Sunday, December 27, 2009

சாயமழை


(Picture by CC licence, Thanks Greig)


ழை கசறி கொண்டிருந்தது.

சுடுகாட்டு கொட்டகையில்
ஒதுங்கி இருந்தான் மேய்ப்பன்.

டைவாயில் நுரை பறிய
ஊறிய புற்களை தின்றுகொண்டே
வால்களில் மழையையும்
விரட்டிக் கொண்டிருந்தன
எருமைகள்.

செவ்வந்தி பூ
பொதிந்து கிடந்த
பிளாஸ்டிக் பையிலிருந்து
ஒட்டாமல் இறங்கிகொண்டிருந்தது
சாயம் பாரித்த மழை.

ன்னவோ மேய்ப்பனுக்கு
நினைவு வந்தது.
நேற்றிரவு மனைவிமேல் வீசிய
முதலாளி வாசனை.

தை எதையும் அறியாது
எருமையின் கொம்பில்
வந்தமர்ந்தது
நனைந்த தேன் சிட்டொன்று.


47 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணா நேரா பாத்திருந்தா உங்க கைக்கு முத்தம் கொடுத்திருப்பேன் மன உள் இருக்கும் விஷயத்தை இவ்வளவு தெள்ள்ளத்தெளிவா சொல்ல அதுவும் கவிதையா சொல்லும்போது இன்னும் கொஞ்சம் மிடுக்கா தெரியுறீங்க தொடரட்டும் கரிசல்காட்டு ராஜாவின் அசத்தல்கள்...

செ.சரவணக்குமார் said...

//செவ்வந்தி பூ
பொதிந்து கிடந்த
பிளாஸ்டிக் பையிலிருந்து
ஒட்டாமல் இறங்கிகொண்டிருந்தது
சாயம் பாரித்த மழை.//

வாசித்து முடித்து சில நிமிடங்களுக்குப் பிறகும் அற்புதமான இந்த வரிகளிலிருந்து விடுபட முடியவில்லை பா.ரா.

அ.மு.செய்யது said...

ஒரு சிறுகதைக்கான கரு ஏழெட்டு வரிகளில்...!!

மழையின் சாயம் !! முதலாளி வாசனை !!! அபாரமான கற்பனை.

கெளப்புங்க மக்கா !!!

செ.சரவணக்குமார் said...

//செவ்வந்தி பூ
பொதிந்து கிடந்த
பிளாஸ்டிக் பையிலிருந்து
ஒட்டாமல் இறங்கிகொண்டிருந்தது
சாயம் பாரித்த மழை.//

வாசித்து முடித்து சில நிமிடங்களுக்குப் பிறகும் அற்புதமான இந்த வரிகளிலிருந்து விடுபட முடியவில்லை பா.ரா.

Ramesh said...

ரசனையில் ஊறித் திகைக்கிறேன்
உங்க கவிச் சார மழையில்
நனைகிறேன்
'கசறி' எனக்குப் புதுச் சொல்லுங்க....

'பரிவை' சே.குமார் said...

எதையும் அறியாது
எருமையின் கொம்பில்
வந்தமர்ந்தது
நனைந்த தேன் சிட்டொன்று.

அபாரமான கற்பனை பா.ரா.

வினோத் கெளதம் said...

//செவ்வந்தி பூ
பொதிந்து கிடந்த
பிளாஸ்டிக் பையிலிருந்து
ஒட்டாமல் இறங்கிகொண்டிருந்தது
சாயம் பாரித்த மழை.//

நிறையா மழை நாட்களில் இதேப்போல் காட்சிகளை நேரில் கண்டிருக்கிறேன்..அது அப்படியே உங்கள் வார்த்தைகளில்..அழகு..

கலகலப்ரியா said...

அழகு..! :)

vasu balaji said...

//கடைவாயில் நுரை பறிய
ஊறிய புற்களை தின்றுகொண்டே
வால்களில் மழையையும்
விரட்டி கொண்டிருந்தது
எருமைகள்.

இதை எதையும் அறியாது
எருமையின் கொம்பில்
வந்தமர்ந்தது
நனைந்த தேன் சிட்டொன்று.//

கண்முன் காட்சி விரிகிறது பா.ரா. கவிதையை இன்னும் நேசிக்கச் செய்யும் வரிகள்.

ஹேமா said...

அண்ணா இயல்பாய் வரிகள் கோர்க்க உங்களால் மட்டுமே முடிகிறது.
எப்பவும் போலத்தான் கவிதை.

சுசி said...

அவ்ளோ அருமையா இருக்குங்க ராஜாராம்.. ஒவ்வொரு வரியும்..

ரொம்ப ரசிச்சேன்.

கமலேஷ் said...

ஒவ்வொரு வரிகளும் அருமை....
கவிதையை மீண்டும் மீண்டும் வசித்து கொண்டே இருக்கிறேன்....
வாழ்த்துக்கள்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல்

Paleo God said...

//கடைவாயில் நுரை பறிய
ஊறிய புற்களை தின்றுகொண்டே
வால்களில் மழையையும்
விரட்டி கொண்டிருந்தது
எருமைகள்//

வாலும் போச்சா ::((

//இதை எதையும் அறியாது
எருமையின் கொம்பில்
வந்தமர்ந்தது
நனைந்த தேன் சிட்டொன்று//

உடம்பு நனைஞ்சு நடுங்குதுங்க....:) 'ப்ச் ப்ச்' வசந்த் கணினியிலேயே முத்தம் குடுத்துட்டேன் ::))

நட்புடன் ஜமால் said...

கடைவாயில் நுரை பறிய
ஊறிய புற்களை தின்றுகொண்டே
வால்களில் மழையையும்
விரட்டி கொண்டிருந்தது
எருமைகள்.]]

எப்படி நண்பா
இம்பூட்டு இரசிச்சி எங்களையும் இரசிக்க வச்சிடறீங்க - அருமை மக்கா

dondu(#11168674346665545885) said...

//கடைவாயில் நுரை பறிய
ஊறிய புற்களை தின்றுகொண்டே
வால்களில் மழையையும்
விரட்டி கொண்டிருந்தது
எருமைகள்//
ஒன்றின்பால்-பலவின்பால் பிழை.

//கடைவாயில் நுரை பறிய
ஊறிய புற்களை தின்றுகொண்டே
வால்களில் மழையையும்
விரட்டி கொண்டிருந்தன
எருமைகள்// என்று இருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்பேசிவம் said...

//செவ்வந்தி பூ
பொதிந்து கிடந்த
பிளாஸ்டிக் பையிலிருந்து
ஒட்டாமல் இறங்கிகொண்டிருந்தது
சாயம் பாரித்த மழை.

என்னவோ மேய்ப்பனுக்கு
நினைவு வந்தது.
நேற்றிரவு மனைவிமேல் வீசிய
முதலாளி வாசனை.
//

முடியலை, ரொம்பவே அழுத்தமான விஷயம், வெகு அழகாக சொல்லியிருக்கிறீர்கள். மகாப்பா :-)

சிவாஜி சங்கர் said...

அருமையா இருக்கு அண்ணா..!!

தமிழ் அமுதன் said...

இப்படி...! கவிதை மழையில்... எங்களை ...நனைத்து... மகிழ்விக்கும்.... உங்களுக்கு என்ன கைமாறு செய்வது....!

பின்னோக்கி said...

//மழை கசறி

கசறி - இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டது இல்லை.

மழைக்கால விவரிப்பு அருமை.

நெடுநல் வாடை மழைக்கால வர்ணனையை மாதிரி எதிர்பார்த்தேன்.

முதலாளி வாசனை ஏன் இங்கே என்ற கேள்வி வருகிறது.

rvelkannan said...

படித்தலிருந்து தேடிகொண்டிருக்கிறேன். என்ன சொல்வதென்று.
எதையும் அறியாத அந்த தேன் சிட்டு போல் இருந்து விடலாமோ.

க.பாலாசி said...

நான் நினைத்ததை எல்லாரும் ஏற்கனவே சொல்லிட்டாங்க....

அதனால்......கவிதை அருமை...

Vidhoosh said...

//வால்களில் மழையையும்
விரட்டி கொண்டிருந்தது
எருமைகள்//

ரசித்த வரிகள்.

ஆமா... படத்தில் இருப்பது காக்காய் தான...?

S.A. நவாஸுதீன் said...

////கடைவாயில் நுரை பறிய
ஊறிய புற்களை தின்றுகொண்டே
வால்களில் மழையையும்
விரட்டி கொண்டிருந்தது
எருமைகள்.////

///ஒட்டாமல் இறங்கிகொண்டிருந்தது
சாயம் பாரித்த மழை.///

///நேற்றிரவு மனைவிமேல் வீசிய
முதலாளி வாசனை.///

நீங்க இப்படி அசத்திகிட்டே இருங்க மக்கா. நாங்க அசராம படிச்சிகிட்டே இருக்கோம்.

அம்பிகா said...

எருமை பற்றிய வர்ணனைஅருமை.

பா.ரா. மார்க் கவிதைகள்

Ashok D said...

//கடைவாயில் நுரை பறிய
ஊறிய புற்களை தின்றுகொண்டே
வால்களில் மழையையும்
விரட்டி கொண்டிருந்தது//
:)

பாசத்திலிருந்து துரோகத்திற்கு முன்னேறியிருக்குகிறீர்கள் அதுவும் அழகியலோடு. கலக்குங்க சித்தப்ஸ். கணத்தது.

Gowripriya said...

எத்தனை அழகியல் இக்கவிதைக்குள்???
அருமை.. :))

kovai sathish said...

முடிவு செய்து விட்டேன்...
இனி எழுதினால்
உன்போல் எழுத...இல்லையேல்...
எழுதுகோலால் காது மட்டுமே
குடைவது என்று..?!
அழகான பதிவு..அண்ணா?!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சூப்பர். இது என்ன கதையா? கவிதையா? மலைக்க வைக்கிறது. காட்சி கண் முன் .....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

எல்லோரும் சொல்லிட்டாங்க நான் சொல்ல வேண்டியதை.புதுசா என்ன தல சொல்லப் போறேன். சூப்பர்.

தமிழ் said...

அசத்தல்

ருத்ர வீணை® said...

மனசை உலுக்கர வரிகள்.. " இதுக்கு பேர் தான் நெஞ்ச நக்கறதோ " !!.. பா.ரா ... இன்னும் ஜோரா எழுதுங்க..

பாலா said...

"""மழை பொசியும் சுடுகாட்டு பொட்டலில்
சாணம் கரைய மேயும்
எருமை முதுகில் ஆழம் பார்க்கிறது
அண்டகாக்கை அதன் வலிஉணரா .
சட்டென்று வந்து போகிறது நினைவு
நேற்று "ஒதுங்கியவளை " வன்புணர்ந்தது .""""

சும்மா ஒரு முயற்சி மாம்ஸ் கோவிச்சுகிடாதீய
நாமலும் எப்போதான் கவிஞர் ஆகறது

Jerry Eshananda said...

பொழிகிறது.

Thenammai Lakshmanan said...

நல்லா இருக்கு மக்கா

எதுவும் தெரியாத தேன் சிட்டாய் இருக்கவே விரும்பும் மனசு


புத்தாண்டு வாழ்த்துக்கள்

கவிதாசிவகுமார் said...

இங்கு Christmas vacation. வாண்டுகளின் ராஜ்ஜியத்தில் கம்ப்யூட்டர். கிடைத்த நேரத்தில் தளம் வந்து பார்த்தால் அதற்குள் அழகான பல பதிவுகள். வாழ்த்துக்கள் சித்தப்பா.

விஜய் said...

ஸ்டாம்ப் சைஸ் கவிதையில் சினிமாஸ்கோப் படம் காட்ட பா.ரா.வால் மட்டுமே முடியும்

வாழ்த்துக்கள்

விஜய்

சந்தான சங்கர் said...

நேற்று வெளுத்த
சாயத்தினை
இன்றைய மழை
நனைத்து கொட்டுகிறது..


என்ன சொல்ல மக்கா....

அமிர்தவர்ஷினி அம்மா said...

//செவ்வந்தி பூ
பொதிந்து கிடந்த
பிளாஸ்டிக் பையிலிருந்து
ஒட்டாமல் இறங்கிகொண்டிருந்தது
சாயம் பாரித்த மழை.//

காட்சிகளாய் கண்முன்னே.

SUFFIX said...

உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி? பறந்து விரிந்த கற்பனை மற்றும் எழுத்து திறன் பா.ரா.

உயிரோடை said...

//மழை கசறி கொண்டிருந்தது.

சாயம் பாரித்த மழை//

வித்தியாச‌மான‌ வ‌ரிக‌ள்.

//வந்தமர்ந்தது
நனைந்த தேன் சிட்டொன்று//

க‌விதை அழகா இருக்கு தேன்சிட்டை போல‌

காமராஜ் said...

//செவ்வந்தி பூ
பொதிந்து கிடந்த
பிளாஸ்டிக் பையிலிருந்து
ஒட்டாமல் இறங்கிகொண்டிருந்தது
சாயம் பாரித்த மழை.

என்னவோ மேய்ப்பனுக்கு
நினைவு வந்தது.
நேற்றிரவு மனைவிமேல் வீசிய
முதலாளி வாசனை.//


நிகரற்ற வரிகள்

நேசமித்ரன் said...

மக்கா !!!

அசத்தல்....

ny said...

புத்தகத்திற்கு வாழ்த்துக்கள் sir!!

sorry, ரொம்ப தூங்கிட்டேனோ :)

பா.ராஜாராம் said...

@வசந்த்
கைகளை பிடித்து கொண்டுதான் பேசினீர்கள் வசந்த்!அவ்வளவு உணர்வு பூர்வமான பின்னூட்டம்.மிக்க நன்றி மக்கா!

@சரவனா
உங்கள் எழுத்தை போலவே ரசனையும் பிரமிக்க வைக்கிறது சரவனா!நன்றி.

@செய்யது
கவிதையை எங்கு முடிசிட்டேனோ அங்கு அவிழ்த்தது சந்தோசமாக இருந்தது செய்யது.நன்றி மக்கா.

@ரமேஷ்
ஆம்,ரமேஷ்.இந்த "கசறி" எங்கள் கிராமத்தின் பேச்சு வழக்கு மொழி.முக்கியமாய் மேய்ப்பர்களிடம். ..நன்றி ரமேஷ்.

@குமார்
ரொம்ப நன்றி குமார்!

@வினோ
சந்தோசம்.நன்றி வினோ!

@கலகலப்ரியா
நன்றி ப்ரியா.

@வானம்பாடிகள் சார்
ரொம்ப நன்றி பாலா சார்!

@ஹேமா
நன்றிடா ஹேமா!

@சுசி
ரொம்ப நன்றி சகா!

பா.ராஜாராம் said...

@கமலேஷ்
ரொம்ப நன்றி மக்கா!

@டிவிஆர்
நன்றி டிவிஆர்!

@பலாபட்டறை
நன்றி மக்கா!

@ஜமால்
மிக்க நன்றி ஜமால்!

@டோண்டு ராகவன்
நீங்கள் சொல்லியதே சரி ராகவன்.சரி பண்ணியாச்சு.மிக்க நன்றி மக்கா!

@முரளி
நன்றி முரளி!

@சிவாஜி
நன்றி தம்பு!

@ஜீவன்
நன்றி ஜீவன்!

@பின்னோக்கி
முதாலாளி வாசனைதான் நாட் பின்னோக்கி.மற்றதெல்லாம் சார்ந்த வரிகளே.செய்யது சரியாக புரிந்த உணர்வு.நன்றி மக்கா!

@வேல்கண்ணனா
நன்றி வேல்கண்ணா!

@பாலாஜி
மிக்க நன்றி கே.பி!

@வித்யா
கவிதையைவிட படம் தச்சது என்று புரிஞ்சிக்கிட்டேன் பாஸ்!நன்றி!

@நவாஸ்
மிக்க நன்றி மக்கா!

@அம்பிகா
நன்றி அம்பிகா!

@அசோக்
கனத்தது என்பது பொய்.இனி உங்களிடமிரிந்தே கவிதை அறியணும் போல மகனே.ஏனெனில் கடைசி கவிதை மிரட்டல்.(வெளிப்படியாக இருக்கவே விருப்பம்.)நன்றி மகனே!

@கௌரி
நன்றி கௌரி!

@சதீஷ்
நல்வரவு சதீஷ்.நானும் அப்படியாகவே இருந்தேன்.காது குடைந்து கொண்டு.எழுத தொடங்கிய பிறகு காது குடைவதுதான் கஷ்ட்டமான விஷையம் போல தெரிகிறது.நன்றி மக்கா!

@ஜெஸ்
வந்துட்டீங்களா பாஸ்?உடல் நலம் ஓகேயா?ரெண்டும் மக்கா!நன்றி ஜெஸ்!

@ஸ்ரீ
நன்றி சீயான்!

@திகழ்
நன்றி பாஸ்!

@ருத்ரவீணை
நன்றி மக்கா!

@பாலா
நீங்க ஏற்கனவே கவிஞர் மாப்ஸ்!
இது எனக்கான சந்தோஷ பகிரல் என அறிவேன்!நன்றி மாப்ஸ்!

@ஜெரி
ஜெரி,நீங்களா?ரொம்ப சந்தோசமாக இருக்கு.நன்றி மக்கா!

@தேனு
ஹா.ஹா.
நன்றி தேனு!

@கவிதா
வாடா,வாடா!அதுகளுக்கு போக நமக்கு கிடைச்சா போதும்டா!எங்கடா பயலை காணோமேன்னு இருந்தது.அவ்வளவுதான்.வருவாய் என தெரியும்!நன்றி மக்கா!

@விஜய்
ரொம்ப நன்றி என் விஜய்!

@சங்கர்
மக்கா,நல்லா இருக்கீங்களா?நன்றி சங்கர்!

@அமித்தம்மா
ரொம்ப நன்றி அமித்தம்மா!

@சபிக்ஸ்
ரொம்ப நன்றி சபிக்ஸ்!

@லாவண்யா
நன்றிடா லாவண்யா!

@காமராஜ்
சரியாக கவிதையின் ஆத்மா பிடிச்ச காமராஜ்,நன்றி மக்கா!

@நேசா
ஓகே மக்கா! நன்றி.

@காரத்தின்
நன்றி கார்த்தி.ஆம்!நீங்கள் வந்தால் போதும்.

இரசிகை said...

nice...:)