Friday, December 18, 2009

விருது - சும்மா இல்லை




"ந்த நேரமும் மருந்தடிச்ச கொய்யா நாற்று போல திரிகிறானே"என்று பார்த்து கொண்டிருந்த அறை நண்பர்களுக்கு இந்த மாதிரியான விருதுதான் பதிலாகிறது. அறை நண்பர்கள் மலையாளிகள். தமிழ் வாசிக்க தெரியாத காரணம் கொண்டு, "எங்க அசோசியசனில் இருந்து கிடைச்ச அவார்டு" என்று காட்டிக்கொள்ள இதை தவிர வேறு வழியும் கிடைக்கவில்லை எனக்கு.

டம் பார்த்து பாகம் குறிக்க இது போதுமானதாகிறது இவர்களுக்கு. காலை எழுந்து கக்கூஸ் போகிற வழியில் இன்னும் விஷ் மட்டும்தான் பண்ணவில்லை. காரணம், ஸ்லைடு ஸ்லைடாக மாறும் நம் "அசோசியசேன் அவார்டுதான்!"

யாரையும் பாதிக்காத சிறு,சிறு பொய்கள்தான் எவ்வளவு உற்சாகமானது!

பொய் என்பது நான் பேசியது. உண்மையில் எவ்வளவு அர்த்தங்கள் நிரம்பியது இந்த அவார்டுகள்! அன்பை பிதுக்கி எறிய தெரியாமல்தானே இப்படி பகிர முயல்கிறோம்...

ந்த விருதை எனக்கு வழங்கியவர்கள் சரவணாவும், மலிக்காவும்.

முதலில் இவர்களை பார்போம்..

செ.சரவணகுமார்


வருக்கு வலை உலகில் மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என்பது என் கணிப்பு. நல்ல வாசிப்பனுபவத்தை எதிரொலிக்கிறது இவரின் எழுத்துக்கள். "அப்படியா?" என்கிற கேள்வியோடு உள்ளே ஒரு நடை போயிட்டு வாங்க.

வந்து சொல்வீர்கள்"டேவுலே.. ராஜா மக்கா!"என.

மலிக்கா

இவர்களை மிக சிலவே வாசித்திருக்கிறேன். என் நேரமின்மை ஒரு காரணம். இவர்களை எங்கனையோ நான் தைச்சிருக்க வேணும். அதுகொண்டு, "பிடிச்சிருக்கு மக்கா. பிடியுங்கள்" என்று துணிந்திருப்பார்கள் போல. பத்திரபடுத்த வேணும் போலான அன்பு. நேரம் வாய்க்கிற போது போக வேண்டிய என் வீடு.

எறும்பூர்வது போல ஊரி, பின்னூட்டம் வழியாக நிறைய தளங்களை அறிமுக படுத்தி கொண்டேன். முன்பே, அவர்கள் ஜாம்பாவான்கள். எனக்கு புதுசாக இருக்கலாம். அவர்களுடன் இந்த விருதை பகிரலாம் மக்களே..

ராகவன்

எழுத்திலும்,பேச்சிலும் அன்பை மட்டுமே சுரக்கும் ராகவனுக்கு.

மோகன் குமார்

திறந்த மனதுடன் சக பயணியை சிலாகிக்கும் மோகனுக்கு.

ஜெனோவா

இயல்பு பாஸ்..இயல்பு!.

முரளிகுமார் பத்மநாபன்

மனசின் தாழ்வாரத்தை ஒரு கவிதை விளிப்பில் திறக்கிறார். போக, "மகாப்பா" என வேறு விளிக்கிறார். கவிதையையும், மனிதத்தையும் ஆத்மார்த்தமாக அனுகும் அவருக்கு ஒன்னு தரவில்லை எனில்,"என்னடா அப்பா நீ?"எனலாம் மகா.


பூங்குன்றன்

பக்கத்து வீட்டு மனிதர் மாதிரியான பரிச்சியமான எழுத்து. கூப்பிடவே வேணாம். "இந்தா வந்துட்டேன்ப்பு" என்று சிரிக்கிற மனிதன். கொஞ்சுங்களேன்.."குன்றா" என!

வினோத் கெளதம்

எதை சொன்னாலும் நறுக்கு தெறிக்கும் வினோத்திடம். பாருங்கள் தெரியும்.

சுசி

தளம் போய் பாருங்கள். அதகளம் பண்ணுகிறார்கள். பார்த்துட்டு வந்து, "ஏண்டா வெண்ணை முன்னாலேயே சொல்லலை?" என கேட்க்க கூடாது.

அனுராதா-தோழி

சமீபமாக தளம் போய் பிரமித்து போயிருக்கிறேன். நீஞ்ச தெரிஞ்சால், மகனே உன் சமர்த்து...காட்டாறு!


*********************************************************************************

போக, நிறைய பின்னூட்டம் வழியென ஊரி ஊரி பிடிச்சு வச்சிருக்கேன் மக்கா. எல்லோரையும் நானே எடுத்துக்கிட்டா "தூத்தெறி" என தெறிப்பீர்கள். அதனால் ஜகா வாங்கலாம்.

எல்லோருக்கும் பிதுக்கி எறிங்க மக்கா-அன்பை!

45 comments:

ராகவன் said...

anbu paara,

ithu migaperiya angeehaaran enakku..

anbukku nandrikal pala...

thanakku kidaichadha ellorodum pagirndhu kolla samuthra manasu venum paara..

maaraa anbudan
raagavan

Chitra said...

விருது வாங்கிய உங்களுக்கும், விருதை தங்களிடம் இருந்து பெற்று கொண்ட பிற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

விருது பெற்ற பா ரா சாருக்கு என் வாழ்த்துக்கள்

உங்களால் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

செ.சரவணக்குமார் said...

அன்பும் நன்றியும் பா.ரா.

மண்குதிரை said...

உங்களுக்கும், விருது பெற்றோருகும் வாழ்த்துக்கள்

கல்யாணி சுரேஷ் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் அண்ணா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் பா ரா

உங்களால் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

பாலா said...

ஒங்கவீட்டு ஜாய் இல்ல எங்கவீட்டு ஜாய் இல்ல என்ஜாய் மக்கா அண்ட் மாம்ஸ்

அன்பேசிவம் said...

மகாப்பா,
ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு, கை தட்ட தட்ட வளரும் ஒரு அதிசய செடிதான் மனிதன், நானும் அத்தகைய செடிதான். இன்னும் ஒரு அடி உங்களால் வளர்ந்தேன், இதை சொல்லிக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.உங்களின் இந்த பாராட்டு எனக்கு மிகப்பெரிய அங்கிகாரம்.
நன்றி. மற்றவர்களுக்கும்.
:-)

க.பாலாசி said...

உங்களுக்கும், விருதுகள் பகிர்ந்தளிக்கப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும்...

S.A. நவாஸுதீன் said...

விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து பெற்ற அனவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் மக்கா.

எனக்கும் புதியவர்கள் இதில் இருப்பதால் எல்லோரையும் கண்டிப்பா வாசிக்கிறேன் மக்கா.

நட்புடன் ஜமால் said...

தங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

vasu balaji said...

விருது வாங்குறது கொடுக்கறது பெரிசில்ல. இவ்வளவு அழகா சீராட்டி பகிர்ந்த அழகிருக்கே. இன்னோரு பா.ரா. கவிதை.பாராட்டுகள் அனைவருக்கும்.

கலகலப்ரியா said...

விருது பெற்றுக்கொண்ட எல்லாருக்கும் வாழ்த்துகள்...

தோழி said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் ராஜா ராம்.

உடல் நிலை சரி இல்லாத நிலையில் மிகவும் தளர்ந்து போய் இருக்கிறேன். உங்கள் விருது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. பெரிய பெரிய நன்றிகள்.

விருதை பகிர்ந்து கொண்டதற்கும் பகிருது கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்

பூங்குன்றன்.வே said...

வார்த்தை வராமல் தவிக்கிறேன்.நீங்கள் கொடுத்த விருது எப்படி இருக்கு தெரியுமா 'விருதே எனக்கு ஒரு விருதை வழங்கியது'மாதிரி..நன்றி அப்பு !!!

SUFFIX said...

பாராட்டி, விருது ஏற்றுக் கொண்டமையும், வழங்கிய விதமும் அருமை அண்ணே. வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

பரஸ்பர சொறிதலிலிருந்து கொஞ்சம் விலகி, புதியவர்களுக்கு வழங்கியிருப்பது பாராட்டுகளுக்குரியது.இது தான் வேணும் !!!

வாழ்த்துக்கள் பெற்றமைக்கும் பகிர்ந்தமைக்கும் !!

ராமலக்ஷ்மி said...

விருது பெற்ற உங்களுக்கும் உங்களால் வழங்கப் பட்டிருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள்....
வாங்களுக்கும்...
வழங்களுக்கும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள்.உங்களுக்கும்,மற்ற நண்பர்களுக்கும் .

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!!!

உமா said...

வாழ்த்துக்கள் தோழரே...உங்களுக்கும், தோழமைகளுக்கும்...

Gowripriya said...

வாழ்த்துக்கள் :))

CS. Mohan Kumar said...

விருதுக்கு மிக்க நன்றி மக்கா

பா. ரா நண்பர்களே அவரை பற்றி நான் கலாய்த்ததை பார்க்க நம்ம blog-க்கு ஒரு முறை வாங்க

சுசி said...

ரொம்ப நன்றி பாரா..

உடனேயே அருகிருந்த கண்ணாளன் கிட்ட காட்டி பெருமை பேசியாச்சு.

கொஞ்சம் டைம் குடுங்க, மத்தவங்களுக்கும் சொல்லிடறேன்.

விருது கிடைச்சது பற்றி வித்யாசமா எழுதி இருக்கீங்க.

மறுபடி அன்புக்கு வணக்கம்.

மத்தவங்களையும் படிக்கிறேன், பாராட்டுக்களுடன்.

நேசமித்ரன் said...

ஆத்தே ! நடத்துங்க ! தர்பார் பலமா இருக்கே பொற்கிழியில் எனக்கும் பங்கு கிடைக்குமா மக்கா அன்பு நிரம்பிய பொற்கிழி

வினோத் கெளதம் said...

தல எனக்கும் விருது அளித்தமைக்கு நன்றி..
மகிழ்ச்சியான தருணம் இது..மறக்கமுடியா தருனமமும் கூட ..:)

Anonymous said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

'பரிவை' சே.குமார் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்

சிநேகிதன் அக்பர் said...

//இவருக்கு வலை உலகில் மிகப்பெரிய எதிர்காலம் உண்டு //

சரியா சொன்னீங்க.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

0565214166 இது என் அழை எண். நானும் விரைவில் தொடர்பு கொள்கிறேன் சார்.

na.jothi said...

விருது பெற்றவர்களுக்கும்
கொடுத்தவருக்கும் வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

@ராகவன்
ஆகட்டும் ராகவன்.மிக்க சந்தோசம்.நன்றியும்!

@சித்ரா
வாங்க சித்ரா.நல்வரவு மக்கா.நன்றி!

@staarjan
உங்கள் குரல் தேடி அடைந்ததில் சந்தோசமும் நன்றியும் மக்கா!

@சரவனா
சரி,சரவனா.சந்தோசமும் நன்றியும்!

@மண்குதிரை
மிக்க நன்றி மண்குதிரை!

@கல்யாணி
நன்றிடா கல்யாணி!

@டிவிஆர்
ரொம்ப நன்றி டிவிஆர்!

@பாலா
மாப்ள,ரொம்ப நன்றி மக்கா!

@முரளி
ஆகட்டும் முரளி.அன்பு நிறைய!

@பாலாஜி
ரொம்ப நன்றி பாலாஜி!

விஜய் said...

விருது தந்தவரின் பெருந்தன்மையும் பாராட்டும் மனப்பான்மையும் நாம் அனைவரும் அறிந்ததே

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

பா.ரா வின் அன்பே பெரும் விருது எனக்கு

விஜய்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்களுக்கும், விருது பெற்றோருகும் வாழ்த்துக்கள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள், பா.ரா.
பொய்யா...பொய் என்று ஒன்று இருக்கிறதா,
என்ன..! முலாம் பூசப்பட்ட உண்மையையா,
நீங்கள் சொல்கிறீர்கள்!
---- ஆர். ஆர்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
This comment has been removed by the author.
சந்தான சங்கர் said...

ஓர் அட்சய பாத்திரம்
எங்களையும் பாத்திரமாக்கி
பரிசளிக்கிறது...


விருதுபெற்ற அனைவருக்கும்
வாழ்த்துக்கள்..

நன்றி மக்கா.

பா.ராஜாராம் said...

@நவாஸ்
கண்டிப்பா நவாஸ்.அதற்குதானே இந்த பகிரல்.ரொம்ப நன்றி நவாஸ் மக்கா!

@ஜமால்
ரொம்ப நன்றி ஜமால்!உங்கள் தளத்தில் பின்னூட்டம் போட வாய்க்கவில்லை என்னால்..

@வானம்பாடிகள்
ரொம்ப நன்றி பாலா சார்!

@கலகலப்ரியா
மிக்க நன்றி ப்ரியா!

@தோழி
ஆகட்டும் அனு.சந்தோசமும் நன்றியும்!உடல் நலம் பத்ரம்..

@குன்றா
சந்தோசம் குன்றா!அன்பு நிறைய..

@அசோக்
கிர்ர்ர்..நன்றி மகனே..

@சபிக்ஸ்
சிறுகதை நல்லா வந்திருக்கு சபி.தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி மக்கா!

@செய்யது
ரொம்ப நன்றி செய்யது மக்கா!

@ராமலக்ஷ்மி
மிக்க நன்றி சகா!

na.jothi said...

நீஙக கொடுத்த விருதுனால
நிறைய பேர் தெரிஞ்சுக்க முடிஞ்சது
மீண்டும் ஒரு முறை எல்லோருக்கும்
வாழ்த்துக்கள்

ஹேமா said...

வாழ்த்துக்கள் அண்ணா.

பா.ராஜாராம் said...

@கருணா
ரொம்ப நன்றி கருணா!

@ஸ்ரீ
மிக்க நன்றி ஸ்ரீ!

gulf-thamilan
வாங்க மக்கா,நல்வரவு!மிக்க நன்றியும்!

@உமா
ஆகட்டும் உமா.அன்பும் நன்றியும்!

@கௌரி
மிக்க நன்றி கௌரி!

@மோகன்
சந்திசிரிக்க வைப்பதில் எவ்வளவு சந்தோசம் இந்த மோகனுக்கு!மிக்க நன்றியும் அன்பும் மக்கா! :-)

@சுசி
ஆமாவா?தாராளமாய்..டைம் எடுக்க எடுக்க கொளுத்த போறீங்கன்னு தெரியும்.கலக்குங்க!மிக்க நன்றி சுசி!

@நேசா
ஹா..ஹா..உனக்கு போகதாண்டா எல்லாம்..மிக்க நன்றி நேசா!

@வினோ
ஆகட்டும் வினோ.உங்கள் தளத்தில் என்னால் பின்னூட்டம் இட இயலவில்லை.மிக்க நன்றி வினோ!

@தமிழரசி
மிக்க நன்றி தமிழ்!

பா.ராஜாராம் said...

@செ.குமார்
ரொம்ப நன்றி குமார்!

@அக்பர்
குரல் கேட்டுக் கொண்டதில் ரொம்ப சந்தோசம் அக்பர்.மிக்க நன்றி மக்கா!

@ஜோதி
மிக்க நன்றி ஜோதி!

@விஜய்
சந்தோசம் விஜய்.மிக்க நன்றி மக்கா!

@ஜெஸ்
மிக்க நன்றி ஜெஸ்!

@ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி
எவ்வளவு அழகாய் சொல்லிட்டீங்க!ஆம்,ஆர்.ஆர்!மிக்க நன்றி மக்கா!

@சங்கர்
ஐயோ,சங்கர்.பெரிய வார்த்தை.மிக்க நன்றி மக்கா!

@ஹேமா
வாடா,ஹேமா.நன்றிடா!

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் வாங்கிய உங்களுக்கும்,உங்கள் கவிக்கரங்களால் வாங்கப்பெற்றவர்களுக்கும்.

ஜெனோவா said...

பா.ராண்ணே, விருதுக்கு ரொம்ப நன்றி ! மிக மகிழ்ச்சியாக இருக்கிறது அதே சமயத்தில் இதை இத்தனைநாள் பார்க்கமுடியாதபடி ஒரு குக்கிராமத்தில் மாட்டிக்கொண்டேனே என்றும் வருத்தமாயிருக்கிறது . மிகவும் தாமதமான இந்த வருகைக்கு ஒரு கொட்டு வேணா வாங்கிகிடவா ? ;-)

மிக்க நன்றி பா.ரா !