிர்கிறது செதுக்க செதுக்க தனது பட்டைகளில் புது வர்ணத்தை பாய்ச்சுகிறது.

எனக்கு தமிழிஷ் பற்றி ஏதும் தெரியாது, ஒருமுறை மாதவராஜ் அதுபற்றி விளக்கமாய் எழுதுகிறேன் என்றார். இதுவரை முயற்சித்ததில்லை.

பாரா, மஹா எப்படி இருக்கிறாள்?

மாறா அன்புடன்
ராகவன்

'பரிவை' சே.குமார் said...

//ஈ பாத தொடு உணர்வில்
சிலிர்ப்பிக் கொள்கிறது
லெச்சுமி பசு.//

அருமையான கவிதை

கலகலப்ரியா said...

அருமை பா.ரா... (நேசமித்ரன் இங்கயுமா.. அவ்வ்வ்வ்... =)))

goma said...

கவிதையின் வரிகளும் அருமை எடுத்துச் சொன்ன கருத்தும் அருமை

கமலேஷ் said...

மிகவும் அழகாக இருக்கிறது

சுசி said...

ரொம்ப நல்லா இருக்கு ராஜாராம்.
அதிலும் குழந்தை அள்ளிக் கொண்டு போகிறது.

விட்டுப்போன ரிசல்டும் பாத்துட்டேன் :)

நட்புடன் ஜமால் said...

கட்டுச்சோறில்
புளிச்சாறு பிரியாணி.]]

இவ்வரிகளில் பல உணர்வுகள் மக்கா
-------------------

பயணக் களைப்பின்றி
தூங்கும் தோள் குழந்தை.]]

மக்கா கண்ணீர்த்துளி - தாய் - வேறு எதாவது சொல்ல இருக்கா - இன்றும் தோள் குழந்தையாய்

------------------

ஈ பாத தொடு உணர்வில் ...

என்னமா சொல்லுறீங்க மக்கா

எமது வீட்டிலும் இரண்டு காளைகள் இருந்தன - கருப்பு காளை என்னோடு மிக பாசமாக இருக்கும்.

அந்த வீடும் இல்லை இப்போ காளைகளும் ...

அன்புடன் நான் said...

அவள் அழகு!

அம்பிகா said...

\\பயணக் களைப்பின்றி
தூங்கும் தோள் குழந்தை.//

தோள் குழந்தைக்கு,
பயணக் களைப்பு மட்டுமல்ல
எந்தக் களைப்புமே இல்லையே!!.

ரொம்ப நல்லாயிருக்கு.

thiyaa said...

ஆகா அருமை

அ.மு.செய்யது said...

இப்படி எளிமைக்கு வெகு அருகாமையில் நின்று எழுதுவதால் தான் உங்களை
எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.

அகநாழிகையை "வேறு வேறு கண்களில்" வாசித்தேன்.அருமை.

என்ன கவிதை எழுதிர்க்கீங்கன்னு ஒரு நாளாவது உங்கள திட்டலாம்னு நினைக்கிறேன்.வாய்ப்பே தர மாட்டேங்கிறீங்களே !!!

சிவாஜி சங்கர் said...

ஆஹா அண்ணா இதுவும் ம்ம்ம்..... :)

rvelkannan said...

//சிலிர்ப்பிக் கொள்கிறது.../
சிலிர்க்க வைத்த கவிதை பா.ரா

ஷங்கி said...

ம்ம்! நீங்க மட்டுமில்ல நேசனும் மித்திரர்களாய்!!

க.பாலாசி said...

கவிதையைப்பற்றி எப்படிச்சொல்வது எல்லோரும் சொல்லிவிட்டார்களே...

மொத்தத்தில் அருமை...

S.A. நவாஸுதீன் said...

எனக்கு எதையும் விட்டுவைக்கவிலை. நம்ம மக்கள் எல்லாத்தையும் சொல்லிட்டாங்க மக்கா.

///பயணக் களைப்பின்றி
தூங்கும் தோள் குழந்தை.

ஈ பாத தொடு உணர்வில்
சிலிர்ப்பிக் கொள்கிறது
லெச்சுமி பசு.///

ரொம்ப ரசிச்சேன் மக்கான்னு வேற சொல்லனுமா

S.A. நவாஸுதீன் said...

நேசமித்ரன் said...
கர்ப்ப வயிறு படியும் காது
தலை தடவும் தாய்

கதிரறுத்த வயலில் கொக்குத்தடம்

பட்டையடித்த மரத்தின் வதை

லாடம் சூட்டில் கண் கசியும் நீர்

அவளைப் போலவே இதையும் ரசித்தேன் நண்பா

நர்சிம் said...

மிகப் பிடித்திருந்தது.

நர்சிம் said...

பலா பட்டறையின் பின்னூட்டமும் பிடித்திருந்தது. அனுபவித்து ரசித்திருக்கிறார்.

செ.சரவணக்குமார் said...

//தொல் பொருள்.
ஆராய விரயம்.
ஆயினும் செய்நேர்த்தி.//

ரசித்தேன், அருமை.

அப்துல்மாலிக் said...

முழுதும் ரசித்தேன் பா, ரா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை.வழக்கம் போலவே.

பாலா said...

உண்மையா சொல்லணும் இதெல்லாம் உங்களுக்கு எழுதிதாறது யாரு ?//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஈ பாத தொடு உணர்வில்
சிலிர்ப்பிக் கொள்கிறது
லெச்சுமி பசு. //

அருமைன்னு வேற சொல்லனுமா, எழுதறது எல்லாமே அருமையாதானே இருக்கு.

பூங்குன்றன்.வே said...

என்ன சொல்ல அப்பு? அருமை..அருமை..

Gowripriya said...

அருமை..
வேறென்ன சொல்ல??

Vidhoosh said...

நாந்தேன் கடைசியா.

ரொம்ப அருமைங்க.

--வித்யா

மறத்தமிழன் said...

SUPERB...SIMPLY..

பா.ராஜாராம் said...

@காமராஜ்
வணக்கம் காமராஜ்!மிக்க சந்தோசம்.நன்றி காமு!

@வசந்த்
ரொம்ப நன்றி வசந்த்!தனி மடலுக்கும் சேர்த்து.

@பலா பட்டறை
வாங்க மக்கா.பாருங்க,நர்சிம் உங்கள் பின்னூட்டத்தை சிலாகித்திருக்கார்!அருமையாக கவிதைகளும் எழதுகிறார் நர்சிம்,இவர்!நன்றி மக்கா!

@தமிழ் உதயம்
இன்னைக்கு புதுசா ஒரு நன்றி சொல்லிக்கிறேன்.நன்றி மக்கா!

@அசோக்
ரைட்டு..நன்றி மகனே!

@வினோ
மிக்க நன்றி வினோ!

@நந்தா
சந்தோசமாய் இருக்கு,நந்தா!எல்லாத்துக்கும் சேர்த்து நன்றி மக்கா!

@staarjaan
உங்கள் குரல் கேட்டத்தில் அவ்வளவு சந்தோசம்.மிக்க நன்றி மக்கா!

@வானம்பாடிகள்
மிக்க நன்றி பாலா சார்!

@டிவிஆர்
சந்தோசம்.நன்றி டிவிஆர்!

@நேசன்
அப்பா..எவ்வளவு அருமையான வதைடா,எனக்கென எழுதுகிற உன் கவிதைகள்!நன்றி மக்கா!

@அருணா
நன்றி அருணா!

@கார்த்திகை பாண்டியன்
ரொம்ப நன்றி kp!

@ராகவன் அண்ணாச்சி
ரொம்ப நன்றி அண்ணாச்சி!

@பின்னோக்கி
உடல் நலம் தேவலையா பின்னோக்கி?நன்றி மக்கா!

@ரமேஷ்
நல்வரவு மக்கா!ரொம்ப சந்தோசமும்,நன்றியும்!

@ஜோதி
அப்படியா?பெரிய சந்தோசமும் அவார்டும் இது எனக்கு ஜோதி!மிக்க நன்றி மக்கா!

@ராமலக்ஷ்மி
சந்தோசம் சகா!ரொம்ப நன்றியும்!

@சித்ரா
வாங்க சித்ரா.நல்வரவு.மிக்க நன்றியும்!

@ராகவன்
நல்லா இருக்கா மகா ராகவன்!உங்களை கூப்பிடவேனும் என சொல்லிகொண்டிருந்தாள்.கூப்பிடுவாள்.சகோதரி நலமா?

ரொம்ப மன நிறைவான பின்னூட்டம் ராகவன்.தம்பி,நண்பருக்கு உங்கள் மின் முகவரி அனுப்பி உதவ சொல்கிறேன்.சீக்கிரம் மின் மடல் செய்வார்கள்.ரொம்ப நன்றி ராகவன்!

ஹேமா said...

அண்ணா வார்த்தைக்குள் அகப்படாத பா.ரா ஆயிட்டீங்க.வாழ்த்துகள்.

மண்குதிரை said...

nice மென்மை

உயிரோடை said...

கொஞ்ச‌ம் தொட‌ர்ப‌ற்ற‌ வ‌ரிக‌ளாக‌ இருக்கே இல்லை என‌க்கு புரித‌ல் குறைவா இருக்கா

Thenammai Lakshmanan said...

S.A. நவாஸுதீன் said...
எனக்கு எதையும் விட்டுவைக்கவிலை. நம்ம மக்கள் எல்லாத்தையும் சொல்லிட்டாங்க மக்கா.

///பயணக் களைப்பின்றி
தூங்கும் தோள் குழந்தை.

ஈ பாத தொடு உணர்வில்
சிலிர்ப்பிக் கொள்கிறது
லெச்சுமி பசு.///

ரொம்ப ரசிச்சேன் மக்கான்னு வேற சொல்லனுமா//

ஆமா மக்கா எனக்கும் யாரும் எதையுமே விட்டு வைக்கலயே என்ன சொல்ல அருமைதான் வழக்கம் போல

Thenammai Lakshmanan said...

நேசமித்ரன் said...
கர்ப்ப வயிறு படியும் காது
தலை தடவும் தாய்

கதிரறுத்த வயலில் கொக்குத்தடம்

பட்டையடித்த மரத்தின் வதை

லாடம் சூட்டில் கண் கசியும் நீர்

அவளைப் போலவே இதையும் ரசித்தேன் நண்பா//

பின்னூட்டத்தையே கவிதையாக்கும் நேசன் உங்க பக்கம்தான் மக்கா கொஞ்சம் பொறாமையாய் கூட இருக்கு

பா.ராஜாராம் said...

@சே.குமார்
வாங்க குமார்.ரொம்ப நாள் ஆச்சு உங்கள் தளம் வந்து.வரணும் மக்கா.மிக்க நன்றி குமார்!

@கலகலப்ரியா
இதுவும் அவன் தளமே,ப்ரியா.இத்தினிகோண்டா இருந்துக்கிட்டு என்னா கலக்கு கலக்குறீங்க ப்ரியா!பெரிய ஆச்சர்யம் நீங்கள்!சந்தோசமும்,நிறைவும் நன்றியும் மக்கா!

@கோமா
வாங்க மக்கா!மிக்க நன்றி!

@கமலேஷ்
ரொம்ப நன்றி கமலேஷ்!

@சுசி
ஆகட்டும் சுசி.மிக்க நன்றி மக்கா!

@ஜமால்
ரொம்ப நன்றி ஜமால்.ஆதியில் இருந்து அதே போலான அன்பும் வார்த்தைகளும்!மிக்க நன்றி மக்கா!

@கருணா
ரொம்ப நன்றி கருணா!

@தியா
வாங்க தியா!சந்தோசமும் நன்றியும் மக்கா!

@செய்யது
நீங்களும் ஒரு நாளைக்காவது திட்டுவீங்கன்னு பார்த்துக்கிட்டே இருக்கிறேன் செய்ய மாட்டேங்கிறீங்க.நவாசோட சேர்ந்த பார்ட்டி!
ரொம்ப நன்றி செய்யது!

@சிவாஜி
நல்லா இருக்கீங்களா சிவாஜி?சந்தோசம்.நன்றி மக்கா!

பா.ராஜாராம் said...

@வேல்கண்ணா
மிக்க நன்றி வேல்கண்ணா!

@ஷங்கி
சந்தோசம்.நன்றியும் அன்பும் ஷங்கி!

@பாலாஜி
ரொம்ப நன்றி பாலாஜி!

@நவாஸ்
ரொம்ப நன்றி நவாஸ் மக்கா!

@நர்சிம்
ரொம்ப நன்றி நர்சிம்!

@சரவனா
நன்றி சரவனா!

@அபுஅப்சர்
வாங்க மக்கா.நலமா?நன்றி அபுஅப்சர்!

@ஸ்ரீ
நன்றி ஸ்ரீ!

@பாலா
ஹா.ஹா.. சோ.கு! ..:-)நன்றி மாப்ள!

@அமித்தம்மா
சந்தோசம்.நன்றி அமித்தம்மா!

@குன்றா
ஆகட்டும் குன்றா.மிக்க நன்றிப்பு!

@கௌரி
ரொம்ப நன்றி கௌரி!

@வித்யா
வாங்க மக்கா!நன்றி சகா!

@மறத்தமிழன்
வாங்க,வாங்க..நல்வரவு!ரொம்ப நன்றி மக்கா!

@ஹேமா
உதை,ராஸ்கல்.என்ன பெரிய பெரிய வார்த்தை எல்லாம்?நன்றிடா ஹேமா!

@லாவண்யா
சரிதாண்டா.தொடர்பற்ற வரிகள்தான்.நான் தலைப்போடு பொருத்திக்கொண்டேன்!மிக்க நன்றி லாவண்யா!

@தேனு
பிரமிச்சு போயிருக்கிறேன் தேனு உங்கள் உரை நடையில்.தொடருங்கள்.நன்றி மக்கா!

நேசன் நம்ம பக்கம் மக்கா!